இசை அரசி எம்.எஸ்.

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

ஷைலஜா.


பட்டங்களால் பலருக்குப் பெருமை! சிலரால் பட்டங்களுக்குப் பெருமை!

இசையரசி எம்.எஸ் எனப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களால்

அவர் பெற்ற

பட்டங்களூக்குத் தான் பெருமை.

இசைக்குயில் எம்.எஸ்ஸின் பாடல்கள் செவிகளைக் கடந்து ஆன்மாவைத்

தொடுபவை.

பக்த மீராவின் ‘கிரிதரகோபாலா ‘, அடுத்து ‘வண்டாடும்

சோலைதனிலே ‘, யாரோ இவர் யாரோ ‘

சியாமளா சாஸ்திரியின் ‘சரோஜ தள நேத்ரி ‘,

முத்துசாமிதீட்சிதரின் ‘ரங்கபுரவிஹாரா ‘, ‘காற்றினிலே வரும் கீதம் ‘

‘பாவயாமிரகுராமம் ‘, தசாவதாரப் பாடல்கள், விஷ்ணுசஹஸ்ரநாமம்,

வெங்கடேச சுப்ரபாதம், வாசுதேவாச்சாரியாரின் ‘ப்ரோசேவா ‘ பாபனாசம்

சிவனின் ‘பராத்பரா ‘

சுவாதித்திருநாளின் ‘பவயாமிரகுராமம் ‘, மாரிமுத்துபிள்ளையின் ‘காலைத்

தூக்கிநின்றாடும் தெய்வமே ‘ போன்ற பாடல்கள் ஒலிக்காத இடமும் உண்டோ ?

ராஜாஜியின் ‘குறை ஒன்றுமில்லை ‘பாடலை எம்.எஸ் பாடும்போது அவரின்

இழைந்த குரலினால் பாடலின் வரிகள் இதயத்தை நெகிழவைக்கின்றன என்பது

மறுக்க முடியாத உண்மை.

மதுரை நகர் கண்ட மாதரசி சுப்புலட்சுமி.

மல்லிகையும் மரிக்கொழுந்தும் வைகை காற்றில் கலந்து வீசும் நறூமணம்.

திரும்பிய இடமெல்லாம் சங்கம் வளர்த்த பாண்டியரின் தேன் மதுரத்தமிழ்.

நான்மாடக் கூடல் கோபுர வாசல்களில் சரம் சரமாய் தொங்கும் ரோஜா

மாலைகள் ஈசனுக்கு இணையாக இளங்காற்றில் நடனமாடும். ஆயிரங்கால் மண்டபம்

பொற்றாமரைகுளம் அழகர்கோயில் பழமுதிர்ச் சோலை தெப்பக்குளம்

திருப்பரங்குன்றம் திருமலை நாயக்கர் மஹால் என அத்தனையும் தனது ஆட்சிக்குள்

வைத்திருக்கும் என்றும் எழில் கலையாத மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில்

மேலக் கோபுரம் தெருவை ஒட்டிய அனுமந்தராயன் கோவில் சந்தில் சுப்பிர

மணிய ஐய்யருக்கும் மதுரை ஷண்முக வடிவுக்கும் 1916 ஆம் ஆண்டு ஒரு புதையல்

கிடைத்தது.

அந்தப்புதையலின் பெயர் சுப்புலட்சுமி.

‘குஞ்சம்மா ‘ என்பது எம்.எஸ்ஸின் செல்லப்பெயர். அங்கையற்கண்ணியிடம்

ஞானவரம் பெற்ற

இசைக்குயில் அனைவராலும் எம்.எஸ் என அழைக்கப்பட்டார்.

அந்தப் பெயரைச் சொல்லும் போதே காற்றினிலே வரும் கீதத்தில் மனம்

திளைக்கும்.

இசை எம்.எஸ்ஸுக்கு பூர்வீக சொத்து. தாய்வழிப்பாட்டி அக்கம்மாள்

அந்தக்காலத்திலேயே மிகச்

சிறந்த பெண் வயலினிஸ்ட். தாயார் ஷண்முக வடிவு, அந்த நாளைய பிரபல

வீணைக் கலைஞர். மூத்த அண்ணன் சக்திவேல்

புகழ்பெற்ற மிருதங்க வித்வான் தங்கை வடிவாம்பாளும் வீணையில் தேர்ச்சி

பெற்றவர்.

இப்படி வீடே இசைக்குடும்பமாக இருக்கவும் பள்ளீபடிப்பைவிட

பாட்டுப்பாடுவதிலேயே எம்.எஸ்ஸுக்கு ஆர்வமாகியது.

தாயாரே அவருக்கு முதல் குருவானார். தாயார் சாதகம் செய்யும் போது தானும்

செய்வார்.மனவெளியில் தூய்மையை நிரப்பி

இசை மேன்மைபடுத்தியதின் விளைவுதான் அவருடைய ஒன்பதாவது வயதிலேயே

அவருக்கு மேடைக் கச்சேரி வாய்ப்பை வழங்கியது.

பத்து வயதிலேயே இவரது பாடல்களை எச்.எம்.வி நிறுவனம் பதிவு செய்து

இசைத்தட்டாக வெளியிட்டிருக்கிறது.

