கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

நின்று சலித்த

நீள் பயணமொன்றில்

மென்று விழுங்கிய

பார்வையோடு நீ

விட்டுச் சென்ற

இருக்கையில்

இன்னமும்

உன் சூடு.

0

02

பிறை நிலா

நெற்றிப் பெண்ணின்

பின் முதுகில்

பௌர்ணமி நிலா.

0

03

தளும்புவதில்லை

நீர் நிறைந்த குடங்களுடன்

நீரற்ற குடங்களும்.

0

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

சி.சுந்தரம்


நம்பிக்கை

கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய
கட்டாய தருணத்தில்
கரையத் தொடங்கியது
கடவுள் நம்பிக்கை

உள்ளே நுழைதல்

என் வீட்டு வரவேற்பறையில்
மேஜையின் மீது கிடந்தன
பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும்

இணைய வசதி கொண்ட கணிணியும்
அங்கேதான் இருந்தது

நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள்
பூட்டிய வீட்டின் முன் காத்திருக்கும் பாவனையில்

சி.சுந்தரம், துட்டம்பட்டி, தாரமங்கலம்

chinnusundaram@gmail.com

Series Navigation

சி.சுந்தரம்

சி.சுந்தரம்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ப.மதியழகன்


போதி

பாலகனாய்
மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்
அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது
‘பச்சை பசேலென
எத்தனை இலைகள்
விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல
மணம் வீசும் மலர்கள்
பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்
உனக்கு மகிழ்ச்சி தானே’ என்றது
சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்
அவ்விடம் அலுத்துப் போகவே
மற்ற சிறுவர்களோடு விளையாட
மைதானம் நோக்கிச் சென்றான்
ஒவ்வொரு நாளும் அவன் வருவானென
எதிர்ப்பார்த்துக் காத்திருந்து
ஏமாற்றமடைந்தது அம்மரம்
விடலைப் பருவத்தில்
நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என
சுற்றுவதற்கே
நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு
மரத்தை மறந்தே போனான்

காதல் அவன்
வாலிபக் கோட்டையை
முற்றுகையிட்டது
அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்
‘காதலுக்கு மனம் தேவை
கல்யாணம் முடிந்து
குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த
பணம் தேவை – இதை உணர்ந்து
முதல் போட்டு தொழில் துவங்கி
சமூகத்தில் இன்னாரென முகவரியோடு
எனை அணுகுங்கள்
தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை
பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்’-என
அவள் கூற
வியாபாரம் தொடங்க
பணம் தேவையே
எப்படிப் புரட்டுவது – என
அவன் மரத்தடியில அமர்ந்து
சிந்திக்கும் வேளையிலே
மரம் அவனிடம் பகன்றது
‘உன் நிலை எண்ணிக் கலங்கினேன்
இவ்வளவு காலம் எனை மறந்து
வாலிபக் குதிரையில
தன்னிலை மறந்து பயணம் செய்தாய்
காதல் கைகூட
செல்வம் வேண்டுமென
அவள் நிஜத்தை உணர்த்தியபோது
தாமாகவே உனது கால்கள்
நான் இருக்கும் திசையில் திரும்பி
என் நிழலை நோக்கி
வந்தமர்ந்து கொண்டன
துயரப்படாதே
உன் துன்பத்தைப் போக்க
வழியொன்று சொல்கிறேன்
என்னை வேரோடு வெட்டியெடுத்து
மரச்சாமான்கள் செய்யும்
தச்சனிடம் விற்றுவிடு
உனக்குப் பொருள் கிடைக்கும்
அகல்யாவின் அருகாமை
உன் இளமைக்கு
புத்துயிர் கொடுக்கும்’
எனக் கூறி முடித்ததும்
அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்
ஞானத்தினால் அல்ல
அவளை அடைய வழி தெரிந்ததினால்
அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்
கருணையினால் அல்ல
எவ்வளவிற்கு விலைபோகுமென்று
கண்காளாலே அளப்பதற்கு
விரைந்தோடினான்
அகல்யாவை அணைப்பதுபோன்ற
அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட
முதல் படியாக
மரத்தை வேரோடு சாய்த்திட
கோடாரியை எடுப்பதற்கு!

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞ்சலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் – என்று
யோசனை செய்தபடி…

பூமராங் வாழ்க்கை

மண்ணும், காற்றும், நீரும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
எனதுடலை
அதனை அலட்சியப்படுத்தி
செலுத்தப்பட்ட அம்புபோல
சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
விரைந்து கொண்டிருக்கிறேன்….
எந்த வில்லினுடைய நாணின்
இழுவிசையிலிருந்து
எந்த இலக்கை நோக்கி
விடப்பட்டு இருக்கிறேன்
என்ற கேள்வி தோன்றி
வேதாளம் போல்
எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
நான் இலக்கை சென்றடைவேனென
நம்பிக்கை வைத்து
என்னையவன் எய்து இருக்கின்றானா?
வழியில் எனது லயம் தவறிய
தப்புத்தாளங்களை
கண்ணிமைக்காமல் கவனித்துக்
கொண்டிருந்தானா?
மீண்டும் அவன் கைகளில்
தவழ நேருமோ
நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
கைகட்டி நின்று
சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
அச்சூழ்நிலையில்
‘உனது படைப்பு பூரணமடையாத போது
எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
வாழ்க்கை பூரணமாக
இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
என்ற கேள்வியை பதிலாக்கி
அச்சமற்று நின்றிடுவேன்
அச்சபையில்
மானுடத்தின் கேள்வியினை
நானொருவன் கேட்டிடுவேன்.

வசீகரமிழந்த வாழ்வு

வசீகரமிழந்தது வாழ்வு
தொலைவிலிருந்து காண்கையில் பொலிவாகவும்
அருகாமையில் செல்லச் செல்ல விகாரமும் கொண்டது
வாழ்வுவெளியெங்கும்
வசந்தத்தைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள்
உணர்வின்றி ஜொலிக்கும்
வறட்சியால் பிளவுகண்ட நிலங்கள்
தனது களங்கத்தை திரையிட்டு மறைக்க
விழையும் நிலா
தென்றலின் மீது பகைமை கொள்ளும் மரங்கள்
தன்னுடைய மாமிசத்தையே வேட்டையாடி
உண்ண நினைக்கும் விலங்கினங்கள்
தனது சிறகுகளையே முடமாக்கி,
அங்கஹீனமாக்கும் பறவையினங்கள்
பலிகொடுப்பதற்கே குழந்தைகளை பெற்றெடுக்கும்
தாய்,தந்தையர்கள்
அன்பை தூரஎறிந்துவிட்டு ஆயுதத்தை கையிலெடுக்கும் மனிதர்கள்
பூமி நரகமாகியதால்
காடுகளே இனி மனிதன் வாழ்வதற்குச் சிறந்தது
நாட்டில் எவ்வுருத்தில்
எந்த மிருகம் ஒளிந்திருக்கும்
என்றறியாது எவ்வாறு வீட்டினில்
பயமின்றி உறங்குவது?

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

கார்த்தி. என்


——–
கணக்கீடு..

குறிகளில்
கவனமின்றிக்
கரும்பலகையைப்
பலவண்ணமாய்
யோசித்தமர்ந்திருக்கும்
குழந்தைக்குக்
கணக்கைத்
திணித்து விடாதீர்கள்..

ஒருகாலத்து ஓவியன்
செத்துப் போகலாம்..
——
முழாண்டு..

தனித்தனியாய்ப்
படித்திருந்தும்

தேர்வில்
ஆற்றில் மிதந்தது
மரத்தின் தன்வரலாறு.
====
குறி தவறல்..

நிமிர்ந்து
நின்று
ஒன்றொன்றாய்ச்
சேர்த்துச்
சோர்ந்து போய்

சமயத்தில்
வளைந்து கொடுத்துப்
பெருக்கத் தொடங்குகிறது

———-
கூட்டல் குறி.

1 x 1
ஒன்றைப்
பெருக்க
அப்படியே
இருக்கிறது
இன்னொன்று.
…………………………
……………………………………………………..

Series Navigation

கார்த்தி. என்

கார்த்தி. என்

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

வே பிச்சுமணி


ஒட்டஞ்சில் சொல்லும்

பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்



உன் பெயர் உச்சரிக்கையில்

விழா மேடையில் உன் பெயர்
உச்சரிக்கையில் முகம் சாய்த்து
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்
இதழ் விரித்து நீ புன்னகைக்க
என் முகமும் பிரதிபலிக்க


விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு
என என் மனசாட்சி-
கீழ்வானம் சிவக்க
புல் இனங்கள் துயில் எழவில்லையா
அவள் பெயரின் ஒலி என்னுள்
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா

பரமனின் உடுக்கை நாதத்தில
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்
எரிமலையின் வெடிசத்தத்தில்
பிறந்ததாய் விஞ்ஞானம்
உன் பெயரின் ஒலியில்
நான் பிறந்ததாய் என்ஞானம்

நான்மறைகளும் காற்றில் ஒலியாய்
இன்றும் உள்ளதாக நம்பிக்கை
உன் பெயரின் ஒலியில்
என் நாளும் என் இருக்கை

பெயர்களின் ஒலி வலிமையை
அனுமனுக்கு பின் நானறிவேன்
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே
எனது ராமஜெயம் உன் பெயர்தானே

உன் பாட்டியின் பெயர் உனக்கு
உன் தந்தை சூட்டிய காரணம்
இப்போதான் விளங்கிறது
என் மூலம் ஊரிலும் தெருவிலும்

புது பேனா எழுதும் முதல்
பரிசோதனை வார்த்தையாய்
என் கை எழுதும் உன் பெயர்

உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்

உன் பெயர் சூட்டிய
சின்ன குழந்தைகளின் கன்னம்
செல்லமாய் தடவும் என் கைகள்

உன் பெயர் சூட்டிய
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க
உதவும் என் கால்கள்

மொழி பாடங்களில் எழுதும்
கடிதங்களின் முகவரியில்
எல்லாம் உன் பெயர்

என் மின்னஞ்சல் முகவரியின்
கடவுசொல்லாக மட்டும்
உன் பெயரை வைக்கவில்லை
என்னை நீ கடவு செய்யகூடாதென

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.


சந்தி(ப்) பிழை

அவள் இவள்
சந்தித்தது, சந்திப்பதே,..
பிழையெனில்,
இவர்களைப் பற்றி
எழுதுகையில் ஏற்படும்
சந்திப் பிழை
பிழைபடில்,
பெரும்பிழையோ?



என் காதலி

குறும்புப் பார்வை,
குறுகுறுத்த கண்கள்,
மென்மையான ஸ்பரிசம்,
அன்பான முத்தம்,
என்னில் விளையாடும் கரங்கள்,
காதல் வழியும் மொழி,
என்னில் ஏற்படுத்திய தாக்கம்,
எல்லாம் என் கண்முன்னே,
இமைகள் மூடும் போதெல்லாம்,
என்னுள்ளே உள்ள காதல் அவளின்பால்,
இத்தனை வயதிலும் மாறவே இல்லை,
என் மகள்.



களவு கூட சந்தோஷம்தான்

குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தணிமை,

முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.

அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,

காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,

மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..


Series Navigation

க.செ.வெங்கடேசன்-அபுதாபி

க.செ.வெங்கடேசன்-அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கணேஷ்


சருகுகள்
மழை நாட்களில்
எத்தனை
காகிதக் கப்பல்கள்
அந்த முற்றத்தில்

மண் பிள்ளையார்களும்
தொப்பை நாணயங்களும்
எத்தனை கிடக்கும்
அணில் போல் கிறீச்சிடும்
அந்த ராட்டினக் கிணற்றில்

அந்த ரேழியில்
எத்தனை கதைகள்
என் பாட்டியுடன்

இரவில் அச்சுறுத்தும் கொல்லையும்
தலையணையுடன் பிறந்த
வாசற் திண்ணையும்
இவை எல்லாவற்றிற்கும்
சாட்சியாய் நின்ற
கூடத்துத்தூணும்… … …

அடுக்குமாடி குடியிருப்புகளில்
நுழைந்ததால்
தொலைந்து போய்
இன்றோடு
ஆண்டுகள் இருபது !



நடுத்தர வர்க்கம்

விபத்தில் சிக்கியவனுக்கு
உதவி செய்ய

நாலணா தராமல் போன
நடத்துனா¢டம் காசு கேட்க

கண்ணாடி கதவுகளிட்ட
அலுவலகங்களில் நுழைய

அக்கம் பக்கம் வலிய சென்று
அறிமுகம் செய்து கொள்ள

பருவப் பெண்களொடு
கலகலப்பாய் புழங்க

தெருக்கோடி சென்ற
பூக்காரனை உரக்க கூப்பிட

தயக்கம் !
ஏனோ விரட்ட முடியவில்லை



இது இலையுதிர்காலமோ

விழுதுகள் உதறிய வேர்கள்
பொக்கை வாயும்
சுருங்கிய தோலுமாய்
சருகுகளாக காத்திருக்கும்
பழுப்பு இலைகள்
வயது வளர்ந்து
தளர்ந்து போனதால்
விரட்டப்பட்ட
பஞ்சுத் தலைகள்
பிஞ்சு மனங்கள்
அசுர வேக வாழ்க்கையில்
சல்லிக் காசுகள்
அள்ளிக்கொண்டு போன
அஸ்திவாரங்கள்
குடும்பக் கூட்டின்
குண்டுத்தூண்கள்

உதிரத்திற்கு உரமிட்டவர்கள்
இன்று
முதியோர் இல்லத்தில்
ஏன் இந்த அவல நிலை
நமக்கும்
நாளை உண்டு
ந்ரையும் உண்டு



நிஜம்

கால் கட்டை விரல்கள்
கட்டப்பட்டன
ஒற்றை விளக்கு தலைமாட்டில்
தாயே !!!
உன் மரணம்
ஜனித்து விட்டிருந்தது
வாய் விட்டு
இல்லை
வயிறு விட்டு அலறினேன்
மழையாய் அழுதேன்
நீளமாய் பயமாய்
இருந்தது இரவு

மறு நாள் காலை
இறுதி ஊர்வல வண்டிக்கு
சில நூறுகள்
சாஸ்தி¡¢களிடம்
சில நூறுகள்
மந்திரங்களைக் குறைக்கச் சொல்லி
சில நூறுகள்
வெட்டியானிடம்
சில நூறுகள்
என்று பேரங்கள்
ஆரம்பித்தன !
நிஜங்கள் உறுத்தின !
இப்படித்தான் பேரமாய்
போய்விடுமோ
என் மரணமும் !


முகவா¢
நான்கு வயதில்
வாத்தியாராய் வருவேன் என்றேன்
ஆறு வயதில்
போலீஸ்காரனாய் வருவேன் என்றேன்
பத்து பன்னிரண்டு வயதில்
விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன்
பதினெட்டு வயதில்
கவிஞனாக நினைத்தேன்
முன் இருபதுகளில்
ந்டிகனாக விரும்பினேன்
முப்பது வயதில்
இன்று
அப்பாவாக இருக்கிறேன் !!!


ganeshadhruth@yahoo.co.in

Series Navigation

கணேஷ்

கணேஷ்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கே.பாலமுருகன்


1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது

மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்

தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்

இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்

வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது

அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3

மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்

ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன


ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

தாஜ்



அக்கரைக் காட்சி

அவர்கள் பெருத்துவிட்டார்கள்
மனிதர்களின் மாற்றாய்
நிஜங்களின் நிழலாய்
நகர வீதிகளின் அங்கமென
நடமாடும் அவர்கள்
லோக காப்பாளர்களால்
கல்லடிப் படும்வரை
அடையாளம் தெரிவதில்லை.
நான் காலாறும் இடமெல்லாம்
கேலிச் சிரிப்போடு
சகஜமான அவன்
நேர் நின்றதோர் நேரம்
முகம் பார்த்து கையெந்த
இக்கரையிலிருந்து
கருணையோடு பார்த்தேன்
என் பார்வையை
அவனும் பார்த்தான்!


மூ ல ம்

பக்கத்தில் வந்து
கண்பார்க்க
கைகளில் இருந்ததை
தட்டிப் பறித்தன
அவைகள்!
சிலர் வீசியெறிந்ததை
பொறுக்கிய வேகத்திலும்
குட்டிகளைச் சுமந்தே
மலையேறின.
கொடிகளைப் பற்றியவைகள்
ஊஞ்சலாடித் தாவி
கிளைகள்மாறி நடை போட்டு
தடங்கலற மேலே நகர்ந்தன
உச்சத்தில் குந்த
வாய்ப்பற்றவைகள்
உறுமல் மொழியோடு
சதா தாண்டிக் குதித்தன.

நம் மூலமென சிலாகித்தாலோ
குரல் கொடுத்தாலோ
அவைகளின் சேட்டைகள்
கூடிக்கொள்கிறது.
தெற்கைக் காட்டிலும்
வடக்கில்தான் இவைகளின்
நவகொட்டம் என்கின்றனர்.

உச்சாணிக் கொம்பிலிருந்து
வாலில் தீயேந்தி
கடல்தாண்டிக் குதித்த ஒன்று
பலிகளைப் பொசுக்கி
கொண்ட கோரத்தை
யுத்தக் காண்டமாய் வாசித்து
கண்கள் சிவந்ததுண்டு.
————————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



01
இருக்கட்டும் எதற்கும்…!

பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய கடிதமொன்றை

பத்திரமாய் வைத்திருந்து
பிரதியொன்றை எனக்கின்று

அனுப்பித்தந்த நண்பனின்
அன்பைப்போல

இருக்கட்டும் எதற்கும் என்று
இதுபோல் இன்னும்

எத்தனையோ நம்
எல்லோரிடமும்.


02
அவனவன் பாடு

கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.

கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.

கண்டதையும் கொள்வதிலும் உண்டு
கணிசமான சிக்கல்கள்.

அவனவன் பாடு.
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.



03
பட்டங்களும் பட்டமும்…!

மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்

நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்

சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்

படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

றஞ்சினி



என் ரகசியம்…

கல் மலைக்
குகைக்குள்
வாழ்ந்த நிமிடத்தில்
அடர்காட்டின்
நடுவில் கலந்து
மலை உச்சியில்
பனியில் நனைந்து
கதிரவன்
கழைந்தெறிந்த
வர்ணங்களைச் சூடி
இயற்க்கையை
விழுங்கி
மது இதழில்
முத்தமிட்டு
ஆச்சிரமத்தில்
குடிபுகுந்து
தத்துவங்கள்
கவிதை சொல்லி
பிரபஞ்சக் கனவுடன்
விழிக்கிறது
நடுநிசியில்.


காவித்திரியும்..

சுயநலத்தின்
பிரதிகளாக
சிதறும் உன்
வார்த்தைகள்.

வரிகள் தரும்
வலிக்குள்
சிதைகிறது
நேசம்

நீ..
பிரபலத்தின்
நண்பன்
சுயநலத்தின்
அறிகுறி
விடையற்ற
கேள்வி
காத்திருப்பின்
ஏமாற்றம்
தேவையற்ற
கற்பனை..

உன்னைக்
காவித்திரிகிறது
அறிவற்று மனது.



shanranjini@yahoo.com

Series Navigation

றஞ்சினி

றஞ்சினி

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



01
முரண்களுக்கா பஞ்சம்?

இரவுகள்

தவறுகள்

உறவுகள்

உரிமைகள்

குடும்பங்கள்

குழப்பங்கள்

கடமைகள்

களவுகள்

கனவுகள்

கற்பனைகள்

அர்த்தங்கள்

அனர்த்தங்கள்

அத்தனையும்

இருக்கட்டும்.

நம் கவிதைகளும்

தொடரட்டும்.

முடிவில்லா பெருவெளியில்

முரண்களுக்கா பஞ்சம்?

o
02
அவளின் முகம் …!

அடிக்கடி

இல்லையென்றாலும்

அவ்வப்போது

தோன்றி மறைகிறது

அப்பாவின்

நெஞ்சுவலிக்காய்

இன்னொருவன்

மனைவியாகி

குழந்தை ஒன்றோடு

குடும்ப சகிதமாய்

ஸ்கூட்டரில்

கடந்து போன

குமரி

அவளின் முகம்.

03

தீதும் நன்றும் …!

நல்லவன்

வாழ்வான்.

நல்லதுக்கு

காலமில்லை.

கெடுவான்

கேடு நினைப்பான்.

கெட்டாலும்

மேன்மக்கள் மேன்மக்களே.

என்றாலும்

அறிந்துணர்.

தீதும் நன்றும்

பிறர் தர வாரா.

04

பிறிதொன்றின்றி

நானும்

நீயும்

அவனும்

அவளும்

அவரும்

இவரும்

அதுவும்

இதுவும்

பிறிதொன்றில்லாமல்

எதுவுமில்லை.

எங்குமில்லை.

o

05

சுயம்

பெற்றோர்க்கு

பிள்ளை.

மனைவிக்கு

கணவன்.

பிள்ளைக்கு

தந்தை.

உடன்பிறந்தோர்ககு

சகோதரன்.

உண்மையில்

எனக்கு

நான் யார்?


jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


ஏன்?
கன்னி மோகினிகளுக்கு
கால் கொலுசு
மல்லிகை சரி.

வெள்ளைப் புடவை ஏன்?



ஒருவேளை …!

அடிக்கடி

இல்லையென்றாலும்

அவ்வப்போது

தோன்றி மறைகிறது

உனக்கு முன்

பார்த்த பெண்ணை

ஒருவேளை கட்டியிருக்கலாமோ

என்று.


நண்பர்களும் இவளும்…!

பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும்

பேசிப்பேசி மாய்கிறோம் நாம்.

சிறிதாய் ஒன்றுமற்றதற்கு எல்லாம்

பேச மறுத்து சாய்க்கிறாள் இவள்.


இனியொருமுறை …!

நாற்புறமும் தண்ணீர் சூழ

நண்பனென்று எவருமின்றி

தீவொன்றில் தனித்து விடப்பட்டு

இருக்கிறதா உன் வாழ்வு?

தொடர்புப் பட்டியலில் யாதொருவரின்

தொலைபேசி எண்ணுமன்றி

வெறுமையாய் இருக்கிறதா — உன்

வெந்நிற கைத்தொலைபேசி்?

இறுகியோ/இளகியோ இன்னொருமுகம்

எதிர்ப்படும் வரை

இனியொருமுறை சொல்வதைத் தவிர்

யாருமற்றவன் நீயென்று

எவரிடமும் எதன்பொருட்டும்.


jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


விரல்நுனி ஸ்பரிசம்…!

அதிகாலைக் கதிரவனுக்காய்
அனுதினமும்
காத்திருக்கும்
இலைநுனி
நீர்த்துளிபோல

சும்மா ஒரு
சுவாரஸ்யத்திற்காக
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என் சோக பிம்பத்தை.

இதமாய்
என் தலைகோதும்
உன் விரல்நுனி
ஸ்பரிசம் வேண்டி.


விட்டுவிடுதலையாகி…!

என்னைப் பின்தொடர்வதில்
உனக்கெதுவும் கிடைக்கப்போவதில்லை.
என்னைப் புறந்தள்ளுவதாலும்
பெரிதாய் நிகழப்போவதொன்றுமில்லை.
சேர்ந்தே என்னோடு நீ வருவதிலும்
சிறிதளவும் எனக்கு சம்மதமில்லை.

விட்டுவிடுதலையாகிப் போ
உன் சிறகுகள் செல்லுமிடமெங்கும்.

ஆகக்கூடி வரும் ஒரு ஊழிக்காலத்தில்
சந்திப்போம் _ நமது
அன்பின் வலிமையைச் சொல்ல.


06.07.2008


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


நேசம்
செம்புலப் பெயல் நீர்
ஈரேழு ஜென்மம்
ஈருடல் ஓருயிர்

எவற்றிலும் நீ
எதுவரினும் நீ
எக்கணமும் நீ

இத்தனையும் பேசி
இனித்திருந்த நம் நேசம்
இப்போது இடம்மாறி

என்னவளாய் நீயின்றி
எவரோடோ நீயொன்றி.


எதிர்பார்ப்பு!

அதிக நேரமொன்றும்
ஆகாதுதான்.


ஒருதொலைபேசி
அழைப்பில்கூட
உறுதிசெய்து கொள்ளலாம்.

ஆயினும்,
எதிர்பாரா
ஒரு தருணத்தில்
நீ
எடுத்துத்தரப் போகும்
பிறந்த நாள் பரிசைக்
காண

அமைதியாகவே
வருவேன்.
அநேக
எதிர்பார்ப்புகளோடு.


தடங்கள்
எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.

இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.

நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.

இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.


பிரியமான என் வேட்டைக்காரன்…!
*

இடதுபக்கம் மூக்குத்தி அணிந்திருப்பாள் அமுதா.
எதற்கும் வாதிடுவாள் ராதா.
சிரிப்போடுதான் பேசத் தொடங்குவாள் சுசீலா.
சிறிது கூன்போட்டு நடப்பாள் கீதா.
கண்கள் பேசும் பானுமதிக்கு.
கடைசிவரை பேசாமல்
புன்சிரிப்போடு போனவள் மோகனா.
மையிட்ட கண்கள் மாலதிக்கு.
மல்லிகைச் சரமின்றி காண்பது கடினம் நிர்மலாவை.
அபூர்வமாய் சுடிதாரில் வருவாள் ஜெயந்தி.
அடிப்பதுபோல் பேசுவாள் வசந்தி.
கேள்விகளோடே வருவாள் புவனேஸ்வரி.
துருதுருவென்றிருப்பாள் சந்திரா.

தோழியர் எல்லோர்க்கும்
வாய்த்திருக்கும்
ஒன்றிரண்டு பிள்ளைகளுடன்
ஒளிமயமாய் ஒரு குடும்பம்.

எப்படியும் வரக்கூடும்…

நாளை வரும் நாயகனுக்காய் – இந்த
நாற்பதிலும் காத்திருக்கும்
பெண்மான் எனைக் கொண்டு செல்லும்
பிரியமான என் வேட்டைக்காரன்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



என் …!

பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.

சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.

சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.

மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.

என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.

என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.


இயல்பு…!

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.


இருப்பு…!

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?


பிரிவின் சாசனம்…!

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

இன்முகம்…!

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.



கண்டதும் காணாததும்…!

சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.

எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.


மனக்குழந்தை…!

இடுப்பை விட்டு
இறங்க மறுத்து
அடம்பிடிக்கும்
குழந்தையாய்

எப்போதும்
எதையாவது
எழுதச் சொல்லி
நச்சரித்துக்கொண்டிருக்கிறது
என்
மனக்குழந்தை.



சொல்லுதல்…..!

சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.

சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.

சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.

சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.

இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.


ஹைக்கூ

அறுநூறு மைல் வேகத்திலும்
ஆழ்ந்த உறக்கம்.
விமானப் பயணம்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


களவு

௧ளவு போனது.
கரையோரம் இருந்த

கடிகாரத்தோடு

அருவிக்குளியல்

தந்த ஆனந்தமும்.


அஞ்சல் அட்டை

நாளேடு தொடர்கதைக்கு

அனுப்பிய ஒன்று.

நேயர் விருப்பத்திற்கு

(வானொலியில் பெயர்!)

அனுப்பிய அத்தனை

ஆசைகள்.

நேர்முகத்தேர்வுத் தகவல்கள்

நிறையவே கொண்டு வந்தவை.

திரைப்படக் கலைஞர்களிடம்

புகைப்படம் கேட்டு

எழுதியவை.

படித்ததும் கிழிக்கப்பட்ட

உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.

இப்படி

எதையெதையோ

ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது

அலுவலகக் கடித அலமாரியில்

அமைதியாய் வீற்றிருந்த – அந்த

மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.



அன்பைப் பற்றிக் கொள்ளுதல்…..!

அவசரமாய் தொலைபேசியில் அழைத்து

அன்புபற்றிய கவிதையொன்று

அச்சில் வந்திருப்பதைச் சொன்னேன்.

வேலை முடிந்து

வீட்டுக்கு வரும்போது

மகனுக்கு மறக்காமல

மருந்து மாத்திரைகள்

வாங்கி வா என்றாய்.

எனக்குப் புரிந்தது.

அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதும்.

அன்பையே பற்றிக் கொண்டிருப்பதும்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

கே. ஆர். மணி


NH-7ல் இறந்தநாய்

மெல்லச் சாப்பிடு , முட்டா காகமே
தொண்டையில் அடைத்துக்கொள்ள
போகிறது.

எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது
அந்த பெயர் தெரியாத பறவை.

ரொம்பநேரமாய் குருவி என்னதான்
செய்ய என்று யோசித்துக்
கொண்டேயிருக்கிறது.

ஈக்கள் அகிம்சாவாதிகள்
அவ்வளவாய் தொந்திரவு தருவதில்லை.
மெல்ல நக்கிவிட்டு எழுந்துபோய்விடுகின்றன.

கோலங்களை சாப்பிட்ட சைவ
எறும்புகளுக்கு இந்தவேகத்தில்
இடமில்லை எனினும்
என்னிடமும் ஏதோ இனிப்பு
இருக்கிறது போலிருக்கிறது.
இல்லாவிட்டால் அவையேன் என்னை
தேடிப்பிடித்து வரவேண்டும்.

இவர்கள் சாப்பிட்டபோதெல்லாம்
வலி தெரியாது இருந்த எனக்கு
டயர்கள் 14வது தடைவையாய்
ஏறியபோது பதிவுபோலவே வலித்தது.

எந்த மூன்றாம்நாள்
உயிர்தெழுவதற்காக
படுத்திருக்கிறேன் ?


டயரும் நடுத்தெரு நாய்களும்

அது அதுபாட்டுக்கு படுத்திருந்தது
பிரபஞ்சவேகமும் என் வேகமும் அறியாது
அசமஞ்ச நாய்

நாலாம் கியரிலிருந்து ஏன் ஒரு
நாய்க்காய் பிரேக் போடவேண்டும்.
ஓலிப்பான் அமுத்தியிருக்கலாம்.
அழுத்தவில்லை.

சின்னதாய் கீரிச்சலோடு டயர் சுழற்ற,
அடித்து புரண்டு எழுந்த அதன் கண்களில்
கடைசிநேர உயிரின் ஒளி.

தப்பித்தலின் பொருட்டு புரண்டு
பின்பக்கம்போயிற்று.
தப்பித்தும்விட்டது.

