ஒரு நாத்திகனின் கவிதை

This entry is part 37 of 49 in the series 19991203_Issue

மெளனப்புறா


முதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர். 
அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை.
ஏனெனில் நான் இந்து அல்ல

பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர்
அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன்
ஏனெனில் நான் முஸ்லீம் அல்ல

பிறகு அவர்கள் சீக்கியருக்காக வந்தனர்
கொலையுண்ட சீக்கியரின் உறவினர்கள் கதறியபோது நான் ஒன்றும் சொல்லவில்லை
ஏனெனில் நான் சீக்கியன் அல்ல

பிறகு அவர்கள் கிரிஸ்தவருக்காக வந்தனர்
ஜன்மப்பகை தீர்க்கப்படும்போது எனக்கு ஒன்றும் ஆகவில்லை
ஏனெனில் நான் கிரிஸ்தவன் அல்ல

பிறகு எனக்காக வந்தனர்.
அப்போது நான் தான் அவர்களது முதல் எதிரி என்று சொன்னபோது 
நான் உதவிக்காக கூக்குரல் எழுப்பும்போது தான் பார்த்தேன் 
யாரும் இல்லாத பரந்த மைதானத்தில் தனியாக கொலையுண்டதை
 
 
 

Series Navigation<< காந்தியார், பெரியார், சாதிகள்பசுவைய்யாவின் கவிதைகள் >>

மெளனப்புறா

மெளனப்புறா