அரங்கம் – பார்வையாளர் – விடுதலை

This entry is part [part not set] of 2 in the series 20000918_Issue

அகஸ்டோ போவால்


குறிப்பு – அகஸ்டோ போவால்

பெர்ட்டோல்ட் பிரக்ட்டின் ‘காவிய பாணி அரங்கி ‘ற்குப்பின்னால் அரங்கவியல் சிந்தனைகளில் புதுமையாகக் கருதப்படுவது போவாலின் ‘புலனாகா அரங்கு ‘தான் (Invidible theatre). இது ஒடுக்கப்பட்டவர்களின் அரங்கிற்கான அழகியலைப் பின்புலமாகக் கொண்டது.( Theatre of the oppressed)

பிரேசிலின் ரியோடி-ஜெனிராவில் பிறந்த போவால், நாடகச் செயல்பாடுகளினால் சிறைகளுக்குள் சென்று வந்தவர். அதே காரணத்தினால், பல நாடுகளின் அரசாங்கங்களினால் வெளியேற்றப்பட்டவர். அர்ஜெண்டினா, போர்ச்சுக்கல், பாரிஸ், அமெரிக்கா என அலைந்துவிட்டு திரும்பவும் ரியோவிலேயே தன் செயல்பாடுகளைத் தொடர்கிறார். அவரது

Theatre of the oppressed புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில பக்கங்கள்…

****

‘பார்வையாளன் ‘ ஒரு தவறான வார்த்தை. ஆம்., இது சந்தேகத்திற்கிடமின்றி முடிவு பண்ணப்பட்ட ஒன்று. ‘பார்வையாளன் ‘ ஒரு தவறான வார்த்தை. பார்வையாள மனிதனை விடச் சற்றுக் குறைவுள்ளவன் அவனுடைய செயல் திறனை அதன் அனைத்து முழுமையுடனும் அவனுக்கு மீட்டுத் தர வேண்டி, அவனை மனிதப் படுத்துவதும் அவசியம். அவனும்கூட ஒரு பொருண்மைக் கூறாக வேண்டும். பொதுவாக, நடிகர்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவர்களுக்கு நிகரான தளத்தில் ஒரு நடிகனும் பார்வையாளனாயிருக்க வேண்டும். மக்கள் நாடக மேடையின் அனைத்துப் பரிசோதனைகளும் ஒரே குறிக்கோளை உடையன. – பார்வையாளனின் விடுதலை – அவன் மேல் நாடக மேடை அறுதியான உலக தரிசனத்தை சுமத்தியிருக்கிறது.

பொதுவாக மேடையாக்கத்திற்கு பொறுப்புடையவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வரையறுக்கப்பட்ட படிமம் அவர்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

மக்கள் அரங்கின் பார்வையாளர்கள் (அதாவது பொதுமக்கள் தாமே) அந்தப் படிமங்களின் எதிர்க்கத்துணியாத பலியாட்களாகப் போகமுடியாது.

அரிஸ்டாட்டிலின் கவிதையியல் ஒடுக்கத்தின் கவிதையியலாக இருப்பது, இந்த உலகம் நன்கறியப்பட்ட ஒன்று.

குறைபாடற்றது அல்லது குறைபாடற்றதாக ஆக்கப்படவேண்டியது உலகம். மேலும் அதன் அனைத்துப் பயன்மதிப்புகளும் பார்வையாளன் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அவன் தன் தளத்தில் சிந்தித்து செயல்படுகிற பாத்திரங்களின் மேல் தன் எதிர்ப்பு அற்ற சக்தியை பிரயோகிப்பவனாகிறான். இப்படிச் செய்வதால் பார்வையாளர்கள் தம் துயர்மிக்க குறைபாடுகளைத் தமக்குத் தாமே சுத்திகரித்துக் கொள்கின்றனர். அதாவது சமுதாய மாற்றத்துக்கு தம்மாலான ஏதோ ஒன்றைச் செய்கின்றனர். ஒரு புரட்சிக்குறிய தூண்டுவிசை உற்பத்திச் செய்யப்படுகிறது. நாடகச் செயல்பாடு உண்மைச் செயல்பாட்டின் பதிலாகிறது.

பிரக்டின் கவிதையியல் அரசியல் விழிப்புணர்வு பெற்ற முன்னணியினரது கவிதையியலாக இருக்கிறது. உலகம் மாற்றப்பட வேண்டிய ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. அந்த மாற்றம் அரங்கிலேயே தொடங்கிவிடுகிறது. இங்கே பார்வையாளன் தனக்காக சிந்திக்கிற வேலையை நாடகத்தின் கதா பாத்திரங்களில் விட்டுவிடுகிறான். அனுபவமானது பிரக்ஞை மட்டத்தில் வெளிப்படுகிறது. ஆனால் செயல் வடிவில் வெளிப்படுவதில்லை. நாடகச் செயல்பாடென்பது உண்மையான செயல்பாட்டைத் தெளிவுபடுத்துவது. இந்த காட்சியே செயல்பாட்டுக்கான ஒரு தயாரிப்பாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் கவிதையியல் என்பது சாராம்சத்தில் செயலாக்கக் கவிதையியலாக இருக்கிறது. பார்வையாளன் இனியும் தன் தளத்தில் கதாபாத்திரத்திடம் சிந்திக்கும் அதிகாரத்தையோ செயல்படும் அதிகாரத்தையோ விட்டுவிடுவதில்லை. பார்வையாளன் தன்னை விடுவித்துக் கொண்டு தனக்காகவே சிந்திக்கிறான். தனக்காகச் செயல்படுகிறான். அரங்கு என்பது செயல்பாடாக மாறுகின்றது. ஒருவேளை அரங்கமானது தன்னளவில் புரட்சிகரமான ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி அது புரட்சிக்கான ஒத்திகையாகும்.

***

Series Navigation

அகஸ்டோ போவால்

அகஸ்டோ போவால்