கடவுளானேன்.
வே பிச்சுமணி
மூக்கில் நுழைந்து
நுரையிரல் புகுந்து
பிறப்புக்கு
அங்கிகாரம் தந்த
காற்றே
உன்னை நேசித்தேன்
அனைத்துயிர்க்கும்
பொதுவென்றதால்
விக்கித்தேன்
பாலுட்டி தாலாட்டி
கண்ணில் காத்து
பிள்ளையாய்
அங்கிகாரம் தந்த
தாயே
உன்னை நேசித்தேன்
சோதரர்க்கும்
உண்டென்பதால்
விக்கித்தேன்.
காதல் சொல்லி
மணவாழ்க்கை கொண்டு
இளமைக்கு
அங்கிகாரம் தந்த
திருமதியே
உன்னை நேசித்தேன்
பிள்ளைகாட்டி
தவிர்த்தால்
விக்கித்தேன்.
மூக்கில் புகாது
நுரையிரல் நுழையாது
இறப்புக்கு
அங்கிகாரம் தந்த
உயிரேநீ
ப்ரம்ம அணுவாய்
காணாது
போனதால்
கடவுளானேன்.
vpitchumani@yahoo.co.in