எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

தேவமைந்தன்


(மொழியாக்கம்)
எழுத்து என்பது எழுதப் பெறுவது
மட்டுமே அன்று – சோராது
எழுச்சி தருவதே எழுத்து.
வலிமை என்பது பேசுவதில் இல்லை;
சொற்களை அடக்கி ஆள்வதில்தான்
உயிர்த்திடும் வலிமை.
எந்தவொரு சொல்லின் எல்லையும்
எதுவரை தெரியுமா ? அந்த
வானம் வரையிலே.
கவிஞர் ஒருவருக்கு, தான் படைத்தவற்றுள்
ஆகச்சிறந்த கவிதை எது ?
தான் மட்டுமே.
கவிஞர் வேண்டாமா ? கவிஞரைப் பற்றிய
தகவலும் தரவுமே போதுமா ?
உயர்வான கவிஞர் உரைப்பார் கவிதைகள்
உறங்கும் பொழுதிலும் கூடவே.
படைக்க வேண்டுமே என்றொரு கவிதை
நமக்காகவே காத்திருக்கிறதா ? இல்லை,
படைத்து முடிந்துவிட்டதாய்த்தான்
ஒரு கவிதை உள்ளதா ?
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்