அந்த ஓளி என் கண்ணிலும் ஓளிர்ந்தது
போனமுறை பிங்க் ஸ்லிப்பின்போது

டயர்களால் சாகாது இந்த
நடுத்தெரு நாய்கள்.


*Pink Slip – வேலைவிட்டு அனுப்பும் கடிதம்.

mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பஹீமாஜஹான்


தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்
“தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே”
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்;விட்டு
ஓட்டமெடுப்பேன் தோட்டம் பார்த்து
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத்தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்

ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்க தரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்
நானும் தொடர்வேன்
தோட்டத்து ஒற்றையடிப்பதையின் சருகுகளைச்
சிறு மண்வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப்புச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்
அத்தியின் கிளைகள் ஆடும்
தௌ;ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்

நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் அம்மை
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படு குழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழழுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை


பஹீமாஜஹான்
2007.09.16


jahan.faheema@gmail.com

Series Navigation

பஹீமாஜஹான்

பஹீமாஜஹான்

கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

எஸ் அனுக்ரஹா


கணிணியியல்

உயிர் மின்சாரம்
ஏறியதும்,
வாழ்கைப்
பதிவதின், நகர்வதின்
சூத்திரம்
‘உண்டு’ ; ‘இல்லை’ ;



முழுமை நிலையானதன்று

இரவுகள்தோறும்
சிரித்துக் கொண்டும்,
கரைந்து கொண்டும்,
வளர்கின்றன பிறைகள்.

ஓர் இரவு, முழு நிலவென
நிறைந்து ஒளியூட்ட,
முயற்சிகள் முடிவதில்லை;

மீண்டும் மீண்டும்
உருவாகும், முழு நிலவு.

இயற்கையிலேயே
முழுமை நிலையானதன்று.


சேவை

மேலிருந்து விழும்
கருணைச் சிதறலை
உறிந்து
எங்கும் பரப்பும்
மண் மெத்தை.


தேடல்

கலையா? வாழ்க்கையா?
இவ்விடையில்லாத்
தேடலின் தூண்டிலில்
சிக்குவதில்லை
நீரோடோடும்
மீன்கள்.


காலக்கடல்
பலர் சிலராவர்
சிலர் பலராவர்
காலக்கடலின்
ஒவ்வொரு அலையின்
எழுச்சியிலும்!

ஒவ்வொரு எழுச்சியும்
ஒரே கடலில்தான்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஒரே கரையில்தான்



பிம்பம்

நிலைக் கண்ணாடியில்
பிம்பங்களைக் காண
நானும் ஒரு பிம்பமென
சட்டகம் முழுதும் நிறைய
என்னைத் தாண்டிய
முப்பரிமாணத்தை
மறைத்து விட்டேன்.


பிழை
சிறுவயதில் செய்த
பிழையைத் திரும்பவும்
செய்ய வேண்டாம்.
எதையும், சூனியத்தால்
பெருக்கினால்
மிஞ்சுவது சூனியம் மட்டுமே!


வாழ்க்கை

ஓவியம் புரியவில்லையென
வண்ணங்களை
நகைப்பது போல
வாழ்க்கை புரியாதபோது
மனிதர்களை
நகைக்கிறோம்.


முதல் மிதிவண்டிப் பயணம்

வீதியின் விசும்பல்கள்
காற்றோடியைந்த ராகமாகி
செவிகளைத் துன்புறுத்தாது
மறைந்தன.

தெருவோர நிகழ்வுகள்
பல முகங்களின் வாழ்க்கையை
அம்பலப்படுத்தின
பார்க்க முனைந்த
விழிகளுக்கு மட்டும்

பலவித மரங்களும்
சூழலோடு புணர்ந்து
அகன்ற வீதியின் ஓரங்களிலே
தம் இருப்பைப் போற்றாது மரியாதையோடு
முகம் நிமிர்த்தி நின்றிருந்தன
தம்மை உணராதவர்க்கும் நிழலாக

உலகம் என் கண் முன்
மெதுவாக நகர்ந்தது
தன் எல்லா உறுப்புகளையும்
விரிவாக விளக்கியவாறு,
அசுர வாகனங்கள் நிரம்பிய வீதியின்
ஓர் ஓரத்தில் என்
மிதிவண்டிப் பயனம்
தொடர்கிறது.

சிறகுகள் முளைத்த சுதந்திரத்துடன்
கவலையின்றிப் பார்க்கிறேன்
கவலை தோய்ந்த முகங்கள்,
முன்னேற முந்துவதை.

வியர்வைத் துளிகள்
வீசிய தென்றலால்
குளிர்ந்தன.

(எழுதிய நாள் 07.08.2003)


மழை
மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை

நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தேரளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி

தோள் சவாரியும் சுகம்தான். . . .
குடை, உலகை மறைக்க,
கஷ்டப்பட்டுத்தான் அதைக்
கண்ணிலிருந்து துரத்தினேன்

கடவுளிடம் கேட்டு
நானே மேகப்பஞ்சைப்
பிழிய வேண்டும். . . .
மழை நின்றது
“சாமிக்கே கை
வலிக்குமா என்ன?”

அருகில் ஒரு மரம்
சோம்பல் முறித்து,
துளிகள் தெளித்தது.
நின்று கொண்டே இருக்கின்றன.
அவை சோம்பேறிகள்.

அட வண்ணமயமாய் பூச்சிகள்!
கடவுள் ஏதேனும்
சேதி சொல்லி அனுப்பியிருப்பாரோ?
கோயிலில், அன்று
அவரிடம் ஒன்று கேட்டிருந்தேன். . . .

வீட்டு வாசலில் இறக்கிவிட்டு
அப்பா சொன்னார்
“அம்மா, . . .என்ன மழை!”
ஹ்ம்ம்ம் . . . . அதற்குள் வந்துவிட்டோமே?!
(எழுதிய நாள் 28.02.03)


Series Navigation

எஸ் அனுக்ரஹா

எஸ் அனுக்ரஹா

கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கருணாகரன்


போக மறுத்த வெளிச்சம்

பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது

எங்கும் குழந்தைக் குதூகலத்தின்

மணிகள் மின்ன

அது கொண்டு வந்த பொம்மைகள்

பூமியெங்கும் சித்திரங்களாயின

பெய்யும் நிழலோடு

வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய்

இலைகளினடியிலும் மூலைகள் மறைவிடங்களிலும்

உன் அக்குளிலும்

இறுக மூடப்படாதிருந்த பாத்திரங்களிலும்

எங்கும் நிரம்பியிருந்த தது அலைகளோடும்

நிறங்களோடும்

பாத்திரங்களைத்திறந்த போது

முகத்தில் படர்ந்தது பகலின் வாசனை

உன் அக்குளை முகர்ந்தபோது

ஒளியின் வாசனை அழைத்துச் சென்றது

சூரியனிடமும் அது தன்னுள் நிரப்பிவைத்திருந்த

பாற்கடலிடமும்

போக மறுத்து விளையாடிக் கொண்டிருந்த

வெளிச்சத்தின் மென்குரலைக் கேட்டவேளை

என்னால் நம்ப முடியவில்லை

அதன் ஒளிக்கூருக்கும்

வெம்மைக்கும் இடையில்

இந்த மலர் எவ்விதம் மென்குரலானதென்று

இரவுக்கு அப்பால் விலகிச் செல்லும்

வெளிச்சத்தின் பயணப்பாதையில்

தூவிச் சென்ற துளிகளில்

மிஞ்சிய பகல்

பாடிக் கொண்டிருந்தது குழந்தையின் வேடிக்கை பொங்க

இரவை மெல்ல அவிழ்த்துக் கொண்டிருந்தது

ரகசியமாய் வெளிச்சக்குழந்தை

இன்னும் அதே வேடிக்கையாய்


உறக்கத்தில் வந்த மழை

உறக்கத்தில் வந்த மழை

தங்கியது இலைகளின் மீதும்

நிலத்தினடியிலும் மௌனமாக

தன் இரைச்சலையடக்கிக் கொண்டு

மெல்ல இறங்கியது சிறகுகளோடு

பூமியொரு பாத்திரம்

சிறகுள்ள மழையை

கருணையோடு ஏற்று

தன் மடியில் வைத்துப் பகிர்ந்தளித்தது

தாவரங்களுக்கும் கானுயிர்க்கும்

பிறவுக்கும்

குருதியொழுகும் மரங்கள்

பறக்கத்தொடங்கிய அதிகாலையில்

ஒரு மெல்லிய இருள் கசிந்து கொண்டிருந்தது

வானத்தின் அடிவயிற்றில்

அது நிலம் விட்ட மூச்சு

கொப்பளிக்கும் தனிமைக்குரல்களில்

ஊறிச் சுடரும் பானத்தை

நாங்கள் பருகினோம் மழையை வருடிக்கொண்டு

கைகளிலிருந்து கழன்ற விரல்கள்

மலர்கின்றன மழைத்துளிகளில்

ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மலர்

வானம் மலர்கள் மிதக்கும்

வாசனை மண்டபமாயிற்று

பனங்கூடலின் மீது தன்னிசையை மீட்டிய மழை

கடலின் வாசனையை

பரப்பியது பனைகளிடம்

பனைகள் ஆடிக்களிக்க அம் மலர்த்துளிகளில்.

சொற்களின் புதைகுழி

நொதித்துத் ததும்பிக் கொண்டிருந்த

நிலத்தில்

வடிந்து கொண்டிருந்த ஊனத்தைப்

பின்தொடர்ந்த குழந்தையொன்று

கண்டது சொற்களின் புதைகுழியை

இரத்தக்கறையும்

துருவும் படிந்திருந்த சொற்களில்

ஒட்டிக்கிடந்த காலத்தின் துகள்களில்

மின்னின கண்ணீர்த்துளிகள்

மெல்ல அந்தக் கண்ணீர்த்துளிகளை

தொட்ட குழந்தை அதிர்ந்தது

உடைந்தொழுகிய அவற்றின் குரலைக் கேட்டு.

நாறும் அந்தச் சொற்களின் துருவை விலக்கிய குழந்தையின் விரல்கள் காயம் பட்டன

காலத்தின் துருவேறிய அந்தச் சொற்களில் இன்னும்

வன்மம் நிறைந்திருந்தது உக்காமலே

எனினும் மெல்ல

அந்தச் சொல்லை எடுத்து அதன் அடையாளத்தைக்

கண்டபோது

அதிகாரம் என்று அது துப்பாக்கி வடிவிலும்

கத்தியின் உருவிலும்

வதையின் ஈனக்குரலோடும்

சிறைக்கூட விலங்குகளின் கனத்தோடும்

இருந்தது.

இன்னொரு சொல்லை எடுத்த குழந்தையின் உடல் நடுங்கியது

அதனுள்ளிருந்த மின்னலைகள் தாக்கி

போர் என்ற அந்தச் சொல்லில் ஏராளம் ஏராளம் உயிர்களின்

முனகலொலி அதிர்ந்து கொண்டேயிருந்தது.

பிறகவை ஒவ்வொரு கண்ணாக

பெருகிக் கொண்டிருந்தன

குழந்தை அந்தச் சொல்லை

உதறியெறிந்தது

ஆனால் அந்தச் சொல் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டது

அப்படியே அது

அதைச்சுற்றி விரிந்து தன்னுள் இழுத்தது குழந்தையை

குருதியொழுக தவழ்ந்து வந்த குழந்தை

இப்போது தன்கையில் அகப்பட்ட சொற்களை எல்லாம்

விலக்கி

வெளியே வந்தது

என்றபோதும் புதைகுழியிலிருந்த சொற்களெல்லாம்

குழந்தையைப்பின் தொடர்ந்தன

வலையில் வரியும் படையின் அணிவகுப்பாய்

இன்னும் குழந்தையைத் தோற்கடிக்கும்

அத்தனை சொற்களும்

ஒரு கண்ணியில் பொருந்திக்கிடந்தன

வெடிகுண்டுகளின் ரகசியங்களுடன்

குழந்தையைப்பின் தொடர்ந்த

அந்தப் புதைகுழியின் நிழலில்

மறைந்திருந்தன

இன்னும் சிறை விலங்கு

புலனாய்வு மற்றும் அரசியல்

படை மறுமலர்ச்சி

சுதந்திரம் ஜனநாயம் விடுதலை தேசியம்

அன்பு கருணை பகை கோபம் பரஸ்பரம் என்று ஏராளம்

எதிரர்த்தச் சொற்கள்.

திறந்த புதைகுழியை யாராவது மூடுங்கள்

என்ற குழந்தையின் கேவல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

எல்லோருடைய புலன்களையும் ஊடுருவிச் செல்லும்

நுண்துளைப் பெருக்கியினூடாக.


கண்ணழிந்த நிலத்தில்

கண்ணழிந்த நிலத்தில்

முளைகளின் ஒலியெழுந்தபோது

தாழ்ந்த மரக்கிளைகளிலிருந்து விழுந்தது

உறங்காச் சூரியன்

கூடுடைந்து

எழுந்த முளைகளின் பேரலை

பரந்தது வௌ;வேறு

திணைகளில்

உருக்குலையும் காலையில்

துருவேறிய மலர்களை

எடு;த்துச் சென்றார் கடவுள்

பதற்றத்துடன் விரைந்து

சந்தையிலிருந்து திரும்பிய

பெண்ணிடம்

தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்

கேட்டார் இரண்டு காசுகளை கடனாக

பசி தணிந்த பிறகு காத்திருந்த

கடவுளை ஏற்றிச் செல்லவில்லை

எந்தப் பேருந்தும்.

யாரும் பேசாமற் சென்றபோது

தனித்த கடவுள்

வாழ்ந்து விட்டுப்போங்கள் என்றார்

துருவேறிய மலர்கள்

கல்லாய் இறுகி மலைப்பாதமாகின

அதுவே கடவுளின் பாதம்

என்றாள் கடன் கொடுத்த பெண்.

கண்ணழிந்த நிலத்தில்

இப்போதிருந்தன

அந்தப் பெண்ணின் ஒரு சோடிக்கண்கள்

நெருப்புமிழ்ந்தபடி.

அதனுள்ளிருந்தது ஒரு பாற்குடம்

அவளிதயத்தின் வடிவில்.


poompoom2007@gmail.com

கருணாகரன்

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பைசால்


இடைவெளி

அதிகமான நாட்கள்
நாங்கள் பேசியிருக்கமாட்டோம்

வீட்டில்
தொலைபேசிக் கட்டணம் அதிகம்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை
தூக்கி
அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம்

“இடைவெளி நிரப்புக”
என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது
இதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனாய்

பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

நாம்
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம்
கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக் குடிகுடியென குடித்துவிட்டு
எழுந்து நடந்து சென்றது
ஒரு மனிதன்போல்

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய்
நான்
அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சிரித்துக் கொண்டு
அதன் பிறகு பேசமுடியாமல் போனது
அதனால் நானின்னும்
தொலைபேசி இணைப்பைப் புதுப்பிக்கவில்லை.


நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகிறான்

பகலின் குருடு நள்ளிரவு
இரவின் தெளிவு நடுப்பகல்

நள்ளிரவில் சிறுவன்
கொக்குகளை உலர்த்துகிறான்

நீரின் கதவுகள் திறந்து
உள்ளே நுழைய விருப்பம் தெரிவித்தது கொக்கு
அங்கே ஒரு மீன் கவிதையெழுதியது

“எனக்கு இரண்டு உதடுகள்
என்னை நானே முத்தமிடுகிறேன்
எனக்கு இரண்டு கண்கள்
என்னை நானே பார்க்கிறேன்
எனக்கு இரண்டு கைகள்
என்னை நானே தடவிக்கொள்கிறேன்
எனக்கு இரண்டு கால்கள்
நானே நடந்து செல்கிறேன் ஊரெல்லாம்”

மீன்களின் முத்தங்களைக் கொல்லுவது,
அதன் விரல்களிலிருக்கும் கவிதைகளைக் கொல்லுவது
என் பசியல்ல
என்று பாடிக்கொண்டு பறந்தது கொக்கு

பசியோடிருந்த சிறுவன் அதிர்கிறான்

நேற்று உலர்த்திய கொக்குகளுக்கு
உயிர் வாங்கச் செல்கிறான்
வழியில் தன்னுயிரை யாரோ எடுப்பதுபோல உணர்கிறான்

உயிர்த்திருடர்கள் இங்கு அதிகம்
திருடர்களுக்கு
இத்தனை உயிர்களும் அதிகம்

குடித்து முடிக்கமாட்டார்கள்


நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு

பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
பராமரிக்கத் தெரியாது என்று அவள் சொன்னாள்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு

இன்று
அது நீண்டு வளர்ந்து
நிலாக் காலங்களிலும்
குளிர் காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது

பைசால், இலங்கை


athanaal@gmail.com

Series Navigation

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

விழியன்


நாடகம் நடுவே

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்



குழந்தை(பருவம்)

உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?


http://vizhiyan.wordpress.com
umanaths@gmail.com

Series Navigation

விழியன்

விழியன்

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ரசிகவ் ஞானியார்


குறுக்குச் சுவர்

ஏறவிடாது வழிமறித்து
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது

வாழ்க்கையிலும் அப்படித்தான்



இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ….
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை …
தர்மசங்கடப்படுத்துகிறது !

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே …
மனிதநேயமும் இறங்கிப்போனது!



rasikow@gmail.com
– ரசிகவ்

Series Navigation

ரசிகவ் ஞானியார்

ரசிகவ் ஞானியார்

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

உஷாதீபன்


இழப்பு

எப்படிச் சொல்ல
அந்தச் சோகத்தை-மகனே!
உனக்கு
கிட்டிப்புள் விளையாட்டு
தெரியுமா?
கோலியாடியிருக்கிறாயா?
எத்துக் கம்பு?
செதுக்குச் சப்பா?
அட…
பம்பரமாவது விட்டிருக்கிறாயா?
பாண்டியாவது உண்டா?
பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா?
இல்லையா?
போச்சு!@ அத்தனையும் போச்சு!!
என்ன படித்து என்ன பயன்?
உன்
இளமைக் காலங்கள்
இழந்த காலங்கள்
நீ எவ்வளவு பெரிய
வேலைக்குப் போனாலும்
எத்தனை கைநிறையச் சம்பாதித்தாலும்
இந்த இழப்பு
ஈடு செய்ய முடியாதது
உன்பாலான
இந்தத் தாக்கம்
எனக்கு
தீராத மனச்சுமைதான்!!


அவன்
அந்த வளாகத்தில்
நுழையும் போதெல்லாம்
கையை நீட்டுகிறான் அவன்
அவனின் பொழுது – இன்று
என்னிலிருந்து துவக்கமா? – அல்லது
ஏற்கனவே துவங்கி விட்டதா?
எப்படியாயினும்
விடுமுறை நாளன்று
என்னின் எதிர்பார்ப்பு
உண்டு அவனுக்கு
அவனின் அந்த எதிர்பார்ப்பும்
அறியும் என் மனது
மனசு ஊனமுறாமல்
போட்டுவிடவேண்டும்-அந்த
ஊனமுற்ற நண்பனுக்கு


தேவை
குறைந்த சம்பளம்
நிறைந்த மனது
அப்பாவுக்கு
நாற்பதாண்டு காலம்
மாடாய் உழைத்த அவர்
ஒரு நாளும்
மனம சலித்ததில்லை
ஆனால் இன்று
இருபத்தைந்து வருட சர்வீஸில்
ஏகமாய்ச் சலிக்கிறது மனது
அப்பா காலத்தில்
லஞ்ச லாவண்யமில்லை
இன்றோ
ஊடுபாவாகி –
புரையோடிப் போயிருக்கிறது
இதற்கு மத்தியில்
நேர்மையாய் சர்வீஸ் போட
குறைந்தபட்சம் அந்தச்
சலிப்பாவது வேண்டாமா??


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

ந. அனுராதா


கனவில் நீந்தும் கள்வன்
கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்

ஏந்தும் தோளுக்காய் பசியுடன்…

இமை மீறி நீந்தும் நீருடன்…



விரையும் குதிரை

இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன‌
நினைவு எறும்புகள்

ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.

நடக்கும் போதே தூங்கிப்போன
குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட உன் ஞாபக எச்சங்கள்

உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்

கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்
உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்

விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்


anuradan@gmail.com

Series Navigation

ந. அனுராதா

ந. அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ந. அனுராதா




என் காதல் காடு

இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்

தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு ம‌ட்டும்
காத்துக்கொண்டு இருக்கிற‌து மிச்ச‌மான‌ வ‌லியோடு

கான‌க‌த்தின் ந‌டுவில் ஓர் ஒற்றைக்குர‌ல்
தின‌ந்தோறும் பாடுகிற‌து
கேட்ப‌வ‌ர் இல்லாம‌ல்

க‌ட்டிய‌ணைத்து முத்த‌ம‌ழை பொழிந்து
சூடு த‌ணிவித்த‌ என் உட‌ல்கூடு
த‌ன்னைத்தானே கொளுத்திக்கொள்கிற‌து

த‌ன் ர‌த்த‌ம் சுவைக்கும்
ப‌சித்த‌ நாயாய்



எனக்கான‌ கேள்விகள்

விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.

மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்

வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.

நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.

நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க

உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது

மோன தவம் மரத்தடியில்

எதிர்வரும்
வேட்டுவ அம்பு நோக்கி


anuradan@gmail.com

Series Navigation

ந. அனுராதா

ந. அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

உஷாதீபன்


“தவறியவர்களுக்கு”

வேலை கிடைக்கும் முன்
வேலை வேலை என்று அலைந்தோம்
கிடைக்குமோ கிடைக்காதோ என்று
ஏங்கினோம்
கிடைக்காமலே போய் விடுமோ என்று
பயந்தோம்
ஓடி ஓடி விண்ணப்பங்கள்
வாங்கினோம்
தேடித் தேடித்
தேர்வுகள் எழுதினோம்
தேறினாலும் நழுவிடுமோ
என்று அஞ்சினோம்
விரட்டி விரட்டி
நேர்முகம் கண்டு
இன்று
கைப்பிடியில் ஒரு
அச்சாணி
கால் பதித்து நிற்கும்
தடம்
எல்லாம் சரி!
காலக் கணக்கை
அறுதியிட்டதுபோல்
கடமைகளையும் உணர்ந்தோமா?
சார்! இந்த ரிப்போர்ட்டை
மானேஜர்
ரெடி பண்ணச் சொன்னாரு
இன்னைக்கே அனுப்பணுமாம்!
அட! வையப்பா!!
அதுக்கென்ன இப்ப அவசரம்?
அவருக்கு வேறே வேலையில்லை?
எங்கிருந்து வந்தது
இந்த மெத்தனம்?


பிறகு பார்ப்போம்…

வந்திருக்கிறார்
போய்ப் பார்ப்போம்
நண்பர் சொன்னார்
நறுக்காக…!
எதற்கு? என்ற
என்னின் கேள்விக்கு -ஒரு
அறிமுகம்தான்
நம்மை
அறியவைக்க என்றார்
வேடிக்கைதான்
அவரை நான்
அறிந்தது -அவரின்
எழுத்தின் பேரில்
பிறகென்ன நேரில்?
அதுபோல்
என்னை அவர்
அறிவதும்
அறிய வேண்டியதும் – என்
எழுத்தின் மூலம்தானே?
என்ன போய்ப் பார்ப்பது?
பேசட்டும் என் எழுத்து
பேசப்படட்டும் முதலில்
பிறகு பார்ப்போம்
நேரின் தேவையை!


தெரிந்ததுபோல்
காட்டிக் கொள்வதில்
இருக்கும் அவஸ்தை
‘தெரியாது’ என்று
சொல்லி விடுவதில்
இருக்கும்
அறியாமையைவிட
உயர்ந்ததாயின்
அந்த
அறியாமைதான்
எனக்கு
கௌரவம்!!



ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


திசையழிவு

உடைந்து நொருங்கிய

மலர்களிலிருந்து சிதறிய குருதியில்

இருண்ட திவ் வெளி

தவித்தன நிறங்களும்

வாசனையும்

பெயர முடியா திறுகிய

நிலவில்

உறைந்தது இரவு

வெளியிலிருந்தும்

மரங்களிலிருந்தும் விலகிய

பறவை

கனலோடலைந்தது

கூடு தேடி

மரங்களும் வெளியுமற்ற

திசையில்

காலம் உருகி உறைந்தது

ஒரு கிண்ணத்தில்

அதன் சுவையாகத் திரண்டது

பறவையின் கனவும்

கூடும்.


செல்லாத சொற்களோடு

எங்கும் செல்லாத சொற்களோடு

தெருவில் நீ போனபோது

இரவில்

தூங்கமுடியாது நீ தவித்தபோது

உன் தொண்டைக்குழியில்

உயிர் முடிச்சிறுகியபோது

வலையில் நீ சிக்கிய பூச்சி

வலையோ

எல்லாக்கண்ணிகளாலும் தொடுக்கப்பட்ட

உலகம்

உனக்கெனவும் எனக்கெனவும்

ஒவ்வொரு கண்ணியிலும் விரிந்த சிறை

வலையில்

ஒடுங்கியது

உன் கானற் சொற்களின்

கொதிப்போடு

எனதும்தான்

யாரும் கேட்கவில்லை

உனது முறையீட்டை


>b>
பூட்டுகள் பூட்டுகள் பூட்டுகள்

எல்லாப்பூட்டுகளோடும்

இணைந்திருந்த வலைகள்

பிரித்தறியத் தெரிந்திருந்தன

நுட்பமாய்

உனது சொற்களை வேறாகவும்

உன்னை வேறாகவும்

அவை தெரிந்திருந்தன

இன்னும்

உனது சொற்களைத்தவிர்த்து

உன்னை தேர



வழியில் ஒரு நாற்காலி

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருந்தது

விட்டுச் சென்றோருக்காகவா

வருவோருக்காகவா

மிஞ்சிய அதன் நினைவுகளில்

விடை பெற்றது யார்

இனி

வரும் விருந்தாளி யார்

யாருடைய நிழலும்

அதனிடமில்லை

பல்லாயிரம் வேர்களோடும்

பற்கள் கொம்புகளோடும்

வளர்ந்து மலையலாம் அது

சிலபோது

சிறகோடு

காற்றிலேறி வினோதப் பறவையாய்க் கரையலாம்

எப்படியோ

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருக்கிறது.


இசை மொழி

பாடுக என்ற இசை மொழியைச்

சொன்ன காற்றிடம்

பாடியது பறவை

தன் அந்தரங்கத்தின்

உள்@றிய சுனையை

மரங்களை வாழ்த்தி

காற்றை வாழ்த்தி

வெளியை வாழ்த்தி

தன் சிறகை வாழ்த்தி

பறவையின் அந்தரங்கச் சுனையை

அறிந்த காற்று

கொண்டு சென்றது

மரத்திடம் வாழ்த்துகளை

வெளியிடம்

நன்றியை

சிறகிடம்

குதூகலத்தை

அந்தத் திருவிழாவில்

ஒரு விருந்தாளியும்

கலந்திருந்தார் தோழமை நிரம்ப

சே (குவேரா)

இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்.


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மதியழகன் சுப்பையா


வேடைக்குருதி கசியும்
புதுக்காயங்கள் பெற்று

இருட்டின் அடர்த்தியில்
மயிரினும் மெல்லிய வழித் தேடி

நுரையீரல் நீர்கனக்க
தனிமையாழியுள் ஆழ்ந்து

பசிக்கு மலம் புசித்து
பிணக்குழியில் படுத்துறங்கி

துன்பமொழி பிணாத்தி
தன்னோடு தான் பேசி

பொல்லாப் பொழுதுகளை
புலம்பியழுது போக்கி

நிராகரிப்பு எச்சிலால்
உடல் நனைந்து நாறி

உண்ட நஞ்சதுவோ
ஜீரணமாகி ஜீவன் தர

ஏதோ பிழைத்துக் கிடக்குமென்னை
வார்த்தைகளால் மீட்டெடுக்க
வருவாளோ தேவதை


உன் மவுனங்கள் புரியுமெனக்கு

காலையிலும் மாலையிலும்
தவறாது அழைத்துப் பேசும்
ஒழுங்கு

கூர்மையில் கிழிபடாது
பயணிக்கும் நத்தைபோல்
உரையாடல்களில் அத்தனை
கவனம்

தகாத-கூடாத- வேண்டாத
என தவிர்த்து; தேரும்
வார்த்தைகளில் வெளிப்படும்
அனுபவம்

அனுமதிக்க மன்னிக்க கோரி
விபரம் விசாரிக்கும்
குழைவு

குரல் மெலிகையில்
நடை தளர்கையில்
குறிப்பறிந்து நடக்கும்
கனிவு

விடு என்றால் விடவும்
கொடு என்றால் தரவும்
செய்யும் அடிபணிவு

இரும்புப் பந்தொன்றை
குரல்வளைக்குள் இறுக்கி
விழிபிதுங்கி நீ காட்டும்
மவுனங்கள் புரியுமெனக்கு


மவுனப் பயணி

இருக்கை மேல்
கால்கள் பரப்பி
அமர்கிறாய்

இருட்டில் ஊடுருவி
வெளிச்சம் தேடுதுன்
பார்வைகள்

உனக்குப் பின்னாலிருந்த
முகம் மலித்த இளைஞனும்
இறங்கிப் போய் விட்டான்

புத்தகத்தை மடித்து
வைத்துவிட்டு
உன் முகம் பார்த்து
புன்னகைத்தபடியிருக்கும்
என்னைப்பார்த்து
குறைந்தபட்சம்
புன்னகைத்திருக்கலாம் நீ

அடுத்த ரயில்
எப்பொழுது வருமென்று
கவலையோடு கேட்டாய்

இருபது நிமிடங்களில் என
நம்பிக்கையோடு பதிலளித்தேன்

ரயில் வரும் வரை
நீ எதுவும் கேட்கவில்லை
நான் எதுவும் சொல்லவில்லை

நம் மவுனம் கலைக்க
வந்து சேர்ந்தது
மின்ரயில்


தோள் சாய்ந்திருக்கிறாள்
தேவதையாய் ஒருத்தி

ஐந்து ரூபாய்க்கு ஆறு
எனக் கூவுகிறான்
அரைநிஜார் பையன்

கார்டூன் பாத்திரமொன்றை
நினைவூட்டும் ஜாடையில்
பல்தெரிய சிரிக்கிறான்
பைஜாமாக்காரன்

முலைபெருத்தவளோடு
ரகசியம் பகிர்கிறான்
புஜம் பருத்தவன்

துண்டு துண்டாய் ஏப்பம்
விட்டபடி வயிறு
தடவுகிறான் தடியன்

கம்பி தொங்கியபடி நால்வர்
வாசல் நின்றபடி ஐவர்
இறங்க ஆயத்தமாய் அறுவர்

எதையும் கவனியாது
விரித்த புத்தகத்துள்
படுத்துக் கிடக்கிறாய்
என்ன படிப்பாளி நீ?

