This entry is in the series 20010513_Issue


புழுங்கலரிசி –1ஆழாக்கு

தேங்காய்த்துருவல் –10ஸ்பூன்

உளுத்தம்பருப்பு –2ஸ்பூன்

புளித்த கெட்டித்தயிர் –அரை ஆழாக்கு

வற்றல் மிளகாய் –5

பெருங்காயம் –1துண்டு

கருவேப்பிலை,கொத்துமல்லி –சிறிதளவு

உப்பு –1ஸ்பூன்

அரிசியை நன்றாகத் தண்ணீரில் களைந்துவிட்டு, தண்ணீரை நன்றாக வடியவிட்டு, அரிசியோடு உளுத்தம்பருப்பையும் போட்டு, தயிரில் 2மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறிய அரிசி, உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயம் இவைகளைக் கெட்டியாகத்தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கருவேப்பிலை, கொத்துமல்லியைச் சேர்த்து நன்கு கலந்து வடை போன்று இலை அல்லது துணியில் தட்டிக் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

Series Navigation