This entry is in the series 20050513_Issue

சிவகாசி திலகபாமா


உன் முகம் புதைத்துக் கொள்ளும்
பள்ளங்கள் தோறும்
இமை திறக்கின்றன என் கண்கள்
எந்நாளும் ஒளித்துக் கொள்ள
முடியாத படிக்கு
கரையோர அழகுகளை
அடித்துக் கொண்டு போக முடியாதபடிக்கு
அடக்கி வைக்கின்றேன்
என் அதிர்வுகளை
பறக்கின்ற விமானம்
போகின்ற வேகத்தில்
தூர எறிந்த நிழல்களாய்
உதாசீனங்களை
காணாது எறிந்து
போகின்றேன் முன்னகர்ந்து
தனியே துவங்குமென் வாழ்வு
என் காதலை
என் கனவை
எல்லாமாகியிருந்த
என்னை
மட்டும் சுமந்த படி
—-
mathibama@yahoo.com

Series Navigation