கிடைத்து விடுகிறது
ஜன்னலோர இருக்கை

கண் கூடுகிறது
வழிநெடுக பசுமைகள்

கொரிக்கக் கிடைக்கிறது
கடலையும் மிட்டாயும்

பருக கிடைக்கிறது
தூயக் குடிநீர்

ஊர் விசாரிக்கிறான்
சாப்பாடுக் காரன்

கதை சொல்லி காசு
வாங்குகிறான் பிச்சைக்காரன்

அத்துமீறி ஏறும் ஆட்கள் கூட
போகுமிடம் கேட்கிறார் சைகையால்

பயணமுடிவிலும் பேசாது
இறங்கிப் போகிறாய் நீ


madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


மியூசியத்தில் வைக்கப்படும் நாள்

இந்தக்களைப்பு நீங்க

தண்ணீரைக்குடி

கைவிடப்பட்ட இந்த நாள்

இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை

இன்று

துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து

திரும்பி

அவரவர் இடத்துக்குச் செல்வோம்.

மெல்ல மெல்ல

வேதனையின் வலி பின்னகர

இறந்தவனின் உயிர்

நம்மை விட்டு நெடுந்தொலைவு போன திசையில்

போகிறது

அவனின் நினைவுகளும்

கரைந்து

கனமற்று.

மெதுவாகவே

பதுங்கி நகர்ந்து வருகின்றன

துக்கத்தின் போது மிரண்டு பின்தங்கிய

வார்த்தைப் பூனைகள்

நம் கால்களுக்கிடையில்

மீண்டும்.

கழிந்து போன பருவகாலமாகிவிட்ட

அவன்

இனி ஒளி மங்கியதொரு புகைப்படமே

வெட்கமாகவேயிருக்கிறது

இந்த நாடகத்தில்

நாமே

நடிப்பதாகவும் நாமே

அதைப்பார்ப்பதாகவும் இருப்பதையிட்டு

தற்செயலாய்

இறந்தவனைக் காணநேர்ந்தால்

உலர்ந்த நினைவுகளை வைத்துக்கொண்டு

என்ன செய்வது

எந்தப்புள்ளியிலிருந்து அவனைத்

தொடர்வது

என்பதும் ஒரு பிரச்சினையே

எல்லாமே மியூசித்திற்குத்தான்

ஒரு போது, எனலாமா


தொண்டன்

இந்தக்கதவுக்கு வெளியே

நிறுத்தப்பட்டிருக்கிறது நெடுநேரமாய்

வரவேற்பு

யாரடையதோ வருகைக்காக

பூட்டப்பட்ட கதவின் வெளியே

நெடுநேரமாய் தனித்திருக்கும் போது

அவமானத்தையும்

நெருடலையும்

சகித்துக் கொள்ள முடியாது

வெளியேறவும்

உள்நுளையவும்

வழியற்று

சலிப்போடு காத்திருக்கிறது

வரவேற்பு

இன்னும் யாருக்காகவோ

அவசரமா

மகிழ்ச்சியா

துக்கமா

தனிமையா எது வருமெனத்

தெரியாமலே காத்திருக்கும்

அசைகின்ற நீள் பொழுது

எந்த முகமும்

இல்லை அதனிடம்

எனினும்

இன்னும் காத்துக் கொண்டேயிருக்கிறது

அது

பூட்டப்பட்ட கதவை விட்டுப் போக முடியாமல்


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அனுராதா


என் நீ
பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்…
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்….



என் பறவை

எந்த நிமிடமும் அது நடந்துவிடலாம்
நம்மை கடந்து விடலாம்
நம்மில் கலந்து விடலாம்
அந்த நிமிடம் தேடி
காற்றில் அலைகிறது
என் ஒற்றை சிறகு பறவை



கல்லறை காமம்

அறை முழுதும் காதல்
படுக்கை கசங்கலில் வழிந்த காமம்
இறுக தழுவிய உடல்களின் நடுவே ஒளிந்த நட்பு
நீல வியர்வையின் வேட்கை
அனைத்தும் கல்லறையில் தஞசம் புகுந்தது
என் இறுதி கேள்விக்கு எஞ்சிய
உன் மெளனத்தில்


anuradan@gmail.com

Series Navigation

அனுராதா

அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

பைசால், இலங்கை



புளியம்பழம் பாம்பு அல்லது விரல்

பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில்
உயிரற்று நீளும் பழங்கள்

புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம்

எத்தனை விரல்கள்
கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு

என்னையும் தூக்கி கிளையிலே வைத்துவிடும்

தோல்வேறு சதைவேறாகும் வித்தையாடும்
பறவையும் அதில்
கூடிநின்று புதினம் பார்ப்போர் அதிகம்.

அந்த புளியமரத்தடியில்
சுடப்பட்டு அவன் இறந்து கிடக்கிறான்.
Br>

கண்களால் முறண்டுபிடித்துப் பார்க்கும்
கிளைகளால் இறங்கிவரும் பாம்பு அல்லது புளியம்பழம்

திருடனைப்போல், திருடுவதுபோல்
கண்ணாடிப் பாத்திரங்கள் கீழே விழுந்து
வீட்டுக்காரன் கண் விழிக்காமல் திருடவேண்டும்
சதையை,இரத்தத்தை
என்று கற்றுத்தரும் பறவையது.

தோலொரு குகை
பயணிகளில்லாத ரெயில்ப் பெட்டி
சிறு பூச்சிகளோடு பிச்சைக்காரனும் பாதுகாப்பிற்காக
வாழுமிடம்

என் கற்பிணி மனைவி
மடிநிறைய பாம்புகளை வைத்திருக்கிறாள்
கொஞ்சமும் பயமில்லாமல்
கொஞ்சமும் நினைத்தால்
வாளிபோட்டு அள்ளலாம் வாய்க்குள் உமிழ்நீர்



அப்பாவியைத் தூக்கும் ஆயுதப் பறவை

என் உயிரை
கொத்திக் கொண்டுபோகிறது
ஒரு ஆயுதப் பறவை
அதற்கு சப்பாத்துக் கால்கள்

அண்டை வீட்டில்
சப்பாத்துக் கால் கோழி
இரண்டு இருக்கிறது
அது ஊத்தைகளைத்தான் உட்கொள்ளும்.

அப்பாவி
வயலுக்குப் போகும் போதும்
ஆற்றுக்குப் போகும் போதும்
வயல் தொப்பிக்காரன், சால்வக்காரன்
என்று பெயர் சொல்லி
அவதானித்திருக்கிறது அந்த ஆயுதப் பறவை.

மரத்திற்கு கீழ்லிருக்கும்
தேநீர்க் கடையில்
இரத்தத்தை தேநீர் என்கிறான் கடைக்காரன்
என் கனவில்

மழைக்காலங்களில்
இடி மின்னலைக் கண்டால்
வானில்
“சிறுமி பெரிதான பட்டமரமொன்றை
ஒட்டியிருக்கிறாள்”
இப்படிப் பேசுவதற்கு அவனில்லையென்பர் சனம்

அண்டை வீட்டுச் சுவரில்
பல்லிகள் காய்த்திருக்கும்
பழுத்து அல்லது அழுகி கீழே விழுந்த கதை வரப்போகிறது.

சுவர்க்கத்து மர நிழலிருக்கிறதே
அதில் நூறு வருடங்கள்
அவன் நடந்து சென்றாலும் நிழல் முடிவதில்லை
என்று ஆறுதல்படுவர் சனம்


தும்பி ஓட்டி

இதழ்களை நெருக்கி முத்தமிட்டாலும்
அந்த தும்பியோட்டியின் கனவு
எனது அறையெங்கும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

தும்பியொன்று பறப்பதாகவும்
தும்பியின் வாலில்
மிருகமொன்று இருப்பதாகவும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

அது
எனதூர் மிருகங்களை
வேறு நாட்டிற்கு ஏற்றிச் செல்கிறது.

யார் அந்த தும்பியோட்டி?
நானும் விற்பனைக்குவிடும் மிருகங்களை வைத்திருக்கிறேன்
அழகு பார்த்தவைகள்
ஆளைக் கவ்விக் கொண்டுபோனது
இன்னும் பண்ணைக்குத் திரும்பவில்லை
மல வாடையின் மாற்றத்திலிருந்து
தெரிந்து கொண்டேன்.

என்னிடம் அதிக மிருகங்கள் இருப்பதால்
எதுயெது பண்ணைக்கு வரவில்லை
எதுயெது பண்ணையிலிருக்கிறது
என்று பார்க்க
ஒரு வேலையாளும்

அவன் ஒரு மாதமாக
வேலைக்கு வரவில்லை

நடக்கும் பறவைகள்,
சிரிக்கும் பறவைகள்,
பேசும் பறவைகளும் ஒரு பண்ணையிலிருக்கிறது
இன்னும் வரவில்லையா
அந்த தும்பியோட்டி?

அவர்
மிருகங்களைத்தான் வாங்குகிறார்
என்று
என் மனைவி சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டியின் மீது
அவளுக்குக் காதலா?

அவருக்கு ஓய்வில்லையாம்
என்று சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டி
அவளின் கணவனா?
என்று எண்ணுகிறேன்

செடிகளில் வந்து ஒட்டுகிற பசைப் பறவைகளை
அவள் தினமும் விரட்டுகிறாள்
பாதுகாப்பு வேலிகளில்
ஒன்றுக்கு மேலொன்று
ஏறிக் கூத்தாடி மகிழ்வதை
அவள்
தினமும் விரட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
என்பதால் எனக்குச் சந்தேகம்

அது
தன் வாலையோ
அல்லது
சிறகையோ பிய்த்துக் கொண்டு பறந்திருக்கக் கூடும்

அவள் அழுதிருப்பாள்

நான் படுக்கையை விட்டெழுந்திருக்கிறேன்



என் பாடசாலைக்கு வாத்தியார் வரும் வாகனம்

வெண்கட்டியைக் கையிலெடுத்தேன்
சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகை விழுந்தது

துண்டு துண்டாக பிரிந்தது
உடையும்போது
தமிழ் எழுத்துக்களும், கணித எழுத்துக்களும்
சிந்தின நிலமெங்கும்

அத்தனையெழுத்துக்களையும் எடுத்து
வாக்கியங்களும், கணக்கும்
அமைத்துக் காட்டச் சொன்னார் வாத்தியார்

விடிந்தாலும் நான் பாடசாலையில்
வெண்கட்டியைக் கையிலெடுப்பேன்

அவருக்கு பலகையுடைந்தது பற்றி
பரவாயில்லை
சட்டைப் பைக்குள்ளொருதுண்டு
அது வடைவாங்கிய மீதிக் காசு
சிகரெட்டு வாங்குவேன் என்பார்

என் பாடசாலைக்கு
வாத்தியார் வரும் வாகனத்தை
அந்த மர நிழலில் வைப்பார்
இலை விழுந்தாலும் கண்ணாடியுடையும்
காற்றடித்தால் இருக்கை கிழம்பும்

யாரோ முதல் சம்பளத்தில் வாங்கியதை
இவர் முதல் சம்பளத்தில் வாங்கியிருக்கிறார்
வீட்டுச் சமையல் வேலைக்கு தண்ணீர்க்குடம் சுமக்கின்றது
அவருக்கு அது பரவாயில்லை
<


athanaal@gmail.com

Series Navigation

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

சோ.சுப்புராஜ்


ஒலிக்கிறது கைத்தொலைபேசி
ஒருமுறை கூட
என் கைத்தொலைபேசி
ஒலிக்காத நாளில்
உணர்கிறேன் நான்
இறந்து போனதாய்……
**** **** ****
தனக்குத் தானே
பேசிச் சிரித்து அழுது அரற்றி
கொஞ்சிக் குலவி
சண்டையிட்டு சர்ச்சித்து
தனிவழியே போனவளை
மூளை பிசகியவளோ என்று
யோசித்து முடிப்பதற்குள்
கண்ணில் பட்டது அவளின்
கைத்தொலைபேசியின்
காதுமடல் ஒலிவாங்கி……!
**** **** ****
விழித்திருக்கும் போதெல்லாம்
நிறைய நிறையப் பேசினார்கள்;
குறுஞ்செய்திகளை
குறைவின்றி அனுப்பி மகிழ்ந்தார்கள்;
நேரில் சந்தித்த போதுதான்
பேச எதுவுமற்று மௌனமாய்க்
கலைந்து போனார்கள்
தங்கள் தங்களின்
கைத்தொலைபேசிகளுடன்……..!
**** **** ****
எத்தனை பிரியமானவர்க ளென்றாலும்
கைத்தொலைபேசியில்
அவர்களை அழைக்க
கலக்கமாகவே இருக்கிறது;
அவர்களுக்கு
விருப்பமான பாடலையோ
கடவுளைத் தேடும் இசையையோ
காக்கை எச்சங்களைப் போல – நம்
காதுகளுக்குள் பீய்ச்சி
அடித்து விடுகிறார்களென்பதால்…….!
**** **** ****
அடர்ந்த இருளிலும்
துளியும் பயமின்றி தனியாக
நடந்து போகிறாள் அவள்;
பிரியமானவர்களுடன்
கைத் தொலைபேசியில்
பேசிக் களித்தபடி……!
**** **** ****
எழுதியவர் :
engrsubburaj@yahoo.co.in

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

மேரித் தங்கம்


கவிதைகள்

1. கணிணிகள் பற்றி ஒரு கவிதை

கணிணிகளே காலத்தின் கண்ணிகளே
கலியுகத்தின் கடவுளே!
பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே
பன்முகங் கொண்டவனே!
மனித மூளையின் மறுபதிப்பே
மந்திர எந்திரமே!
கனிவும் கரிசனமும் நிறைந்தவனே
கற்பகத்தருவின் உருவமே!

மின்னும் உமது சின்னத்திரை தான்
மாயக் கண்ணனின் மலர்வாயோ?
பன்னெடுங் காலமாய் பரணி ஆளும்
பரம்பொருளின் ஒளி இதுதானோ?
விண்ணையும் மண்ணையும் கைக்குள் சுருக்கிய
விஞ்ஞான விந்தை நீதானோ?
எண்ணி எண்ணி வியக்கிறேன் உன்னை
எப்படித் தான் விளிப்பது!

பரந்த உலகத்தின் செய்திகளை
பத்திரமாய் உன்னுள் பதுக்கி
விரலசைவில் விபரங்களைக் கொட்டும்
வித்தைகள் பல தெரிந்தவனே!
ஒருநொடியில் ஒற்றைச் சொடுக்கில்
ஒன்றை பலவாய் பலப்பலவாய்
பெருக்கும் சூட்சுமம் அறிந்தவனே
பிரமிக்கிறேன் உனைப் பார்த்து!

சிலிர்ப்பூட்டும் வேகத்தில் செயலாற்றும்
சின்னஞ்சிறு தாரகையே!
சிலிக்கான் சில்லுகள் உங்களின்
சிந்தனைக் களமோ?
அலுவல்களில் நீங்களின்றி அணுகூட
அசையாதென்பதும் இணைய
வலைப்பின்னல்களே உலகாளு மென்பதும்
வருங்கால நிஜமோ?

விண்வெளி தொழிற் நுட்பத்தில்
விந்தைகள் நிகழ்த்துகிறாய்;
அண்டம் நடுங்கும் அணுவியலிலோ
அபார சாதணைகள்!
கண்சிமிட்டும் நேரத்திற்குள் ஆழ்
கடலுள் ஆராய்ச்சிகள்;
வண்ணத்திரை சின்னத் திரைகளிலும்
வசீகரிக்கும் புதுமைகள்!

விழிப்பூட்டும் கல்வியில் வித்தகனாய்
வியாபித்து நிற்கிறாய்;
சலிப்பூட்டூம் நேரங்களை சந்தோஷமாக்க
சங்கீதமாய் வழிகிறாய்!
வழிகாட்டும் சுற்றுலாவிலும் உன்னால்
வருமானம் தழைக்கிறது;
அழித்தல் ஆக்கல் பணி செய்யும்
ஆண்டவனுக்கும் உதவுவாயோ!

சகலமும் கணிணி மயமானால்
சாமானியர்க்கு வேலைபோகும்
அகிலமுழுதும் அவதியுறு மென்று
அலறின ஆருடங்கள்!
புதிதுபுதிதாய் பூத்த வேலைகள்
புலம்பல்களைப் பொய்யாக்கின;
கதியில்லை கணிணியின்றி என்றொரு
காலமும் கனிந்ததே!

மருத்துவத்தில் கணிணியின் பணிகளோ
மகத்துவத்தின் மகுடங்கள்;
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
இளவரசி நீயேதான்!
வருகிற நாட்களிலும் உன்னில்
வளர்ச்சிகள் பெருகும்;
புரட்சிகளின் புதல்வியாய் பொங்கி
பிரவகிக்கப் போகிறாய்!

சாதனைகளின் பட்டியல் பார்த்து
சந்தோஷப்படுமுன் சிற்சில
வேதனைகளும் விஷப்பல் காட்டி
விழிகளை நனைகின்றன!
பெருகும் கணிணி விளையாட்டுக்கள்
பேரிடியாகின்றன சிறுவர்கட்கு;
அருகும் உடல் விளையாட்டுக்களால்
அரும்புகள் கருகுகின்றனவே!

இரவுகளின் அடர்த்தி எப்போதும்
இளைஞர்களின் கண்களில்
பெருகும் ஈ-எழுத்துக்களின் வேகத்தில்
பிழைக்குமா புத்தகங்கள்?
குருவிகள் கொத்தி என்றும்
குலையாது கோபுரங்கள்;
அருவிக் குளியளின் ஆனந்தத்தை
அறைக்குள் ஷவர்கள்
ஒருபோதும் தருவதில்லை என்ற
உண்மை நிலைக்கும்!

சூதும் துவேஷமும் ஆபாசங்களும்
சூலப்பெற்ற மனிதப்
பதர்களின் மலிவான பிரயோகத்தில்
மாசுபடும் கணிணிகள்!
அற்புதமான அறிவியல் கருவிகளிலும்
அநீதிகளை விதைக்கும்
விற்பனை மனங்கொண்ட வீணர்களின்
விளையாட்டு அது;
அற்பங்களைக் களைந்து வளரும்
அரும்புகளைக் காப்போம்!

வயலிலும் கணிணிகள் இறங்கும்
வருங்காலம் சுபிட்ஷமே!
இயற்கையின் சீற்றங்களைத் தடுத்து
இதமான காற்றுக்கு
இயந்திரங்கள் வழிபண்ணிக் கொடுத்தால்
இந்தயுகம் செழிக்குமே!
பயமின்றி மனிதம் தழைக்கவே
பயனாகட்டும் கணிணிகளே!


2. எயிட்ஸ¤டன் ஒரு பேட்டி

வாசகர்களுக்கு வணக்கம் – இன்று நாம்
சந்திக்கப் போகும் நபருக்கு
அறிமுகமே அவசியமில்லை
உலகப் புகழின் உச்சியிலிருப்பவர்!

இந்த நூற்றாண்டின் இணையற்றவர்
புள்ளிராஜாக்களை பிரபலமாக்கியர்;
மனிதக் கொலைகளுக்கான
மாபெரும் விருதை
பெறுகிறவர்களின் பட்டியலில்
முன்னணியில் நிற்பவர்!

மழைக்காலத்தின் ஒரு மாலை வேளையில்
வேகவைத்த வேர்க்கடலையை கொறித்தபடி – அவருடன்
உரையாடியதிலிருந்து சில பகுதிகள்
உங்களின் பார்வைக்கு…..

(?) உயர்திரு எயிட்ஸாரே
வந்தனங்கள் உமக்கு
உள்ளம் திறந்து கொஞ்ச நேரம்
உரையாடலாமா உம்முடன்
மானிடர் உய்யவே
மகத்தான சேதிகள் சொல்வீரா?

(ப) அவசர வேலைகள் அனேகம் எனக்கு
அவகாசமில்லை நின்று பேச
புவன முழுக்க பவனி வரவேணும்
புல்லென நிற்கப் பொழுதில்லை;
நவநவமான கேள்விகள் இருந்தால் மட்டும்
நடந்தபடி கேளும் என்னிடம்……!

(?) சிறு அறிமுகம் உம்மைப் பற்றி
சினேகத்துடன் பகரலாமே!
வருமுன் காக்கும் சூட்சுமம் உரைத்தால்
வாழ்த்தும் மானிடர் இனமே!

(ப) மரணம் எனது மறுபதிப்பு; எனக்கு
மனித உயிர்கள் தித்திப்பு!
எருமை வாகனன் எனக்கும் எஜமானன்;
எமனின் புதுவடிவம் நான்!
ஒரு துளி இரத்தத்திலும் ஊடாடித் தொற்றுவேன்
ஓய்வேன் உயிர் குடித்தே……
மருந்தில்லை எனை வெல்லவே இதுவரை
மறுபடி மறுபடி துளிர்ப்பேன்!

(?) உயிர்த் தாகம் கொண்டு
உலவும் உம்மால் தான்
உலகம் அழியும் ஒருநாளென்று
ஊளை கேட்குதே எங்கெங்கும்
உண்மை தானோ அது?

(ப) நாழிக்குள் பொங்குமாக் கடலை அடைத்து
நாடு கடத்துதல் சாத்தியமா?
அழியும் உலகம் என்னால் என்பதெல்லாம்
அச்சங்களின் உச்சம்; அறிவீனம்
ஊழிக்குள் சைத்தான்கள் ஓதும் வேதம்
உண்மையில்லை ஒரு போதும்
விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எளிதாய்
வீழ்த்தி விடலாம் விதியையும்!

என்னைப் போல் இன்னும் எத்தனை
எத்தனையோ பேரிடர்கள் பலவும்
தாண்டித்தான் தழைக்குது மனித இனம்
தடுமாற்றம் தவிர்ப்பீர் மானிடரே;
வீண் பயங்கள் வேண்டவே வெண்டாம்
விண்ணுள்ளவரை மனிதம் உய்யும்!

(?) அபாயங்கள் நிறைந்தவனென்று நினைத்திருக்க
ஆறுதலாய்ப் பேசுகிறாயே சந்தோஷம்;
அபயம் என்றலரும் மானிடர் உய்யவே
உபாயங்கள் இருந்தால் சொல்லி
உலகத்தாரை இரட்சிக்கக் கூடாதா?

(ப) சுத்தப் படுத்தாத ஊசிகள் இரத்தம்
உறைந்த கத்திகள் பிளேடுகள்
மெத்தென்ற விலைமகளிர் ஓரினப் பாலுறவு
மொத்தமும் விலக்கி டுங்கள்!
பித்தென்ற காமத் தீயை முழுதாய்
வெல்ல முடியா விட்டாலோ
வாத்யாயனார் கலை பழக கண்டிப்பாய்
கவசம் அணிந்து கொள்ளுங்கள்!

ஆட்டோ கிலாவ்வில் வைத்து சிரத்தையாய்
அணுதினமும் பாதுகாத்த சிரிஞ்சுகள்;
மற்றவர் இரத்தத்தை மனிதரில் செலுத்துமுன்
மாசுகளையும் சோதணைகள் யாவும்
தோற்று வாயிலேயே எனைத் துப்பறிந்து
தொற்றுவதைத் தவிர்க்கும் வழிகள்
மாற்று இப்போதைக்கு ஏதுமில்லை அதனால்
மிகத்தேவை எச்சரிக்கை என்தோழா!

(?) எப்படியோ உன் மரண வலைக்குள்
தப்பிப்போய் விழுந்து தத்தளிக்கும்
அப்பாவிகளை அணுகும் முறைகளை
செப்புக செவிக்குள் உரக்க……..

(ப) நிச்சயிக்கப்பட்ட மரணத்தை நிறுத்த முடியாது
நேர்மையாய் எதிர் கொள்ளட்டும்
அச்சமயம் வரும்வரை மிச்ச நாட்களை
அல்லலின்றி கழிக்க உதவுங்கள்!
உச்சபட்ச தோழமையும் பரிவும் அன்பும்
உங்களின் பங்களிப்பாக இருக்கட்டும்
மெச்சும்படி மேன்மையாய் வாழ விடுங்கள்
வாழ்வுரிமை யாவர்க்கும் பொது!

ஏற்கெனவே என்னுடைய முட் படுக்கையில்
ஏகப்பட்ட இரணங்கள் அவர்களுக்கு;
வெறுத்தொதுக்கி விலக்கி வைத்து அவர்களின்
வேதணைகளை அதிகப் படுத்தாதீர்!
கர்மபலனெனும் கண்ணீர் குண்டுகளை வீசி
காயப் படுத்தாமல் இருங்கள்;
வார்த்தை களெனும் ஈட்டிகளால் குத்தி
வாழ்தலை நரகமாக்க வேண்டாம்!

வியர்வையிலோ எச்சிலிலோ பரவுவதில்லை நான்
வீணான எண்ணங்களை விடுங்கள்!
பயமின்றி பழகலாம்; பணிஇடங்களிலும் அவர்களை
பாரமென ஒருநாளும் நினைக்காதீர்!
அயலாரை ஒருபோதும் தொற்றுவதில்லை நான்
அணைத்தலிலும் இரத்தமற்ற முத்தத்திலும்…..
நயமின்றி தனித்தட்டு டம்ளரெனப் பிரித்து
நாயைப்போ லவர்களை நடத்தாதீர்!

தெரிந்து கொள்ளுங்கள் மானிடரே இறப்பைத்
தடுக்கத்தான் முடியாது; ஆயினும்
பிரியங்களுடன் அவர்களைப் பேணிப் பராமரித்தால்
நீட்டிக்கலாம் ஆயுளை நிச்சயமாய்……
நிரந்தரமாய் எனை நீக்கும் நிவாரணிகள்
நிறுவப்படும் ஒருநாள் அதுவரை
பொறுமையுடன் காத்திருங்கள் சக உயிர்களை
பொக்கிஷமாய்க் கருதி மகிழ்ந்திடுங்கள்!

(?) இறுதியாய் ஒரு கேள்வி – இனியவனே
உறுதியான உன் பதிலுக்கு!
அரிதும் அரிதுமான மானுட சமூகத்திற்கு
விரோதியா நீ நண்பனா?

(ப) பிற்போக்கானவனென நீங்கள் முத்திரை குத்தினாலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
கற்பொழுக்கத்தை மறுபடி போதிக்க வந்தேன்
மீறலுக்கு விலை அதிகம்!
வற்புறுத்திக் கேட்டதனால் சொன்னேன் வருத்தமில்லை
வாழ்த்தினாலும் நீங்கள் தூற்றினாலும்…..
தீர்மானித்துக் கொள்ளுங்கள் நீங்களே நான்
தீயவனா நல்லவனா என்று
தீர்ப்பு மரணம் அதனால் மானிடரே
திருந்தி விடுங்கள் உடனேயே….!


:

தா(கா)கங்களின் கதை
அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்
அள்ளிச் செல்வோம் அதுவரை
வலிபொறு என் செல்லமே!

நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;

பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாக இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!

சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ….

முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி…..

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!

தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்…

பெரியதோர் மண்பானை அது;
இரவுப் பனியின் ஈரம் உலராமல்
தூரில் நீராய் நின்றிருந்தது
சூரியக் கதிர்களிலிருந்து
எப்புடியோ தப்பி………

விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் – தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து….

இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் – தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு……

கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!

என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ –
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!

என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் – சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்…..!

எழுதியவர் : மேரித் தங்கம்
(thangam.mary@gmail.com)

Series Navigation

மேரித் தங்கம்

மேரித் தங்கம்

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

மழை காதலன்


ஏமாற்ற‌ங்க‌ள்
த‌னிமையும் இறுக்க‌மும்
சொல்ல‌ முடியா வார்த்தைக‌ளுமாய்
இந்த‌ ம‌திய‌ம் போகிறது

என‌க்கு தெரியும்
உன‌க்கும் தெரியும் என..
இருந்தும் கேட்ப‌தில்லை
கேட்காம‌ல் இருக்கும் வ‌லிமையும்
என‌க்கு வாய்ப்ப‌தில்லை..

உன் இறுதி ஆயுத‌மாய்
ச‌ந்தேக‌ம் உன‌க்கு என்பாய்
செய‌ல‌ற்ற‌வ‌னாய் நிற்பேன்
வேறு வ‌ழி இன்றி…

எதிர்பார்புக‌ள் இருக்கும் வ‌ரை
ஏமாற்ற‌ங்க‌ள் உறுதி என்ப‌தை
நீயும் உண‌ர்த்தி இருக்கிறாய் வேறென்ன‌?

எல்லாம் முடிந்து
இர‌வில் மார்பில் த‌லைசாய்த்து
“சாரிடா”என்பாய் குழ‌ந்தையாய்
வெளிப்ப‌டும் இரு சொட்டு க‌ண்ணீரோடு
காணாம‌ல் போகும் என் கோப‌மும்…



கறுப்பு மையும், தனிமையும்
நான் கவிதை எழுதும் போது
தீர்ந்து போகும் பேனாவின்
மையை போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்…

பென்சிலின் கறுமையான‌
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்….


எனக்கும் ஆசைகள் உண்டு
மெளனமாய் வெளிப்படுகிறது
என் விசும்பல் சத்தம்…

உனக்கும் சுதந்திரம் உண்டு
ஆம் பெண்ணே…
உனக்கும் சுதந்திரம் உண்டு…

உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்
உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்
உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்
என் சிறு வயது நட்புகள்
என் காகித கிறுக்கல்கள்
என எல்லாமே…

ஆனாலும் என் வெற்றிகளுக்கு
ஆசைப்படும் நீ
என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே…

என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ
என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்…

இருவருமாய் இது வரை திரைப்படம்
சென்றதில்லை உனக்கு பிடிக்காது
பூங்கா ரசித்ததில்லை
உனக்கு பிடிக்காது
உணவகங்கள் செல்வதில்லை
உனக்கு கூச்சம்

அனைவருக்கும் உடைகள்
தேர்வில் மட்டுமே
பயணங்கள் உன் விருப்பத்தில்
பண்டிகைகள் உன் விருப்பத்தில்
உறவுகள் உன் விருப்பத்தில்….

