அன்புள்ள ஆண்டவருக்கு

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

ப்ரியா


—-

58 வருடங்களாகிறது
புதிதாய் வாழ்க்கை தொடங்கி
வாடுனத்தொடும் அளவிற்கு
அளவில்லா ஆடுசகள் கணக்கில்லா கணவுகள்
நிடுறவேறியதென்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்….

ஆடுச ஆடுசயாய் ‘அரசியல் ‘ என்று
பெயர் டுவத்த மகனுக்கோ
‘லஞ்சம் ‘ என்ற நோய் புடுரயோடி
ஆண்டுகள் பலவாகிறது

அழகுக் கடலான மகள் ‘காஷ்மீரு ‘ க்கோ
குருதியில் தான் தினம் குங்குமமே!

ஒரு மகன் வீட்டில் தண்ணீரின்றிப் பிரச்சடுனயென்றால்
மருமகன் வீட்டில் தண்ணீர் மண்டிப் பிரச்சடுன

இருட்டில் மினுக்கும் மின்மினிப் பூச்சியாய்
அவ்வப்போது வரும் பதக்கமும் பாராட்டும்

என் ஒவ்வொரு தினமும் எதிர்பார்ப்போடு மலர்கிறது
என் அனைத்துப் பிள்ளைகளும் ஒருசேர சிரிக்க…
‘இருபது வருட்ங்களாகும் ‘ என்று ஆருடம்
கூறுகிறான் ஒரு பிள்ளை
இன்றே நடக்காதா என்ற ஏக்கத்தில் நான்!

காத்திருக்கிறேன்….
இடுற நம்பிக்கையோடும் இன்றைய
இளைஞர் மீது கொண்ட நம்பிக்டுகயோடும் ….

இப்படிக்கு,
திருமதி இந்தியா.

rcpriya@yahoo.com

Series Navigation

ப்ரியா

ப்ரியா