எல்லைகள் இல்லா உலகம்
வே பிச்சுமணி

வேடன்தாங்கல் பறவைகளே
வாழ்க்கையின் உண்மைகளை
உலகில் பரப்புரை செய்பவர்களே
ஆறாம் அறிவின்
கற்பனை எல்லை கோடுகளை
விடுதலை சின்னமான இறக்கைகளால்
அழித்த அன்பு பறவைகளே
உங்களுக்கும் தாயகம் தமிழ்தானே
ஆதலால் புலம் பெயர்ந்து பறக்றீர்களோ
நீங்கள் விடுதலை உணர்வுடன்
நாங்கள் தாயகத்திலும் அகதிகளாய்
உங்கள் கூடுகள்
வேடர்களால் கூட அழிக்கபடுவதிலை
எங்கள் வீடுகள்
ஆள்பவர்களால் அழிக்கப்படுகின்றன
எங்களுக்கு எல்லைகள் உண்டு
எங்களுக்கு சிறகுகள் இல்லை
எங்களுக்கு ஆறாம் அறிவும் உண்டு
எங்களுக்கு உலகமே இல்லை
எல்லைகள் இல்லா உலகம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தமிழ் கவிகளின் ஆசை
இப்படியா நிறைவேற வேண்டும்
எல்லைகள் இல்லா உலகில்
வேடந்தாங்கல் பறவைகளாய்
மனிதன் விடுதலை பெறவேண்டும்
அந்த நாள் வரும் வரை
அகதிகளாய் சில இனங்கள் ……….