எனக்கும் ஆசைகள் உண்டு
எப்பொழுது புரியும் உனக்கு….

-மழை காதலன்


sampathpovi@gmail.com

Series Navigation

மழை காதலன்

மழை காதலன்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

உஷா தீபன்


மனம்
ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய்
என்னுள் நானாகி பிறரில் நானாகும்
எதையும் காண எப்படியும் காண

எங்கோ ஜனித்ததொன்றை
எண்ணித்தொலைய கருமம்
இங்கே நிகழ்வதைத்தான்
என்றோ மறந்துபோகும்
நுட்பத்தில் நுட்பமாய்
நுணுகிப் புகுந்து பரவி


இயற்கையும் செயற்கையுமாய்
எதிலும் நிறைந்து வளரும்
கங்கையொடு கழிவு
நன்மையொடு தீமை
சோலையும் பாலையும்
சோகமும் மகிழ்வும்
எண்ணச் சுடரில்
எகிறிவிட்ட பொறியாய்
எல்லாமும் நிகழும்
அதுவே தோற்றுவாய்!



சொல்லிவிடு

படித்தது போதும்: எழுது மற்றவர்களுக்கு ஏதாவது விஷயஞ் சொல்


உன் கருத்தை உலகுக்குத் தெரிவி ஓங்கிக் குரலெழுப்பு


உட்கார்ந்து போகாதே
ஏட்டுச்சுரக்காய்
கறியாய் உதவட்டும்
அவநம்பிக்கை போக்கி ஆத்மசுகம் தேடு
அஞ்சுக்கு ரெண்டு
பழுதிருக்காது
முடிவுஅனைத்தும்
மூளைக்கே சொந்தம்
பிறருக்கும் அதுபோலே
ஆனாலும்
நீ சொல்வதைச்
சொல்லிவிடு
இறக்கிவிட்டோம் என்ற
எண்ணமேனும் மிஞ்சும்


அம்மா
கங்கையானாலும்
காவிரியானாலும்
எங்கோவோர் மூலையில்
ஏதோவோர் மலையிடுக்கில்
ஒரு சின்னதான ஜனனத்தில்
உயிர்த்து எழுந்து
தவழ்ந்து இறங்கி
பல்கிப்பெருகும்
புகுந்த இடத்தில்
முற்றிலும்
புதிதாய்
பூமியில் பரவும்
போகுமிடமெல்லாம்
தாகம் தணித்து
காணும் நிலமெல்லாம்
கசிந்து செழிப்பாக்கி
புவியை வளமாக்கும்
ஒரு ஜீவநதி



தலைமை

தேசம் முழுதும்
குப்பை கூளம்
சுத்தம் பண்ண நினைச்சுத்தான்
துடைப்பத்தைக் கொண்டு வச்சோம்


துடைப்பமே குப்பையாச்சு


தூசிகளும் அதிகமாச்சு


தேசம் முழுக்க குப்பை கூளம்
தேவை ஒரு புதுத்துடைப்பம்


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

அனிதா


1. வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும்

கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும்.
பழகிவிட்ட இருளில்
சுவர் மூலைகளின் ஒட்டடை எடுக்கிறேன்
கால்களின் கீழே அலை இழுக்கும் மணலாய்
உயிர் குறுகுறுக்கும்
தேனீர் அருந்தி நினைவு கலைக்கிறேன்
வெளிச்சமும் நிறங்களும் மூளைக்குள்
வேர் விட்டுப் படரும்
சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்
காத்திருக்கும் காகங்கள் மோகத்தோடே அலறும்
வியர்வை கசகசப்பும் பழகமறுக்கும் தனிமையும்
மரபு மீறியும் சாவி தேடும்.
வெளியேற மறுக்க வலிமை சேர்க்கிறேன்
உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்
இன்றொரு பொழுது இனிதே கழிந்தது
இனி நாளையும்.

2. குளத்துப் பறவை

தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள
க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர்க் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்துப் ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.


anithu21@gmail.com

Series Navigation

அனிதா

அனிதா

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

கார்த்திக் பிரபு


கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..

கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசைத் தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு……

karthick prabhu
gkpstar@gmail.com

Series Navigation

கார்த்திக் பிரபு

கார்த்திக் பிரபு

கவிதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

யெஸ்.பாலபாரதி


ங்கொய்யால…

கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.


சிரங்குகள்
உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்

ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை

களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு

முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!


இருப்பு
மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.


யெஸ்.பாலபாரதி

kuilbala@gmail.com

Series Navigation

யெஸ்.பாலபாரதி

யெஸ்.பாலபாரதி

கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

உஷாதீபன்



பிணக்கு

உனக்கும் எனக்குமான
உறவுச்சிக்கல்களுக்கிடையில்
தார்மீக முனைப்புகளாய்
பின்னிக் கிடக்கின்றன
ஏராளமான வார்த்தைகள்
வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு
சாட்சிகளாய் நிற்கின்றன
அதன் வீர்யம்
நீயும் நானும்
கூடிக்களித்தபோது
கும்மாளமிட்ட மெப்பனைகள்
காணாமல்போயின மாயமாய்
இந்தச்சொல்லடுக்குகளின் ஆழத்தில் இனி
நினைத்தாலும் அவிழ்க்க முடியாத
சிடுக்குகளை
ஒரு மூன்றாமவன் வந்து
முயன்று நிற்கலாமா?
எல்லாம் பொய்யென்று
இழித்துணர்ந்த வேளையில்
இந்த இடைப்பட்டவன் எதற்கு இங்கே?



விட்டில்
அகண்ட ககன வெளித் தனிமையில்

உன் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது மனம்

காற்றில் அலைபாயும் இருண்மை விலகி

ஒளி பீறிடத் துடித்து நிற்கிறது எண்ணங்கள்

ஏக்கப் பெருமூச்சுக்கள் அனலாய்ப் பரவி

உனக்கான நேரத்தை நீட்டிக்கின்றன

விழித்திரையிலிருந்து பரவும் கதிர்கள்

விட்டில் பூச்சிகளாய் மினுமினுத்துப்

பறந்தழிகின்றன

கனல் துண்டமாய்ச் சிதறும்

கண் ஓர நீர்த்துளி

நம்மின்

கதையைச்சொல்லி மடிகிறது



பயணம்

தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
நம்பிக்கை தளராத
நயமான ஓசை
நீள் தெருவில்
நெடுக மோதி எதிரொலித்து
அதிர்ந்து அலைந்து
மாயமாய் மறைந்து
அழிந்து போகிறது
எல்லோர்க்கும் வாழ்க்கை
ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்

செருப்பூ பழைய செருப்பூ
காலணி ஓசை கானலாய்க் கரைய
குரல் தழுவிய என் பூஞ்சை மனசு
கலங்கிப் போகிறது
இன்னும் அவன்
போகவேண்டிய தொலைவு
எவ்வளவோ?
எப்பொழுது முடியுமோ அவனின்
இன்றையபொழுது


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

தாஜ்


தரிசனம்.

உற்றுப் பார்க்கையில்
தட்டையாய்
மொழுக்காய்
பள்ளம் மேடாய்
நீராய் உலகம்
கோலமே நிஜம்
தரிசித்த பாடில்லை.



நிஜம்.

நிலலெல்லாம்
நிஜத்தை
ஊர்ஜிதம் செய்ய
பொய்களெல்லாம்
உண்மையை உணர்த்த
இந்த சூனியத்திற்கும் கீழே
நீயும் நானும்
முன் வைப்பதென்ன.


விடாது கருப்பு.

பக்கங்களாகப்
புரண்டு கொண்டிருக்கிறேன்
விரிந்த சமுத்திரம்
நித்தம் அலைக்கழிக்கிறது
தழுவ மேவித் தாவ
முழுகாத தினமில்லை
மனப்புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி
வாசிக்கவே கரையேகி
கவிழ்ந்ததுவே காட்சி.



பசி.

பசியாற்ற பறவை
இரைதேடும் உயரத்தில்
உயர உயர வட்டமிட்டு
விரைந்தே பறக்கும்
பார்வையை விஞ்ச
வியக்குமொரு நாழிகையில்
தேய்ந்து துகளாய் கலக்கும்.


சக ஜீவிகள்.

மிருக காட்சி சாலையில்
வினோத மிருகங்களையும்
விடாடு மகிழ்வாய் கண்டுகழித்து
திரும்ப சக மனிதர்களும்
உற்ற உறவுகளும்
வலம் வந்த நாழியில்
அங்கே ஒவ்வொன்றும்
கம்பிக் கூண்டுக்குள் இருக்க
பயமில்லாமல் போனது
நினைவுக்கு வந்தது.


தாஜ்
satajdeen@gmail.com
tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

க்ருஷாங்கினி


ஐயனே

ஒரு சில மழைத் துளி
தலை மிசை வீழின்
நிற்காத அடுக்குத் தும்மல் – பின்
உடன் ஓடும் மூக்கருவி.

கைக்குட்டை, மிருது காகிதம்,
முக்கி எடுத்தாற்போல்
முற்றும் நனைகிறது, தலைக்கனம்.

சிவனே, உனக்கோ!

சடையிடை இடையறா
பிரவாக நீர் ஊற்று,
முடி நனைத்து – பின்
தலை இறங்கலாம்.

ஸ்தலம் புகழ் பெற்றால்
சன்னதி, மற்றும் சுற்றுத் தெருக்களிலும்
நிறுத்தம், வழி செல்லும் வாகனங்கள்
நின்று பின், ஓடும் வழியெங்கும்
தூசு, ஒலிப்பான், மன மாசு.

இரவும் பகலும், எந்நேரமும்,
கூட்ட நெரிசலின் நாற்றம் போக்க
உயர்ந்த கோபுரத்தின் கீழ்
ஓலமிட்டு ஓடும் ஏ.சி.
அன்றாடம் அபிஷேகம்.

சிவனே, நீயோ!

அங்கத்தில்
அரவோனைச் சுமக்கிறாய்,
அரைஞாணும், முப்புரியும் அதுவே.

இடையிலோ எனில், புலித்தோலை
விரும்பிப் போர்த்தி, ஒரு காலை
உயர்த்தி எப்போதும்
சுழன்றாடுகின்றாய்!

உடம்பில் ஒரு சாணளவும்
வஸ்திரம் அற்ற நீ மட்டும்
அருவி மூக்கிலிருந்து
தப்பிப்பது எங்கனம்?

சற்றே ரகசியமாய் கூறு
எனக்கு மட்டுமாவது.



இழப்புகள்

இரவில் உரங்கும் வரை
அந்நியக் குத்தகை மாம்பழங்கள்
விழும் சப்தம் கொண்டு கணக்கிடுவேன்,
அத்தையின் கதைகளோடு.
எனக்குப் பின்னும்
வீட்டோடு இருக்கும் விதவை அத்தை
விடியும்வரை எண்ணி வைத்திருப்பாள்.

கருக்கலோடு பைகொண்டு
வீட்டை அடையும் பழங்கள்;
எண்ணிக்கையைவிடக் கூடுதலாகவே
அனைவரும் சுவைத்தாலும்
அப்பா என்னவோ வேதனைகொள்வார்.

குத்தகைப் பணத்தை அப்பாவே கட்டி
அந்த ஆண்டு சொந்தமாக்கினார் மரத்தை.
வேண்டியதற்கு மேலும் விழுந்தும் பறித்தும்
எப்போதும் மாம்பழ வாசம்- வீடெங்கும்.
அனைத்து நண்பர்களும் சுற்றத்தாரும்
கொண்டதுபோக அலுத்தது மரம்.

இந்த மாம்பழம் இன்று
என் வயதை வெறும் பத்தாக்கியது,
தியாசாபிகல் சொசயடியின்
எங்கும் மரம் சூழ் வீட்டு முற்றமும்
உறக்கமில்லா அத்தையின்
நினைவுகளோடும்.


தல விருட்சம்

மேலேற அகலப்படிகளும்
அடிமரம் சுற்ற சிமென்ட் தரையும்
சுற்றிச் சுற்றிப் புளகாங்கிதமும்
புண்ணியமும் பெற்ற பலரோடு நானும்.

பட்ட மரமல்ல என்றுரைக்கக்
கசியும் பசுமை – ஒரு மூலையில் மட்டும்.
பொசுக்கும் வெயில்
பட்டிழைக்குத்தான் ஏற்றது.

கைகளும் கால்களும் மற்றெல்லாமுமே
வெட்டி வெட்டி எறிந்ததுபோக
இடையே மருட்டும் ஒழுங்கற்ற
கட்டிகள் பிதுங்கி நிற்க;

ஆயிரம் ஆண்டுகள் முழுங்கியது என
எண் பின் போடப்படும் பூஜ்யங்கள்.
ஆனால்-
மரமோ வெறும்
ஜீவனுள்ள விறகாய் நிற்கிறது.


nagarajan63@gmail.com

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

கவிதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

தாஜ்


நேற்று இன்றல்ல.

கண்ணாமூச்சி ஆடியக் காலம்
தாவிமேவிய நட்புகள்
தூங்க விடாதக் காதல்
மூச்சாய் தெரிந்த அரசியல்
வாயை கட்டிய மதம்
கண்களை பொத்திய கலாச்சாரம்
மண்டைக்குள் குடைந்த கடவுள்
இன்னும் ஒரு துள்ளலாய்
விசேசப் பூச்சோடு
நாளொரு தத்துவங்கள்.

எல்லா தினங்களின் வீறும்
அமைதியில் தோய்ந்து
இருளில் மறைய
உதயத்தின் சிரிப்பில்
முந்தைய நாளில் காணா
புதிய துளிர்களின்
குதூகலத்தை
எங்கும் பார்க்கலாம்.



சித்து.

மானத்தை மூடும் உடுப்பு
வெள்ளை அழுக்காய்
அழுக்கு வெள்ளையாய் மாறும்
மூடின உடலுக்குள்ளே
என் செல்லப் பிசாசு
துரு பிண்டம்
கட்டி வெளுக்க துறை
பல உண்டென்கிறார்கள்
மயக்கமும் தயக்கமும் கவிழ
இப்பவும்
உடுப்பே பிரதானம்
எளிதாய் வெளுக்கலாம்
வெள்ளையாய் மின்னலாம்.


ஞான விலாசம்.

வாசஸ்தலமான
மயிலாடுதுறையை விட்டு
பேருந்தில்
கும்பகோணம் செல்ல
இறங்கியப் பிறகே தெரிந்தது
சிதம்பரம் மார்க்கமாக
சென்றடையும் ஸ்தலம்
எளிதென்று
திரும்பி சிதம்பரம் தொட்டு
ஸ்தலமாம் நெய்வேலி
புறப்பட்டு போனபோது
கும்பகோணம் – நெய்வேலி
அகண்ட மாற்றுப் பாதை
உண்டென உறைத்தது.

பேருந்து நிறுத்தத்தில்
அசுவாசமாகி
முகவரி அட்டையில்
ஞான விலாசம் –
பேரொளி சபா –
முத்தி முதல் சந்து –
திருநெல்வேலி. என்று காண
விதியேயென அடுத்த
பேருந்தில் பயணப்பட்டு
விடியலில்
பேரொளி தரிசனமாக
‘ஞான பிரவாக விளக்கம்’
ஒத்தி வைப்பு
தகவல் பலகை எதிர்பட்டது.

தீர விசாரித்தபோது
இமயம் அடியிலிருந்து
திரு. மஹா ஞான சுடர்
பழக்கமான
திருநெல்வேலியின்
வசீகர நினைவுகளோடு
கடல் தாண்டினாரென்று.
***
‘ஞான விலாசம்’ பின் குறிப்பு:

1. கும்பகோணத்திற்கும், சிதம்பரத்திற்கும்
மையத்தில் ‘மயிலாடுதுறை’உள்ளது.

2. தமிழக ஊர்களது பெயர்கள்
அர்த்தம் பொருந்தியவை.

3. ஸ்ரீலங்காவில்
திருநெல்வேலி என்கிற பெயரில்
ஓர் ஊர் உள்ளது.
**********
– தாஜ்

satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

தாஜ்



தேடிய அழகு

கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென்றானது
மனப்புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில்
தொலைந்தது
நிழலும்.


தந்தையின் காலம்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே
படிக்கிறார்கள்.

வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.

மண்ணில் யென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.

குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைத்
தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.



நிர்வாண முகம்

கண்ணாடிக்கு முன்னால்
கண்கள் என்
முகம் தேடும் நேரம்
நிஜமான நண்பன்
உத்தம கணவன்
அன்பு பிரவாக தந்தை
அரசியல் பேச்சில்
சிவப்பவன்
பெண்ணுரிமை தாங்க
பேச்சிலும் தீரன்
கவிதையில் செய்திகள்
சொல்லும் ஆவலன்
இன்னும் அறிவு ஜீவியென
நேரத்திற்கு நேரம்
கட்டின காட்சிகள்
கிளர்ச்சி யூட்ட
புலி வேஷம்
பூனை வேஷம்
நரி வேஷம் நாய் வேசம்
இட்டுக் கலைத்ததும்
கூடவே விரிந்தது.


satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

சோ.சுப்புராஜ்



இலவசங்கள்
சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்…..
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்…….!


தாம்பத்யம்
உனக்கும் எனக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
நம் திருமண நாளிலிருந்து……

இருவரும்
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுக்கத் தொடங்கினோம் மூர்க்கமாக!

அவ்வப்போது தன்னிலை மறந்து
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்ந்தாலும் சீக்கிரமே
இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்…..

கயிற்றின் மையம்
இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின
இருந்தும்
இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இன்னுமென
இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
விளையாட்டு விதிகளையும் மீறி
வெகுதூரம் வந்து விட்டோம்;
விலகிப் போவது சாத்தியமில்லை
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை
இலக்குகள் எதுவுமின்றி வெறும்
பழக்கத்தால் தொடர்கிறோம்;
அவ்வப்போது பாவணைகளிலும்…….!


எங்கெங்கு சென்றாலும்
பிரமுகர்களைப் பார்க்கப் போகிறார்கள்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்….

கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்….

சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்….

மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்…..

இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்….

உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்…..

நண்பர்களை நாடிப் போகிறார்கள்
பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்
பொசுங்கிய கனவுகளுடனும்…..

தெப்பக் குளங்களுக்குப் போகிறார்கள்
குளிக்கும் ஆவலுடனும்; சிலர்
மீன்களுக்கான பொரிகளுடனும்…..

தெரு நாய்களைத் தாண்டிப் போகிறார்கள்
பயமும் பதுங்களுமாய்
திருடர்களும் உயிர்களை நேசிக்கும் சிலரும்
வீசிப் போகிறார்கள்
கொஞ்சம் பிஸ்கட்டுகளையும்….

இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே….!


எதிரெதிர் இலக்குகள்
அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில்
நமது இலக்குகள்!

ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய்
நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது
அவரவர் இலக்கை…..?

சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்…..!


வாக்குமூலம்
என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!

என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!

இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக…..!

தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி……!

கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது…..!

காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது….!

உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது…..!

கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் – அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது….!

கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று……!

சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி…..!

விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று…..!.

இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்…..
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ….!

குறுங்கவிதைகள்

நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை;
நானும் மற்றவர்களை…..!


யாவரும்
கடந்து போகிறார்கள்
புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்…..!


விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் –
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி…..!


விட்டில் பூச்சிகளுக்கு
விஷமாகும் வெள்¢ச்சம்;
உவமையாகும்
ஒளிமயமான வழ்வுக்கும்….!


சோ.சுப்புராஜ்

engrsubburaj@yahoo.co.in

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

சோ.சுப்புராஜ்



எதுவுமில்லை புதிதாய்
எதுவுமில்லை புதிதாய்
எல்லாம் என்றைக்கும் போலத்தான்
தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி!

எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும்
எல்லாக் காரியங்களும்
விடுமுறை தினங்களுக்குமாய்
தள்ளிப் போடப்பட்டு
தள்ளிப் போடப்பட்டு
நாட்கள் நகரும் நத்தைகளாய்…….

எப்போதும் கண்களில் கொஞ்சம்
தூக்கம் மிச்சமிருக்கிறது;
முழுசாய் தூங்கி விழித்த
இரவென்று எதுவுமே இல்லை;
கனவுகளற்ற தூக்கம்
சாத்தியப் படுவதில்லை ஒருநாளும்…..!

கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!

இரைச்சலாகிப் போனது
இயல்பு வாழ்க்கை;
இயந்திரங்களின் உறுமலில்
கறுப்பாய் விடிகின்றன நாட்கள்!

அழுக்குத் தேய்த்துக் குளிக்க அவகாசமில்லை;
மென்று தின்ன நேரமில்லாமல்
விழுங்கிப் போகிறோம் உணவுகளை;
வயிறே பிரதானமான வாழ்விலும்
பிந்தித்தான் போகின்றன
சாப்பாட்டு வேளைகள்!

ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்….
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி…..!


கூண்டுக்கிளி
கூண்டிலடைத்த கிளி ஒன்றை
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்…..

வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது….

எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே1
ஆயினும்…….
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!

சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை…..

சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!

பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;

பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!

ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று…..
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;

பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ….
மனித அவலம் கிளிக்குமா……?


விக்கல்; சில நினைவுகள்
தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
‘உன்னை யாரோ நினைக்குறாங்கடா’!
இப்போது…..
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!

பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே….
பாடியதோடு கலைந்து போயிற்று !

கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!

அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்….

சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!

இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?


பால்ய சினேகிதி
முச்சந்தியில் வாகன நெரிசலில்
மூச்சிறைக்க நின்றிருந்தபோது
பின்கொசுவம் வைத்த சேலைகட்டி
பிள்ளையை இடுக்கியபடி கடந்துபோன
பேதைப் பெண்ணிடம்
பால்ய சினேகிதியின் சாயல்!

ஒருவேளை….ஒருவேளை….
நீயே தானோ……..?
அலைமோதும் நினைவுக்குள்ளும்
அனலடிக்குதடீ…..!

திருக்கார்த்திகை தினமொன்றில்
உரிமையாய் என் தலையில் நீ
தேய்த்துப்போன
ஒட்டுப்புல்லின் அடர்த்தியாய்
உதிர்கின்றன உன் நினைவுகள்!

அம்மணமாய் நாமலைந்த நாட்களில்
தொடங்குகிறது நமக்கான அந்தரங்கம்!
உன் “அரைமுடி” கேட்டு நானழுததாக
சின்ன வயதில் சொல்லிச் சொல்லி
சிரித்திருக்கிறாள் அம்மா!

செப்பு வைத்து நீ சோறாக்க
வயலுக்கு போவதாய் சொல்லி – நான்
வைக்கோற் போரில் விளையாடிவர
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக்குவித்து பரிமாறி
அவுக் அவுக் என
பாவணைகளில் தின்று முடித்ததும் – அம்மா
பசிக்கிறதென்றபடி ஓடியிருக்கிறோம்….!

தானியத்தை மென்று
நுனி நாக்கில் ஏந்தி நாம் வளர்த்த
புறாக் குஞ்சுக்கு
புகட்டி இரசித்திருக்கிறோம்….!
காடுகளில் தேடி அலைந்து
பொன்வண்டுகளைப் பிடித்து
தீப்பெட்டிகளில் வளர்த்திருக்கிறோம்!

வெயிலில் அலைந்து கதை பேசியபடி
சாணி பொறுக்கியிருக்கிறோம்;
மரநிழலில் ஓய்வெடுத்தபடி
வேப்ப முத்துக்கள் சேகரித்திருக்கிறோம்!

களிம்ண்ணில் கோயில் கட்டி
கடவுள் சிலை வடித்து
வீடுவீடாய் கொண்டு காட்டி
எண்ணெய் வாங்கி வந்து
விளக்கேற்றி விளையாடியிருக்கிறோம்….!

உணர்ச்சிகள் அரும்பாத வயதில்
புணர்ச்சி என்று புரியாமலே
உறுப்புக்களை ஒட்டி வைத்து
புருஷன் பொஞ்சாதி என்று
உறவாடி மகிழ்ந்திருக்கிறோம்…..!

பக்தி கொஞ்சமும் இல்லாமல் – உன்
பக்கத்தில் நடந்து போகிற சந்தோஷத்திற்காகவே
மலையேறிப் போய்
சாமி கும்பிட்டுத் திரும்பிய நாட்கள்!

சைக்கிள் கற்றுக் கொள்ளும் சாக்கில்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட
பவள முத்தங்கள்!
என் கைகளில் தவழ்ந்து
நீ பழகிய நீச்சல்!
உன் கைகளுக்குள் அடங்கி
நான் சிலிர்த்த மோகம்!

புத்தம் புதிய பூவாக நீ வந்திருந்து – என்
மனங் கொள்ளை கொண்ட
மயானக் கொள்ளை!
நீ வராமல் போனதால்
அழகிழந்த தெப்பத் திருவிழா!

இன்னும் இன்னுமென….
நெஞ்சின் ஆழத்தில் இனிக்கும்
நினைக்க நினைக்க சிலிர்க்கும்
நினைவுகள் ஏராளம்!

அறியாத வயதில் அருகிருந்தோம்;
வளர வளரத்தான்
விலகிப்போனோம் வெகுவாக….
கல்வி பிரித்தது; காலம் நம்மை
வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது
திசைக் கொருவராய்……..

திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளைகளாய்
தேடிக் கண்டடையவே முடியாதபடி
தொலைந்து போனோம்
நீண்ட நெடுங்காலமாய்……


நவீன தாலிகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!

கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!

மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஞாபக குறுந்தகடு!
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்….!

புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்…..!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!



பெய்யெனப் பெய்யும்

கோயிலுக்கெல்லாம் போவதில்லை அவள்;
கொழுநன் தொழுவதெல்லாம்
கழுவேற்ற வேண்டிய
சடங்குகளில் ஒன்றென்பாள்;
பெண்ணுக்கு அழகென்று வள்ளூவன்
பரிந்துரைத்த பழக்கங்களையெல்லாம்
தீயிலிட வேண்டுமென்பாள் தீவிரமாய்!

ஆயினும்……
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரம்மாண்டமே
நாட்டின் வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்
மழை பெய்யுமின்று மறக்காமல்
குடைகொண்டு போங்களென்றாள்;அவன்
மறுத்தபோதும் திணித் தனுப்பினாள்!

கட்க்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்ற வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது
அடைமழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான்
எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் பத்தினி தான்……..!

முறைத்தபடி சொன்னாள் அவள்;
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்…..!
பத்தினி என்கிற
பாசாங்குகள் தேவையில்லை;



முதுமை; சில முறையீடுகள்

முடியில் சாயம் பூசி கறுப்பாக்கலாம்;
முகச் சுருக்கங்களை
கிரீம்களில் அழுத்தி மறைக்கலாம்;
விரட்டலாம் முதுமையின் வீச்சங்களை
வாசணை திரவியங்கள் தெளித்து….

இஸ்திரி போட்ட உடைகளை இன்பண்ணி
இளமையாய் தோற்றமளிக்கலாம்;
வாலிபத்தைப் பெண்களிடம் நிரூபிக்க
லேகியங்கள் கிடைக்கின்றன நிறையவே!

ஆயினும்
ஞாபக அடுக்குகளில்
குவிந்து கொண்டிருக்கும் குப்பைகளும்
துடைக்கத் துடைக்க பெருகும்
தூசுகளும்
கடந்த காலங்களின் வயதைக்
காட்டிக் கொடுத்து விடுகின்றனவே
எப்படி மறைத்தாலும்…….!


குறுங்கவிதைகள்
உலகம் சுருங்குகிறது கிராமமாக…..
விரிந்து கொண்டிருக்கின்றன
மனிதர்களுக்குள்ளான இடைவெளிகள்!
**** **** ****
கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும் போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே…..!
**** **** ****
காலம் கடந்து கொண்டிருக்கிறது – நமது
கர்வங்களை நகைத்தபடி
தத்துவங்களைத் தகர்த்தபடி…..!
**** **** ****
அங்கீகாரங்களுக்கு அலைகிற
அவலம் தொடர்கிறது
ஆயுள் முழுதும்…..!
**** **** ****
கவனம்; மிகக் கவனம்
கையாளுங்கள் கண்ணாடி மாதிரி
கொஞ்சம் பிசகினாலும் நொறுங்கி விடும்
மனித மனங்கள்…..!
**** **** ****
வருஷந் தவறாமல் வாங்கிக் குவித்தும்
அனுப்ப யாருமில்லாததால்
என்னிடமே தேங்கிப் போயின
காதல் வாழ்த்து அட்டைகள்!
**** **** ****
ஒருவருடனும்
ஒத்துப்போக முடிவதில்லை;
ஒதுங்கி வாழ முயன்றாலோ
கொல்கிறது தனிமை!
**** **** ****
உயிரோடிருக்கும்போது ஒருவாய்
உணவும் தந்து உபசரிக்காதவர்கள்
பிணத்திற்குப் படைக்கிறார்கள் விதவிதமாய்
பிரியத்தினால் அல்ல;
பேய் பற்றிய பயத்தினால்….
**** **** ****
– சோ.சுப்புராஜ்

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சரவணபவன்


ஜுவனுள்ள சாவு

எட்டுக்கு எட்டு அறைக்குள்
எந்திரமாய் சுழன்று
பொங்கி புழ(ழு)ங்கி
வளர்வதாய் தளர்ந்து
கனவுகளாலே
வாழ்க்கை நடத்தி
அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும்
துளை குடம் உடைய
நிர்வாணம் தேடும் நிரந்தரமாய்
அடைபட்ட கூண்டிலிருந்து
யதார்த்தத்தை நோக்கி
எட்டி வைத்த முதலடியாய்
இறந்து கிடக்கின்றேன்…



சாமக்கூத்து

சரவணபவன்

சாப கழிவுகளின்
சரணாகதி பிம்பமென
உழைத்து களைத்து
ஊழி ஆறாய் திரும்புகையில்
மோக திணவெடுத்து
முள்ளாக கிழிக்கின்ற
சோக சுமையிவனை
உதறி எழ திராணியின்றி
புதைத்து கொள்(ல்)கிறேன்
உள்ளுக்குள்ளே ஊறும்
வன்மம் போல…



கொல தெய்வத்திற்கு.?

