அன்புடன் தாய்க்கு

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

ராம்


விலங்கான தொப்புள் கொடி உணவெனக்குத் தந்திடவோ !
அலுங்காது நான் அலைய உன் உதரம் ஓர் சிறையோ!
பல காலம் இருந்தாலும் மகிழ்ந்திருப்பேன் நானங்கே!
பத்து மாத காலத்தில் சுதந்திரந்தான் தந்து என்னை
அலைய விட்டாய் வெளியேதான் அதிலும் நான் மகிழ்கின்றேன்!!
இலையேது இன்பமிங்கு! இவ்வுலகில் உனை விட்டு!
-ஆ!!
அம்-ஆ அம்-ஆ ! எனவே அன்பாகச் சோறூட்டி
தெம்மாங்குத் தமிழ் போலத் தேற்றி எனை வளர்த்திட்டாய்!
கம்பீரத் தமிழ்க் கவிஞன் பாரதியின் பா போல
அம்மா! என் வாழ்விற்கு உயிர் மூச்சு! – உன் வாழ்த்தே!!

அன்புடன் தாய்க்கு

ராம் (Fremont)

iamsastha@hotmail.com

Series Navigation

ராம்

ராம்