இரயில் நிலையப் பெஞ்சு

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

நிஷாந்தன்


பல சமயங்களில் கேட்டுக் கொண்டிருப்பது
நாணல் புதருக்குள் நுழைந்து
ஓசையுடன் வெளிப்படும்
காற்றின் ஒலியை மட்டும்தான்.

சலிப்பூட்டும் கதைகளுடன்
மாலையில் வந்தமரும்
முதியோ¡¢ன் பேச்சைக் கேட்க
அலுப்பதேயில்லை.

சன்னலோரக் குழந்தைகளின்
கையசைப்புக்குப் பதிலாய்
கரங்களை உயர்த்த
காங்க்¡£ட் தோலுக்குள் உதறும்
இரும்பு விரல்கள்

சுமை சோர்ந்து வருவோர்
இறக்கி வைக்கும் பாரத்தைச்
சுமக்கும்போது
முகத்தில் தோன்றும்
பெருமிதத்தைக்
கவனிப்பதேயில்லை எவரும்.

மீட்கவியலாக் காலங்களில்
எத்தனையோ நடந்த பிறகும்
எதற்கோ காத்திருக்கிறது
ரயில் நிலையப் பெஞ்சு.


poet.nishanthan@gmail.com

Series Navigation

நிஷாந்தன்

நிஷாந்தன்