அது பாவம் பரமசாது யாரோடும்
வம்பு சண்டைக்கு போகாது ரத்தமோ
வன்முறையோ
கேள்விபடாத வார்த்தைகள்
எப்பொழுதாவது முட்டிக்கொள்ளும்
யார் எங்கே அழைத்தாலும்
முரண்டு பண்ணாமல் போய்வரும்
இன்னைக்கும்,
எல்லோரும் கிளம்பியதும்
ஆசையாய் அதுவும்
கூடவே வருகிறது
தான் போவது கோவிலுக்கென்றோ
சாமி இருக்கிறதென்றோ
எதையும் அறியாத
பலி கடாவாய்.?


superhitsaravanabavan@yahoo.co.in

Series Navigation

சரவணபவன்

சரவணபவன்

கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

ம.நவீன், மலேசியா


மிக பயங்கரமானது
ஏதாவது இடுக்கில்
கைவிடுகையில் தட்டுப்படும்
பிரிந்த நண்பர்களின்
வாழ்த்து அட்டைகளும்
அதன் வாசகங்களும்.

####################
எனக்குத் தெரியும்
மிகத்திறமையான எனது நீச்சல்
மரணத்தை நோக்கிதான் என்று.

###################

நேற்று
என் அறை சாவி தொலைந்துவிட்டது
அதை தேடி சென்ற
பூட்டையும் காணவில்லை
வியப்பாக உள்ளது
அவைகளுக்கு அறையில் உள்ள
எனது உடமைகளைப் பற்றி
கவலையில்லாதது.

######################

மிக நுட்பமானது
மரணச் செய்தியைச் சொல்ல
கதவு தட்டும் கைகள்
கொண்டிருக்கும் மொழி.

######################

காலியாய் இருக்கும்
வீட்டின் மூலையில்
பொருட்களை வைத்து நிரப்புதல்
அத்தனை சுலபமானதல்ல
காலியான இடம் தன்னகத்தே
எல்லா பொருட்களையும் கொண்டுள்ளது
ஆது சூனியத்தைத் தவிர

Series Navigation

ம.நவீன், மலேசியா

ம.நவீன், மலேசியா

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

செந்தில்குமாரன்


உள்ளூரத்தேடிய உணர்வுகள்

இப்போதெல்லாம்

உள்ளிருக்கும் உயிர்வரை

உற்று –

இயல்பு சிறிதும் பிறழாமலே

உற்று உற்று

நோக்கிடினும்

உண்மைகள்

புரிவதில்லை

என் மனவெளியின்

ஒற்றையடிப்பாதையில்

ஓராயிரம்

ஆண்டுகளாய் பயணித்தும் – மன

வெளிச்சம் காண இயலவில்லை

அருந்துகிற நீர்

நிச்சலனத்தினூடேயும

நித்தமும்

நித்திரைத் தருணங்களிலூடேயினும்

என்னுடம்பில் – ஒட்டுவதில்லை

என் சுவாசக்காற்று

என்னுள் – சுதந்திரமாக

சுற்றுத்திரிந்திடினும்

உயிரை உண்மையோடு

உரசுவதில்லை

கண்ணிமை கூட

அதன் உள்ளூரத் –

தூங்காதென் கண்களை

தொட்டுத்தழுவுவதில்லை

ஆன்மாவின் ஆதிக்கமற்ற

அந்தரங்கங்களை

என் சிந்தையெங்கிலும்

சேதாரத்தோடு சிந்திய –

மிச்சங்களாகக்கூட

சேமிக்க முடியவில்லை

எனக்குள்ளே – எங்கெங்கு

நோக்கினும்

எட்டுத்திசை எழுகடலென்று

உள்ளூரத்தொலைந்து

உன்மத்தம் பிறழ்ந்து

திரிந்திடினும்

நான் யாரென்ற

நமத்துப்போன நிந்தனைகள்

எனக்கே புரிவதில்லை


மரணிக்கத்தெரிந்தவன்

நீர் அருந்தும

நீர் இருந்தும் – நீந்தமுடியா

மீன் அவனே

.

தேன் எனவிருந்தும்

தேனிருந்தும்

தேற்றவியலா

வண்ணத்துபூச்சியானவன் அவனே

.

சிறகு இருந்தும்

சிறகென உருவமிருந்தும்

பறக்கவியலா சிறு

பறவை அவனே

.

வெளிதனில் தவழ்ந்தும்

ஒளியினையுண்டும்

காணவியலாக் காட்சி்

அவன்

.

காற்றில் பிறந்தும்

காற்றிருந்தும்

சுவாசம் தொலைத்த

அபலை அவனே

.

நினைவாய் இருந்தும்

நினவினைச்சுகித்தும்

நிந்திக்கத்தெரியாதவன்

அவன்

.

உணர விருந்தும்

உணர்விருந்தும்

உண்மை தொலைத்த

பேதையவனே

.

இறையே

நீ அவனுக்கு

ஒளி யளித்தாய்

அவனோ

அதை இருள் –

வெளியினில் தொலைத்தான்

அவனும்

இருளெனத் தொலைந்தான்

.

நீ

அவனுக்குத்தாய் –

உயிரெனச் சுகித்தாய்

அவனோ

மரணத்தை

துணைக்கழைத்திருந்தான்

அதனையே

மணந்திருந்தான்

அதனுள்ளே

என்றென்றும் உறைந்தான்


தீயிலிட்ட மனது

யாராவது என் மனதிற்கு

தீ வைத்து விடுங்களேன் !

தீ வைத்து விடுங்களேன் !!

என் மனது

பல்லாண்டு பல்லாண்டு

பல கோடி நூற்றாண்டு – என்னைக்

கொன்று கொண்டே இருக்கிறது ! – பசியாய்

தின்று கொண்டே இருக்கிறது !! –

என்னில் உருவகித்து –
என்னையே
முடமாக்கியது

எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது !
.

அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது!

தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது!

காறறு் வீசியவன் நான் – என்
சுவாசத்தையே சுருக்கியது அது!

அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது!

பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!

விழி தந்தவன் நான் – என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது!

.

எனவே

என்

அடையாளங்களின் மிச்சங்களை

எந்தன் வாழ்வின் எச்சங்களை

அதன் உச்சங்களை – எவ்வித

அச்சங்களின்றி

நிரட

யாராவது என் மனதிற்கு

தீ வைத்து விடுங்களேன்!


செந்தில்குமாரன்
ஹைடல்பர்க் – ஜெர்மனி

Series Navigation

செந்தில்குமாரன்

செந்தில்குமாரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

கோ.கண்ணன்


(அறிமுகம்:- கோ.கண்ணன். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில்

தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். முனைவர் பட்டம் பெற்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வு ‘தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி’ காவ்யா பதிப்பகத்தால் நூல் வடிவம் பெற்றுள்ளது. சமகாலத் தமிழ்க் கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். துணைக்கு ஆள் கிடைக்கும் போதெல்லாம் நவீன தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தன்னளவில் ஒரு நுட்பமான கவிஞரும் கூட. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ஓசைகளின் நிறமாலை’ விரைவில் வெளிவர உள்ளது. இந்தத் தருணத்தில், கண்ணன் (அவரைப் போன்ற பிறர்) பார்வையிழந்தவர் என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமா? அனாவசியமா? இதுகுறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இரண்டு கருத்துக்களுமே பொருட்படுத்தத் தக்கவையே. என்றாலும், பார்வையற்றவர்களுக்கு எழுத்தறிவு கிடைப்பதும், அப்படியே கிடைத்தாலும் பாடபுத்தகங்கள் ‘பிரெய்ல்’ எழுத்தில் கிடைப்பதே கடினமாக இருக்கும் போது , படித்துக் காட்ட ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது அவர்களுக்கு இலக்கியம் அறிமுகமாவதற்கான வழிகள் வெகு சொற்பமாகவே இன்றளவும் நடப்புண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர் பார்வையிழந்தவர் என்ற தகவலையும் தர வேண்டிய தேவை உணரப்படுகிறது. சமகால இலக்கியம் பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு அரிதாகவே வாய்க்கின்றன என்று பல பார்வையற்ற மாணவர்கள் வருத்தமாகச் சொல்லக் கேட்பதுண்டு. போதிய வாய்ப்புகளும், வழிவகைகளும் செய்து தரப்பட்டால் புதிய படைப்பாளிகள், வாசகர்கள் தமிழுக்குக் கிடைப்பது நிச்சயம். சமீபத்தில் திரு. சுகுமார் (‘நெருப்பு நிஜங்கள்’), தாயாரம்மாள்(உதயக்கன்னி), மு.ரமேஷ்(‘வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்’) முதலிய பார்வையற்றவர்களின் கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை பரவலான கவனம் பெற வேண்டும். பெறும் என்று நம்புகிறேன். கண்ணனின் வரவிருக்கும் கவிதை நூலிலிருந்து சில கவிதைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
– லதா ராமகிருஷ்ணன்)

1/ பந்தயம்

ஓடுதல்
எல்லையை அடைதல்
முச்சிரைத்தல் என்பவை
எவர்க்கும்
எக்காலத்துக்கும்
எவ்விடத்தும்
பொதுவான ஒன்ட்ரு தான்.
ஆயின்
பந்தயம் என்பது
எப்படி
சமமாய் சாத்தியமாகும்?

2/ப்ரியமுடன் யாழ்மதிக்கு

ஜலதரங்க இசைபொழியும்
எனது கை குடை
கோவர்த்தன கிரிசுமந்த
கோபாலனாய் நீ.
கொற்ற குடை நிழல் கீழ் தங்கிடும்
குடிமகனாய் நான்.

3/அப்பாவின் வாசனை

கண்ணனின் கவசகுண்டலம் போல், அப்பாவோடு
சேர்ந்தே பிறந்திருக்கக் கூடும் இது.
தீர்த்தமாடிய கங்கையாலும் கழுவ முடியாதது.
ஒரு நாளும் அப்பா செயற்கை மணப் பூச்சுக்களாலோ,
வாசனை திரவியங்களாலோ
களங்கப்படுத்தியதில்லை இதனை.
அப்பாவின் அடிச்சுவட்டோசை செவிபோகும் முன்
யானையின் மணியோசையாய் நாசியில் நுழைந்து
உறையும் இது.
இதயத்தில் சிலிர்ப்பூட்டும் அப்பாவின் உடல்வாடை
தனித்துவம் மிக்கது;
மகத்துவம் நிறைந்தது.
உழைப்பின் பொருளை எந்த அகராதியிலும்
துலாம்பரமாய் துலக்கிக் காட்டுவது.
மண்மணம் நிறைந்தது
மண்ணில் கரைந்தது அப்பாவின் வாடை.

4/ பதிவுகள்

எவரெவர் கால்களுக்கெல்லாமோ
நிர்ப்பந்திக்கப்படும்
நான் கடக்க வேண்டிய பயண தூரம்.

எவெரெவர் தோள்களுக்கெல்லாமோ
சுமத்தப்படும்
என்னுடைய சிலுவை பாரம்.

எவரெவர் விழிகளிலெல்லாம்
அலையலையாய் விரியும்
எனக்கான
வாசிப்பின் பக்கங்கள்.

எவரெவர் திருவாஇகளிலெல்லாமோ
ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்
எனக்கான கேள்வி, காட்சிகள்.

எவரெவர் விரல்களிலோ
மலை மலையாய் குவிந்திடும்
என்னுடைய எண்ணப் பதிவுகள்.

நானும்
அத்தனை கால்களையும்,
அத்தனை தோள்களையும்,
அத்தனை முகங்களையும்,
அத்தனை கரங்களையும்,
ஆரத்தழுவித் தழுவி
முத்தமிட்டு, முத்தமிட்டு
ஆனந்தமாய் முறுவலிப்பேன்
அழுது ஓய்ந்திடும் சிறு குழந்தையென.

5/என்ன செய்யலாம்?

(ஆத்மாநாமின் தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை)

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?
குழந்தையோடு குழந்தையாய் பொம்மைகள்
செய்து விளையாடலாம்.
முடியா விட்டால்
கிழிக்கப்பட்ட மனசைப் போல
சுக்குநூறாக்கிடலாம்.
காகிதம் கோபித்தால் கழிவிரக்கம் கொண்டு
மண்டியிட்டு அதனிடம் மன்னிப்பு கோரலாம்.

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

பொறுப்பான ஆசிரியரைப் போல
தேவையான குறிப்புகள் எழுதலாம்.
ஒரு கவிஞனைப் போல , குடிக்காமல் போதை கொண்டு
பொருள் பொதிந்த, பொருள் புரியாச் சொற்களைக்
காகிதத்தில் உதறிக் கொட்டலாம்.
கதாநாயகன் போல், வில்லன் போல்
சட்டப்படி, சட்டமேந்தி
மக்களைத் திகைக்கச் செய்யலாம்.
‘மைக்கேல் ஆஞ்ஜெலோ’வைப் போல்
மறையா ஓவியம் தீட்டலாம்.

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

என்னமும் செய்யலாம்.
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்.
வேண்டாமென்றால் தகர்க்கலாம்.
வேறென்ன செய்யலாம்?
காதலரைப் போல கவலையின்றி
கடிதங்கள் போடலாம்.

வெள்ளைக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெற்றுக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெள்ளைக் காகிதத்தில் , அதன் வெறுமையில்
ஒரு புத்தன் பிறந்தான்.
காற்றுச் சிறகேந்திப் பறக்கும் ஒற்றைக்
காகிதம் போல் நாமும்
பற்றற்ற சுதந்திரவாதியாய் பறக்கலாம்.

-கோ.கண்ணன்

Series Navigation

கோ.கண்ணன்

கோ.கண்ணன்

கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சு.மு.அகமது


இதயத்துள் துளை விரிந்து
வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு

ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின்
பரிமளிப்பாய் அடக்குகிறது கடன்

பூக்களற்ற பெருவெளி போல்
வாசமிழக்கிறது மனது

இன்றும் நிலைத்து நிற்கிறது
ஒற்றை மரமாய் நட்பு
கடன் கொடுப்பவனோடு

கேள்வியின்றி பதிலுமின்றி
கோப்புகளற்று
அவசர உதவி புரியும்
கந்து வட்டிக்காரன் – என் நண்பன்

காலந் தவறினால்
வங்கி என்ன வாங்கி என்ன?
—————————-

இருளின் ஒரு பதத்தையாவது
வெளிச்சத்தில் படித்திடல் வேண்டும்

வசீகரிக்கும் அதன் குரூர அழகில்
வயப்படாமல் இருக்க
கற்றுக்கொள்ளல் வேண்டும்

கருமை தான் இருளென்றால்
வாழ்வின் வெறுமையும் கறுமை தான்

என்னை அறிமுகப்படுத்திய
இருளின் முகவரி தொலைத்து
வெளிச்சப்புழுதியில் உழன்று இருள்கிறேன்

இருள் கதவின் இடுக்கு வழி
கசியும் இருளில்
என் தேகம் மிளிரக் காண்கிறேன்

பூரணமாய் நான் இருளும் போது
வேர் படர்த்தி மண் கவிந்து
நான் அமிழ்கிறேன்

இருள் இருளாயும்
நான் இருளாயும்
இருளாகி இருள் நோக்கி உதிக்கிறேன்.
——————————

சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்
தலையாட்டும் பெருந்தருவின் எதிர்வினை
செயலற்றுப்போய் மென்னியம் உதிக்கிறது

படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்

ஆரம்பம் இப்படித்தான்…
புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க
புசியப் பழகினதாய்

சுவைத்துப் பழகினவை
செறித்துப் போனதால்
திளைத்துப் போகும் அதன் உலைகள்

தெறிக்கும் துளிகளில் நான்
பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு

விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்
நீ கற்பித்தாய்
‘கற்ப’து பொதுவானது.
——————–
musu_7@sancharnet.in
—————–

Series Navigation

சு.மு.அகமது

சு.மு.அகமது

கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

டீன்கபூர்



என் விழியில் நூல் அழது

கிழிந்து கிடக்க
என் அறிவு குப்பைத் தொட்டிக்குள்
செத்துக் கிடக்கும்.
என் அருமையும்
என் பெருமையும்.

அறிவுடையோர்
ஆக்கி வழங்கிய அறிவுகள் …
பசித்த குழந்தைகளின்
பால் பருக்கிய போத்தலில்
ஈக்கள் மொய்க்கின்றன.

அரை விலைக்கு கியூவாகி
முற்பணம் மூன்று மாதத்துக்கு முன்
செலுத்தி அன்று
அதற்கென்ற ஆள் திரட்டி
அதற்கென்ற ஆள் புரட்டி.

இப்போ
இலவசம் என்றெண்ணி
இதற்கென்ற
மதிப்பும் மரியாதையும்
ஆறுமாதத்துக்குள்
அழுகி நாறிடும்.

பள்ளி மேசையில் சூடிட்ட மாடாக,
வகுப்பறை நெடுகிலும் காய்ந்த உடலாக,

என் விழியில் நு}ல் அழ
அறியாமல் மூழ்கிறேன்.
மேனி சிலிர்த்தும்
எழ மறுக்கும் மயிருக்குத்தான் தெரியும்
ரோசம் பற்றி.

சுடு நீரை
கண்கள் பனிக்க
அது வழிந்தோடும்
வாய்காலுக்கத்தான் தெரியும்
அதன் வேகம் பற்றி

இயலாமல் நிரம்பிய இதயம்
எங்கோ வெடித்துச் சிதறும் போதுதான்
தெரியும் மரணம் பற்றி.

அன்பனே!
என் அறிவு
உங்கள் அறிவு
மாய்கின்றேன் நாளையும் இன்னொருவர்
என்னை அறிய
ரோசம்
வேகம்
மரணம்
எல்லா படைப்புக்களுக்கும் தான்.
என்று நு}ல் விம்மியது


அர்த்தத்தைத் தேடுவாய்

நீயும் தேடுவாய்;
வாழ்வுச் சட்டிக்குள் கையை விடுவாய்.
உப்பும் உறைப்பும்
ஊறுமா உன் நாவில் என்று.

உளறல் பற்றி ஆய்வு செய்வாய்.
உழைப்புப் பற்றி கனவு காண்பாய்.
மனிதனைத் தேடுவாய்.
மனத்துக்காக மாய்வாய்

முடியாமல் திணறும்
உன் இயலாமைக்காக அழுவாய்.
உன் வாழ்வுப் பாதையை விசாலிக்க
முயற்சிக்கும் எதுவும் முதிராது போகலாம்.

அப்போது நீ அழுவாய்.
நீ மல்கும் போது
உன் விழி உன்னையே நோவும்.
உன் வேகத்துக்குள்
உன் வாகனம் உன்னை இயக்கும் போது.
புhசத்தின் அர்த்தம்
பருமனாவதற்குள்
நான் ஆயிரம் கனவுடன் போராடியிருக்கிறேன்.
நிலவோடு கோபித்து இருக்கிறேன்.
காற்றுக்கு கல்லெறிந்து இருக்கிறேன்.

தெரியுமா உனக்கு?
நெஞ்சுரம் என்பது
தெரியுமா உனக்கு
கர்வத்தின் முதுகை

எதுவும் இங்கு உயர்வுக்கே மரியாதை.

மனசை பாலைக்கு உவமிக்க
உன்னால் தான் முடியும்
என்னுள் வீசும் காற்று
சுழன்றடிப்பதற்குள்
தென்னையைச் சாய்த்துவிட முயல்கிறேன்.

என் உள்ளத்தின் அத்திவாரம்
உறுதியாக இருக்க
என் இரு கரங்களும்
என்னைவிட உதியாக இருக்கிறது.


24 மணி நேரமும்

உயிரின் பெரும் பகுதியை
முத்திரைப்படுத்திய இயலாமையே
ஏன்னுள் உராய்ந்து கொண்டிருக்கிறது.

வுhழ்வின் புத்தகத்தின்
எல்லா பக்கங்களும்
சுpவப்பு நிறத்தால் கிறுக்கப்பட்டுள்ளன.

நேரிய உணர்வின்
புhரிய விளைச்சலை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.

உறவு பொய்மைக்குள் விழுந்து
எழ மறுத்து என் பகுதிகள்
நசிந்து தொங்குகின்றன.

மனசுக்கு என்ற கௌரவம்
து}க்கிலிடப்பட்ட போது
துடியாய்த்துடித்த காலம் வெறுமையாகிவிட்டது.
நாவுக்கு மனிதன் கொடுத்திருக்கும் ஆரோக்கியம்
உறவின் வலிமைக்குக்
கொடுக்கத் தவறிவிட்டான்.

பருந்துகளின் விழிகளிலிருந்து
என் எறும்பு மனசு
ஒளிந்து கொள்வதில்
இன்னமும் முற்சிக்கையில்
வுhழ்வு வயதாகிவிட்டது.

புhரங்களும் பார்வைகளும்
கேள்விகளை உதாசீனப்படுத்தி
நெஞ்சுக்குள் புகைந்தே தோல்வியாகிவிட்டது.

ஏல்லாம் கொஞ்சக் காலத்துக்குள்
மண் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது
இவன் வாழ்வின் யதார்த்தத்துக்காக
இவன் ஆரோக்கியத்துக்கே
பிரார்த்திப்புக்கள்.

இவன்; பாசையின் அர்த்தம்
புணத்துக்காகவும் அல்ல.
சுகத்துக்காவும் அல்ல.

சீவிப்பின் நிம்மதி என்ற
பெருமூச்சுக்காக மட்டுமே.

———————————–
deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


ஒன்று : நிச்சயமின்மை

வெறுமையில் இருப்பதாக
சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை
இனியில்லை
மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது
எந்த நேரத்திலும்
சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம்
காற்றின் வேகத்தில் செல்லும்
மேகங்கள் கூட கரு கொண்ட பின்னே
பிரசவிக்கின்றன.
இது முன்னின்றலின் இயங்கா விதி
எந்த ஒரு தருணமும்
ஒரு பித்தனாகவோ
சித்தனாகவோ செய்யலாம்.
நிச்சயமின்மையில் சிக்கி
தவிப்பதாக எழுந்த அவிப்பிராயம் கூட
வெறுமையில் சென்று முடிகிறது
இனி சுய பிரஸ்தாபம் தேவையில்லை.


இரண்டு : நட்சத்திரங்கள் மறையுமா?

நேற்றைய நாளின் கடைசி
கணங்களில் உதித்திருக்கும் சில
நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லியாக வேண்டும்
நட்சத்திரங்களை இதற்கு முன்பு
அறிந்ததைப் போல இல்லை
என்று நம்புவதிலிருந்து தான்
இந்த நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லமுடியும்
ஒரு புழுக்கத்தில் உதித்த இவை
அசாதாரணமாக
சூரியனை விட பெரிதாக இருக்கிறது.
நான்கு திக்கிலுமாக நின்று
நான்கு வர்ணங்களில் ஒளியை
உமிழ்ந்து கொண்டிருப்பதாக
கடைசியில் கிடைத்த தகவல்கள் சொல்லுகின்றன
எனினும் ஒன்றை மட்டுமே
ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கிறது
அவை மறையுமா என்று.


மூன்று : வேகவேகமாய் ஒரு வேகம்

ஒரு வேகம் சிறந்தது என்றுச் சொல்லப்பட
ஆயிரம் காரணங்கள் இருக்கிறது
அந்த வேகத்துக்கு முன்னால்
எதுவும் சென்றுவிட முடியாது
என்ற நம்பிக்கையும்.
வேகவேகமாய் ஒடிக்கொண்டிருக்கும்
அந்த வேகத்தைப் பற்றி ஓரிரு நாள்களுக்குள்
ஏதாவது முடிவுக்கு வரலாம்
ஆனால் வேகம் முடிவுக்கு வராது என்று தெரியாமலாயிருக்கும்
என்றோ துவங்கிய அந்த வேகம்
எங்கே செல்லுகிறது என்று
அவதானித்தே காலங்கள் மேலிருந்து கீழாக
விழுந்துக் கொண்டிருக்கிறது
ஒரு நிலையில் தான் வேகம் செல்கிறது
என்று சொல்வதற்க்கான நிலை
வேகத்திலிருந்தே பெறப்படுகிறது என்று
சொல்லமுடிந்தாலும்
வேகம் பற்றிய நிச்சயமின்மையே
மீண்டும் மீண்டும்
அதை பேசச் சொல்கிறது.

——————————–
mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


மனத்தாபம்.

தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்
தொலைந்துவிட்டது போல்
முடக்கப்பட்ட அவனது
முழங்கால்களிரண்டும் தோன்றும்.

வலதுகைவிரல் மடிப்புகளால்
வாரப்படாது கோதிவிடப்பட்ட
முடிகளின் ஒருபகுதி – மாதர்
முக்காடிட்டதுபோல் தோன்றும்.

நுளம்புத் தொல்லை என்று
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து
நிமிர்ந்து கையில் அகப்பட்ட
நாசினியை விசிறும் போதும்,

பன்னிரண்டு மணிக்கு மேல்
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்
முழங்கால்களும் வலது கையும்
முடிகளின் ஒரு பகுதியும்,

அப்படித்தான் தோன்றும்!

அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!
தொடைகளுக்குள் அல்ல
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்!!


ஸஹர் உணவு

அதிகாலை நாலுமணியிருக்கும்
அங்கும் இங்கும்
அழகழகாய்ப் பரப்பிக்கிடக்கும்
அமுதுவகை மேசையிலே.

ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.
நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.

அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.

விழித்துப் பார்ப்பர்
விழி பிதுங்கும் –
விடிந்துவிட்ட சங்கதிகேட்டு
வீணானது நோன்பொன்றுதான்.
***

அலறி அடித்துக்கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பாள்
சுவரில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தை – அது
சுட்டும் நாலரைமணிதனை.

அருகிற் படுக்கும் கணவன்
அவனருகில் அன்புச் செல்வங்கள்
அவசர அவசரமாய் அவர்களையெழுப்பி
அன்புமொழி பேசி அமுதூட்டி
ஆனந்தமாய் ஸஹர் உண்பாள்.

அதான் கேட்டதும்
அவள் சென்றிடுவாள் தொழுகைக்கு
அவர்களையும் பள்ளிக்கு
அனுப்பி விட்டு.

***

அரட்டி விடுவதற்கோ
அண்ணார்ந்து பார்ப்பதற்கோ
இங்கு கடிகாரம் ஒன்றுமில்லை,
இவர்களுக்குப் பிள்ளைகளுமில்லை.
தள்ளாத வயதில்
தயவு அல்லாஹ்தான்.

அகப்பட்டதை அகப்பையில்
அள்ளி எடுத்துண்டு
அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி
ஆவலாய்க் காத்திருப்பர்
அதான் கூறும்வரை – சிலவேளை
அதான் கூறியுமிருக்கும்.

வாழ்க்கை

ஒற்றைக் கம்பியில்
ஒருக்கணித் தமர்ந்து
ஓரக்கண்ணால் காணும்
ஓராயிரம் காட்சிகள்.

நீண்ட தொலைவில்
நீள் பனையொன்று – அதன்
நிழல் வழியே
நிம்மதியாய் இருநாய்கள்.

ஆகாய உச்சியெட்ட
ஆலாக்கள் இரண்டு
அதன் பின்னே
அழகிய கிளிகள்பல.

வயலில் வயதான
விவசாயிகள் பலர்
வடிவாய்ச் செப்பனிட
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை.

கொங்கை குலுங்கிட
மங்கையர் பலர்
களை கொள்ளும்
கண்கொள்ளாக் காட்சிகள்பல.

சக்கரச் சவட்டுதலில்
சில புழுக்கள் – அதைக்
கொத்தித் தின்ன
கொக்குகள் பல.

வீதியால் வந்தவனை
வேருடன் பிடுங்கி
வயலில் விட்டெறிந்த
விபத்து ஒன்று.

பஸ் மிதிப்பலகையில்
பயணம்செய்த இளைஞன்
பரிதாபமாய் விழுந்ததை
பார்த்துச்சிரிக்கும் இளசுகள்.

வலதுகையை உரசிக்கொண்டு
விரைவாய்ச் செல்லும்
பாதுகாப்பு வாகனமொன்று
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி.

அழகழகாய் அணிவகுத்து
அவசரமாய் பறந்துவந்த
வாகனங்கள் அனைத்தும்
வந்த அரசியல்வாதிக்காய்.

இத்தனையும் பார்த்துரசித்த
இளைய காக்கை
மற்றக்காலை உயர்த்தியபோது
மரணம் மின்கம்பியில்..

மனக் கிலேசம்.

நித்திரையில் நான்
நாலுமுறை எழுந்திருப்பேன்.

பல்துலக்கிக் குளித்திட
பலமணி நேரம்
தலை துவட்ட
தலை முழுகிப் போகும்.

காலையுணவு ருசிக்காது
காலை வாரிவிடும்.
இஸ்திரிகை செய்யாஆடை
இன்றுமட்டும் என்றுசொல்லும்.

சைக்கிள் சாவியைத்தேடி
சலிப்புத் தட்டிவிடும்.
கடிகாரத்தைப் பார்த்தால்
கதிகலங்கிவிடும்.

வேகமாகச்சென்று பின்னர்
விழிபிதுங்கி நிற்பேன்.
எரிபொருள் தீர்ந்தது
என்மூளைக் கெட்டாது.

எப்படியோ சமாளித்து
எட்டிப்பிடிப்பேன் கந்தோரை.

வரவுப்பதிவேடு மட்டும்
வரிசையாயுள்ள புத்தகங்கள்மேல்
வலியச்சென் றமர்ந்ததுபோல்
வாவென்று கையசைக்கும்.

சிவப்புக்கோடு எச்சரிக்கும்
இன்றும்நீ ஷலேட்தானென்று.

முந்தநாள் சம்பவங்கள்
முழுவதையும் ஏப்பமிட்டதுபோல்
முகாமையாளர் வீற்றிருப்பார்
முகாரி என்மனதில்தான்.


நவீன மாணாக்கர்

ஒன்றுடன் ஒன்றைக் கூட்ட
இரண்டு வருமென்றார் வாத்தியார்
மூன்றும் வருமென்றான் ஒருவன்
நான்கும் வருமென்றான் இன்னொருவன்.

