அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

அறிவிப்பு


தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு – இந்தியா

A+ தரத்தகுதியும் செயல்திற ஆற்றல் வளத்தகுதியும் பெற்றது.

தமிழாய்வுத்துறை

தமிழ்த்திணை இணையதளம் (www.tamilthinai.com)

தமிழ் எழுத்தாளர் இணையதளம் (www.tamilwriters.com)

ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும்

Life and Literature of the Tamils living abroad and outside the state of Tamilnadu

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் நிகழவுள்ளது

(to be conducted with the Financial assistant of UGC)

இணையதளம் & சுற்றுமடல் வழி அறிவிக்கை-1

2007 30 நவம்பர் ,திசம்பர் 01 ,02

இடம்: புதிய நூலகக் கட்டடம் தூய வளனார் கல்லூரி திருச்சிராப்பள்ளி

அமைப்புக்குழுப் புரவலர்கள்

அருள்திரு முனைவர் ச.இலாசர் சே.ச. கலைமனை அதிபர்

அருள்திரு முனைவர் ஆ.ஜோசப் சே.ச. கல்லூரிச் செயலர்

ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்

அருள்திரு முனைவர் இரா.இராசரத்தினம் சே.ச. கல்லூரி முதல்வர்

கருத்தரங்கச் செயலர்கள்

முனைவர் அ.அந்தோனிகுருசு , தமிழாய்வுத்துறை தலைவர்

முனைவர் தி.நெடுஞ்செழியன் ,தமிழ்த்திணை இணையதள நிறுவனர்

உயர்திரு. எப்.எம்.ஜெரால்டு தமிழ் எழுத்தாளர் இணையதள நிறுவனர்

உயர்மட்ட ஆலோசனைக்குழுவினர்கள்

மேமிகு.சி.சுப்பிரமணியம், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்

உயர்திரு சுபாஷினி கனகசுந்தரம் ,செருமனி, ஐரோப்பியத் தொடர்பாளர்

முனைவர் இராதாசெல்லப்பன் ,தமிழியல் துறைத்தலைவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பேராசிரியர். சுந்தரராஜன், வான்கூவர் பல்கலைக்கழகம், கனடா

எழுத்தாளர் மாத்தளை சோமு தென்கிழக்கு ஆசியநாடுகள் தொடர்பாளர்

உயர்திரு மணவை முஸ்தபா, யுனெஸ்கோ கூரியர் முன்னாள் ஆசிரியர்

உயர்திரு அப்துல் நசீர், தமிழ்மொழிப்பாடநூல் வித்தகர், சிங்கப்பூர், மேனாள் தமிழ்மாணவர்-தொடர்பாளர்

முனைவர் அ மாரியப்பன், தில்லி & வட இந்தியப்பல்கலைக்கழகத் தொடர்பாளர்

அருளாளர் முனைவர் இராசநாயகம், சே.ச. காட்சித்தகவலியல் துறை, இலொயோலா கல்லூரி, சென்னை

அருளாளர் பிரான்சிஸ் தம்புராஜ் சே.ச, தகவல் தொழில் நுட்ப துறைத் தலைவர். தூய வளனார் கல்லூரி

முனைவர் விக்டர் லூயிஸ், லிபா-ஆய்வுத்துறைத்தலைவர், சென்னை

கவிஞர் அறிவுமதி, மக்கள் தொலைக்காட்சி, சென்னை

அருளாளர் பாக்கியநாதன், உரிமை இதழாசிரியர், திருச்சிராப்பள்ளி

முனைவர் ஆறு இராமநாதன் நாட்டுப்புறவியல் துறைத்தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழகம்

முனைவர் ஆ.கார்த்திகேயன், அயலகக்கல்வித்துறைத் தலைவர் ,தமிழ்ப்பல்கலைக்கழகம்

முனைவர் உதயசூரியன் ,அயலகக்கல்வித்துறைத் தலைவர் ,தமிழ்ப்பல்கலைக்கழகம்

பேராளர் பதிவு

1.பதிவுப்படிவத்தை நிரப்பி முழு விவரங்களை மின் அஞ்சல் (E-Mail) மூலமாக அனுப்புவதுடன், கணினி அச்சுப்படிவமும் (Hard Copy) அனுப்புதல் வேண்டும்.

2.தங்கள் பயண ஏற்பாடுகள் அனைத்தையும் பேராளர்களே செய்து கொள்ளுதல் வேண்டும்.

