இவள் அவளில்லை ?.

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

நியமத்


மறுத்த காதலியை எண்ணி
காதலின் மறுபதிப்பையே
மறுத்தான் நண்பன்

மொழிந்தான்! இனியொரு
பிரிவைகாண இல்லை
வலு என்று..

அவன் அறியாததா ?

சுட்டுவிட்டது நெருப்பு என்றாலும்
தவிா;ப்பதில்லையே நாம் அதை
வேதனையின் வடு ஆழம் என்றாலும்
காலச்சுவடுகள் மாற்றுமே அதை

நண்பா! உன்னின் பண்புகள்
எத்துணை சிறந்தவை
வீணாக்கலாமோ வஞ்சிக்கப்பட்டதினால்..

புரியாமல் உன்னை இழந்தவள் கூட எண்ணி
இப்புவி உள்ளமட்டும் வருந்துவாளே!

நண்பா! நடந்ததை மறந்துவிடு
உன்னுள் ஏற்படும் ஊற்றை அள்ளி எடு

உன் உணா;வை மீண்டும் தூண்டும்
இவள் அவளில்லை ?

– நியமத்

***
niamat@gandour.com

Series Navigation

நியமத்

நியமத்