கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue


அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில் அதிகமாக கெட்டுப்போகும் விவசாய உற்பத்திப் பொருட்களை உபயோகப்படுத்தவும், எரிபொருளுக்குச் செலவு செய்யும் பணத்தைக் குறைக்கவும் இதே எத்தனால் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே எத்தனால் எரிபொருளை விவசாய உற்பத்திப் பொருட்களிலிருந்து பெறவும், எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோகப்படுத்தவும் ஆரம்பித்திருக்கின்றன. ஜப்பான் இந்த எத்தனாலை இறக்குமதி செய்ய பெரிய ஒப்பந்தம் ஒன்றை எழுதியிருக்கிறது. தாய்வான் ஏற்கெனவே இந்த இயக்கத்தில் கலந்து கொள்ள தீவிரமாக யோசித்து வருகிறது.

‘எல்லோரும் எத்தனாலைப் பற்றியே பேசுகிறார்கள் ‘ என்று கூறும் ஐயன் பல்லாண்டைன் ஆஸ்திரேலிய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மேலாளராக இருக்கிறார். ‘இப்போதைக்கே இதனை எதிர்கால உலகத்தின் முக்கியமான விற்பனைப் பொருளாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் ‘

கரும்பு, சோளம், தான்யங்கள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் (சாராயம்) எரியும்போது உலகம் சூடாவதற்கு முக்கிய காரணிகளாக காணப்படும் பல வாயுக்களை வெளிப்படுத்துவதில்லை. ஆஸ்திரேலியா, தாய்லாந்து இந்தியா போன்ற நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். உலகம் முழுவதும் சர்க்கரையின் விலை சரிந்துவிட்டதால் அடிபட்ட இந்த விவசாயிகள் எத்தனால் உற்பத்திக்கான தேவை மூலம் மீண்டும் பணம் ஈட்ட இயலும்.

1970இலிருந்து கரும்பிலிருந்து எத்தனால் எடுக்கும் முக்கிய நாடான பிரேசில் சுமார் 13 பில்லியன் லிட்டர்கள் சாராயத்தை ஒரு வருடத்துக்கு உற்பத்தி செய்கிறது. ஆனால், உலகத்தில் எத்தனாலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு, 2005க்குள் எல்லா கார்களும் 2 சதவீத எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோகிக்க வேண்டும் என்றும், 2020க்குள் 5.75 சதவீதம் என்றும், 2020க்குள் 20 சதவீதம் என்றும் அறிவித்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் பிபி பிஎல்ஸி தன்னுடைய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் 2002க்குள் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா புதிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வரிவிலக்கும், எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு உற்பத்தி வரி விலக்கு அளித்திருக்கிறது. ஆனால் பல்லாண்டைன் மற்ற பெரிய பெட்ரோல் நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரியவில்லை என்று கூறுகிறார்.

‘அகில உலக பெட்ரோல் நிறுவனங்களின் கையில் இதனை கொடுப்பதற்கு எனக்கு அவ்வளவு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது ‘ என்று பல்லாண்டைன் கூறுகிறார்.

எத்தனாலையும் பெட்ரோலையும் கட்டாயமாக கலந்து விற்க அரசாங்கம் சட்டங்கள் இயற்ற வேண்டும் எனக் கோருகிறார் பல்லாண்டைன்.

ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் இது போன்ற சட்டங்கள் இயற்ற விரும்பவில்லை என்று அரசாங்க அதிகாரி கூறுகிறார்.

4.6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து, ஐந்து மாதங்கள் ஆராய்ச்சி செய்ததன் பிறகு, ஆஸ்திரேலிய எத்தனாலை தன்னுடைய சுத்திகரிப்பு ஆலைக்கு வேண்டும் என டெண்டர் விட்டிருக்கிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.

ஒரு லிட்டர் எத்தனால் சுமார் 45 ஆஸ்திரேலிய காசுகள். கச்சா பெட்ரோல் எண்ணெய் இன்று விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 19 டாலர். கச்சா எண்ணெய் சுமார் 23 டாலர் ஆனால், அப்போதுதான் எத்தனால் அதைவிட மலிவாக ஆகும்.

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts