கடல் ஓதம்

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

ரா.சரவணன்


முதுகலை மீன்வள அறிவியல்

சூரிய மண்டலத்தில் உள்ள நவகோள்களில் சூரியனிலிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ள பூமியில் மட்டும்தான் ஜீவராசிகள் வசித்து வருகின்றன. நீரின்றி அமையா உலகு என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையான இடம் இந்த பூலோகம் தான். மற்ற கிரகங்களில் நீரின்றி உலகு அமையாமல் உள்ளது. நிலத்தை விட நீர்பரப்பு அதிகம் கொண்ட பூமியில் இரண்டு பங்கு பகுதியை நீர் அடைத்துக் கொண்டுள்ளது.

நீர்சூழ் உலகத்தில், நல்ல தண்ணீருக்குத்தான் பஞ்சம். உப்பு நீர் நிறைந்துள்ள கடல் மற்றும் சமுத்திரங்களிலும் நீரோட்டங்கள், அலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் கடல் ஓதங்கள் ஏற்படுகின்றன.

அலைகள்

காற்று மண்டலம் பூமியை ஒரு போர்வை போல சூழ்ந்துள்ளது. காற்று ஓரிடத்தில் நில்லாமல் அதிக அழுத்தம் உள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும். அதனாலேயே காற்றுக்கென்ன வேலி என்ற சொல் வழக்கு வழங்கிக்கொண்டுருக்கிறது.

காற்று நிலப்பகுதியின் மீது வீசும்போது மரம், செடி, கொடி முதலியன அசைகின்றன. நீர்பரப்பின் மீது காற்று வீசும் போது அவை அலைகளை உருவாக்குகின்றன. ஆக அலைகளை உருவாக்குவது காற்றுத்தான். புயலடிக்கும்போது கடல் சீற்றத்தோடு காண்பதற்க்கு காரணம் 100 கிமீ வேகத்துக்கும் மேல் வீசும் காற்றுத்தான்.

நீரோட்டங்கள்

கடலினுள்ளும், மேற்பரப்பிலும் நீர்பரப்பிலும் நீர் தாரைகள் ஓட்டமாக உருவெடுத்து நகர்கின்றன. சூரிய வெப்பத்தால் சூடாக்கப்படும் கடல் நீரானது குறைந்த அடர்த்தியை பெறுமாயின் நீரின் பரப்பு மீது ஓட்டமாக உருவெடுத்து நகர்கிறது. நீர்பரப்பின்மேல் மட்டுமன்றி, கடலடியினுள்ளும் நீரோட்டங்கள் காணப்படுகின்றன. சிலவகை நீரோட்டங்கள் வெப்பமாகவும், மற்றும் பல குளிர்நீராலும் அமைந்தவையாகவும் உள்ளது. நீரோட்டங்களும் கடலின் மீன்வளமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அது மட்டுமன்றி, கடல் நீரோட்டங்கள் பூமியின் தட்ப வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சமீப கால ஆராய்ச்சியில் உணரப்பட்டுள்ளது.

கடல் ஓதங்கள்

கடல் ஓதங்கள், கடல் அலைகள் மற்றும் நீரோட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பூமியின் புவிஈர்ப்பு விசைதான் பூமியின் மேற்பரப்பில் காணப்படுபவைகளை தன் பக்கம் ஈர்த்து வைக்கிறது. இந்த ஆகார்fஷண சக்தி பூமிக்கும் மட்டும் சொந்தமன்று. சந்திரன், சுரியன் மற்றும் அனைத்து கோள்களுக்கும் இந்த ஈர்ப்பு சக்தி உண்டு.

கடல் ஓதங்கள் என்பவை கடலின் நீர் மட்டம் ஒட்டு மொத்தமாக உயர்வதையோ, தாழ்வதையோ குறிக்கும். இது சுனாமியிலிருந்து வேறுபட்டது. கடல் ஓதங்கள் தினசரி கடலில் உலகம் முழுவதும் நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் துணைக்கோளான சந்திரன் புவியின் மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் உருவாவதே ஓதங்கள் ஆகும். சூரியனும் புவியின் மீது தன் ஈர்ப்பு சக்தியை செலுத்துகிறது. சூரியன் சந்திரனைவிட 26 மில்லியன் மடங்கு பெரியது, இருப்பினும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள து|ரம்150மில்லியன் கிமீ ஆக உள்ளதால் சூரியனின் ஈர்ப்பு சக்தியை விட சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

கடல் ஓதங்கள் இரு வகைப்படும்

1) உயர் ஓதம்

2) தாழ் ஓதம்

கீழ்கண்ட படங்களில் காண்பது போல அமாவாசை அல்லது பெளர்ணமி தினங்களில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் அமைவதால், சூரிய மற்றும் சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது செயல்படுவதால் கடலில் உயர் ஓதம் உருவாகிறது. இந்த உயர் ஓதம் உருவாகும் போது கடலின் நீர் மட்டம் உயர்ந்து அலைகள் கரையைத் தாண்டி உள்ளே அடிக்கும் அல்லது கடல் வெகு து|ரத்துக்கு உள்வாங்கி கொள்ளும்.

