இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

வே.மணிகண்டன்.புதுவை



இணையம் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம். இது எண்ணற்ற கலாச்சாரங்களுக்கான பாலமாக விளங்குகிறது. பல புதிய உறவுகளை எதிர்பாராதவர்களின் மத்தியில் உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் குறிப்பிட்ட வி~யங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்கும் தலைசிறந்த ஊடகமாக இணையம் திகழ்கிறது. இணையம் உலகைப் பற்றிய செய்திகளையும் படைப்புகளையும் தருவதோடு தன் சேவையை நிறுத்திக் கொள்வதில்லை. மேலும் உலகை மனிதன் எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? எவை முக்கியத்துவம் வாய்ந்தவை? எவை முக்கியத்துவம் அற்றவை? என்பதையெல்லாம் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறது.
மனிதன் எழுத்து வழித்தகவல் தொடர்பு கொண்ட வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. ஆயினும் தகவல் தொடர்பின் அசுரப்பயணம் கூட்டன் பர்கின் அச்சுப்பொறி புரட்சிக்குப் பிறகே, தொடங்குகிறது. எல்லா மொழிக்கும் கிடைக்கும் பதிவு சாதனமாக இணையம் திகழ்கிறது.
தமிழ், இனம் சார்ந்து பேசப்படுகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் இதுவும் ஒன்று. உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் தமிழர்களால் மட்டுமே பேசப்படுகின்ற மொழி. ஆங்கிலம், ஸ்பானி~; போல தமிழ் பன்னாட்டுத் தகவல் ஊடகமல்ல, ஏன் தமிழ் மொழி தமிழ் நாட்டிலேயே அலுவக மொழி அல்ல. பிறமொழி வார்த்தைகளின் கலப்பு தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டு இருக்கிறது. தமிழைப் போன்ற பல மொழிகள் கூடிய விரைவில் அழிந்துப் போய்விடும் என சிலர் குறி சொல்கிறார்கள். தமிழ் வருங்கால தலைமுறையினரால் கைவிடப்பட்டு பொருண்மிய வாழ்க்கைக்கு ஆங்கிலம், கலாச்சாரத்துக்குத் தமிங்கிலம் என சூழல் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் இவ்வாறெல்லாம் பேசிய மூடர்களின் கருத்தைத் தமிழினமும், இணையமும் சேர்ந்து புரட்டிப் போட்டது. ஆம் இன்று இணையத்தில் இருநூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் இணைய தளங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளையும், கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களையும் தமிழ் பெற்றுள்ளது. இணைய தமிழை மேலும் தெரிந்து கொள்ள இணைய தமிழின் நிறைகளையும், குறைகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

தமிழின் முதல் வலையேற்றம்;:
தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கையில் தேசியப் பல்கலைக் கழகத்தின் ஐவெநசநெவ சுநளநயசஉh யனெ னுநஎநடழிஅநவெ ருnவை ஐசுனுரு உடன் ஊநவெசந கழச ஐவெநசநெவ சுநளநயசஉh இணைந்து தமிழ் இணையத்திற்கான அடிப்படை ஆராய்ச்சிகளைத் தொடங்கியது. சிங்கையின் பிரபல எழுத்தாளரும், தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் மேலும் கணியன் எனும் மென்பொருள் மற்றும் வலையகத்தின் வாயிலாக உலகத் தமிழர் மத்தியில் மாபெரும் புகழ் பெற்ற நா. கோவிந்த சாமி தான் தமிழின் முதல் வலைப்பக்கத்தை வடிவமைத்தவர்.
அக்டோபர் 1995 இல் சிங்கப்பூர் அதிபர் திரு ஓங்டாங் சாங் தொடங்கி வைத்த துழரசநெல றுழசனள ர்ழஅந யனெ யேவழைn யுவொழடழபல ழக ளுiபெயிழசந Pழநவசல (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில் தான் முதன் முதலில் இணையத்தில் தமிழ் பிரவேசம் செய்தது.
இணையத்தமிழின் நிறைகள்;:-
இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் மொழியாக தமிழ் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.

தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களின் வரவால் இணையத்தமிழ் பலகோடி வாசகர்களை தன்னகத்தே பெற்றுள்ளது.

தமிழில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் வசதியும், உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் பெற அரட்டை வசதியும் பெரும்பாலான தமிழ் இணைய தளங்கள் பெற்றுள்ளன. இச்சிறப்புத் தன்மை பொருந்திய வசதிகளால், நம்நாட்டில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் உள்ள நண்பர்களுடனும், இலக்கியவாதிகளுடனும், படைப்பாளர்களுடனும் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகை செய்கிறது.

தமிழ் இணைய தளங்களில் சில தளங்கள் நூலகத்தையும் ஒரு பகுதியாக கொண்டுள்ளன. நமக்குத் தேவையான நூல்கள் இந்த இணைய தள நூலகத்தில் இருக்குமானால் அவற்றை நாம் படிப்பதோடு மட்டுமல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை இணையத்தில் வெளியிடுவதனால் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நம்முடைய படைப்புகளைச் சென்று சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் வாசகர் மற்றும் திறனாய்வாளர்களின் கருத்துக்களைப் படைப்பாளர்கள் பெருகின்றனர். இதனால் இருவழிப் பரிமாற்றம் (படைப்பாளர்-வாசகர்) நடைபெறுகிறது.

இணைய தளங்களில் தனி நபர்களால் உருவாக்கப்படும் தமிழ்வலைப்பதிவுகள் மிகுந்த வரவேற்பையும், படைப்பு ரீதியில் மாபெரும் செல்வாக்கையும் செலுத்துகின்றன. இவை தனியொரு மனிதனால் உருவாக்கப்படுவதால் அவருடைய படைப்புக்கள் எவ்வித திருத்தமோ, வழிகாட்டுதலோ தேர்ந்தடுத்தலோ அல்லாது நடுவரின் எழுத்து பொதுவாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் மாதத்திற்கு மூன்று முறை பெரும்பாலான வலைப்பதிவுகள புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வலைப்பதிவுகளில் படைப்புகளும், விமர்சனங்களும் அதிக அளவில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.

இணையத்தில் தமிழ்த் தேடுதளங்களின் வரவால் நமக்குத் தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். இவற்றில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது தமிழ்ச் சமூகம் சார்ந்த அனைத்து தேடுதல்களுக்கும் பெரும்பாலும் தரவுகள் கிடைக்கின்றன. தோசை, மாமா, முரசு ஆகிய தேடுகளங்கள் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துருக்கள பல தமிழ் இணைய தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தற்பொழுது பல இணைய தளங்கள் யூனிகோடு (தன்னியலாக இயங்கும் எழுத்துரு) வசதியைப் பெற்று எந்த இணையத்திலும் தமிழைக்காணும் வாய்ப்பை பெற்றிருக்கின்றன.

தமிழ் யூனிகோடு எனும் உலகில் எழுத்து வழக்கில் உள்ள மொழிகள் எல்லாவற்றிற்கும் எழுத்துரு, குறியீடுகள் வரையறுக்கும் அமைப்பில் தமிழும் இணைக்கப்பட்டு குறியீட்டுப் பகுதியில் போதுமான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த யூனிகோடினை தமிழ் இணைய தளங்கள் பல பயன்படுத்துவதால் எல்லாவித எழுத்துருக்களும் பன்மொழி உள்ளடக்கிய ஒரே எழுத்துருவாக பாவிக்க உதவுகிறது.

உலகில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும், நட்புறவிற்கும், உசாவுதலுக்கும் இணையம் பெரும்பணியைச் செய்கின்றது.

