கனவுப் பெண்ணின் புன்னகை

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

ஹெச்.ஜி.ரசூல்கனவுப் பெண்ணைப் பார்த்து
புன்னகைத்துப் பேசினேன்
தலையணைக்கடியில் புதைத்து வைத்திருந்த
சொர்க்கங்களை மீட்டுக் கொண்டுவந்து
எதிரே வைத்தாய்.
தின்று செரித்த நாக்குகளுக்கு
மீண்டும் நக்குவதற்கு
இன்று கிடைத்தது யோகம்.
0
ஆதி உறவின் ரத்தத்துளிகளில் உதித்தெழுந்த
ஒவ்வொரு பிம்பங்களின் மீதும்
கிழித்து பொதியப்பட்டன மாதவிடாய் சீலைகள்
0
ஓய்ந்தபாடில்லை சத்தங்கள்
வீறிட்டெழுந்து வரும் ஓசைகள்
முட்டி மோதி முகம் உதைத்து
ஏதும் சப்தங்களற்று திரும்பிச் செல்கின்றன.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்