இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

ரஜித்


நேற்று
மண்ணில் விழுந்த
மின்னலோ என
ஊரின் நடுவே ஆறு
எட்டுத்திசை கேட்கும்
ஏலேலோ சப்தம்
வாய்மடை சுழிக்கும்
வாளைமீன் துள்ளும்
கரைகளில் விம்மும்
கருவேலும் வேம்பும்
கன்னிகள் குளியல்
கதிரவன் வருமுன்
காளையர் குளியல்
கதிரவன் வந்தபின்
மல்லுவேட்டி உலர
புல்வெளிகள் உதவும்
எதிர்நீச்சல் செய்வார்¢
எழுபதுகள் வெல்வார்
குடித்தால் தெரியும்
மடிப்பால் தோற்கும
இன்று
கரைகள் இரண்டிலும்
குடிசைத் தொழில்கள்
ஆறின் மடியோ
குப்பைத் தொட்டிகள்
விவசாய நிலங்களில்
வீடுகள் கடைகள்
நசுக்கப்பட்டது
நதியின் குரல்வளை
நாளை
இடியென எழுந்தது
இளைஞர் பாசறை
முறிக்கப்பட்டன
புறம்போக்குக் கடைகள்
அள்ளப்பட்டன
குப்பை வெளிகள்¢
அணைமுதல்
கடல்வரை
நடக்கிறாள் நதியாள்
கரைகளில் நின்று
பூக்கள் வாழ்த்தின

இறக்குமுன் எழுந்தது ஆறு
இறந்தாலும் எழுவான்
இலங்கைத் தமிழன்


Series Navigation

ரஜித்

ரஜித்