அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

கோவிந்தராஜன் -கே


—-

இளைஞர் வேல்முருகன் லயோலா கல்லூரி மாணவர். தமிழ்க் கணிணி திட்டத்துக்கு நூற்றுக்கணக்கான எளிய சொல் தொடர்களை அமைக்க மிகவும் உதவினார். தமிழார்வம் அவரை உந்த விடுமுறையில் சினிமாவுக்குப் போகாமல் எங்கள் அலுவலகத்துக்கு வந்து தன்னிச்சையாகத் தமிழுக்கு உதவினார். நல்லவர். நல்லவர்களுக்கு நல்லது நடப்பதில்லை என்பது உலகத்து நியதி போலும்!. அண்மையில் உடல்நலம் மோசமாகி இரண்டு சிறுநீரகம் பழுதுபட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸில் தவிக்கிறார். அவரது தந்தை தன் சிறுநீரகத்தை தர இசைந்துள்ளார். அதற்காக எழுபதாயிரம் ரூபாய் செலவாகிறதாம். உதவ விரும்பும் அன்பர்கள் writersujatha@ambalam.com-க்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

– சுஜாதா ஆனந்தவிகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் விடுத்த வேண்டுகோள் —

—-

தமிழ் வளர்க்கும் வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்

கோவிந்தராஜன்.கே

kgovindarajan@gmail.com

—-

Series Navigation