இணையத்தமிழின் குறைகள்;:-
இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு தமிழ் இணைய தளங்களும் வௌ;வேறு தமிழ் எழுத்துருக்களைப் பெற்றிருப்பதால் அவ்வெழுத்துருக்கள் கணிணியில் இருந்தால் மட்டுமே அந்த இணையத் தளங்களை நாம் பார்வையிட முடியும். இந்த சிக்கலுக்குத் தீர்வாக யூனிக்கோடு எனும் முறை இருப்பினும் அதைப் பெரும்பாலான இணைய தளங்களில் அந்த மென்பொருள் தரவிறக்கம் செய்யப்படாததால் நம்பகத் தன்மையற்ற எழுத்துருக்களால் இணைய தமிழ் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல், அரட்டை ஆகிய வசதிகள் இருப்பினும், தமிழர்களே அவற்றைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். மேலும், ஆங்கில எழுத்துருக்கள் தோன்றுகின்றன ஆனால் நாம் தமிழில் அனுப்பும் தகவலானது அனுப்பும் தகவலின் எழுத்துரு இல்லாத கணிணியில் தமிழ் எழுத்துக்கள், தமிழ் வரி வடிவங்களாக தெரிவதில்லை. மாறாகச் சிறிய, சிறிய கட்டங்களாகவோ, வட்டங்களாகவோ தெரிகின்றன.

இணையத்தில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தளங்களைப் பெற்றிருந்தாலும் அவற்றில் பெரும்பாலான இணைய தளங்களில் அடிக்கடித் தகவல்கள் புதுபிக்கப்படுவதில்லை. பல மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது துவங்கிய நிலையிலேயே இத்தளங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தமிழ் இணைய தளங்களில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ள நூலகத்தில் குறைந்த அளவிலேயே புத்தகங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல இணையத்தளங்களில் நூலகம் என்ற பெயரைத் தாங்கியபடி வெற்றிடப் பக்கங்கள் உள்ளன.

இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளின் வருகையால் தனிநபர்களின் படைப்புகள் எவ்விதத்தடையும், திருத்தமும் இல்லாமல் தரயேற்றம் செய்யப்பட்டு மொழிக்கு வளமை அளித்தாலும், அதிக அளவில் தரவில்லாத படைப்புகள் வெளியிடப்படுவது மிகப்பெரிய குறையாக இணையத்தமிழ் வளர்ச்சியில் முன் நிற்கிறது.

தமிழ் இணையத் தேடு தளங்கள் முழுமையான தரவுகளைப் பெற்றில்லாததால் உலாவிகள் தேடும் தரவுகளை சரிவரப் பெறமுடிவதில்லை.

யூனிக்கோடு எனும் தன்னியலாக இயங்கும் எழுத்துருவை இணையத்தளங்கள் பல பெற்றில்லாதது இணையத் தமிழ் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இணையத்தில் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட இணைய தளங்கள், இணைய வலைப்பதிவுகள், தேடுதளங்கள் இடம் பெற்றிருந்தாலும் இணையதள முகவரிகளை ஆங்கிலத்தில் அழுத்திகளால் தட்டச்சு செய்தால் தான் நாம் தமிழைக் காணக்கூடிய நிலை இருக்கிறது.

விசை பலகைகள தமிழில் இல்லாது ஆங்கிலத்தில் கணிணியில் இருப்பது, தமிழில் விசைப் பலகைகளை அறிமுகம் செய்து, அதை பரவல்படுத்தபடாதது ஆகியவை இணைய தமிழின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தமிழ் ஆர்வம், தமிழ்ப்பற்று போன்றவை இணையத் தமிழ் நோக்கிய பயணத்தில் முதல்படி, இன்று நாம் பார்க்கும் இணையத் தமிழ் வளர்ச்சியில் பங்கேற்றவர்களைப் பின்னிப் பிணைக்கும் ஓர் இழையாக இருப்பது தமிழ்பற்றுதான் ஆனால் அதைத்தான்டிச் சென்று, மொழியின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு, மக்களின் தகவல் மற்றும் தொடர்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் மென்பொருள் இயற்றுவது மிக முக்கியம்.


manisen37@yahoo.com

Series Navigation