This entry is in the series 20040520_Issue

நாகூர் ரூமி


====
அற்புதமான அறிவு
அந்தக் காகத்துக்கு
ஒரு பக்கம் தலைசாய்த்து
ஒரு கண்ணால் பார்க்கும்போது
ஓராயிரம் அர்த்தங்கள்

எதிர்பாராத கணத்தின் விளிம்பில்
கொத்திப் பிடுங்குவதும்
சப்தங்கள் கேட்டவுடன்
சரேலெனக் கிளம்புவதும்
எந்த வலையிலும் சிக்காமல்
ஏகாந்தமாய்ப் பறப்பதும்
கறுப்புத் தொழில் நுட்பம்

கடைசியில் பாவம்
குப்பையைக் கிளறி
அழுகியதையும் அசிங்கத்தையும்
செத்ததையும் மத்ததையும்
உண்கிறது உயிர்வாழ.
—-
ruminagore@hotmail.com

Series Navigation