This entry is in the series 20050930_Issue

புதியமாதவி


எங்கிருந்து வந்தது இந்த சூரியன் ?
என் பிரபஞ்சத்தின் நட்சத்திரமாய்
நட்சத்திரங்கள் இல்லாத இருண்ட வானத்தில்
மேகங்கள் தாண்டி
மோகங்கள் விலக்கி
எட்ட நின்று
இரவல் வாங்காத
இதமான வார்த்தைகளில்
எழுத்துக்கூட்டி
என் இருட்டை வாசிக்கிறது.

தொடமுடியாத தூரத்தில்
இருக்கிறது
இருந்தாலும்
தொட்டுச்செல்கிறது
அந்த ஜீவனின் குரல்.

ஒற்றை நட்சத்திரம்
போதுமா இருட்டுக்கு ?
நகைக்கிறது வானம்.
எப்படி புரியவைப்பேன் ?
முகம் தேடி அலையும் இருட்டில்
எரியும் மெழுகுவர்த்தியிடம்
காணாமல் போகிறது
கண்கூசும் சூரியன் என்பதை.
—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation