இரண்டாம் முறை

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

இரா. இரமேஷ் குமார்.


அங்கு முதன் முறையாக
என்னைப் பார்த்து விட்டு,
என் தவிர்த்தலில் வருத்தத்துடன் நீ
தலை குனிந்த போது,
உன் தவிப்பை ஓரக் கண்ணில்
இரசித்தேன்.
உன் இரண்டாவது பார்வையில் தானே
என் மனம் உனக்குப் புாிந்தது.

எதையும் முதல் முறை சொல்ல முற்பட்டு
தயக்கததுடன் வேண்டாம் என்பாய்!
பின் இரண்டாம் முறை
கல கலவென்று கொட்டி விடுவாயே!

நம் முதல் திருமண நாளை
மறந்து விட்டு அசடு வழிந்தாய்.
இரண்டாம் திருமண நாளன்றோ,
நீ தந்த அன்புப் பாிசுகளில்
ரொம்பவும் பூாித்துப் போயிருந்தேன்!

இரண்டாம் தேனிலவில்
நீ செய்த அட்டகாசங்கள்
என் நினைவில் பசுமையாய் இருக்கிறதே!

எத்தனை முறை என்னை
உன் இரண்டாம் தாய் என்று
கொண்டாடியிருப்பாய்!

வாழ்வில் காண்பதற்கு இன்னும்
எத்தனையோ இருக்கிறது,
உயிர்த்து வாயேன் இரண்டாம் முறை.

***

Series Navigation