ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

பிபிஸியிலிருந்து


டி.என்.ஏவை வைத்து பல விஷயங்களை கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், ஏன் சமீபத்தில் நடந்த குற்றங்களின் உண்மையையும் கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். ஆனால், டி.என்.ஏ வை வைத்து ஆதாம் ஏவாள் பற்றிய உண்மையைக் கண்டறிய முடியுமா ?

டி.என்.ஏ என்பது நமது மூதாதையர்களைப் பற்றி அறிய மிகவும் உபயோகமான கருவி. நமக்கும் நம் மூதாதையர்களுக்கும் இருக்கும் இணைப்பை நமக்கு பொதுவாக இருக்கும் டி.என்.ஏவைக் கொண்டு அறியலாம். பிரச்னை நடுவே பாலுறவு வருவதுதான்.

பாலுறவு நமது ஜீன்களை கலக்கிவிட்டுவிடுகிறது (recombination மூலமாக). ஒவ்வொருவரது ?ீன் அமைப்பும் தனிப்பட்டதாக வரும்படிக்கு, நம் பெற்றோரின் ?ீன்களை கலக்கி தாயின் ?ீனிலிருந்தும், தந்தையின் ?ீனிலிருந்தும் சிலவற்றை உதறி சிலவற்றை எடுத்துக்கொண்டு கலக்கிவிடுகிறது. நம்மிடம் நம் தாயிடமிருந்து பாதி, தந்தையிடமிருந்து பாதி வருகிறது. அது, நம் ஒரு தாத்தாவிடமிருந்து கால் பங்குதான் நமக்கு வருகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த பங்கு குறைந்து கொண்டே போகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த மேற்கண்ட சட்டத்துக்கு இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன.

மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏ

Y குரோமசோம்.

மிட்டோகாண்டிரியா என்பது நம் செல்களுக்குள் இருக்கும் இன்னொரு குட்டி செல். இது நம் செல்களுக்கு சக்தியைத் தரும் செல். இதற்கென்று தனியே ஒரு டி.என்.ஏ இருக்கிறது. உங்களிடம் இருக்கும் எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் தாயிடமிருந்தே வருகிறது. அவளும் தன்னுடைய எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவையும் தன்னுடைய தாயிடமிருந்தே (உங்களது பாட்டியிடமிருந்து) பெறுகிறாள். இது உடையாத சங்கிலியாக மூத்த மூத்த மூதாதையர் வரைக்கும் செல்கிறது.

மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் வம்சாவம்சமாக வழிவழியாக மாறாமலேயே வருவதில்லை. எப்போதாவது ஒருமுறை, இந்த மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை பிரதி எடுக்கும்போது ஒரு எழுத்து விட்டுப்போய்விடுகிறது. இந்த தவறுகள் ஒரு நிலையான வேகத்தில் நம் மூதாதையர்களின் வம்சத்திலிருந்து இருக்கின்றன. இது ஒருவகை மூலக்கூறு கடிகாரம் போல, அறிவியலறிஞர்களுக்கு உதவுகின்றன.

வ்வாறு நடக்கும் பிரதிஎடுக்கும் தவறுகளை வைத்து( mutations) இரண்டு பேர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னால் ஒரே மூதாதையர் தாயைப் பெற்றிருப்பார் என்று கணக்கிடலாம்.

1980இல் ஆலன் வில்ஸன் என்ற ஒரு அறிவியலாளர் இது போன்றதொரு ஒப்புமை வேலையை செய்தார். உலகம் முழுவதும் இருக்கும் 135 பெண்களிடம் இருக்கும் மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை எடுத்து, அவைகளில் ஒவ்வொருவரிடமிருந்து இன்னொருவர் எவ்வளவு தூரம் வம்சாவழியில் இருக்கிறார் என்பதை கணக்கிட்டார். அதே போல எல்லா பெண்களுக்கும் ஒரே தாய் இருந்திருந்தால் அவர் எவ்வளவு காலத்துக்கு முன்னால் இருந்திருப்பார் என்பதைக் கணக்கிட்டார்.

தாய்வழி முறையில் நாம் எல்லோரும் ஒரு பொதுவான தாயை சுமார் 150,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணிடம் பார்க்கிறோம்.

இன்னொரு வழியில் சொல்லப்போனால், ஒரு மனிதருடைய 10,000ஆவது முப்பாட்டி, நம் எல்லோருக்கும் 10,000ஆவது முப்பாட்டி.

வளை மிட்டோகாண்டிரியல் ஏவாள் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.

***

‘ஏவாள் ‘ என்பவள் கறுப்பு முடியோடு, கறுப்பு தோல் நிறத்தோடு, சூடான புல்வெளிப்பாலைவனத்தில் உணவுக்காக அலைந்து கொண்டிருந்திருக்கலாம், பெரும்பாலும். அவள் நிச்சயம் மார்டினா நவரோத்திலோவா போல வலிமையான உடலோடும், விலங்குகளை தன் வெறும் கையாலேயே கிழிக்கக்கூடியவளாகவும் இருந்திருப்பாள் — நியூஸ்வீக், 11 ஜனவரி 1988

***

இதற்குப் பொருள், அவள் வாழ்ந்தபோது அவள் ஒருபெண் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று பொருளல்ல. நம்மிடம் ஏராளமான பொதுவான தாய்மார்கள் இருந்தார்கள். அவர்களது ஜீன்கள் நிச்சயம் நம்மிடையே இருக்கின்றன. அவை நம் தந்தையர்வழியில் குழப்படி செய்யப்பட்டு, நம்மிடம் வந்திருக்கின்றன.

ஆதாம் விஷயம் என்ன ?

மிட்டோகாண்டிரியா போலவே, நம் தந்தையர் வழியை அறிய Y குரோமசோம் உதவலாம்.

Y குரோமசோம் தந்தை மூலமாக மகனுக்கு வருகிறது. ஆண்களுக்கு ஒரு X குரோமசோமும், ஒரு Y குரோமசோமும் இருக்கிறது. பெண்களுக்கு இரண்டு X குரோமசோம்கள் இருக்கின்றன. இந்த Y குரோமசோம் இருப்பதோ இல்லாததோதான் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.

சமீபத்தில் அறிவியலாளர்கள், Y குரோமசோம் பிரதி எடுக்கப்படும்போது நிகழும் டி.என்.ஏ எழுத்துக்கள் தவறுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். உலகெங்கும் இருக்கும் சுமார் 1062 ஆண்களது Y குரோமசோம்களை எடுத்து ஒப்பிட்டார்கள். நம் எல்லோருக்கும் பொதுவான மூத்த தாத்தா சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதை அறிந்தார்கள். இவரை ‘Y குரோமசோம் ஆதாம் ‘ என்று அழைக்கிறார்கள்.

பார்க்க வினோதமாக இருந்தாலும், மரபணு ரீதியில், இந்த ஆதாம், இந்த ஏவாளைச் சந்திக்கவே இல்லை. இவர்கள் சுமார் 85,000 வருடங்கள் இடைவெளி விட்டு வாழ்ந்தவர்கள்.

இது எப்படி இருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். விடை எளியது. நமது மரபணு ஜீன் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே ஒரு பரிணாம வரலாறு இருக்கிறது. ஆகவே நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாம்களும், ஒன்றுக்கு மேற்பட்ட ஏவாள்களும் இருக்கிறார்கள். அது நீங்கள் நமது டி.என்.ஏவில் இருக்கும் எந்தப் பகுதியைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

**

http://www.bbc.co.uk/science/genes/dna_detectives/adam_and_eve.shtml

***

Series Navigation