ஆண்கள் – எப்படிப்பட்டவர்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

அயீதா


10. ஜமுக்காளம்: பழசாக பழசாக நிறைய சொட்டைகளைப் பார்க்கலாம்

9. தட்பவெப்பம்: தட்பவெப்பத்தையும் நம்மால் மாற்ற முடியாது, ஆண்களையும் மாற்ற எதனாலும் முடியாது

8. மிக்ஸி: உங்களுக்கு வேண்டும். ஆனால், எதற்காக என்று சரியாகச் சொல்ல முடியாது.

7. சாக்கலேட்: இனிப்பு, வழாவழா, குற்றஉணர்ச்சி தருவது.

6. விளம்பரங்கள்: சொல்வதில் ஒரு வார்த்தையையும் நம்ப முடியாது

5. துணிக்கடைகள்: உங்கள் உடைகள் திடாரென்று அவர்களது பிரச்னை

4. அரசாங்கத்தில் போட்ட சேமிப்புப் பத்திரம்: முதிர்ச்சி அடைய வெகுகாலம் பிடிக்கும்

3. மஸ்காரா: உணர்ச்சியின் முதல் அறிகுறியில், அழுகை தொட்டவுடனேயே ஓட ஆரம்பித்துவிடும்.

2. ஜோதிடம்: நீங்கள் என்ன பண்ணவேண்டும் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கும். முக்கால்வாசி தப்பாக இருக்கும்.

1. பேதி மருந்து: ஒரே எரிச்சல் தான் – எங்கே என்று தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே.

***

ஃப்ரைடே டைம்ஸ் என்ற பாகிஸ்தானிய வார இதழிலிருந்து

Series Navigation