இலை போட்டாச்சு! – 5 – அவியல்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

பாரதி மகேந்திரன்அவியல் இல்லாத திருமணச் சாப்பாடு உண்டா? ‘ எனக்கு அவியல் பிடிக்காது என்று சொல்லுகிறவர்
தான் உண்டா! அவியலில் சேர்க்கக்கூடிய காய்கள் –
அவரை, கொத்தவரை, பீன்ஸ், காராமணி, புடல், வாழைக்காய், கத்தரிக்காய், சேனை, பூசனி, உருளைக்
கிழங்கு, முருங்கைக்காய், உரித்த பட்டாணி ஆகியவை. (அவியலில் வெண்டைக்காய் போடக்கூடாது. கொழ கொழவென்று ஆகிக் கெடுத்துவிடும்.) சுமார் ஒன்றரை அல்லது இரண்டங்குல நீளத்துக்குப் பொடிப்பொடியாய்
அரிந்த காய்கள் சுமாரான அளவுள்ள 10 கிண்ணங்கள் – அல்லது 2 லிட்டர் – இருக்குமானால் –
மேலும் வேண்டியவை –
நன்கு முற்றிய பெரிய தேங்காய் 1
பச்சை மிளகாய் 8 / 10 – தேவைப்படி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
சீரகம் 1/2 அல்லது 1 தே.க. (சிலர் சீரகம் போடமட்டார்கள்.)
தேங்காய் எண்ணெய் 50 கிராம்
உப்பு 1 மேசைக் கரண்டி – அல்லது சுவைக்கேற்ப
கறிவேப்பிலை 5 / 6 ஆர்க்குகள்
ரொம்பவும் புளிக்காத கெட்டித்தயிர் 1 கிண்ணம்
அரிந்த காய்த் துண்டங்களில் சரிபாதி பூசனித் துண்டங்காயிருப்பது அவியலுக்குச் சுவை கூட்டும்.
எப்போஅதுமே காய்களைக் கழுவியபின் நறுக்கவேண்டும். அரிந்தபின் கழுவினால் சத்துக் கெட்டுவிடும். அரிந்த
காய்களைச் சமைப்பானில் (குக்கர்) அரைக் கிண்ணம் போல் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, பொடி ஆகிய
வற்றையும் போட்டுவேகவிடவேண்டும். இரண்டே ஊதல் ஓசையில் (விசில் சத்தம்) காய்கள் வெந்துவிடும். பூசனி
தானே நீர்விட்டுக்கொள்ளும் இயல்புடையதாதலால், வெந்த காய்களிலிருந்து நீரை வடித்துவிடவேண்டும்.
இதனிடையே, பச்சைமிளகாய், தேங்காய் (சீரகம் பிடித்தால் சீரகம்) ஆகியவற்றை மின்னம்மியில் அரைத்துத்
தயாராக வைத்துக்கொள்ளவும். வெந்த காய்களை மறுபடியும் அடுப்பிலேற்றி, அரைத்த விழுது, தயிர், கறிவேப்பி
லை ஆகியவற்றை அவற்றுடன் சேர்த்துக்கலக்கி ஓரிரு கொதிகள் வந்ததும் இறக்கவும். இறக்குவதற்கு முன்ன
தாகவோ, இறக்கிய பிறகோ தேங்காய் எண்ணெய்யையும் அதில் சேர்க்கவும். தயிருக்குபதிலாக சிரிய எலுமி
ச்சம்பழ அளவிலான புளியை வெந்த காய்களுடன் சேர்த்துக்கொதிக்கவிடலாம். (சிலர் அவியலை இறக்கிய பின்
எலுமிச்சம் பழத்தைத் தேவைக்கு ஏற்றவாறு பிழிவார்கள்.)
அவியலுக்குச் சுவை கூஊட்டுபவை முருங்கைக்காயும், பூசனியும்தான். இவை இல்லாத அவியல் சுவைக்காது!
சிலர் சேப்பங்கிழங்கும் சேர்ப்பதுண்டு. ஆனால் அதைத் தனியாக வேகவைத்து உரித்து இறுதியில் சேர்த்தல்
நலம். கீரைத்தண்டு இருந்தால் அதுவும் சேர்க்கக் கூடியதே.

mahendranbhaarathi@yahoo.com

பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்