கணக்குப் புரியவில்லை
கணக்கு வாத்தியாருக்கு – ரியூஷன்
கணக்கோவென அவர்
எண்ணி விட்டார்.

விஞ்ஞான வாத்தியார் வந்தார்
ஒன்றும் ஒன்றும் இரண்டா?
மூன்றா? நான்கா? எனக்கேட்டனர்
ஏன்? ஏழாகியசங்கதி தெரியாதென்றார்.

கொல்லனெச் சிரித்தது
கும்மாளமிட்டு மாணவர் கும்பல்.

பெற்றவள் யாரோ
பிரித்துக் காட்டியவர் யாரோ
பட்டம் பெற்றதோ – புதுப்
பட்டம் பெற்றதோ வாத்தியார்.

கணக்குத் தெரியாக்
குணக்கு வாத்தியாரென.


தொலைந்துவிட்ட சொந்தங்கள்.

பொட்டிழந்து பூவிழந்து
புதுப் பட்டிழந்து
கட்டுப் பெட்டியுடன்
கடல்கடந்து சென்றீர்.

அமுதம் பொழியும் வானம்
அன்று பொழிந்ததெல்லாம் – உங்கள்
அன்புச் செல்வங்களின் உயிரை
அள்ளிச் செல்லும் குண்டுகள்தான்.

மழலைச் செல்வங்கள்
மறுசொல் உதிர்ப்பதற்குள்
மரணமெனும் தூரிகை
மாற்றியது வரலாறைத்தான்.

பரிதவித்து கண்முன்னே மாண்ட
பச்சிளம் பாலகர்தான் எத்தனையோ!
பாடையிலே கொண்டு சென்ற
பசும் பாவைகள்தான் எத்தனையோ!!

விதைத்தனர் வி~மிகள்
விந்தைமிகு பயிர்களை – அவை
விடிவதற்குள் முளைத்தனவே
விதவைகளாய் இத்தரையினிலே.

கண்டதுயர் கணக்கில்லை
கண்ணிற்கூட நீரில்லை
கண்ணாளன் மரித்தால்கூட
கலங்குதற்கு உங்களிடம்.

இத்தனையும் இழந்து
இத்தரை மறந்து
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து
புதுயுகம் படைத்திடவே.

தேன்மதுரத் தமிழோசை போதும்
தமிழரெனத் தலை நிமிர
இயல் இசை நாடகம் – புலம்பெயர்
இலக்கியங்கள் படைத்திடவே.

இத்தரையில் விட்டபிழை வேண்டாம்
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு
உயரட்டும் இமயம் வரை.

தொலைத்துவிட்ட சொந்தங்களை – உயர்
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை
தொலைவில் இருந்து கொண்டே.


சுனாமி – நல்ல தருணம்.

அழகிய அக்பர் கிராமம்
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என

ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்த
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
சுருட்டி எறிந்து விட்டாய்.

பணம் நகை பாத்திரங்கள்
பத்திரப் படுத்திய ஆவணங்கள்
வீடுவாசல் எதுவும் வேண்டாமென
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களை,

உடுத்த உடைகள் கூட
உடலில் காக்க விடாமல்
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து
உள்வாங்கிக் கொண்டாய் நீ!

பிறக்கப் போகும் பிள்ளையையோ
இறக்கப் போகும் தறுவாயையோ
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!

ஆக்குவதும் அழிப்பதும் நீதான்
அவனியிலே அதற்கு இணையில்லை
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!

ஆகாயம் கடல் தரையென
அதி நவீன ஆயுதங்கள்
அதிலும் உயர் தொழிநுட்பம்
அத்தனையும் இருந்தென்ன பயன்?

கடல் ஆகாயம் தரைகளையே
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்
என நீ உணர்த்திவிட்டாய் –
அகிலத்தையே நடுநடுங்க வைத்துவிட்டாய்.

கடலில் கால் பதித்து
அலைகளை அள்ளி முத்தமிட்டு
அணைத்து புரண்டு விளையாடி
ஆனந்தப் பட்ட நாங்கள்,

ஆலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு
ஏறுதற்கு இடம் தேடுவதையும்
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?

இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்,

மாறும் நாள் வருவதற்குள் எங்களை
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு நல்ல தருணமும்கூட
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு.
—————————————-
abdulgaffar9@gmail.com

Series Navigation

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

பாஷா


எது அது

ஒரு முதல் புன்னகையின்
அலை நீளத்தில்
இரு கண்கள் கவிழ்த்த
கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய்
மனம் சிக்கிகொண்ட
ஒரு பிற்பகலை நம்மிடம்
எடுத்து வந்தது
எது அது!

இரு விரல் உரசி
இரு தோள் உரசி
உன்னருகில் அமர
ஒரு வேண்டுகோளாய் என்
தைரியம் தரையிறங்கியபோது
ஒற்றை பார்வையால்
என்மேல் ஒட்ட வைத்தாயே
எது அது!

தோழனாய்,தமயனாய்
தொடரும் பயணத்தில்
துணைவனாய்
உன் கருவறையில் சூல்கொண்டு
பின்னொரு நாளில் நீ மடிதாலாட்டும்
தலை மகனாய்
எல்லா விருப்பத்திலும் உன்
அருகாமை விரும்பும்
எனக்குள் இருக்கும்
எது அது!


குகை வாழ்க்கை

குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்
“குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்”
குகையின் கேலியாய்
எதிரொளிக்கிறது எங்கெங்கும்
கூனாகி குனிந்து இருட்டினுள்
குறுக்கிக்கொள்கிறேன்!

குகை புகுவாய்
கொண்டாடி மகிழ்வாய்
வாழ்த்தொலிகள் முழங்க
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்ததாய் சொன்ன
குகைபுகுந்தேன் ஒரு நாள்

குகையின் சுவரெல்லாம்
விந்துக் கறைகள்
முத்தத்தின் ஒழுகலில்
வழியும் எச்சில்கள்
இதில் எழுதப்போவதில்லை
என் சரித்திரத்தை
வெள்ளைத் தாளொன்றுண்டு என்னிடம்
குகையிருட்டை கையள்ளி
எழுதுகோலை நிரப்புகிறேன்
எழுதும் முனையில்
எதுவும் இல்லை
விரலில் எடுத்து
விந்து பீய்ச்சி
வெள்ளைத் தாளில் எழுதுகிறேன்
பின்னொரு நாள் குகைபுகும்
யாரேனும் படிக்க கூடும்!

குகையின் வாயிலில்
சாரல் விழுகிறது
சிறகை நனைத்து
சிலிர்த்து குகை
விளையாட்டில்!
குகை வாழ்க்கைக்கு
சிறகு வேண்டுமா
குகை தத்துவம்!
உரக்க சொல்லி
உயர பறக்க எத்தனித்து
சுவர் மோதி தரைதொடுகிறேன்
பறத்தல் கூடாது
குகை விதிகள்!
பறவையென்றே சொல்லத்தான்
இறகுதிரும் சிறகுகள்!

அகன்ற வானமும்
ஆழ் பள்ளத்தாக்கும் மோதும்
குகை மறுமுனை நோக்கி
மெல்ல நடக்கிறேன்
சுவாசிக்க வேண்டும்
சிறகடிக்க பறக்க வேண்டும்.
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்!


Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஆ. மணவழகன்


வாழ்க்கை வணிகன்

பாருங்க சார்!
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்!

வாழ்க்கைக்குத்
தேவையான வழிகளைச்
சொல்வது சார்!

மூன்று பெரும்பகுப்புகள் …
நூற்று முப்பது அதிகாரங்கள்…
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்!

வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபாய் சார்!
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபாய் சார்!
—————————-

தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில்
விற்றுச் சென்றான்…

திருக்குறளோடு..
‘வாழ்க்கையையும்’ ..!
***

தித்திப்பு

வெயிலின் வேட்கைக்கு
செதில் செதிலாய்க் கடித்து,

சுவைத்துச் சுவைத்து விழுங்கிய
வெகுநேரம் கழிந்த பின்பும்..

வீடு வந்து குடிக்கும்
நீரோடு உட்செல்லும்…

பெருநெல்லியின்
சுவையோடு..

காட்டுக் கள்ளிமடையானின்
தித்திப்பு!

இதோ,
உன்
நினைவின்
ஒவ்வொரு துளியிலும்!

***
ந(£)கரியம்
————-

சாக்கடை நாற்றத்தோடு
செயற்கை நீரூற்றுகள்!

வேரோடு பறித்து
வேற்றிடத்தில் நடப்பட்டு
அலங்காரத்திற்கு மட்டும்
அணிவகுக்கும் மரங்கள்!

முளைக்காத தானியங்கள்!
விதையில்லா கனிகள்!

உயிர் இல்லா முட்டைகள்!
தாய்-தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்!

பார்த்துப் பல ஆண்டுகள்
ஆனாலென்ன?
பக்கத்து வீட்டில்
வாழ்ந்தால் என்ன?

விரல் அசைவில்
நலம் கேட்டு
வேலை என்று
விரைந்தோடும் மனிதர்கள்!

ஆணிவேரில்
வெண்ணீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்!

எதைக் காட்டிச் சொல்வேன்?
‘பச்சைக் கம்பு தின்றதே இல்லை’
ஆதங்கப்பட்ட தோழிக்கு…

ஆடுகளை மலையில் விட்டு..
அருகிருக்கும் கொல்லையில்
கதிரொடித்து…
பால் பருவ கம்பைப்
பக்குவமாய் நெருப்பிலிட்டு…

இம்மி ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
இன்றுவரை மாற்றில்லை என்று!

***
– ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

பெருந்தேவி


கடைத்தெருவில் குட்டிச்சீதை

குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கோலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
அனுமான் அப்போது
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்று விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.


கண்

எப்போதும்
நேர்
கோணத்தில்
பார்க்க
சச்சதுரமாக
ஏன்
செவ்வகமாகவேனும்
இருந்திருக்கலாம்.


sperundevi@yahoo.com

Series Navigation

பெருந்தேவி

பெருந்தேவி

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

டான்கபூர்


உலகம் நசிந்து
மூட்டைப் பூச்சிகள்
என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது.
இதயங்களில் வால் இருக்கும்
மூளையில் கொம்பு முளைத்திருக்கும்
மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது.

சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக
என் நினைவுகள்.
என் தூக்கம் மலையிலிருந்து
குதித்துச் செத்துக்கிடக்கிறது.
கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும் நான் இருக்கிறேன்.
இந்த நசிந்த உலகத்தில் நான்
ஒருவனாக இருப்பதால்.

என் உலகமே!
உனக்கு சூடு சொரணை வராதா ?
சூரியன், சந்திரன், காற்று, நீர் அத்தனைக்கும்
எத்தனை ஒழுங்கு பார்த்தாய்.
அதனால்தான்
இன்னும் இந்த உலகம் மூச்சுவிடுகிறது.
இவை ஒழுங்கு தப்புவதற்கு முன்
பூனை கக்கிய உங்கள் இதயங்களைக் கழுவி
சுருண்டு படுத்து படமெடுக்கும்
பாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்.

வண்ணத்துப் பூச்சிகளை
உங்கள் இதயங்களில் மேயவிடுங்கள்.
மேகத்தோடு பேசி,
வெள்ளிகளோடு விளையாடி
சந்திரைனக் கொஞ்சி
தென்றலில் நீந்தி
மலர்கள் மீது உறங்குங்கள்.

இரத்தக் கடலுக்குள் தூக்கிப் போட்டதால்
செத்துக்கிடக்கும் இந்த உலகம்
மீண்டும் சவாசிக்கிறதா என்று பார்க்க ?


ஒருத்தி

போதும் உன் சிரிப்பு.
பாராங்கல்லை தலையில் போட்டு
ஒரு மழலையின் சிரிப்பாகக் கழிந்த வாய்.
மல்லிகை மொட்டுக்கு ஒப்பானதாய்
விரியும் உன் சிரிப்பை
இதோ பாடசாலை சுவர் மறைவில் போடு.
தங்கு மடத்திற்கு மேல் ஏற்றி வை.
பயணி அழுவான்.
உன் கொண்டைக்கிளாத்தான்
கொண்டையில் விழுந்து.

வரும் பேரூந்தும் தவறிப் போகும்.
கையைக் காட்டு.
என்னை விடு.
என்னிதயத்தை விடு.
என் கண்களை விடு.
பின்னாலே வரும் நவிந்த துருப்பிடித்த வேனில் ஏறுகிறேன்.
நெருங்கி நொருங்கிப் போவது
காதலைப் போல எனக்குப் பிடிக்காது.

உன் சிரிப்பைப் போல
எனக்கானவை எல்லாமே தவறிப் போவதைப் போல
ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கை.
ஒரு தும்பியின் வால்.
ஒரு மாலை வெயில்.
தவறிப் போகுமிடத்து
என் வேகநடையைக் காட்டுவேன்.
குதிரைக்கு ஒத்ததாய் ஓடுவேன்.
எருமையில் ஏறுவேன்.
உன் சிரிப்பைக் குறைக்கப்பார்.
என்காதலியைப் போல.


சூரியனின் இளமை நரையாகி

சூரியனின் இளமை எனக்குப் பிடித்தது.
என்மடிக்குள் விழுந்து முச்சுவிடும்.
மனிதனைக் கொய்து
புதைக்கத் தெரியாத அரசியல்வாதி.
பட்டவன் கையிலெல்லாம் அரிவாள் இப்போது.

பூக்கல்லின் வழியாக முதற் கதிரைப் பாய்ச்சுவது
எனக்குத்தான்.
சூரியனின் ஒரு கதிர்
எப்போதும் எனக்கு உரித்து.
என் கதிரையில் அமர்ந்து ஆறுதல்படுத்திய
நாட்களுக்கு எப்போதும் முட்கள் விதைத்ததில்லை.

சூரியன் கவலை கொள்வான்.
மேசைப் பேச்சுக்களின் நாற்காலி சுழன்று முடிவதில்
ஒரு மலரின் வாடலில் வேதனை தெரியும்.
மலர்களெல்லாம் மலர்வதும் உதிர்வதும் மிஞ்சுமோ ?

மாலையையும் காலையையும் அழகுபடுத்தும்.
அதன் தூரிகை என்னு}ர் வாசலில் கீறும்
கிளையிடையே விழும் கதிரின் லயிப்பில்
வேம்பு சிரிப்பதும்
தென்னையின் குருத்தில் தாலிகட்டிப் புணர்வதும்
நான் ரசிப்பவை.
ஒரு மிரளயம் தொடரும் வரை.

சூரியன் பிரசவித்த மழைக் குழந்தையின்
சிறு நீரில்
நான் குளித்து விளையாடிய காலம்….
பல அரசியல்வாதிகள் மேகத்தையம் வானத்தையும்
என் சூரிய நண்பனின் முகவரிக்கு விண்ணப்பித்து.

ஒரு கதிரின் பெறுமதியை
நான் காலை எழும்போது உணர்வேன்.
ஒரு துப்பாகியின் சத்தமோ
ஒரு வதந்தியின் மொழியோ என்னை அடையாத வரை….
பெருவிரல் அடையாளத்தையாவது இட்டு
மேசைப்பேச்சுக்கு சூரியனை அழையுங்கள்.
அவன் போடும் வெளிச்சத்துக்கு.


கிணற்றுத் தும்பி படியிறங்கி

காலையில் கதிரவன் வாசலில் மேய்வான்.
காகமும் பூனையும் சேவலும் அதனோடு.
பூமரம் மலர்த்தி பூக்களை
வாசலைப் பெருக்கும் பெண்ணையும் அணைக்கும்.
இலைகளில் படிந்த பனித்துளிப் பருப்பு
ஆவியாய் ஆவியாய் நாளையின் நாளுக்கு.

விடியுமா ?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.

மாலையில் கதிரவன் கோடியில் நழுவி
கிளரும் பொன் வயல் வானத்தை.
வரும் என்று,
வரும் என்று,
கேடியில் மனம் வெதும்பி கறிவேம்புக் கன்றுகளும்,
பப்பாசி மரம் ஒன்றும்.
கதிரவன் கதிரில் கூதல் காயவோ ?
இல்லை.

நாளை விடியுமா ?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.

நானாக என்ன செய்ய ?
முற்றமும் கோடியும், கோடியும் முற்றமும்.
என் நாட்கள் ஊர்கின்றன.
கதிரவன் கதிரோடு.

குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி
விரட்டவும் பயமாக, பயமாக…
என் வெளி உலகம்
குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி… சுருங்கி….
நான் இருக்கின்றேன்.
கிணற்றுத் தும்பியாக படியிறங்கி.
என் வளவுப் பாசியில் தங்குகிறேன்.

நாளை விடியுமா ?
வேர் விட்ட யுத்தத்தை நற் செய்தியாக்கி.



மரங்கொத்தி வரலாம் இனி

தென்னையைப் போல வெறும் ஈக்குக்குடல்…
இவனிலிருந்து வராது.
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்
உன் சொண்டில் வரும்.
நரம்புகளும் அதில் சிக்கும்.

உலாவப் பிறந்தவன் மனிதன்.
தென்றலை உடலுக்குக் குடில் கட்டிக் கொடுப்பவன்.
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்.
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று
வளரும் மரம் போல நகராமல்
அடியைப் பதிக்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்.
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.

கடல் சார்ந்த இடம்.
வயல் சார்ந்த இடம்
அலுப்பூட்டிக் கிடக்கிறது.

மொத்தத்தில் இவன் ஜடம்.
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை.
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து
“போர்” ஒன்றைச் செய்து
இல்லறம் நடத்தியது போதும் குருவி….

மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.
நம்பி.
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை.
இவன் உடம்பில் வந்து தங்கு.
தோளில் நின்று எச்சில் அடி..
ஒரு “போரை” வடிவமைக்க இவன் நெஞ்சிலோ
முதுகிலோ நின்ற கொத்து.
மரமான இம் மனிதனின்.


தேர்தலில் குதியாத வேட்பாளனாக

நான் தேர்தலில் குதியாத வேட்பாளன்.
என் காடு தீப்பிடித்த போது
என் வானம் அழுது அணை உடைத்தது.
கறுப்பு நிலவுக்குள்.

என் மூச்சு சுழலும் காற்றையே சுவாசிக்க
என் கிடுகுகள்,
என் தகரங்கள்
சிறகோடு கிளம்பின.

ஏன் கார் புழுதியை கொளித்து
சேற்றை விசிறி
உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை.
என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன.
சந்தி மகிழந்;தது.

வாக்காளன் ஒரு வரம்பினுள்
துப்பிய நீராக பாய்கிறான்.
தந்திரம் பற்றிய பாடலை
அவனுக்கு நரி கற்றுக்கொடுத்தது.
இரவுகள் குமிக்கப்பட்டு.

சக்கர தேசத்திற்குள்
எவனும் நிமிர்ந்திட இயலா.
ஆகாயம் தட்டும் தலையில்.
உருட்டிடும் குண்டுமணியாக என் நனவுகள்
ஒரு தடைக்குள் விழிக்கின்றன.

பச்சைக்குள் பிடித்த புழுக்களையும்
நீலத்தில் படிந்த கறைகளையும்
சொண்டுகளால் பருகிக் கழிக்க
தேர்தலில் குதியாத வேட்பாளனாக.

அமைதியை ஒரு படுகுழி மரணமாய் பேச
கற்பனையிலேயும் எனக்குள் ஒரு அமைதி
தேசத்தை உருவாக்க
ஏந்த அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.

இலங்கை டான்கபூர்

deengaffoor7@yahoo.com

Series Navigation

டான்கபூர்

டான்கபூர்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

அன்பாதவன்


இரண்டாம் தாய்

தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய்
தேடிக் கொ ‘ண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.


ஹைபுன்

ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த
என் பூமியில் மாற்றத்தை விதைத்த
முதல் மழைத்துளி நீ

பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில்
பூமி நனைந்தது
தன்னை இழந்தது;கவலை மறந்தது
இதமான உரையாடலில்
பதமானது பயிர் வளர்க்க

ஊடுபயிராய் நுழைந்து
பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில்
தீண்டும் மென்தென்றல்

பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள்
உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி

என்னுள் பசுமை வளர்த்த
இயற்கையின் ரூபமே
வாடத வாழ்வை வரமாய்த் தா!

ஈர இதழ்கள்
உறிஞ்சிய சூரியன்
சிவந்த ரோஜா.


கவிதை

அரூபங்களின் தரிசனம்
இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை
படைப்பாக்கும் உயர்கலை

உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட
கிடைக்குமோ தூரிகை

மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை
கொஞ்சல் சிணுங்கல்களை
கொலுசொலியின் லயங்களை
இசைக்கோர்வை அமைக்க
இல்லையடியெனக்கு இசைஞானம்

விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு
படிமங்கள் தேடுகிறேன்

முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்
எதன் குறியீடென்று
ஆராய்கிறேன் தனிமைகளில்

மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்

இதழ்கவ்வும் தருணங்களில் கசியும்
கேவல் விம்மல்களுக்கு
இசையாகும் வாய்ப்புமுண்டு

சாத்தியம்தான் இவையனைத்துங்கூட
விடைபெறும்போது வெளியிடும்
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க
திரிந்தலைகிறேன்
உலக மொழிகளின் காடுகளுள்.
—-
anbaadhavan1963@gmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


ஷஃபாஅத்(பரிந்துரை)

என்வீட்டு நாலுகெட்டில்
மூலையில் பதுங்கியிருக்கும்
அந்த கருமை
பலதலைமுறைகளாக
சிறுவனாய் இருந்த போதும்
இப்போதும்
அது பற்றியே யோசனை
சில சமயம்
எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும்
சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு
வெறியுடன்
சண்டைபிடிக்க
தோன்றச் செய்யும்
கருமை பிடித்தவரை
யாரும் விரும்புவதில்லை
என் ஒரு தவத்தில்
வாசியடக்கி உரூ ஜெபித்து
நிசக்ருமணி ஓமெனச் சொல்லி
மண்டலத்திலிருந்து
நீரை தெளித்தார்.
வாரியெழுந்து துள்ளிவிட்டு ஓட
முயன்றது கருமை.
அருளுமறிய மகாதற்பன
மாபாவிகமென்று
சீரிசைத்து சிறங்கை
தண்ணீர் உண்ணு
சாதாரத்தை கண்டபோது
சாரி விட்டம் போடும்
ஸ்தானம் பண்ணும்
பறக்கும் புனல்கும்பம்
பதித்திடு
விதித்த விதியின்
உள்ளிருந்து ஆடும்
வித்தை தட்டுவிக்கும்
உரைத்த இடம் தனக்காவும்
நஞ்சு வாங்கி உபாயமிட்டு
பெருவிரலில் தடவிக்கொண்டு
போகுமிடமெல்லாம்
வம் என்று
டம் என்று
பம்பம் என்று
குரைத்துக்கொள்
ஜந்துருவில் கருமை வீழும்


ஜிகாத்(யுத்தம்)

சவால் விட்டு
சொல்கிறேன் கேள்
முகமது திருவடிப் பற்றி
முகையிதீன் திருவுளம்
கொண்டுநின்று
கருவறுக்கும் பூதகணங்களே
கவனம்
ஜின் வாரானப்பா
ஏவல் கொண்டு
றீம்-றீம்-சிம்-சிம்-றிங்-றிங்
றாறா றாறா
அம்அம்
டும்டும்
அரி அரி
உச்சாடனமதை முன்னுரைத்தே
ஜோதியொளியொன்று
அக்கினி குண்டத்தில்
வீறுகொண்டு நிற்கிறது
மண்ணோடு மண்ணாக
நசி நசி
கும்பட்
றாறா றாறா


எச்.முஜீப் ரஹ்மான்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

சாரங்கா தயாநந்தன்


ரோமங்களின் கதை

என்மனத்தின் ஆசைகள்
ரோமங்களாய்….
பிள்ளைப்பராயத்தில் அவை
பொன்னிறமாய்த் துலங்கின.
மனோரம்யமிக்க அவற்றின்
மயிர்க்கால்கள்
அன்னைமடித் தூக்கத்திலும்
அன்றலர்ந்த மல்லிகை காவி
குதி தொடும் கூந்தலிலும்
இளந்தென்றல் வருடுமோர்
இனிய பொழுதின் ஊஞ்சலிலும்
ஆரம்பங் கொண்டிருந்தன.
பருவ வயது தொடக்கமுற்றதும்
இருள் விலகியிருக்காததுமான
ஒரு அதிகாலைப் பொழுதில்
எனது ‘பால் ‘ விலகிய
தொடுகைக்கான பிடிப்பை
உணர்ந்த போது
கரிய நிற ரோமம்
ஒன்றின் தோற்றத்தினை
மனதோரங் கண்டேன் நான்.
ஆயினும்….
என் முதிர்கன்னிமையை
வெறிச் சிரிப்போடு
காலம் கடக்கின்ற
இந் நிகழ் காலத்தின்
ஒற்றை இறகான
நேற்றில் அதிர்ந்தேன்.
பொன்னிற ரோமங்கள்
எதுவும் அங்கில்லை.
மனதின் உடல் முழுதும்
விரவியிருந்தன
கரிய நிற ரோமங்கள்.
ஒரு மிருகத்தினது போல….


குழந்தையின் அழுகை

அழுகையில் மனசு கரைகிறது.
பூமுகம் குழம்பி
விழிகள் சிவந்து தளம்பும்
குழந்தையின் அழுகை
கொஞ்சமும்
சகிப்பிற்குரியதல்ல.
கன்னங்களில் வழிகிற
கண்ணிரின்
கோடிடும் எத்தனிப்பை
தன் புறங்கைத் தேய்ப்பில்
தோற்கடிக்கிறது குழந்தை.
கண்ணீரானது தேம்பியபடி
பார்ப்போர் மனதில் ஒட்ட.
பின்னர்
அழுகைக்குச் சக்தியற்று
அதை விசும்பலாக
மாற்றுகிறது குழந்தை.
விசும்பலின் களைப்பில்
கேவலுக்குத் தாவுகிறது.
சிறிது பொழுதிற்கப்பால்
மெளனத்தை
அழுகையின் சத்தக்குறைப்பாக
அர்த்தங் கொண்டபடிக்கு
மழை மந்தாரக் கவிவை
பிஞ்சுமுகத்தில் தேக்கியபடி
வெற்றுத் தரை பார்த்து
உட்கார்ந்திருக்கிறது.
இப்போதும் கூட
ஊட்டம் மிக்க
உணவுக் கோப்பையுடன்
எட்டிப் பார்க்கிற
தாயின் முகத்தில்
உணவுண்ண விரும்பாத தன்
பிடிவாதத்தை வீசியடிக்கிறது .
—-

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்

கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

விஜய் கங்கா



நகர் குறிப்புகள்

வெடித்த தென்னம்பிள்ளைகளின்
பலமற்ற அசைவில்
துலங்குகிறது
குன்றிய ஊட்டமும்
வந்து சேரா நீரும்

செவ்வக கதவம் திறந்ததும்
வீசும் வேப்பங்காற்றதில்
முன்பிருந்த நற்குணமணம்
வற்றியதுணருகிறது நாசி

பேறுக்காக புகலிடம்
கிடைக்காது
சாளர வலையில் துளையிட்டு
இல்லம் புகுந்து கூடு கட்டிவருகிறது
தாய்மையுற்ற தோட்டத்து அணில்

இரை தேடும் முனைவற்று
வீட்டின் பின்புறம் சிதறும்
உணவு பருக்கைகளை
பகிர்ந்துண்ண பழகிக்கொண்டன
காக்கைகளும் புறாக்களும்

குளக்கரையோரம் இயங்கும்
சுத்திகரிப்பு சாலையதின்
பகலை கரியாக்கும்
கரும்புகையை
இரவென எண்ணி
விழித்துக்கொள்கின்றன
கீழ்க்காட்டில் ஆந்தைகள்

தென்னையும் வேம்பும்
சாயும் வேளை
மேற்றிசையில்
அஸ்தமனமாகுகிறது
ஓர் சாம்பற் சூரியன்

***

குறுநிலமும் குறுநணியும்

வனம்சூழ் குடிலெங்கும்
விரைந்திடும் மாருதமும்

விரிந்த பூவிதழ் நுழைந்து
தேனுண்ணும் வண்டினமும்

மலரிடை சேர்க்கும்
மகரந்த துகள்களின்
தளராத சுழற்சிக்கு

தடைகள் அகற்றி
அருகாக அமையாத
குடியிருப்புகளுக்கு

தூரமாகும்
நீண்டுவரும்
சுவாசகாசமும்
நற்காற்று நுகராத
நாசியின் கிலேசமும்

****

ஒலிக்கோட்டில் ஓர் மாசுபுள்ளி

மெளனங்கள்
அடர்த்தியானவை

பெருகிவரும் நெரிசலில்
அரிதாய் கிடைக்கும்
தனிமையின் வரங்கள்
இச்சைக்களைந்து
மனதை மீட்டுத்தரும்
சீறிய உரங்கள்

ஒலியின் அளவுகோளில்
மென்மையின் பதங்களாய்
நடுப்புள்ளித்தொட்டு நிற்கும்
மொழியும் இசையும்
மெளனத்தைப் பிரிந்து

தூர செல்ல செல்ல
வன்மை பெருக்கியபடி
நரம்புகளின் அயர்ச்சிக்கு
வித்திட்ட வண்ணம்
ஓங்கி நிற்கும்
இரைச்சல்
ஒலியின்
எல்லைக்கோட்டில்-
இயந்திரங்களின் தொடர்
சப்த வடிவிலும்
வாகனங்களின்
இடையறாத ஓட்டத்தில்லும்
கேளிக்கை பேரொலிகளிலும்,

மனதை மாசுறுத்திவரும்
பெருநகர நாகரிகத்தின்
உப விளைவுகளாய்

***

Series Navigation

விஜய்கங்கா

விஜய்கங்கா

கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

விஜய் கங்கா


நகர் குறிப்புகள்

வெடித்த தென்னம்பிள்ளைகளின்
பலமற்ற அசைவில்
துலங்குகிறது
குன்றிய ஊட்டமும்
வந்து சேரா நீரும்

செவ்வக கதவம் திறந்ததும்
வீசும் வேப்பங்காற்றதில்
முன்பிருந்த நற்குணமணம்
வற்றியதுணருகிறது நாசி

பேறுக்காக புகலிடம்
கிடைக்காது
சாளர வலையில் துளையிட்டு
இல்லம் புகுந்து கூடு கட்டிவருகிறது
தாய்மையுற்ற தோட்டத்து அணில்

இரை தேடும் முனைவற்று
வீட்டின் பின்புறம் சிதறும்
உணவு பருக்கைகளை
பகிர்ந்துண்ண பழகிக்கொண்டன
காக்கைகளும் புறாக்களும்

குளக்கரையோரம் இயங்கும்
சுத்திகரிப்பு சாலையதின்
பகலை கரியாக்கும்
கரும்புகையை
இரவென எண்ணி
விழித்துக்கொள்கின்றன
கீழ்க்காட்டில் ஆந்தைகள்

தென்னையும் வேம்பும்
சாயும் வேளை
மேற்றிசையில்
அஸ்தமனமாகுகிறது
ஓர் சாம்பற் சூரியன்

***

குறுநிலமும் குறுநணியும்

வனம்சூழ் குடிலெங்கும்
விரைந்திடும் மாருதமும்

விரிந்த பூவிதழ் நுழைந்து
தேனுண்ணும் வண்டினமும்

மலரிடை சேர்க்கும்
மகரந்த துகள்களின்
தளராத சுழற்சிக்கு

தடைகள் அகற்றி
அருகாக அமையாத
குடியிருப்புகளுக்கு

தூரமாகும்
நீண்டுவரும்
சுவாசகாசமும்
நற்காற்று நுகராத
நாசியின் கிலேசமும்

****

ஒலிக்கோட்டில் ஓர் மாசுபுள்ளி

மெளனங்கள்
அடர்த்தியானவை

பெருகிவரும் நெரிசலில்
அரிதாய் கிடைக்கும்
தனிமையின் வரங்கள்
இச்சைக்களைந்து
மனதை மீட்டுத்தரும்
சீறிய உரங்கள்

ஒலியின் அளவுகோளில்
மென்மையின் பதங்களாய்
நடுப்புள்ளித்தொட்டு நிற்கும்
மொழியும் இசையும்
மெளனத்தைப் பிரிந்து

தூர செல்ல செல்ல
வன்மை பெருக்கியபடி
நரம்புகளின் அயர்ச்சிக்கு
வித்திட்ட வண்ணம்
ஓங்கி நிற்கும்
இரைச்சல்
ஒலியின்
எல்லைக்கோட்டில்-
இயந்திரங்களின் தொடர்
சப்த வடிவிலும்
வாகனங்களின்
இடையறாத ஓட்டத்தில்லும்
கேளிக்கை பேரொலிகளிலும்,

மனதை மாசுறுத்திவரும்
பெருநகர நாகரிகத்தின்
உப விளைவுகளாய்

***
cv_ganga@yahoo.com

Series Navigation

விஜய்கங்கா

விஜய்கங்கா

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

தேவமைந்தன்


அவன் அவள் அது – என்னும்….

வேதாந்தம் படித்தது போதும்

சித்தாந்தம் படி

என்றார் நண்பர். தத்துவ வித்தகர்.

நன்றாய்த் தேடினேன். கிடைத்தது.

சைவ சித்தாந்தக் களஞ்சியம்.

‘அவன் அவள் அதுவெனும்

அவைமூ வினைமையின்…. ‘

சூத்திரம் படித்தேன். மறுபடி. மறுபடி.

விளக்கமும் படித்தேன்.

மலைத்தேன்.

‘அவன் ‘ – சரி.., ‘அவள் ‘ – ம்..ம்.., அது எது ?

அறிவு மிக்கவர் பலரைக் கேட்டேன்.

சொற்களை அம்பாரமாகக் குவித்தனர்.

ஆகவே குழப்பமும் அதிகம் ஆனது.

எல்லோரை யும்தான் கேட்டோம்; இவனையும்

கேட்டே வைப்போம் என்றொரு சின்னஞ் சிறுவனை

அழைத்தேன். கேட்டேன்.

கேட்ட என் விழிகளை ஆழமாய் நோக்கினான்.

வினைக்கு எதிர்வினை மீண்டது போல

‘ம்..ம்.. ? தெரியாது தாத்தா..தெரியாது! ‘

ஓடினான், சிறுமியோடு விளையாட்டுத் தொடர.

ஒற்றைச்சொல்தான் ‘தெரியாது! ‘ –

தெரியாது இருப்பது அது.

ஒற்றைச் சொல்லைத் தவிர்ப்பதால் விளைவது

கற்றை கற்றைக் கூளமாய், விளக்கமே.


வெறுமை

வெறுமையை விரட்ட வழிகள் தேடினேன்.
வழிகளா இல்லை ? வந்தன வரிசையாய்.
கடற்கரை சென்றேன். கடலலை சுருண்டு
தடபுட லாக வந்தே கரையைத் தழுவி
நுரைவிரல் நுனிகளை நீட்டி
நண்டு வளைகளை நெண்டிக் கிளப்பி
எட்டும் வரை கைகளை நீட்டித் துழவி
மீண்டும் பின்னே உள்ளுக் கிழுத்தது.
திரும்பவும் மறுஅலை அதையே செய்தது.
திரும்பத் திரும்பப் புதிய அலைகள்
வந்து போயின. செய்ததே செய்தன.
சித்தத் திரைக்குப் பின்னே இருந்து
தலையை நீட்டிப் பார்த்தது வெறுமை.
தப்பித் தோடவே திரும்பினேன்.
ஆகா! அரசு விளம்பரம்.
‘அரிய நூல்கள். அரிய வாய்ப்பு!
அந்தவூர் இந்தவூர் எங்கெங் கிருந்தும்
அந்தப் பதிப்பகம் இந்தப் பதிப்பகம்
அந்த மொழியில் இந்த மொழியில்
இத்தனை இத்தனைத் தலைப்புகள்
இவரவர் எழுதிய இந்தநூல் அந்தநூல்.. ‘
விடுவேனா ? நாடினேன். தெரிந்தவர் தேடி
வணக்கம் பண்ணியும் தலையைச் சாய்த்து
‘விஷ் ‘ஷைச் செய்தும் அவரவர்க்கு ஏற்ப,
காலே அரையே முக்காலே மூணுவீசம்
பதவிக்கு ஏற்பவே புன்னகை வீசியும்
நகர்ந்தேன். அவ்வப் பொழுது காட்சியில்
பரப்பிய புத்தகம் பற்பல பார்த்தேன்.
அரைத்த மாவையே அரைத்தவை, அச்சில்
அழகு பூண்டுஉள் அடக்கம் அற்றவை,
கடைசி அட்டையில் கவனம் வைத்துநூல்
ஆசான் புகழை அவரே சொன்னவை,
தமிழைப் படித்த தகுதியால்
அவரவர் விரும்பிய வண்ணம் வகுத்த
திருக்குறள் உரைகள், சிரிப்பு
வரவே கூடாதெனக் கங்கணம் கட்டி
அங்கங் கிருந்து ‘அடித்த ‘
‘ஜோக் ‘குகள் நிரம்பிய ‘சொதசொத ‘ ‘புக் ‘குகள்,
ஜாதகம் சமையல் வாஸ்து பெங்சூயி
எண்ணியல் பெயரியல் மணியியல்..
எண்ணவே இயலா அத்தனை ‘டைட்டில் ‘கள்.
‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும் ? ‘
என்பது போல எதைவாங் குவது
எதைத்தான் படிப்பது ? குழப்பம்.
சித்தத் திரைக்குப் பின்னே இருந்து
தலையை மட்டும் அல்ல;
உடம்பையே வெளியில் கொண்டு வந்து
‘பப்ப ரப்ப ‘ எனக் கால்களைப் பரப்பி,
‘இப்போ தென்ன செய்வாய் மானுடா ?! ‘
என்றது வெறுமை. என்னதான் செய்வேன்..
‘வெடுக் ‘கெனக் கால்களில் விழுந்து,தாள் பணிந்தேன்.
சிரித்தது. பரிவாய்ப் பார்த்தது. சொன்னது.
‘நானே மையம். என்னைத் தவிர்க்க
உனது முன்னோர் பாடுகள் பட்டதால்,
காணும் சிற்பம் கேட்கும் இசைகள்
பூணும் புதுப்புதுப் புனைவுகள்
அறிவியல் வசதிகள் எல்லாம் வந்தன.
என்னைத் தவிர்க்க விரும்பினால்
போன போக்கில் போகும் போக்கை
விடுத்து ஆக்க வழிக்குத் திரும்பு! ‘
என்றது. ‘கற்பனை அடா,இது! ‘
என்கின் றீர்களா ? என்னதான் செய்வது!
இருக்கலாம். ஆனால் ஒன்றும்
அடாத கற்பனை அல்லவே ?
****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

சேவியர்



பெறுதல்

ஆயிரம் பேர்
கூடியிருக்கும் அவையில்
எனக்குப்
பொருளுதவி செய்யாதே.

விரும்பினால்
என் குடிசைக்கு வந்து
யாருமறியாமல் தந்து போ
நீ
தரவிரும்பியவற்றை.
கனம் குறைந்திருந்தாலும்
மனம் நிறையும் எனக்கு.

உன்னுடைய
அன்பளிப்புகளை
ஆலய முற்றங்களில்
கூனிக் குறுகிப் பெற்றுக் கொள்ள
வலிக்கிறது.

நான்
ஏழையென்பதை
பிரகடனப் படுத்துவதற்காய்
பொதுக்கூட்டங்கள்
போடாதே.

பசியை விட
பட்டினியை விட
சாவை விடக் கொடுமையானது
எல்லோரையும் விட
நான் தாழ்ந்திருப்பதாய்
நீ
அறிவிப்புக் கூட்டம் நடத்துவது.

எனக்குத் தருவதாய்
சொல்லிக் கொள்கிறாய்.
ஆனால்
தருவதை விட
அதிக மதிப்புள்ள
கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்.

போகும் போது அதற்காய்
சின்னதாய்
ஒரு
நன்றியாவது சொல்லி விட்டுப் போ.

துளி

நீளமான
ஒரு
மழைத்துளி போல
அகல் விளக்கில் எரிகிறது
ஒரு துளி நெருப்பு.

பதறியோடும் பறவைக்கூடம் போல
நாலாபக்கமும்
சிதறி ஓடக் காத்திருக்கிறது
அந்த
ஒரு துளிக்குள்
ஒளிந்திருக்கும் ஏழ் கடல்.

பெருமழையின்
முதல் துளி
அழகாய் தான் விழுகிறது.

நாற்படை போல
வெறித்தனமாய் ஓடி
நாலா பக்கமும் முற்றுகையிட்டு
ஊரைக்
கைப்பற்றிக் கொள்ளாதவரை

திரிக்கு மேல்
அமைதியாய் அமர்ந்திருக்கும்
சுடரைப் போல
மழை அழகாய் தான்
இருக்கிறது.

சிறு காற்றுக்கே
அணையக் கூடுமெனினும்
ஏதாவது ஒரு கரம்
அதை
ஆதரவாய்ப் பொத்திக் கொள்கிறது.

ஏதாவது
ஒரு உள்ளங்கை
ஆனந்தமாய் பெற்றுக் கொள்கிறது.

ஒரு
துளியாய் இருக்க விடுங்கள்
என்னை.
விதிக்கப்பட்ட
துளி நேர வாழ்க்கையில்.

உனது குரல்

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

அழுத்தக் கோடுகள்

தேவதைகளின்
சிறகசைப்பில் சரிசெய்ய
இயலாதவற்றை
ராச்சசிகளின் நகக்கீறல்கள்
ரட்சிப்பதில்லை.

தேவதைச் சாரலில்
மோட்சம் அடையாதவர்கள்
பேய்மழையின் கைபிடித்து
பரமண்டலங்களுக்குப்
பயணிப்பதும் நிச்சயமில்லை.

மெல்லினங்களின்
இறகுகளில் தான்
பறந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வல்லினங்களின்
பளு அறுத்து வீசிவிடின்
மனசும்
இலேசாகிப் பறக்கத் துவங்கும்.

எனினும்…
இறக்க இறக்க
உயிர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன
எறும்பின் முதுகில்
எந்திரக் கற்கள்.

எத்தனை தான்
தேவாலயப் பீடங்களிலும்
பலிபீடங்களிலும்
கண்ணீர்த் துளிகள்
இரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும்

வறுமைக் கோட்டை
அழிக்க இயலாத
மழை
பொழிந்து கொண்டிருந்தாலென்ன
அழிந்து கொண்டிருந்தால் தான் என்ன ?

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கவிஞர் புகாரி


கண்ணீர் மரம்

நானோர்
கண்ணீர் மரம்

என்
கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில்
ஓடுவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆகையினாலேயே
என் வாழ்க்கைப் பயண நிமிடங்கள்
இலையுதிர் காலங்களாய் மட்டுமே
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன

என் ஞாபக முடிச்சுகள்
அவ்வப்போது அவிழ்க்கப்பட்டு
கண் நதிகளில்
வெப்பக் கண்ணீராய்ப்
பிரவாகமெடுக்கும்

மனமேகங்கள்
அடிக்கடி
ஏமாற்ற மரண அடிகளால்
கறுத்துக் கறுத்து
கண்ணீர்க் கடுமழை
பொழியும்

என்
கற்பனை வசந்தங்களின்
தீவிர நினைவுகள்
தாமே விதைத்துக் கொண்டு
உப்புப் பூக்களைக்
கண் காம்புகளிலிருந்து
கன்ன மாடத்தில்
கணக்கின்றி உதிர்க்கும்

என் கண்புறாக்கள்
கனவுகளை அடைகாத்துக்
கண்ணீர்க் குஞ்சுகளைப்
பொரித்துக் கொண்டே
இருக்கும்

ஆம்…
நானோர்
கண்ணீர் மரம்!

என்
கண் கிளைகளின்
கண்ணிர் இலைகளில்
ஒடுவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆகையினாலேயே
என் கண்ணீருக்கு நான்
கணக்கற்ற
நன்றி சொல்கிறேன்


ஒரே ஒரு வழிதான்

உன்னைப் பிரிந்து நான்
தூரமாய்ச் செல்லச் செல்ல
மனதுக்குள் மூச்சு முட்டும்
ஏதோ ஒரு பாரம் தன் எடையை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

உன் நினைவுகள்
ஒன்றிரண்டாய் வந்து வந்து
உசுப்பிவிட்டது போக
இன்று மாநாடே கூட்டி
வா… வா… என்றழைக்கும்
மரண வாயிலைத் திறந்து விடுகின்றன

என் மூச்சுக் காற்று என்னை
வாழவைத்ததெல்லாம் பழைய கதை
இன்று அந்த மூச்சுக் காற்றே
என் மூச்சை நிறுத்த வந்த
நெருப்புக் காற்றாகி விட்டது

இப்போதய என் விழிகள்
திறந்தபோதும் நீ மூடிய போதும் நீ

இன்று தெரிந்து கொண்டேன்
நான் என்னை மொத்தமாகவே உன்னிடம்
இழந்து விட்டேன் என்ற உண்மையை

நீயென் அருகில் இருந்த போது
திடாரென்று விரித்துக்கொண்ட
என் சிறகுகளுக்குத்தாம்
எத்துணை வலிமை

என்னைத் தூக்கிக் கொண்டு
நான் கண்டறியாத ஏதேதோ
சொர்க்க வெளிகளிலெல்லாம்
அலைந்தனவே

இன்று தேடிப் பார்த்து
சிறகுகளைக் காணாத என் பார்வை
நிலைகுத்தி நிற்கிறது

விசித்திரம் தான்
உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது

ஆச்சரியம்தான்
உன் விழிகளின் ஒளிக்கீற்று
என்னை இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து தாக்குவது

இவற்றிலிருந்து
தப்பித்துக் கொள்ள என்ன வழி ?

ஒரே ஒரு வழிதான்
எனக்குத் தெரிகிறது

அன்பே
நீளமான உன் கார் கூந்தலை
என்பால் அவிழ்த்துவிடு
அதன் நுனியில் தொற்றிக்கொண்டு
மீண்டும் நான் உன்
அந்தப்புரத்துக்குள்ளேயே
வந்து விழுந்துவிடுகிறேன்.

—-

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

சேவியர்


கலையாத சுவடுகள்

புதிய வெளிச்சங்கள்
பழைய பிரமிப்புகளை
புறக்கணிப்பின்
பக்கமாய்
புரட்டிப் போடுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தைத்
துவங்குகையில்
அழகாய்த் தெரிந்த
சென்னை விமான நிலையம்
திரும்பி வருகையில்
அழகின்றிக் கிடந்தது.

அனுமன் தோள்
சஞ்சீவி மலைபோல,
காலம் தன் தோளில்
பல
வருடங்களைச்
சுருட்டிக் கட்டிப் பறந்தபின்

எனக்கு
ஆனா ஆவன்னா அறிமுகப்படுத்திய
ஆரம்பப் பாடசாலைக்குச்
சென்றிருந்தேன்.

கடலெனத் தெரிந்த
பள்ளி மைதானம்
இப்போது
கையளவாய்த் தோன்றியது.

பெரிதாய்த் தெரிந்த
பெஞ்சுகள்
முழங்காலின் பாதியை
எட்டிப் பிடிக்க முயன்று
தோற்றுக் கிடந்தன.

அந்த பெரிய மரமும்,
கழிப்பறையும்
வராண்டாவும்
வித்தையில் சுருங்கிய
விளையாட்டுப் பொருட்களாய்த்
தெரிந்தன.

வாழ்வின் நிலையாமை குறித்த
நிர்ப்பந்த எண்ணங்கள்
நெட்டித் தள்ள
திரும்பினேன்.

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
கதர்வேட்டியில்
கணக்கு வாத்தியார்.
சற்றும் உயரம் குறையாமல்.


தோழி

நீ வருவதாகச் சொன்ன
அந்த நாளின்
இமைகள் பிரிந்திருந்த
இரவில்,
நீ வரவேயில்லை.

பின்னிரவுப் பொழுதொன்றில்
யாரோ
வீட்டைத் தட்டும்
ஓசை கேட்க,

வெளியே
உனக்குப் பதிலாய்
உற்சாகமாய் நின்றிருந்தாள்
உன் தோழி.

தயக்கங்கள் ஏதுமின்றி
சட்டென்று தழுவி
என்
உடலெங்கும் நழுவினாள்.

அவளிடம் இருந்த
இரவு நேர வெட்கத்தின்
வசீகரத்தின்
என்
காத்திருத்தலில் தவிப்பெல்லாம்
கரையத் துவங்கியது.

கரைந்து வழிந்து கொண்டிருந்தேன்
நான்
அவளது காலடிகளில்.

சண்டையிடவோ,
கோபித்துக் கொள்ளவோ
அவளிடம் ஏதுமிருக்கவில்லை.
பிரியும் வரை
இறுக்கமாய் நின்றிருப்பதைத் தவிர.

அன்று நிம்மதியாய்த்
தூங்கினேன்.
இனிமேல்
உன் தோழியை
அடிக்கடி அனுப்பி வை
என்னும் டைரிக் குறிப்போடு.

சட்டென்று சன்னல் திறந்து
நன்றி சொல்லி
கையசைத்து
சாரல் தெரித்துச் சிரிக்கிறாள்
தோழி.


வினாடி

ஒவ்வோர் வினாடியை
இழக்கும் போதும்
கவலையாய் இருக்கிறது.

ஏதோ ஒரு
ஆனந்தம் என்
கைகளை விட்டு விட்டு
விடைபெற்றுச் செல்வதாய்.

ஏதோ ஒரு
நிறைவு
என்னை
நிறைவில்லாமல் செய்வதாய்,

ஏதோ ஓர்
மகிழ்வின் ஈரத் துளி
உலர்ந்து போவதாய்
வலிக்கிறது.

அந்த உணர்வுகளுக்குள்
புரளுகையில்
கடந்து போகின்றன
மேலும் சில வினாடிகள்.

ஒவ்வோர் வினாடியையும்
இழுக்க வேண்டும்
நிமிடமாய்
மணியாய்
காலமாய்…

அந்த வினாடிக்குள்
வாழவேண்டும்
என் மழலையில்
அழைத்தல் ஒலிக்குள் அடைபட்டு.

விலகிப் போகாத
வினாடிகள் ஒன்று சேர்ந்து
என்னைச் சுற்றி
வலை பின்னிக் கொள்ளவேண்டும்.

வினாடிகள்
விடைபெற வேண்டாம்.
நான்
விடைபெற்றுச் செல்லும் வரை.

எனக்கு
ஒரு வினாடி வாழ்க்கையே
போதும்.
மிகப் பெரியதாய்.

சேவியர்

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

சேவியர்


கலைதல்

காலையில்
அங்கே இருந்த நிழல்
மாலையில்
அங்கே இல்லை.

காலையில்
மெளனமாய் நின்றிருந்த
காற்று
இப்போது
அவ்விடத்தில் இல்லை.

அப்போது பார்த்த
ஓரிரு பல்லிகளை
இப்போது
காணவில்லை

காலையில்
வீட்டுக்குள் கிடந்த
நான்கைந்து துண்டு
வெயில்கள் கூட
வெளியேறியிருக்கின்றன.

ஆனாலும்
கதவு திறந்து நுழைகையில்
நினைத்துக் கொள்கிறோம்
எல்லாம்
அப்படியே இருக்கின்றன.


இரகசியம்

உன்னிடம்
இரகசியங்கள்
இல்லையென்றே கருதியிருந்தேன்
அக்கணம் வரை.

நீ
சொல்லியவை எல்லாமே
இரகசியங்கள்
என்றும்
பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும்
அக்கணம் தான்
எனக்கு அறிவித்தது.

இரகசியங்கள்
இரசிப்பதற்கானவை அல்ல
அவை
குருதி தோய்ந்த
வலிகள் என்பதையும்
அக்கணமே தெரிவித்தது எனக்கு.

இனிமேல்
என்னிடம் சொல்ல
உனக்கு
இரகசியங்கள் இருக்கப் போவதில்லை.

நானே
உனக்கு ஓர்
இரகசியமாகி விட்ட பிறகு.


அப்பாவே தான்

அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.

மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.


புதிதென்று ஏதுமில்லை

‘இன்று என்ன புதிதாய் ? ‘
என்று
ஆரம்பித்தே பழகி விட்டாய்.

பழையவற்றை
அசைபோட யாருக்கும்
நேரமிருப்பதில்லை.
தேவையானதெல்லாம்
புதியவை மட்டுமே.

அந்தப் புதியவற்றின்
வால் பிடித்துக்
கீழிறங்கினால்
பழைய படிக்கட்டுகள்
இடறுகின்றன.

எப்போதோ
புதியதாய் விசாரிக்கப்பட்ட
பழையவை.

எழுதி முடித்ததும்
பழையதாய்ப் போய்விடும்
இந்த
கவிதை உட்பட
எதுவுமில்லை என்னிடம்
புதியதாய்.


நானில்லாத பொழுதுகள்

பின்னாலிருந்து
கண்ணைப் பொத்திச் சிரிக்கிறது
உன் பிரியம்.

உன் பெயரைச் சொல்ல
எனக்குச்
சங்கடம் நேர்வதில்லை
எப்போதும்.

என் கண்ணைப் பொத்தும்
உரிமை
உனக்கே உரியது
என்பதால் மட்டுமல்ல.

உன்
பெயரை உரக்கச் சொல்லும்
வாய்ப்பு
அவ்வப்போது தான்
வாய்க்கிறது
என்பதற்காகவும் தான்.


Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

கி சீராளன்


(1)
எனக்கான அரிசியில்
என்பெயரெழுது இறைவா
பசிக்கிறது.
(2)
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை நாட்டினில் – பாரதி
நீ சொன்னசொல் பலித்ததில்லை
என்றுமிந்த பூமியில்
செல்வந்தன் ஒப்பவில்லை
ஒருநாளும் உன்மொழி.
காசின்றி கப்பல்கள் ஓடவில்லை
விண்முட்டும் மாளிகை கட்டவில்லை
சொகுசு காாாார்கள் மாயமில்லை
மந்திரத்தில் மாங்காய் விளைவதூமிலை.
கொள்ளையடிக்கும் காசினில் இங்கே
சொர்க்கத்தை காட்டுவம் வாரீர்
இந்திர சுகமிங்கு தோற்கும்
நட்சத்திர விடுதிகள் பாரீர்
எளிமையென்றொரு சொல்லே
ஏழ்மைக்கு மட்டும்தான் இங்கே.
பகட்டு பீதாம்பரங்கள் தானே
இந்தப் பாரினை ஆளுது காணீர்
ஏழு தலைமுறையல்ல – சேர்ந்த ப ணம்
ஏழுலகில் கொடி நாட்டும்.
மொட்டை வெயிலினில் வியர்த்து
வெட்ட வெளியினில் கூடும்
பஞ்சை பராரியை கேளும்
தின்னும் ஓருருண்டை சோறு – அவர்
தொண்டைக்கு மட்டுமே போறும்.
தத்தத்தரிகிட தித்தோம்
தத்தத்தரிகிட தித்தோம்
நித்தம் சோற்றுகிங்கே ததிங்கின தத்தோம்
ஏழைகள் யாருமில்லை என்றீர்
நாங்கள் எங்கே மாள்வது கேளீர்
காசாய் தின்னுது ஒரு கூட்டம்
அவர் கட்டையில போனாலும்
வேண்டுமொரு கூட்டம்.
கடைவழிக்கு வாராது காண் வேதாந்தம்
வெட்டிப் பேச்சோடு போயாச்சு
உள்ளவரை தூற்றிக்கொள் நியதியாச்சு
பிறந்தபின் சாவதற்குள் மிச்சம் எதுவென்றால்
அஃதிங்கே வாழ்ந்த சுகமென்றே சொல்லிடுவார்
நாங்கள் வாழ்ந்தே சாகின்றோம் என் றவரே
மற்றவர் குருதி மஞ்சள் குளிக்கின்றார்.
காலம் காலமாய் சேர்த்தாச்சு
அவன் பிள்ளைக்கும் சேர்த்து வச்சாச்சு
என்பிள்ளைக்கும் சேர்த்து வச்சேனே
ஒரு திருவோடு மட்டும் அவன் சொத்தாச்சு.
பாரதி உன்சொல் உண்மையில்லை
ஏழையென்றோரும் ஒழியவில்லை
செல்வ ஏறியவன் உன்சொ ல் கேட்பதில்லை.
கி. சீராளன்
punnagaithozhan@yahoo.com

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்

கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

அன்பாதவன்


வாழ்வின் ருசி
பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம்
காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி
பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள்
ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்
வறண்ட மனதில் மழைத்துளியாய்/வீழ்கிறதுன் புன்னகை/
கவிழ்ந்த இருள் போர்த்தி/இருண்டிருக்கும் என்வானில்/ஒளி பொருத்துகிறாய்
நீ இசைநீஒளிநீபுதிர்நீபுன்னகை
உனக்கு நானும் எனக்கு நீயுமாக/ஊட்டிக்கொள்வோம்/வாழ்வின் ருசியை.


பெருநகரப்பிசாசு
1.வேகமாய் ஊர்கின்றன மின்வரட்டைகள்/அட்ச தீர்க்க இரும்பு நரம்புகளில்/பெருநகரத்தை இணைத்து
கூரையிலும் பயணித்து/குவிந்து நிறைந்திருக்கும் பெருங்கூட்டம்
பெருங்குவியலூடே நிற்கிறேன்/துணையற்றத் தனிமையை/விழுங்கி செரித்து.

2.பாதங்கள் அனுமதித்த இடைவெளியில் //செருகிக்கொள்வேன்/கைப்பிடியிலும் தொங்கி வருவேன்/
மூச்சிருக்கும் துணிக்கடை பொம்மையாய்

ஏற்றி இறக்கித் தள்ளும்/இயந்திரக் கூட்டம்/
கண்மூடிப் பயணிணிணித்து திறக்க/கோப்புகளுடன் வரவேற்கும் அலுவலகம்

3.மாநகரச் சதைக்கோளத்தாக்குதலில்/பயனற்று வழியும்/சக்தி

4.கால்களில் சிறகு முளைத்தவனுக்கு/கூடடையும்போது/வரமறுக்கும் தூக்கம்/உளைச்சலைத்தணிணிக்க உதவும்/உறக்க வில்லைகள்

5.ஒரு ராட்சச மிருகத்தைப்போல/விழுங்க யத்தனிக்கும்/பெருநகரப்பிடியிலிருந்து தப்பிக்க/லாகிரி நுகர்ந்து
சுய மைதுன த்துணையுடன் தூங்கி/விழித்து வாசல் திறக்க/
கதவருகே காத்துநிற்கும் வேகம்.


மூன்று கவிதைகள்
# 1
பால்வீதியின் பரந்த வெளியில் மிதந்து
நட்சத்திரங்களின் இடைவெளியில் புகுந்து
திசைகளின் ஒளி படாத பிரதேசங்களுக்கெல்லாம்
பிரவேசிக்க கனாக்கண்ட பறவையொன்று அமர்ந்திருக்கிறது
சிறகுகள் வெட்டியெறியப்பட்டு
காறி உமிழ்ந்தேன்
கால்களைப் பிணைத்த கனத்த சங்கிலியின் மேல்
நிசப்தப் பட்சியின் நெற்றியில் முத்தமிட்டு.
# 2
ஞாபகங்கொள்ளவியலா மாநகரின் சராசரிகளுக்குள்
வித்யாசமானதாய் அழைத்ததொரு
கருத்த மிருகம்

அகண்ட மார்பும் வலிய புஜங்களும்
மிருக பலம் சொல்பவை
கண்களுக்குள் கனவுகள் பலதயும் அடைகாத்ததின்
உரையாடல்களில் ததும்பும் நகைச்சுவை

‘இயல்பே இதுதானோ… ? ‘
‘எனக்குமுண்டு எனக்கேயெனக்கான தனீச்சோகங்கள் ‘
-கம்மியக்குரலில் மெல்லியப் புன்னகை மிளிர

காலாற நடக்கவிரும்பிய
வலிய மிருகம் கட்டப்பட்டிருந்தது
பல்வேறு முளையடித்த கயிறுகளில் நகரவுமியலாமல்

நம்பிக்கையோடு உரையாடுகிறது மிருகம்
கண்களில் கனவுகள் மின்ன.

