கடத்தல் கவிதை

This entry is part [part not set] of 4 in the series 20000110_Issue

நிக்கி ஜியோவானி



கடத்தப் பட்டதுண்டா
கவிஞனால் நீ
நான் கவியென்றால்
உன்னைக் கடத்துவேன்
என் சந்தங்களில் , எதுகையில் அடைப்பேன் உன்னை
ஜோன்ஸ் கடற்கரைக்கு அழைத்துப் போவேன்
அல்லது கோனித் தீவிற்கு
அல்லது என் வீட்டுக்கே
லிலாக் மலர்களில் உன்னைப் பாடலாக்குவேன்
மழையில் உன்னை மோதித் தீர்ப்பேன்
கடற்கரையில் உன்னைக் கலக்குவேன்
என் யாழிசையைக் கேட்டு நீ புகழச் செய்வேன்
என் காதல் பாட்டில் உன்னை விருத்தப் பா ஆக்குவேன்
உன்னை வென்றெடுக்க எதுவும் செய்வேன்
சிவப்பு கறுப்பு பச்சையில் உன்னைப் போர்த்தி
என் அம்மாவிடம் காட்டிப் பெருமிதம் கொள்வேன்
ஆம் நான் கவியெனில் உன்னைக் கடத்திச்
செல்வேன்


kidnap poem

Nikki Giovanni


ever been kidnapped
by a poet
if i were a poet
i ‘d kidnap you
put you in my phrases and meter
you to jones beach
or maybe coney island
or maybe just to my house
lyric you in lilacs
dash you in the rain
blend into the beach
to complement my see
play the lyre for you
ode you with my love song
anything to win you
wrap in the red Black green
show you off to mama
yeah if i were a poet i ‘d kid
nap you

Translation: G Rajaram

Thinnai 2000 January 10

திண்ணை

Series Navigation

Scroll to Top