எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

அறிவிப்புஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழா, எதிர்வரும் ஏப்ரில் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்வாக மல்கிறேவ் சமூக மண்டபத்தில்( MULGRAVE COMMUNITY CENTRE – 355, Wellington Road, Mulgrave, Victoria, Australia) ( ஆருடுபுசுயுஏநு ஊ நடைபெறும்.

அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா மாநிலங்களில் இந்த எழுத்தாளர்விழா நடைபெற்று வருகிறது.

ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் பங்கேற்பதற்காக டென்மார்க்கிலிருந்து எழுத்தாளர் திரு. வீ. ஜீவகுமாரன், இலங்கையிலிருந்து இலக்கிய ஆர்வலர் திருமதி லலிதா நடராஜா (கண்டி அசோகா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் நடராஜாவின் மனைவி) ஆகியோர் வருகைதரவுள்ளனர்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா தலைமையில் ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் இரவுவரையில் தொடரும். நான்கு அமர்வுகளில் இடம்பெறும் கருத்தரங்குகளில் சமூகம் – திருமணம் , சிறுகதை இலக்கியத்தில் பாத்திர வார்ப்பு, இணையத்தளமும் இளம்தலைமுறையும், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஈழத்தவர் பார்வை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். மாணவர் அரங்கில் இளம்தலைமுறையைச்சேர்ந்த மாணவர்களும் மொழி, சினிமா. புகலிடத்தில் முதியவர்கள் முதலான தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். விமர்சன அரங்கில் லண்டன் முல்லை அமுதன் தொகுத்துள்ள இலக்கியப்பூக்கள் என்னும் நூல், டென்மார்க் ஜீவகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் மக்கள்…மக்களால்…மக்களுக்காக… ஆகியவற்றுடன், மல்லிகை 44 ஆவது ஆண்டு மலர், ‘ஞானம்’ நூறாவது இதழ், தமிழகத்தில் வெளியாகும் சர்வதேச மாசிகை யுகமாயினி ஆகியனவும் விமர்சிக்கப்படவுள்ளன.

கவியரங்கு
சுமார் பத்து கவிஞர்கள் கலந்துகொள்ளும் ‘ வாசலுக்கு வந்த வைகறையே’ என்ற தலைப்பில் கவியரங்கும் மெல்பன் கலைச்சுடர் நடனப்பள்ளி தயாரித்து வழங்கும் நடன கலையரங்கும் இரவு நிகழ்ச்சிகளில் இடம்பெறவுள்ளன.

கருத்தரங்குகள் இங்கு தமிழ் பயிலும் உயர்தரவகுப்பு மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.

மேலதிக விபரங்களுக்கு:-
பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா (தலைவர்) 61 02 9838 4378
திரு.கே.எஸ்.சுதாகரன் (நிதிச்செயலாளர்) 61 03 9363 1124
திரு.லெ.முருகபூபதி (செயலாளர்) 61 03 9308 1484

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு