காலம் எழுதிய கவிதை – இரண்டு

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அஸ்காாி


காலம்,
கனவுப் பெரும்வெளியின்
விஸ்த்தாராமான பரப்பில்
நீண்ட நீண்ட
இரும்புக் கோடுகளாய்
நெய்யும்
வாழ்க்கை.

புஜம் தடித்த
கருமான் உலை போட்டு
காய்ச்சி வளைத்து
எழுத்து விதைத்து
சொல்லெடுத்து தூவிடுவான் பூவை
பெருவெளியெங்கும்
வாிகள்.

பூக்கள் ஒரு நார் பற்றி
வார்த்தைகளாயும்
வாிகளாயும் சுழலும்.
மாலை
பெருங்கனவு வெளியில்
மிதக்கும்.
பாய்ந்து வந்து
பருந்து கொத்திப்போகும்.
எழுந்தமானமாய் எங்கேயோ
போடும்.

பின்; துன்பியலை
பக்கங்களாக இதழ்களில்
எழுதிச் செல்லும்
கவிதைகள்.

இதழ்கள்
மாருதம் அள்ளியெறியும்
எறிசுழலில் சிக்குண்டு
மடங்கும், கிழியும்
கவிதைகளின் வார்த்தைகளும்
மறந்து போகும்.

இன்னுமொரு பருந்து
அதனைக் காவும்.
காலம் பூக்களாகி மீண்டும்
பல வார்த்தைகளாலும்
வாிகளாலும்
தன்
துன்பியல் கவிதைகளை
வாழ்க்கையின் பெரும்
துயரப் பரப்பில்
எழுதிச் செல்லும்.

காலமும் போகும்
அதனோடு வார்த்தைகளும்
வாிகளும் அள்ளுப்பட்டு போகும்.

பின்னொரு நாளில்
இன்னொரு பருந்தும், மாலையும்
தயாராகும்.

அஸ்காாி, இலங்கை

Series Navigation

அஸ்காாி

அஸ்காாி