அமண ராகங்கள் !

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அதிசய ராகம்,
அபூர்வ ராகம்,
ஆனந்த ராகம்,
அல்லடா! அவை எல்லாம்
அமண ராகங்கள்!

பீச்சுக்குப் போகலாம் நெளிந்து
நீச்சல் உடையில்!
பருத்திப் பஞ்சமில்லை பிக்கினிக்கு!
கும்பமேளா கூவத்தில் கவிதைக்கு
ஞானக் குளிப்பா?

உடுக்கை நழுவிட
ஓடும் ஒருகை உதவிட!
கவிதை
இடுப்பினில் புடவை நீக்கிட
ஏகும் அடுத்த கை!

கவிதை கட்டிள்ள
காஞ்சிப் பட்டை இழுக்கிறாய்!
இப்போதுதான்
தறியில் அமர்ந்திருக்கிறார்
உறி திருடிப் பரமாத்மா!

ஆண் கவிதை இழுப்பதுவும்
பெண் புடவைதான்!
பெண் கவிதை நழுவுவதும்
முன் புடவைதான்!
ஆணுடையை
இழுப்பதற்கோர் கோதை ஏதடா?

*********

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா