காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும் !

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மன்னிப்பாய் அந்தோ ! மன்னிப்பாய் !
எல்லா வற்றுக்கும்
உன்னத தெய்வீகச் சக்தியில்
என் ஆத்மா
உனக்காகவும், உரிமையாகவும்
உண்டாக்க வேண்டும் ஒரு தோற்றத்தை,
மாறுவதும் சரிவதுமான
மணல் வடிவத்தில் !
நீண்ட காலத்திய
நின் விடுதலை வாழ்வு
நீங்கும்
பின்நோக்கி அடியோடு !
மூழ்கி நீந்தும் என் மூளை
அழுத்தமாய்
ஐயத்திலும், அச்சத்திலும் தள்ளப் பட்டு
தூயதாய்
ஒருமைப்பாடு கொண்ட உனது
தோற்றத்தைப் புறக்கணிக்கும் !
ஏற்றுக் கொள்ளத் தகுந்த
காதலையும்
ஏற்கக் கூடாத
களவு நட்பாய்த் திரித்து விடும் !
கடவுளை நம்பாதவன்
கப்பல் கவிழ்ந்து
காப்புடன் துறைமுகத்தில்
தப்பிக் கொள்வதைப் போலாகும் !
மெச்சத் தகுந்த
அவரது கடல் குலதெய்வம்
செதுக்கிய
மூக்கில்லாக் கடல்மீனை
ஆலய வாசற் குள்ளே
வாலாட்ட மோடு
வடிக்க வேண்டும் வெடிப்பு மூச்சு
விடுவது போல் !

************
Poem -37

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

Pardon, oh, pardon, that my soul should make,
Of all that strong divineness which I know
For thine and thee, an image only so
Formed of the sand, and fit to shift and break.
It is that distant years which did not take
Thy sovranty, recoiling with a blow,
Have forced my swimming brain to undergo
Their doubt and dread, and blindly to forsake
The purity of likeness and distort
Thy worthiest love to a worthless counterfeit:
As if a shipwrecked Pagan, safe in port,
His guardian sea-god to commemorate,
Should set a sculptured porpoise, gills a-snort
And vibrant tail, within the temple-gate.

**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 3, 2007)]

Series Navigation