கர்நாடகம் தமிழகம்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

ரஜித்



உடல் ஒன்று
ரத்தம் பொது
உறுப்புகளுக் கிடையே ஏன்
வெறுப்பு?

நதிகள் பல
நீர் பொது
பயிர்களுக் கிடையே ஏன்
பகை?

மொழிக்குத் தக்கபடி
எழுத்துக்கள் வேறு ஆனால்
‘சத்தியம்’ ஒன்று
எழுத்துகளுக் கிடையே ஏன்
கழுத்து வெட்டு?

இணைந்து செல்ல இயலாதாம்
தண்டவாளங்களுக் கிடையே தகராறு
புலம்புகிறது புகைவண்டி

இரட்டைக் குழந்தையின் தாய்க்கு
எந்தக் குழந்தை ஒசத்தி?
தராதரம் பார்க்கமாட்டாள்¢ தாய்

குழந்தைகளுக் கிடையே ஏன்
கொலைவெறி?


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation