கண் உறங்கா….!

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

ஆனந்தன் குமாரசாமி


மது உண்டாலும் கணவன்
உதைத்தாலும் உத்தமன்
என்று தான் வாழ்ந்தேன்
என் கண்ணே…

மகரந்தமாய் என் வயிற்றில்
நீ இருந்த போது
மொட்டாகத் தான்
நான் இருந்து
உனைக் காத்தேன்…

பயிர் கொல்லி பூச்சியாக
அழிக்கத்தான் சொன்னான்….
நீ பெண்ணென்று
கருவறையில் தெரிந்தபோதே…

துளிர்விடாமல் நீ இருந்தால்
தூயவனின் கொடுமைக்குப் பயந்து
வாழ்க்கையைத்தான் முடித்திருப்பேன்
என் கண்மணியே…

கோடி கேள்விகள்
கேட்க வேண்டும் கயவனை
எனக்காக !

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்..

உன் வார்தைகளில்
உள்ளம் கெட்ட கயவனை
உயிரோடு எரிக்க வேண்டும்

என் கண்ணே…
என் கண்மணியே…
நீ கண் உறங்கா….!

Anandan_Kumaraswamy@eFunds.com

Series Navigation

ஆனந்தன் குமாரசாமி

ஆனந்தன் குமாரசாமி