தனது தாயாரின் வீணைக் கச்சேரிகளில் தனது பதினாறு வயது வரை

வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் பன்ணி வந்த எம்.எஸ். 1931ல்

செளந்தர்ய மஹாலில் தனிக்கச்சேரி அமைத்தார்.

அடுத்து1933. சென்னை ம்யூசிக் அகாடமியில் மேடை ஏறினார். தாய் மகளின்

கச்சேரிக்கு தம்புரா சுருதி சேர்த்தார்.

பாட்டைக்கேட்டு பரவசமான காரைக்குடி சாம்பசிவ ஐய்யர். ‘தொண்டையில்

வீணையா வைத்திருக்கிறாய் இத்தனை இனிமையாய்ப்

பாடறியே குழந்தே ? ‘ என்று வாய் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.

அந்த காலக் கட்டத்தில் ஆண் வித்துவான்கள் மட்டுமே மேடையை

ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.

அரியக்குடி. ஜிஎன்பி. செம்பை, செம்மங்குடி. மதுரை மணி ஐய்யர்,

மஹாராஜபுரம் முசிறி என்று ஆண்கள் ராஜ்ஜியம்.

செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐய்யரிடம் பாட்டு கற்றுக் கொண்டு சென்னையில்

கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார் எம்.எஸ்.

தெய்வீககுரலில் அவர்பாடும்போது ரசிகர்கள் மெய்மறந்தார்கள்.

ஆர்ப்பாட்டம் இல்லாத சங்கதிகள் அவரது நாவினின்றும் சுழன்று

நாலாதிசைகளிலும்கேட்போர் நெஞ்சில் இடம் பிடிக்க

ஆரம்பித்தது.

வசீகரக்குரல் வான்புகழ் தேடிக் கொடுக்க எம் எஸ். என்னும் பெயரே

அனைவரையும் நிமிர்ந்து உட்காரவைத்தது.

அந்த சமயத்தில் க்ருஷ்ணசாமி சுப்ரமண்யம் தயாரித்த, ‘சேவா சதனம் ‘ என்னும்

படத்தில் கதாநாயகியாக நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது.

அந்தப் படத்தில் அவர் பாடிய பாடல்களைக் கொண்ட கிராம போன்கள்

1936ஆம் ஆண்டு விற்பனையில் ரெகார்ட் ப்ரேக் செய்திருக்கிறது.

1940ல் சதாசிவத்திற்கும் எம்.எஸ்ஸுக்கும் திருநீர்மலையில் எளிமையான

திருமணம் நடந்தது. காதல் திருமணம் தான்.

சதாசிவம் பெரும் தேச பக்தர்.

எம்.எஸ் பாடி நடித்து வெளிவந்த இரண்டாவது படம் சகுந்தலை.

கல்கி பத்திரிகை நிர்வாகப் பொறுப்பை சதாசிவம் ஏற்றபோது

மூலதனத்திற்குப் பணம் தேவைபட்டது.

அப்போது எம்.எஸ் தானாகவே முன்வந்து ‘சாவித்திரி ‘ படத்தில் மலேரியா

ஜுரத்தோடு நடித்துக் கொடுத்தார்.

1941ல் வெளி வந்த அந்தப்படத்தின் பிரபலப் பாடலான

‘ப்ர்ஹிமுகுந்தேதி ‘பாட்டை எம்.எஸ்ஸுக்கு பாடச் சொல்லிக் கொடுத்து

உதவியது அவரது குரு செம்மங்குடி தானாம்.

கல்கி சதாசிவம் எம்.எஸ்ஸைப் போட்டு சொந்தமாகத் தயாரித்த ‘பக்த

மீரா ‘ படம் தமிழில் 1945ல் வெளியாகி சக்கைபோடு போட்டது

அதேபக்த மீரா ஹிந்திபடத்தில் எம்.எஸ் ஹிந்தியில் பேசி நடிக்க அவர்

அகில இந்திய நட்சத்திரமானார்.

கவிக் குயில் சரோஜினி தேவி ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கி

வடநாட்டினருக்கு அவரை அறிமுகப்படுத்தி தனக்குக் கிடைத்த

‘இந்தியாவின் நைட்டிங்கேல் ‘ பட்டத்தை எம்.எஸ்ஸுக்கு வழங்கி மேலும் சிறக்க

வைத்தார்.

சினிமாவே அறவே பிடிக்காத ராஜாஜியை சரோஜினி மீராவிற்கு

அழைத்துப்போய் காட்டவும் பார்த்த ராஜாஜி, ‘. அருமையான படம்.

இதை இந்தியாவின் புண்ணியதினத்திலெல்லாம் இந்தியா முழுக்கக் காட்டச்

செய்யணும் ‘என்றாராம்.

டெல்லி பிளாசா தியேட்டரில் மீரா படம் பார்க்க வந்த லார்ட் மெளண்ட்

பேட்டன் தம்பதியர் உட்பட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் உபசரித்து

வரவேற்றவர் அப்போது பாரதப் பிரதமராயிருந்த ஜவஹர்லால் நேரு.

