காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உலகின் முகம் யாவும் மாறிப் போகும்,
எவரும் அறியாது,
என்னருகே நீ
இன்னும் நெருங்கி வந்து
உன் ஆத்மாவின் தட ஓசை
எனக்குக் கேட்டது முதல் !
வாழ்வின் பயங்கர விளிம்பில்
மூழ்கிப் போவேன்
என்னும் மரணப் பயத்துக்கும்
எனது வாழ்வுக்கும்
இடையே
உனது காதலில் சிக்கினேன்!
எனக்கு அது படிப்பித்தது
வாழ்விலே,
புதியதோர் துடிப்பு உணர்ச்சி !
ஞானக் குளிப்புக்குக்
கடவுள் அளித்தது, எனக்கு
இடர்க் கிண்ணம் !
மடக்கென குடித்தேன், மகிழ்ந்து !
என்னருகே நீ உடனிருப்பதில்
பொங்கி எழும் இனிமை !
இங்கோ, அங்கோ
எங்கோ நீ இருந்தாலும்
அந்நாட்டின் பெயரும்
சொர்க் கத்தின் பெயரும்
மாற்றம் அடையும் !
நேற்று
என்னைக் கொள்ளை கொண்டது
உன் புல்லாங் குழலிசை !
ஏனெனில்
கான மிசைக்கும் தேவதைகள்
வாய் மொழியில்
உனது பெயர்
உலா வருதலால் !

********************
Poem -7
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

The face of all the world is changed, I think,
Since first I heard the footsteps of thy soul
Move still, oh, still, beside me, as they stole
Betwixt me and the dreadful outer brink
Of obvious death, where I, who thought to sink,
Was caught up into love, and taught the whole
Of life in a new rhythm. The cup of dole
God gave for baptism, I am fain to drink,
And praise its sweetness, Sweet, with thee anear.
The names of country, heaven, are changed away
For where thou art or shalt be, there or here;
And this . . . this lute and song . . . loved yesterday,
(The singing angels know) are only dear
Because thy name moves right in what they say.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 5, 2007)]

Series Navigation