3.சிறந்த தங்குமிடம், விருந்தோம்பல் ஒருநாள் சுற்றுலா ஆகியன் ஏற்பாடு செய்யப்பெறும்.

4.விமானத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து சேரும் நேரத்தைத் தெரிவித்தால் கல்லூரிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய இயலும்.

5.ஆய்வுக்கட்டுரை அனுப்பாதவர்கள் கருத்தரங்கில் சிறப்புப் பார்வையாளராகப் பங்கேற்க விரும்பினால் சிறப்புக் கட்டணம் செலுத்தல் வேண்டும்.

6.பயணச்செலவை அயல் நாட்டினர் தங்கள் நிறுவனத்தில் பெற்றுவருதல் வேண்டும்.பேராளர்களுக்குப் பயணச் செல்வு வழங்க இயலாது.

பேராளர் பதிவு இறுதி நாள் : 30.06.02007

நோக்கமும்:

1.தென்னிந்திய வட இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் வாழ்க்கை படைப்பிலக்கியம் ஆகியவற்றை ஆராய்தல்

2.மேலை நாடுகளில் ,குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும்,தென்கிழக்கு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருளீட்டப் புலம் பெயர்ந்தும்,குடியுரிமை பெற்றும் வாழும் தமிழர்களது இன்றைய காலத்து வாழ்வின் பரிமாணங்களையும் ,படைப்பிலக்கியங்களையும் தமிழாய்வுப் போக்குகளையும் வெளிக் கொண்டு வ்ருதல்

3.உலகின் பன்னடுகளில் வாழும் தமிழர்கள்,தாங்கள் உலகக் குடிமக்கள் என்கிற மாந்தநேய உணர்வும் கொண்டு தமிழ்மொழிப்பற்று என்னும் பண்பாட்டுணர்வால் கூட்டொர்மைப்பாட்டுணவைக் கருத்தரங்க ஆயிவு மூலமாகவும் இணையதள ஊடகம் வாயிலாகவும் பரவலாக்குதல்

இலக்கு:

புலம் பெயர்ந்து வாழும் இந்திய பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களது படைப்பிலக்கியம்,ஆராய்ச்சி,வரலாறு ஆகிய பல்திற சாத்னைகளை உலகறியச் செய்தல்.

கட்டணம்

1. ஐரோப்பியப்பேராளர்கள் 200 டாலர்கள்

2. தென்கிழக்கு ஆசியப் பேராளர்கள் 125 டாலர்கள்

3. சிறப்புப்பார்வையாளர் 1000 டாலர்கள்

4. வெளிமாநில – ஒன்றிய பேராளர் 1500 ரூபாய்

5. முனைவர்பட்ட ஆய்வாளர், பேராசிரியர் 1500 ரூபாய்

தொடர்புக்கு

முனைவர்.அ.அந்தோனிகுருசு

0431-2721401 / 2760933

e-mail: tamilcurz@yahoo.co.in

முனைவர்.தி.நெடுஞ்செழியன்:

04364 227142 / 9443214142

e-mail : tamilthinai @yahoo.co.in, tamilthinai@gmail.com, info@tamilthinai.com

ஆய்வுக்கட்டுரை

1.கொடுக்கப்பட்டுள்ள (மாதிரி) தலைப்புகளில் தாளில் A4 தாளில் 5-10 பக்க்கங்கள் கணினி அச்சுச்செய்தும், குறுந்தகட்டில் கட்டுரையும் எழுத்துருகளும் (Font) பதிவு செய்து அனுப்புதல் வெண்டும். கணினி அச்சுவடிவக்கட்டுரையைக் கட்டாயம் இணைத்தல்வேண்டும்.

2.கட்டுரையாளர் தன்விவரம், முழுமுகவரி, இலக்கிய அனுபவம் ஆகியன் குறித்து முழுவிவரங்கலை வழங்குதல் வேண்டும்.

3.அண்மை நிழற்படத்தைத் துறைக்கடவு அளவில் (Passport Size) அனுப்புதல் வேண்டும்.

4.கட்டுரை வந்துசேர இறுதி நாள் 30.06.2007

5.சிறந்த 100 கட்டுரைகள் மட்டும் ஆய்வுத்தொகுப்பில் இடம்பெறும்.பிற ஆய்வுச்சுருக்கம் பகுதியில் பதிவுபெறும். அறுவர் குழுவுக்கே தெரிவுக்கான உரிமை வழ்ங்கப்பட்டுள்ளது.


Series Navigation