கடலின் உயர் ஓதத்தை விளக்கும் படம்

தாழ் ஓதம்

சூரியனும் சந்திரனும் பூமிக்கு 900 செங்கோணத்தில் அமையும் போது, சுரிய சந்திரனின் ஆகார்ஷண சக்திகள் ஒன்றையொன்று சமன் செய்வதால் கடலில் தாழ் ஓதம் உருவாகிறது. தாழ் ஓதம் உருவானால் கடலின் நீர்மட்டம் அதிகளவு உயராமலும், தாழாமலும் ஒரு சராசரி மட்டத்தில் இருக்கும்.

தாழ் ஓதத்தை விளக்கும் படம்

சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை சமயங்களில் தாழ் ஓதம் கடலில் ஏற்படுகிறது.

சுனாமிக்கும் கடல் ஓதங்களுக்கும் என்ன சம்பந்தம் ?

சுனாமிக்கும் கடல் ஓதங்களுக்கும் துளிகூட தொடர்பு இல்லை. இரண்டும் வெவ்வேறானவை. சுனாமி இன்பது கடலின் அடியில் ஏற்படம் பூகம்பத்தால் தோற்றுவிக்கப்படும் பேரலைகள். கடல் ஓதங்கள் சந்திர, சூரியர்களின் ஈர்ப்பு சக்தியால் உருவாகுபவை. 24 மணி நேரத்தில் கடலில் இரு முறை நீர் அளவு ஏறியும். இறங்கியும் காணப்படும். இது 4 மணி நேர இடைவெளியில் சுழற்சியாக வருடம் முழுவதும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இதை தமிழில் நீரேற்றம், நீர் இறக்கம் என்று அழைக்கலாம்.

யாமிருக்க பயமேன் என்று அறிவியல் நமக்கு துணையிருக்க அடிப்படை அறிவியலை அறியாமல் மக்கள் குழப்பமடைவதை நிவர்த்திக்கும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நமது இந்தியக் கடலோரங்களில் கடல் ஓதங்களினால் சராசரியாக 1 மீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உயரவோ அல்லது குறையவோ செய்கிறது. ஆனால் கனடாவில் அமைந்துள்ள பண்டி வளைகுடாவில் கடல் ஓதத்தினால் நீர்மட்டம் உயர்வதும் தாழ்வதும் 18 மீட்டர் அளவு உள்ளது. இதுவே உலகிலேயே அதிகளவு கடல் ஓதம் ஏற்படம் பகுதியாகுமட. 18 மீட்டர் என்பது கிட்டத்தட்ட 60 அடிகள். 60 அடிக்கு நீர் உயர்ந்தும் தாழ்ந்தும் போவதால் இந்த வளைகுடாவில் கப்பல்களை செலுத்துவதும் மிகவும் சிரமமாகும்.

இது மட்டுமன்றி, இந்த பண்டி வளைகுடாவில் கலக்கும் ஆறுகள் பின்னோக்கி ஓடுகின்றன. ஏனென்றால் பண்டி வளைகுடாவில் உயர்ஓதம் ஏற்படும் போது நீர் மட்டம் உயர்ந்து கடல் நீர் ஆற்றின் வழியே பின்னோக்கி ஓடுகிறது. இது நம்ம ஊரிலும் நடப்பதுதான். சென்னை கூவம் ஆற்றில், து|த்துக்குடி பக்கில் ஓடை இவைகளில் சாக்கடை நீர் கடலில் கலக்காமல், உயர் ஓதத்தின் போது பின்னோக்கிப் போகின்றன.

—-

எழுதியவர்

ரா. சரவணன்

4/595 ஜோதி இல்லம்

ஆண்டவர் நகர்

திருச்சி ரோடு

நாமக்கல் 637 001

தமிழ்நாடு

இந்தியா

மின்னஞ்சல் stingray_mr@yahoo.com

Series Navigation

ரா.சரவணன்

ரா.சரவணன்