இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

kedhar Soman


பல நூற்றாண்டுகளாக தக்காணத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு
நகரங்களும் கிராமங்களும் அரசியல் போர்களில் நகர்த்தப்படும் பொம்மைகளாக
இருந்தன. ஒன்றோடு ஒன்று

மோதும் அரசுகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சொத்துக்களாக இருந்தன. யார்
வரியை வந்து வசூலித்தார்களோ அவர்களிடம் வரிகளை கொடுத்தார்கள்.
பெருமளவில்

தூங்கிக்கொண்டிருந்தார்கள்.. அவ்வப்போது தூக்கத்தில் புரண்டு
படுத்திருக்கலாம்.

எப்போதாவது அவர்கள் தங்களது குழந்தைகளை போருக்கு அனுப்பினார்கள்,
யாருக்காக யார் போர் புரிகிறார்கள் என்பது கூட கேட்காமல். மற்ற
நேரங்களில் அவர்கள்

தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டார்கள். அவர்கள் பிரிந்து கிடந்தார்கள்.
குழப்பத்த்தில் இருந்தார்கள். எதிர்காலம் பற்றிய பெரும் நம்பிக்கை
இருக்கவில்லை.

1645இல் தோரானா கோட்டை மீது சிவாஜி தனது முதல் தாக்குதலை தொடங்கியபோது
இப்படித்தான் தக்காணத்தின் நிலை இருந்தது. 35 வருடங்களுக்குப் பிறகு அவர்
இறக்கும்போது,

தூங்கிக்கொண்டிருக்கும் நிலப்பகுதியாக இருந்த தக்காணம், இடி முழக்கும்
எரிமலையாக ஆகியிருந்தது.

இறுதியாக பெருமளவு மக்கள் திரள்கள் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு
தொலைநோக்குப் பார்வையோடு ஒரு மனிதன் வந்திருந்தான். நவீன “நேஷன்
ஸ்டேட்” (nation state)

என்று கூறக்கூடிய அனைத்து குணாம்சங்களும் சந்தேகத்துக்கிடமின்றி
பொருந்தியதாக ஒரு நாட்டை உருவாக்கினான். சிவாஜியின் தொலைநோக்குப்
பார்வையின் முக்கியமான அம்சம் அது

‘ஒருங்கிணைப்பதாக” இருந்தது என்பதுதான். ஒன்றோடு ஒன்று மோதும் எதிரெதிர்
குழுக்களை ஒன்றிணைத்து ஒரு ராணுவமாக ஆக்குவது மட்டுமேயாக அவரது
தொலைநோக்கு பார்வை

குறுகிவிடவில்லை. சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் பொதுவான ஒரு அரசியல்
கருத்தாக்கத்தை சுவீகரித்துக்கொள்ளவும், அதனை தனதாக்கிக்கொண்டு அதற்காக
உயிரையும்

இழந்து போரிடவுமான ஒரு பார்வையாக இருந்தது. தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை
மஹாராஷ்டிராவில் கட்டிக்கொள்வது மட்டுமே அவரது கனவல்ல.
வெளிநாட்டிலிருந்து வந்த

ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர் கருதியவர்களை எதிர்த்து உள்நாட்டு
மக்களையும் அரசுகளையும் இணைத்த ஒரு கூட்டமைப்பை கட்டமைப்பதும் அந்த
கனவில் சேர்த்தி. அவர் இந்து

அரசுகளின் கூட்டமைப்பை உருவாக்க விரும்பினார். மிர்ஜா ராஜே ஜெய்சிங்கிடம்
அவுரங்கசீப்பை விட்டு விலகவேண்டும் என்று தனது கௌரவத்தை விட்டுக்கொடுத்து
கேட்டுக்கொண்டார்.

அரசு இழந்த விஜயநகர அரசர்களோடு உறவை பேணினார். விஜயநகர பேரரசிடமும்
விஜயநகர அரசர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஒன்றோடு ஒன்று
பொருதும் அனைத்து

இந்து அரசுகளையும் ஒருங்கிணைக்க விடாது முயற்சி செய்தார்.

இந்து அரசர்களும் அவரது முயற்சிகளுக்கு ஒத்துழைத்தார்கள். பஞ்சாபில் சீக்கியர்கள், ராஜஸ்தானில் ராஜ்புத்ரர்கள், கர்னாடகாவில் நாயக்குகள், மைசூர் அரசர்கள், விஜயநகர அரசின் வாரிசுகள் ஆகியோர் சிவாஜிக்கு மிகுந்த் உதவி அளித்தனர். பிறகு மராத்தாக்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள். இது நிச்சயமாக ஒரு நாடு இழந்து போன ஆன்மாவை மீட்டெடுப்பதே.

இந்துக்களுக்கு அரசியல் குரலை உருவாக்கிக்கொண்டிருந்தபோதும், அவரது ஆட்சியில் முஸ்லீம்கள் பாரபட்சம் காட்டப்பட்டதே இல்லை. அவரது அரசிலும் ராணுவத்திலும் ஏராளமான முஸ்லீம்கள் பதவி வகித்தனர். அவர் ஆக்ராவுக்கு பயணம் சென்றபோது அவரது மெய்க்காவலர ஒரு முஸ்லீமே. அவரது கப்பல்படை தளபதி சித்தி ஹிலால் ஒரு முஸ்லீம். சிவாஜியின் அரசு இஸ்லாம் ஒரு தனிநபரின் மதம் என்பதை எதிர்த்தே இல்லை. ஆனால் அரசியல் இஸ்லாமுக்கு அது ஒரு பதிலாக இருந்தது.