‘இசை அரசிக்கு முன்னால் நான் யார் ? சாதாரண பிரதம மந்திரி தானே ? ‘

என எம்.எஸ்ஸுக்கு அவர் சூட்டிய புகழாரம் உலகப்

பிரசித்தி பெற்றது.

அதேபோல் தேசப் பிதா மாஹாத்மா தனது 78வது பிறந்த நாள்

விழாவின்போது தனக்கு மிகவும் பிடித்தமான ‘ஹரிதும் ஹரோ ‘ என்கிற

மீரா பஜன் பாடலை எம்.எஸ்ஸைவிட்டுப் பாடச் சொல்லிக் கேட்க தான்

விரும்புவதாய் சொல்ல, அந்த சமயத்தில் எம்.எஸ் டெல்லிக்கு

வர இயலாமல் போக, அதே பாடலை வேறொருவரை வைத்துப்பாட வைக்கலாமா

என காந்தியிடம் கேட்க அதற்கு அவர், ‘மீராவின்

அந்தப்பாடலை மற்றவர் பாடி நான் கேட்பதைவிட எம்.எஸ்ஸால் வெறுமே

பேசப்பட்டால் கூட பரவாயில்லை ‘ என்றாராம்

எம்.எஸ் அந்த மீராபாடலை அதுவரை பாடியதில்லையம். காந்தியின்

விருப்பம் நிறைவேற, இரவோடு இரவாக அதற்கு ட்யூன் போடப்பட்டு எம்.எஸ்

அதை தன் குரலில் பாடி ஆல் இந்தியா ரேடியோவில் அதை பதிவு செய்து

1947அக்டோபர்2ம் தேதிகாலை

முதல் விமானத்தில் அது டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.மஹாத்மாவின் ஆசை

நிறைவேற்றப் பட்டது.

1948 ஜனவரி30 காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப்பாடலை

ஒலிபரப்பு செய்து தேசப் பிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செய்ததாம் அகில

இந்திய வானொலி நிலையம்.

இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எம்.எஸ்.

இசை வல்லுனர்களைக் கொண்டு நிறைய இந்துஸ்தானி மற்றும் பிறமொழிப்

பாடல்களை அர்த்தம் தெரிந்து உச்சரிப்பு ,இறை

உணர்வு இலக்கிய நயம் இவையனைத்தையும் கேட்டறிந்து கொண்டதோடு

முற்றிலுமாய் அதில் தன்னை ஐக்கியப் படுத்திக்

கொண்டார் எம்.எஸ். தனது இனிமையான குரலில்,divinegrace உடன்

அவற்றை அட்சர சுத்தமாய் லயித்துக் கொடுக்கும் போது கேட்போர் அதில்

கரைந்து போவது இயற்கைதான். இதன் பின்னணியில் இருந்து எம்.எஸ் எனும்

வைரத்தைப் பட்டைதீட்டி

அழகுபடுத்திய பெருமை அவர் கணவர் சதாசிவத்தையே சேரும்.

மனைவியின் கச்சேரியின் முழுப்பொறுப்பையும் ஏற்று அவருக்கு உதவியாக

இருந்தவர்.

இந்துய ஜானதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் ராஜ்பவனில் திடாரெனப்

பாடுவதற்கு விண்ணப்பம் விடுக்க பக்கவாத்தியம் ஏதுமின்றி

வெறும் தம்புராவை மட்டுமே வைத்துக் கொண்டு மீரா, கபீர்தஸ் சுர்தாஸ்

பாடல்களைப் பாடி மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

சங்கீதம் தான் உலகமாயிருந்தது எம் எஸ்சுக்கு.

‘எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட இனிய சாரீரம் வேறூ யாருக்கும் கிடையாது ‘

என்றார் டிடி கிருஷ்ணமாச்சாரி.

காந்தி தன் கைப்பட எம்.எஸ்ஸுக்கு கடிதமே எழுதி இருக்கிறார். ‘கஸ்தூரிபா

காந்தி ஞாபகார்த்த நிதிக்காக தாங்கள் இசைமூலம்

செய்து வரும் உயர்ந்த சேவையை ராஜாஜி சிலாகித்துக்கூறினார்.எல்லாம் வல்ல

இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ‘ என

எழுதி இருந்தாராம்.

மேலும் பலதலைவர்கள் அறிஞர்கள் சான்றோர்களிடமிருந்து பாராட்டுக்கள்

பெற்றவர் எம்.எஸ்.

21.11.1997ல் கணவர் மறைந்த பிறகு கச்சேரிகள் பொதுவிழாக்களை

குறைத்துக் கொண்டார்.

பிறகு எளிமையான துறவி வாழ்க்கை வாழ்ந்து எத்தனையோ தர்ம

காரியங்களுக்குஉதவி அண்மையில் காலமாகிவிட்ட இசையரசி

எம்.எஸ் கண்மூடிப்போனாலும் அவர் இசைத்துப்போன கானம் காற்றினிலேயே

கலந்து வரும்.

***

shylaja01@yahoo.com

Series Navigation

ஷைலஜா

ஷைலஜா