இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

-கவிதா குருகந்தி (கிரீன்பீஸ்) தமிழில்: அசுரன்


இந்தியாவில் 193 பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 50% நச்சுக்களின் சுகாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் அறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 90,000 டன் பூச்சிக்கொல்லிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, ஆசியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 12வது இடத்தையும் வகிக்கிறது. இந்திய பூச்சிக்கொல்லி சந்தையின் மதிப்பு 2000 கோடிக்கும் அதிகமாகும். இப்பூச்சிக் கொல்லிகளில் 67% வேளாண் துறையால் பயன்படுத்தப்படுகிறது. அதில் மூன்றில் இரு பங்கு பருத்தி, நெல், காய்கறிகள், பழப்பயிர்களிலேயே பயன்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உதவியுடன்தான் 1950களில் இந்தியாவில் முதன்முதலாக பூச்சிக்கொல்லி தயாரிப்பு டி.டி.ற்றி, பி.ெ ?ச்.சி, போன்றவற்றின் உற்பத்தியோடு தொடங்கியது. தற்பொழுது 5-6 பன்னாட்டு நிறுவனங்களும், 30-40 இந்திய உற்பத்தியாள ?களும் கள–தில் உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களில் சின்ஜென்டா, பேயர், டூபான்ட், மான்சான்டோ, டிநோசில் ஆகியவையும் இந்திய நிறுவனங்களில் டாடா குழுத்தின் ராலிஸ், யுனைட்டட் பாஸ்பரஸ் லிட், சியர்ல், எக்செல், கார்டா, லூபின், எய்ம்கோ, தனுகா, இந்துஸ்தான் இன்செக்டிசைட் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்தியா எதில் தன்னிறைவு பெற்றிருக்கிறதோ, இல்லையோ, பூச்சிக்கொல்லி தயாரிப்பில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆம், இந்தியத் தேவையில் 95% உள்நாட்டு தயாரிப்பாலேயே நிறைவேற்றப்படுகிறது. அதோடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் நடக்கிறது. 2000-2001ஆம் ஆண்டில் இந்தியப் பூச்சிக்கொல்லி ஏற்றுமதியின் மதிப்பு 1215 கோடி.

இந்திய பூச்சிக்கொல்லித் துறையானது 2000-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1968, பூச்சிக்கொல்லிகள் விதிமுறைகள் 1971 ஆகியவற்றின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் அனுமதி வழங்குதல், ஆகியவை மத்திய அரசுக்கும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகளை வாங்குவதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வேறு சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள கார்போ சல்ஃபான், டைகோபோல், டி.டி.ற்றி, டைமெதோயேட், மீதைல் பாரதியான், மோனோ குரோட்டோபாஸ், ஆக்சிஃபுளோரோஃபென், பராகுவாட் டை குளோரைடு, போரேட், பாஸ்பாமிடான், பிரிதிலாகுளோர், சோடியம் சயனைட், என்டோசல்பான், ஃபென்புரோபதிரின், லின்டேன், மாலதியான், டிரைஅசோபாஸ், டிரைடெமோர்ப், தயோமீதேன் ஆகியவை உள்ளிட்ட 32 பூச்சிக்கொல்லிகள் இன்னமும் இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை, சிரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கூட இந்தியாவில் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுபவை, மோனோ குரோட்டோபாஸ், என்டோசல்பான், போரேட், குளோர்பைரிபாஸ், மீதைல்பாரதியான், குயினைல்பாஸ், மன்சோசெப், பராகுவாட், புடாகுளோர், சிசோடிரோடுரான், பாஸ்பாமிடான் ஆகியவையாகும். விலை அதிகமான ஆர்கனோ பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள் 50%-மும் மலிவான உயிரி பூச்சிக்கொல்லிகள் 1%மும் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆபத்தற்ற உயிரி பூச்சிக்கொல்லி உற்பத்தியும் பயன்பாடும் அதிகரிக்கப்படவேண்டும்.

பூச்சிக் கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதில் முதலிடத்தில் ஆந்திராவும் (13,000 டன்), இரண்டாமிடத்தில் உத்திரபிரதேசமும் (11,000டன்), மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் (9,500 டன்) உள்ளன. பயிர்வகையில் பார்த்தால், 5% பரப்பில் பயிரிடப்படும் பருத்தி 52%-59% பூச்சிக்கொல்லியையும், 24% பரப்பில் பயிரிடப்படும் நெல் 17%-18% பூச்சிக் கொல்லிகளையும் 3% பரப்பில் பயிரிடப்படும் காய்கறிகள், பழச்செடிகள் 13%-14% பூச்சிக்கொல்லிகளையும் 3% பரப்பில் பயிரிடப்படும் தோட்டப்பயிர்கள் 7%-8% பூச்சிக் கொல்லியையும், 58% பரப்பில் பயிரிடப்படும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை 6%-7% பூச்சிக் கொல்லிகளையும் 2% பரப்பில் பயிரிடப்படும் கரும்பு 2%-3% பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்துகிறது. பருத்தியில் பயன்படுத் தப்படும் அதிகபட்ச பூச்சிக்கொல்லியின் அளவை இது நமக்கு காட்டுகிறது.

பூச்சிக்கொல்லிகள் மருந்துகளஙுல, நச்சுக்கள். இவற்றின் பயன்பாட்டால் பயன்படுத்தும் விவசாயிகள், உண்ணும் நுகர்வோர் என பல்வேறு தரப்பினரும் எண்ணற்ற உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் சுமார் 10,000 பேர் பூச்சிக்கொல்லிக்குப் பலியாகின்றனர், மேலும் 40,000 பேர் பல்வேறு உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்கிறது சர்வதேச மேம்பாட்டு ஆய்வு மையம். மற்றொரு கணக்கீடோ, இந்நச்சுப் பாதிப்பால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 30 இலட்சம்பேர் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது. இதில் 20,000 பேர், இந்தியா போன்ற நாடுகளில் இறக்கிறார்களாம். மூன்றாம் உலக நாடுகளின் பூச்சிக்கொல்லி நச்சு பாதிப்பில் மூன்றிலொரு பங்கு இந்தியாவில் நடைபெறுகிறது.

குறைந்தபட்சம், மிகக் கொடிய பூச்சிக் கொல்லிகளின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் உடனடியாகத் தடை செய்வதும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும் நம் அரசின் முன்னுள்ள உடனடிக் கடமையாகும். அதற்கு உகந்த நேரம் இதுவே.

இக்கட்டுரைகள் மே 2004 சுற்றுச்சூழல் புதிய கல்வி மாத இதழில் வெளியானவை.

தட்டச்சு: அசுரன் (asuran98@rediffmail.com)

சுற்றுச்சூழல் புதிய கல்வி- மாத இதழ்,

ஆண்டு சந்தா: ரூ. 75 (வெளிநாடுகளுக்கு: US $ 10)

நியூ-எட் பப்ளிகேசன்ஸ்,

ெ ?ச் 2-30, இராணிமங்கம்மாள் காலனி,

திண்டுக்கல்- 624001

தமிழ்நாடு, இந்தியா.

91-451-2461512

Series Navigation

author

அசுரன்

அசுரன்

Similar Posts