ஒவ்வொரு அரசியல் புரட்சிக்கும் பின்னால் ஆன்மீக புரட்சியே இருந்து வந்திருக்கிறது. இதுவும் வேறுவிதமாக உருவாகவில்லை. மஹாராஷ்டிரத்தில் 12 ஆம் நூற்றாண்டில் ஸ்வாமி தியானேஷ்வரால் துவக்கப்பட்டு பக்த துக்காராமால் (இவர் சிவாஜியின் சமகாலத்தவர்) முன்னெடுத்துச் செல்லப்பட்ட பக்தி இயக்கமே சமூக மாற்றத்தின் பெரும் வினையூக்கியாக இருந்து பெரும் விளைவை ஏற்படுத்தியது. இது சமூகத்தில் உள்ள அனைவரும் நல்வரவு பெறும் சபையை ஏற்படுத்தியது. சாதி அமைப்பின் விலங்குகள் உடைக்கப்படவில்லை. ஆனால், நிச்சயமாக அவை தளர வைக்கப்பட்டிருந்தன. ஆன்மீக அளவில் அனைவரும் ஒரே நிலை, ஒரே பக்கம் என்று வரும்போது, அவர்களை அரசியல்ரீதியாக ஒரே பக்கத்தில் கொண்டுவருவது சிவாஜிக்கு எளிதாக இருந்தது.

மராத்தியர்களின் வெற்றி மஹாராஷ்டிரத்துக்கு மட்டுமே சொந்தம் என்று மராத்தியர்கள் சொல்ல ஆசைப்படக்கூடும். ஆனால், மராத்தா சாம்ராஜ்யத்தின் உச்சத்தில், சிவாஜியின் அரசாங்கத்தில் 20 சதவீதம் மட்டுமே மஹாராஷ்டிரமாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் வடக்கு பிரதேசங்களை கைப்பற்ற மராத்தா ராணுவம் சென்ற போது அதன் சதவீதம் இன்னும் குறைவு. மராத்தாக்களின் ராணுவத்தில் ஆப்கானிஸ்தானத்து காந்தாரத்திலிருந்தும் கிழக்கே வங்காளத்திலிருந்தும் ஏராளமானவர்கள் எல்லா சமூக படிநிலைகளிலிருந்தும் வந்து பங்கேற்றிருந்தனர். பலதரப்ப்பட்ட அரசர்களிடமிருந்தும் சாதாரண மக்களிடமிருந்தும் ஏராளமான ஆதரவை சிவாஜி பெற்றிருந்தார்.

மராத்தா சாம்ராஜ்யத்தை வெறும் மராத்தியர்களோடு முடிச்சு போடுவது இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் வேலை. மஹாராஷ்டிரத்தின்

கலாச்சாரத்தின் வேர்கள் புராதன கர்னாடகாவிலும் வடக்கிந்தியாவிலும் இருக்கின்றன. சிவாஜியின் வமிசமே ராஜஸ்தானத்து சிசோதியா ராஜ்புத்ரகளின்

வமிசத்தை சேர்ந்தது. மராத்தியர்கள் தங்களது வேர்கள் இந்தியாவெங்குமிருந்தும் வந்திருக்கின்றன என்று சொல்வதில் வெட்கப்பட ஏதுமில்லை.

மராட்டிய மாநிலம் வடக்கிந்தியாவும் தென்னிந்தியாவும் கிழக்கிந்தியாவும் அனைத்து இந்திய மக்களும் கலந்த உண்மையான ஒரு இந்தியக்கலவை.

இதுவே நாட்டுக்கு ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அளித்தது. சிவாஜி மராத்தா அரசர் அல்ல. அவர் ஒரு இந்திய அரசர்.

அன்பான வாசகர்களே, இங்கே இந்த 27 வருட மாபெரும் போரின் கதை முடிவடைகிறது. இந்த கதை உங்களுக்கு ஒரு உண்மையான

நம்பிக்கையையும் அடக்கமான பெருமித உணர்வையும் அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இன்று பேனாவில் எழுதுபவர்களாவும் சதுரங்களுக்குள்

உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன் விசைப்பலகையில் தட்டச்சிடுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த விரல்களின் மூதாதையர்கள் சற்றே சில

காலத்துக்கு முன்னர் கனவிலும் கருத முடியாத மாபெரும் வீரத்தையும் தைரியத்தையும் ஆன்மீக உறுதியையும் காட்டினார்கள். அதே ரத்தமே நம்

உடலிலும் ஓடுகிறது.அதே ஆன்மாவே நம்முள்ளும் உறைகிறது. இன்னொருமுறை சுதந்திரத்துக்கான போர்ப்பறை ஒலிக்குமானால், அதே

ஆன்மாக்களே செவிகொடுத்து கேட்டு அந்த போரிலும் கலந்துகொள்ளும்.

ஜெய் ஹிந்த்

References:

“History of Mahrattas” by James Duff – http://www.archive.org/details/ahistorymahratt05duffgoog

“Shivaji and His Times” by Jadunath Sarkar – http://www.archive.org/details/cu31924024056750

“A History Of Maratha People” by Charles Kincaid –
http://www.archive.org/details/historyofmaratha02kincuoft

“Background of Maratha Renaissance” by N. K. Behere –
http://www.archive.org/details/backgroundofmara035242mbp

“Rise of The Maratha Power” by Mahadev Govind Ranade –
http://www.archive.org/details/RiseOfTheMarathapower

“Maratha History” by S R Sharma – http://www.archive.org/details/marathahistory035360mbp

(visit the links to download the full books in PDF form free)

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>