கண்ணீர் முத்துக்கள்…

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

புஹாரி , கனடா


என்
காதல் சாம்ராஜ்யத்தின்
முதல் கதாநாயகியே…

என்
இதயச் சுடுகாட்டில்
உன்
நினைவுச் சடலங்களைப்
புதைக்க…
பிஞ்சு விரல்களுடன் சென்றேன்;
முட்கள் கிடந்தன…
இரும்புக் கம்பிகளுடன் சென்றேன்;
இரத்தம் கசிந்தது…
வெப்பக் கண்ணீருடன் சென்றேன்;
புதைந்து கொண்டன.

ஆனால்…
என் பிரியமானவளே…
வினாடி இமைகள்
நிமிஷக்கண் தழுவும்முன்
செத்த சடலங்கள்
சிலிர்த்துக் கொண்டன-
பிசாசுகளாய்.

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா