உயிர்க்கொல்லி

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பொன்னி செந்தில்


அறியாத பருவத்தில்
அறிமுகமானாய்.., உன்னை
ஆனந்தமாய் அனுபவித்தேன்..
துன்பப் பொழுதில்
துணையிருக்கும் அன்பானவள்
என்று எண்ணினேன்.. ஆனால் நீ
என் ஆன்மாவை அபகரித்தாய்…!
உன்னை உயிராய், சுவாசமாய்
நினைத்தேன்.., நீயோ, என்
உணர்வுகளை உருக்குலைத்தாய்!
மறந்தேன் உன்னை மனமின்றி!
இப்போது…
சுவாசத்தின் சுகத்தை,
பேசுவதில் தெளிவை,
உணவின் சுவையை,
உறக்கத்தில் நிம்மதியை,
நடையில் வேகத்தை,
இன்னும், இன்னும்..
உன்னால் இழந்த
எல்லாம் இப்போது
அனுபவிக்கிறேன்…!
சிகரெட்டே.. நீ ஒரு
சீக்ரெட்டான உயிர்க்கொல்லி !!!

– பொன்னி செந்தில், சிங்கப்பூர்.-
(ponnisenthil_77@yahoo.com.sg)
feenix75@yahoo.co.in

Series Navigation

பொன்னி செந்தில்

பொன்னி செந்தில்