# 3
தனித்திருந்தவன் உடலைப்
பிணைத்திருக்கிறது நாகமொன்று

தீண்டத் தீண்ட பரவுகிறது
இன்பவிஷம்

ஒவ்வொருக் கொத்தலும் வெவ்வேறு வகையாக
குருதி வெளியேற்றி
குடியேறியது ஆலகாலம்

அயர்ச்சியாய் இருக்கிறது மீண்டுத் திரும்புதல்
என சலித்த நாகத்தை
அணியாய் தரித்தேன் சிவனாய்


கொக்கு

இரவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தவனை
தொட்டெழுப்பியது மாயக்கரமொன்று

வளைக்கரத்தின் ஸ்பரிச இசையில்
தனை மறந்தவன் சுக மயக்கத்தில்

நகத்தீண்டலில் சிலிர்க்குமுடலை கரமேந்தித்
தழுவுகையில் கலக்கிறது உயிர்க்கலவை

மூச்சனலில் உருகி வழியும் காமம்
வியர்வை நதியாய்

பேசுகிறோம்;பிதற்றுகிறோம்;பித்தமென உளறுகிறோம்
அர்த்தங்களை தொலைத்த வார்த்தைகளைத் தேடிச் செதுக்கி
சிற்பமாக்கும் முயற்சி;அரூபச்சிற்பம்

ஏதொ ஒரு சுழலுக்குள்
இழுத்துப்போகிறது உருவமற்றக்குரல்

நீந்தி விளையாடலில் நேரம் போவதறியாமல்
சேவல் கூவத் திடுக்கிட்டு விலகி நாணம் குழைய
தழுவுகிறாள் காற்றாய்
அணைத்தக்களைப்பில் ஆனந்த அயர்ச்சி

கூடலை முடித்த திருப்தியில்
களைத்துறங்கிய நிர்வாண உடலெங்கும்
முத்தமுத்திரைகள்

வெளிச்ச விடியலில் கலைந்த தாள்களெங்கும்
ஈரம் அழித்த கவிதைகள்

தவமிருக்கிறோம் மற்றுமொரு இரவுக்கு
புதியக் கவிதைகளுக்காய்.


காத்திருக்கிறேன்

விடுமுறையில் வரும்போதெல்லாம்
கலைத்துப்போட்டுவிடுகிறாய் வலியக் காற்றைப்போல

மூழ்கடித்து விடுகிறாய்
சந்தோஷப்-பெருமழையில்
மூச்சுத்திணறிப்போகிறது ஆனந்தத்தில்

தாழ்வாரம் படுக்கையறை முற்றம்
குளியலறை சமையலறையென
எங்கும் இரைந்து கிடக்கிறதுன்
ஞாபகங்கள்

எது எப்போதெனத் தெரியா ரகஸ்யமே
உனதுசுவா ‘ரஸ்யம்
கொஞ்சம்-கொஞ்சமா ‘ய் முயற்சித்து
ஒழுங்குக்கு மீண்டு வரும்போது
தலைக்காட்டுகிறதுன் அடுத்த விடுமுறை

2.

மீறல்சுகம்
மின்தடை நேரங்களில் கம்பிவேலி தாண்டி குதித்தோடுகிறேன் என் ப்ரியத் தாவரம் நோ ‘க்கி
காவலனை ஏமாற்றி காத்திருக்கும் எதிர்பா ‘ர்த்து
மின்சாரமோ காவலனோ வந்துவிட்டால் உயிர்ப் போ ‘கும்
மீறல்களில்தானிருக்கு மிகுசுகம்
3####3

jpashivammumbai@rediff.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.

கவிதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

கீதா சங்கர்


இதுவும் கடந்து போகும்

இன்று வாழ்கிறேன்;
வெடி குண்டாலோ
வெம்பிய இயற்கையாலோ
இறக்காமல்…!!

வாழ்வதற்கு
வைராக்கியத்தை விட
வரம் தேவையாகிப்போனது….

இறப்பை
இறைவன் முடிவெடுத்தது போய்..
அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது…!

மாண்புமிகு பூமியில்
மதமும் மதம் சார்ந்த

மனக் கலவரங்களும்,
மன்னிக்க முடியாப் போர்களும்..
மகிழ்வழிந்த வாழ்க்கைகளும்..
பேயாய் நாயாய் மாறிப்போன
மனிதர்களும்..
தேவைக்கே போராடும்
தேய்மானங்களும்..
தேவைக்கதிகமாய்
தேக்கி வைத்த தேரைகளும்….
நிரம்பி வழிகின்றன..

இலையுதிர் கால மரங்களாய்..
இவர்களை..
இங்கிதமாய், உதிர்த்து விட்டு,
மனிதம் மட்டுமே
மனங்களான
மா மனிதர்கள்
மண்ணில் தோன்றும் போது
புதியதாய் பிறக்கும் உலகு.

ஜனன இரத்தம் தவிர
ஜனங்களின் இரத்தம்
ஜனனியில் சிந்தக்கூடாது…

ஆணும் பெண்ணும்
ஆக இரண்டு மதம்..

நரகமாய் போன நகரங்களை
நாகரீகமாய் மாற்றவும்..
நாசகார சக்திகளை
நாறிப்போகச் செய்யவும்….

மண்ணும் பொன்னுமான
மாய வலையில்
மயங்கிப்போகாமல்,
மடக்கிப் போட
மனது வைப்போம்….

எண் சாண் வயிறு
ஏட்டுக் கல்வி
எட்டு முழ வேட்டி
எட்டடி நிலம்
போதாதா வாழ்வதற்கு….

ஆதிகாலம் போல,
கதிரவனைக் கை தொழுதால்,
பொதுவாகப் போய்விடும்!
புண்ணிய பூமியில்
பிரச்சனை எழாது.

உலகத்தின் வரைபடத்தில்
எல்லைக் கோடுகளை
எடுத்து விட்டால்….
ஓருலகமாய் வாழ்ந்திடுவோம்….

நம்பிக்கை இருக்கிறது….

இதுவும் கடந்து போகும்
புதியதோர் உலகம்
இவ்வுலகம் காணும்.


யுத்தம்

வெறிக்கைகளால்
பலரது ரத்த துளிகளை
தெறிக்கச் செய்து
பல பெண்களின்
நெற்றிப் பொட்டுகளை
இழக்கச் செய்து
தான் பொட்டிட்டுக் கொண்டது
யுத்தம்!!

எழுதக் கூடாத வாழ்க்கையை
எம் பெண்களுக்கு
எழுதி விட்டு,
ஏடுகளில்
எழுத்தாகிப்போனது.

அப்போதெல்லாம் இயற்கை
சொல்லாமல் செய்த நாசத்தை
இப்போதோ யுத்தம்
சொல்லி விட்டு செய்கிறது.

மனிதர்களின்
மன்னிக்கும் மனதை
மடக்கிப் போட்டுக் கொண்டு
மாசு படுத்திச் செல்கிறது.

மனிதன்
யுத்தத்தில் வென்றது போய்,
இப்போது
யுத்தமில்லா உலகை
யுக்தியுடன் வெல்ல
யக்ஞும் செய்ய வேண்டும்!

போதும்
யுத்தத்திற்குக் கூழைக்
கும்பிடு இட்டது.
யுத்தத்தைக் காலால்
எட்டி உதைக்கும்
காலம் வந்து விட்டது.

யுத்தமே!
மனித யுத்தத்திற்கு
சித்தமாயிரு!
மனிதன்
விழித்து விட்டான்.


எனக்கு கொஞ்சம் சோகம் வேண்டும்

சோகத்திலும் ஒருசுகம் உண்டு.

மனதில் மெல்லிய ராகம் இசைக்க
வாழ்வில் சோகமும் சுகமுமாக….
மனிதர்கள் நடுவில்.. ..சுவை உண்டு.
பிரச்னைகள் வரும் போது
ஓடிய கால் நின்று
ஓரு நிலையாய்
மனம் குவிந்து சீராகும்.
இது நாள் தேடிய
நண்பனும் எதிரியும்
தெளிவாகும்.

நேர்க் கோட்டில் போகும்
நிர்ணயித்த வாழ்க்கையை
நிிறுத்தி வைக்கும்
கடிவாளக் குதிரை
கண்ணை சுழற்றி பார்க்கும்.
இறந்த, நிகழ், எதிர்
காலங்கள் அலசப்படும்.

பிரச்னைகளே இல்லாத போது
பயம் வரும்-
பெரிதாய் என்ன வருமோ என்று.

தினசரி உணவு
செரிப்பதற்கு விரதம்
தினசரி நடைமுறை
சரிபடுத்த சோகம்.

நிழலைப் போல
சோகம்- நம்மோடு
இழைந்தே இருக்கும்.

இரவுக்கு பின் பகலாய்
சோகத்திற்கு பின் சுகத்தை
மனம் எதிர்நோக்கும்.
குளிா; கால வெயிலாய்
அவ்வபோது தேவை
சோகம் வாழ்க்கையில்.

புயலுக்கு பின் அமைதியாய்
சோகத்திற்கு பின் மனம்
நிதானம் காக்கும்.
அலசிஆராய்ந்து முடிவெடுக்கும்.
பழைய சோகம் நினைத்து பார்த்து
பரிதவிக்கும்.
அனுபவத்தில் பாடம் கற்கும்.
திரும்ப தவறு
நேராமல் தடுக்கும்.
கர்வம் கொண்ட போதெல்லாம்
இறந்த கால கஷ்டம்
மறக்காமல் நினைவு வரும்.
யதார்த்தம் தரும்.

வாழ்க்கையை உணர்த்தும்
இந்த சோகம் எனக்கு பிடிக்கும்.
நிதானம் உணர்த்தும்
இந்த சோகம்
எனக்கு வேண்டும்-அவ்வப்போது
என்னை உணர்த்த…


ஆயிரம் முகம் உடையாள்..

மங்கையராய் பிறப்பதற்கு
மாதவம் செய்துள்ளோம்!!
முந்தைய மாதர்களை
முந்தி வருகிறோம்!!

பள்ளிப்படிப்புக்கு
புள்ளி வைத்தது
பழைய கதையாயிற்று.

பெண்ணைப் பெற்றால்
பாரமாய் எண்ணியது
மண் மூடிப்போயாச்சு.

புத்திசாலி பெறுவாளாம்
தலைச்சனை பெண்ணாய்.
நிஜம் தான்!
அலுவலகத்தில் அன்னை
ஆழ்ந்து பணியாற்ற
அன்னையாயிருந்து
உடன் பிறந்தவர்களை
கவனிக்கிறாளே!!

பத்து வயதில் பையன்கள்
பந்து விளையாட
கண்மணிகளோ
கணிணியில்
கலக்குகிறார்கள்..

பூப்பெய்தும் போதே
பூ விழியாள்
குறிக்கோளை
குறித்துக்கொள்கிறாள்!!
டாக்டரையா பொறியாளரையா ?
எவரைத்திருமணம் செய்வதென்பதல்ல.

டாக்டராவதா ? பொறியாளராவதா ? ?
பொறித்துக் கொள்கிறாள்
பெண்- பொன்மனதில்.

ஈரெட்டு வயதில்
அடுப்படியில் கால்வைத்தது
அந்தக்காலம்.
பத்து வயதிலேயே
அடுப்படியின்
அடிப்படையை
கற்றுத் தெளிகிறாள்;.

பாட்டு, பரதம்
கைவினை என-
தெரியாதது
இல்லையென ஆயிற்று.
இருபத்துநான்குமணி
போதாமல் போயிற்று.

நுழைவுத்தேர்விலிருந்து
விண்ணப்பபடிவம் வரை
தனியாளாய்த்
தேர்ந்தெடுக்கிறாள் பெண்.

கடனாய்ப் படிக்காமல்,
கடனுக்குப் படிக்கிறாள்.
ஆம்.
கல்விக்குக் கடனை,
வங்கியில் வாங்கி,
கற்ற பின்
வேலை வாங்கி,
அடைத்து முடிக்கிறாள்.

மது, மாது, புகையென
தரிசு நிலமாய்; போகாமல்
விளைநிலமாய் ஆகிறாள்.

இப்போதெல்லாம், இவளுடைய
தகப்பனெனவும்>கணவனெனவும்
அடையாளம் காட்டிக்கொள்ள
ஆவலாயுள்ளனர்-
ஆண்கள்.

மகளெனவும் மருமகளெனவும்
சகோதரியெனவும் அண்ணியெனவும்
மனைவியெனவும் அன்னையெனவும்
அலுவலரெனவும் தோழியெனவும்
ஆயிரம் முகமாயிற்று.
எம் குலப் பெண்களுக்கு.

இரண்டு கைகளை
இணைத்து வைத்து
ஈடில்லாமல் செய்து விட்டாள்.

கல்பனா சாவ்லா, இந்திராநுாயி
வகுத்த பாதையில்
நித்தமும் பெண்கள்
சித்தமாய் போகிறார்கள்.
பெண்ணைப் பெற்றவர்கள்
பெறும் பேறு
பெற்றவர்களாகிறார்கள்.

ஆயிரம் முகமுமுண்டு
ஆயிரம் கைகளுமுண்டு
எம் பெண்களுக்கு!!


கண்ணுக்குத் தீ எழுது!

பெண்ணே!
இத்தனை நாளாய்
உன் கண்ணுக்கு
மை எழுதியது போதும்.
இனி தீ எழுதி
நீ-
பழகு!!

நெற்றிப் பொட்டில்
நிலவை தூக்கி எறி
சூரியனை வைத்துக் கொள்.!

உதட்டில் சாயம் பூசியது
போதும்.
எரிமலைக் குழம்பை
ஏற்றிக் கொள்!

வண்ணப் பூக்களை
சூடிக் கொண்டது போதும்.
அக்னி தணல்களை
தலையில் சூடு!

ஆடையுடன்
அக்னிக் கவசத்தையும்
அணிந்து கொள்!

பிறந்த பெண் குழந்தைக்கு
பெரிய விழி வேணுமென
மையிட்டு அழகு செய்து
ஏழு வயதில்
காம வேட்டைக்கு
பலியிட்டது போதும்.

இனி.
பெண்ணுக்கு பிறந்தது முதலே
ரெளத்திரம் பழக்கு.

கண்ணுக்கு மை எழுதி
மயங்கச் செய்தது போதும்.
இனி-
கண்ணுக்கு தீ எழுதி
தீவிரமாக்கு.

தீ எழுதி
தீண்டுபவரை தீர்த்துக் கட்டு.
சுட்டெரித்து பஸ்பமாக்கு.

சகியே!
சகித்தது போதும்.
உன் சுட்டு விழிச் சுடரால்
சூரியனையும் சுட்டு விடு.
நிலவாய் தணிந்தது போதும்.
நெருப்பைக் கக்கி விடு.
வார்த்தையால்
விளையாடுபவனின் மேல்
அமிலத்தை உமிழ்.

கோலமும் ஜாலமும் பயின்றது போதும்
சிலம்பும் கராத்தேவும்
பயிற்றுக் கொடு!

உனக்கில் இருக்கும்
ஆண்மையை
வெளியில் அரங்கேற்று.

உன்னால் எதுவும்
முடியுமென
உன் திறனை
எதிலும் பங்கேற்று.

கண்ணுக்கு மை எழுதி
மயங்கச் செய்தது போதும்.
இனி-
கண்ணுக்கு தீ எழுதி
தீவிரமாக்கு.


நாணல்களாய் வாழ

கிணற்றுத் தவளைக் கூட்டம்
காதல் மணம் புரிந்தவரை
மயக்கத்தில் முடிவெடுத்ததாய்
உளறுகிறது.

தனக்குத் தானே
விலை பேசிக் கொண்ட
பேதைகள்- இவர்கள்
பேத்தித் திரிவதை
பெரிது படுத்தாதீர்கள்;

இருவர் நல்ல தனத்தையும்
முலதனமாகக் கொண்டு
நாணல்களாய் வாழுங்கள்.

உள்ளங்கள் கொள்ளையில்
உலகப் பட எல்லைகள்
உருவம் இல்லாது போகட்டும்.

அன்புப் போரில்
அகிலப் போர்
காணாமல் போகட்டும்.

ஜாதி மத இன நிற
மனித பேதம் மறைந்து
மாக்களாய் இல்லாது
மக்களாய் வாழ்ந்திட.

ஆதலினால் காதல்
செய்யுங்கள்
உலகத்தீரே!!

உயிருடன் இருப்பது
இல்லை வாழ்க்கை.
உயிர்ப்பாய் இருப்பதே
வாழ்க்கை.!!

ஆதலினால் காதல்
செய்யுங்கள்
உலகத்தீரே!!


யாதுமாகி நின்றாய் நீ!!

நான்
நானாகவேயிருந்த போது
நானாய் மட்டுமிருந்த போது
நாட்களும் நட்புகளும்
முட்களாய் உறுத்தியது.
நர்ட்காட்டி
நத்தையாய் நகர்ந்தது.
வருங்காலம் என்ன
வைத்துள்ளது ?
நெடுங்காலத்துக் கேள்வி.

வானமும் வையமும்
வாழ்ந்திடாத நாட்களும்
சுயம் அறியாத சூரியனாய்
சூம்பிய தேய் நிலவாய்
சூடர் இல்லாத தீபமாய்
சூனியமாய்ப் போயின.

வந்தாய் நீ
வானவில்லாய்!
வர்ணஜாலமானது
வாழ்க்கை !!

யதார்த்தத்தைக் கற்றேன்.
வார்த்தைகளில்
சித்தாந்தமாய்
வாழ்ந்து பார்த்தேன்.

சின்ன சின்ன
மின்னிய கவிதைகளாய்
நம் நாட்கள்!

என் வாழ்வில்
நீ வாராது போயிருந்தால்
நத்தையாய்
உள்வாங்கியிருப்பேன்.

கடலின் அலையிலும்
கருணையைக் கற்றேன்
கூட்டத்திலும் என்
வட்டத்தில் நான்
தனித்துவத்தை
நிலை நாட்ட
திடம் தந்தவன் நீ!!

நீ
கற்றுக் கொண்டாய்
கற்றுக் கொடுத்தாய்
தாயும் சேயுமாகி
தந்தையும் குருவுமாகி
யாதுமாகி நின்றாய்.!!


தொலைந்து போன என் பெயர்

எழுந்தது முதல்
எனக்காக வாழ்ந்தது
என்றோ நடந்ததாய்
எண்ணிப் பார்க்கிறேன்.

கையும் காலும் நகர்கின்றன
வாழ்க்கையும் நகர்கின்றது
மூளை மட்டும் மரத்துப் போனது
மூன்று முடிச்சு விழுந்த பிறகு!!

செய்தித்தாளை நான் படித்தால்
அதுவே தலைப்புச் செய்தியாயிற்று.
குழந்தை மலத்தை துடைக்கும் போது
ஏதோ தேதி பழைய பேப்பர்
அப்போது படிப்பேன் அதை.

மகளின் கட்டுரைப் போட்டிக்கு
மல்லுக்கட்டி எழுதித் தந்த போது
கனவாய் நினைத்தேன்
என் பெயர்
கவிதாயினியை.

பையன் உணவுப் பையை
மறந்த போது
தூக்கி ஓடிய கால்கள்
தூசி தட்டியது
என் பெயர்
ஓட்ட வீராங்கனை என்று.

அறிவியல் படம் பார்த்து
ஆசிரியை போட்ட நன்று
ஞுாபகம் படுத்தியது
என் பெயர்
ஓவியை என்று.

வீட்டு வேலையை
திட்டமிட்டு செய்திட்ட போது
அலுவலகத்தில் வாங்கிய
என் பெயர்
நல்ல திட்டமிட்டாளர் என்று.

மரத்துப் போன
மூளையும்
செல்லரித்துப் போன
இதயமும்
புத்துயிர் பெற்று
தொலைந்து போன
என் திறனைத்
தேடத் தொடங்கியது.


சும்மா இரு

என் வரியால்
ஏனையரை மாற்றுவது
எனது தொழிலன்று.

நீயும்
படிப்பது போலெல்லாம்
மாறத் துடிக்காதே.

இதுவாகவோ அதுவாகவோ
இல்லாமல்
இயல்பாய் இரு.

உலகிற்காக இதையோ
உலகிற்காக அதையோ
துறக்காதே.

நீ
நீயாயிரு.

காலையில் இறக்காமல்
கண் திறந்தால்
வாழ – இன்னுமொரு தினம்.
அதுவே நமக்கு
சுகாநுபவம்.

உன் திறமை,காலம்
கொடுத்து பெறுகிறாய்.
பணமும் பெருமையும்,
பெரும் பொழுது
உன்னை இழந்துவிட்டு

நீயே சிறந்தவனாய் இருக்க
நாயாய் சண்டையிட்டு
மூச்சு விடுவதைக் கூட
முனகித் தான் செய்கிறாய்.
முடிவில்
மனதில்
மரணமடைகிறாய்.

உலகை காப்பாற்றுவது
உன் கடனன்று.
உலகை படைத்தவர்
உன்னிப்பாய் பார்த்துக் கொள்வார்.

கற்கிறேனென
சுற்றியலைந்தது போதும்.
பற்றற்று இருக்க
பயின்று கொள்

சும்மா இரு.
அது போதும்;…

—-

geethashanker67@hotmail.com

Series Navigation

கீதா சங்கர்

கீதா சங்கர்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பாஷா


வெற்று இருக்கை

கருப்பு மழை பெய்யும் இருளில்
கண்ணாடி ஜன்னல் விலக்கி
கரம்,சிரம் புறம் நீட்டி
குழந்தையாய் குதூகலிப்பதில்லை!

கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி
கைபலகை விலக்கி தோள் உரசி
வெட்கப் புன்னகையொன்றை வீசி
வெடுக்கென முகம் திருப்புவதில்லை!

கைக்குள் கைகோர்த்து
தோள்மேல் தலைசாய்த்து -பின்
தலையெழுப்பி
காதுக்குள் காதலிப்பதாய்
கிசுகிசுவென சொல்வதில்லை!

மரம்சுற்றும் மலை பாம்பாய்
கரமெடுத்து சுற்றி
‘காதலி காதலி…. ‘ என்ற
என் பிதற்றலுக்கு
‘மடியாது(முடியாது)…. ‘ பழகுதமிழில்
கொஞ்சுவதில்லை!

உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்!


Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

கவிநயா


பாறை

பாறை பேசாதிருக்கிறது…

கட்டிப் பிடித்துக் கொண்டாடும் போதும்
முத்த மிட்டுக் கூத்தாடும் போதும்
கோபம் கொண்டு குமுறும் போதும்
கண்ணீர் விட்டுக் கதறும் போதும்
போற்றிப் பாடித் துதிக்கும் போதும்
தூற்றித் தூக்கி எறியும் போதும்
முட்டி இரத்தம் கசியும் போதும்
வலியே வாழ்வாய் ஆகும் போதும்…

அசையாதிருக்கிறது, பாறை…


நிலவும், நானும்

உன்னைப் போல் எனக்கு
உலகெங்கும் ரசிகரில்லை
உன்னைப் போல் என்னை
புலவரெல்லாம் பாடவில்லை
உன்னைப் போல் நானோ
பார்புகழும் சாட்சியில்லை
உன்னைப் போல் அழகில்
முடிசூடா ராணியில்லை
ஆயினும்
உன்னைப் போல்தான் நானும்…
முடிவில்லா வெளியினில்
தனியளாய்…

–கவிநயா

meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா

கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஆ. மணவழகன்


தோழியரே… தோழியரே!!

தோழியரே! தோழியரே!
நலமா! நீங்கள் நலமா! ?

காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிஞைகளே(! ?)..
நலமா, நீங்கள் நலமா! ?

எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!
எம் பண்பாட்டைக் காத்து நிற்க – இது
படை திரட்டும் ஒரு வேள்வி!

‘பெண்மொழி ‘ என்று சொல்லி – நீ
பெண்மையைப் படையல் வைப்பதா ?
உன்மொழி படித்த பெண்ணே – உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா ?

அச்சம் தவிர்த்து ஆடை களைந்த நிலையை – நீ
அனைவர் முன்னும் அள்ளி வைப்பதா ?
கொண்டவனோடு கொண்ட உறவை – பார்
கொறிப்பதற்குக் கொடுத்து வைப்பதா ?

கழிப்பறை வாசகத்தை – நீ
கவிதை என்று சாற்றி வைப்பதா ?
காற்றினில் கலையும் மேகத்தை
‘காலச் சுவடு ‘களில் ஏற்றி வைப்பதா ?

ஆடைக்குள் மறைக்கும் அழகை
அட்டைப் படமாய் அரங்கேற்றுவதா ?
உச்சரிக்கக் கூசும் சொல்லை
ஊரையே நீ உச்சரிக்க வைப்பதா ?

இலக்கியத்தில் இடம்பிடிக்க – பெண்
இயல்பை நீ இழக்கலாமோ ?
‘பெண்மொழி ‘ என்று சொல்லி
பேய்மொழி பிதற்றலாமோ ?

வருங்காலம் உனக்கோர் இடத்தை
எப்படியும் வகுப்பதுண்டு!
வரலாற்றைப் புரட்டிப் பார்…காந்தியோடு,
‘கோட்சே ‘யும் இருப்பதுண்டு!

சங்கத்திலும் உள்ளதென்று – பொய்யைத்
தயங்காமல் உரைக்கின்றாய்!
சங்கத்தைக் கற்றதுண்டா ? – நீ
தங்கத்தைத் தொட்டதுண்டா ?

மலர் சேரும் வண்டிற்கு
மணிநா முடித்த மாண்புண்டு!
மான் பிணை கொண்டதென்று
மருவி நின்ற பெண்ணுண்டு!

நாரையே சாட்சி என்று
நவின்ற ஒரு நங்கை உண்டு!
அறத்தோடு நிற்றலென்ற
அற்றை நாள் மாண்புண்டு!

மரத்தை மூத்தாள் என்று
மன்னவனை மறுத்தாள் உண்டு!
சங்கத்தை சாட்சிக்கிழுக்கும்
சடமே! நீ தெளிவாய் கண்டு!

பண்பு கெட்ட உன்னிடம் – நான்
பண்பாட்டைக் கேட்கவில்லை!
உனைப் படிக்கும் வெளிநாட்டார்
உரைப்பரே!
எம் பெண்டிரையும் கேவலமாய்!!

உன்னிடத்தில் ஒன்று சொல்வேன்! அதை
உன்னவர்க்கும் உரைக்க மறவாதே!
‘எழுத்தில் பரத்தமை ‘ – அதை
இனிமேலும் தொடராதே!


பறவை தொலைத்த கூடு

தேடிக் கொண்டதில்லை – உற்றார்
தேடித் தந்த உறவு!
ஆலாய் நான் தழைக்க – ஆணி
வேராய் உந்தன் வரவு!
இன்றும் என் நினைவில்…
கதவிடுக்கில் நீ நின்றதும்,
கை மட்டும் தண்ணீர் தந்ததும்!
என் ஒவ்வொரு அசைவிலும்
அர்த்தம் உணர்வாய் நீ!
உன் பனிப் பார்வையில்
பக்குவம் அடைவேன் நான்!
சொல்லிப் புரிந்ததைவிட
சொல்லாமல் தெளிந்தது
ஏராளம்… நமக்குள்!
அதட்டியும்
அடிபணிய வைப்பேன் உன்னை…
தலைகுனிந்து மவுனமாய் நிற்பாய்,
என் அதட்டலுக்கும்…அவ்வப்போது
வெளிக்காட்டும் அன்பிற்கும்!
ஆசை முளைக்கையில்
அரும்பிய காதல்,
மீசை நரைக்கையில்
முழுமை கொண்டதோ ?!
கலவி தீர்ந்த நாளில் தான் – உண்மை
காதலை நாம் கண்டுகொண்டோம்!
கருத்தினில் ஒன்றாய்
கலந்து நின்றோம்!
எழுபதைத் தாண்டிய இன்றும்கூட..
மொழிபெயர்க்கத் தெரியவில்லை,
உன் மவுனத்தையும்
என் காதலையும்!
நான் இல்லாத ‘நீ ‘ க்கு
நாளும் வகுப்பெடுத்தேன்!
‘நீ ‘ இல்லாத ‘நானை ‘
எண்ணவும் நான் மறந்தேன்!
இதோ,
என் முன்னே
கூடிழந்த பறவையாய் நீ!
உன் முன்னே
பறவையைத் தொலைத்த கூடாய் நான்!
மணக்கோலத்தில்
மணவறை ஓரத்தில்
மெட்டி மாட்ட என் விரல் நீள
‘வெடுக் ‘கென்று காலை
இழுத்துக் கொண்ட உன் வெட்கம்….
நேற்று வரை உன்னோடு!
வெறும் நினைவு மட்டும்
இன்று என்னோடு!
நீரில் மூழ்குபவனுக்குத்தான் தெரியும்,
உயிரைவிட
கோவணத்தின் அருமை!
மானம் காத்தவள் நீ! – இன்று
மண்ணிற்குத் துணையாய்…
விண்ணிற்கு உறவாய்…
‘என் முன் வாய் திறக்க மாட்டாள் ‘
மார் நிமிர்த்திச் சொன்னதுண்டு!
மவுனம் மரணத்தின் கொடிது….
மண்டியிடுகிறேன் இன்று!
தடியூன்றி நான் வந்தால் – தினமும்
கையூன்றி எழுந்து நிற்கும் நீ…
உன் கால் பிடித்துக் கலங்கும்போதும்
காணாத உறக்கத்தில்…!
கலையாத மவுனத்தில்…!
உன்னோடு வாழ்ந்ததெல்லாம் – உன்
நினைவோடு வாழ்வதா! ? – இல்லை
மண்ணோடு புதைந்து
உன்னோடு கலப்பதா ?! – அருகே
விண்மீனாய்ிி முளைப்பதா ?!
கண்மூடிப் பார்க்கிறேன்….
உள்மனத்தின் உள்ளே,
உணர்வாய்…
என் உயிராய் நீ!
கண்திறந்து பார்க்கிறேன்….
சன்னலுக்கு வெளியே
என் வானமாய்…
காணும் வண்ணமாய் நீ!


manavazhahan_arumugam@yahoo.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஏக்நாத்


சாமிகள்
….

வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிே ?கம்
நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்ட
ஆரம்பித்தேன் நான்.
….
எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது.
….
வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின்
மனைவி.
….
‘எனக்கு வல்லயம்
செஞ்சு போடுவியா ? ‘
‘திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? ‘
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் Aாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்.
….
பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
….
அருள் வந்து
எல்லோருக்கும்
குறி சொல்லும் அம்மா
எனக்கோ அக்காவுக்கோ
சொன்னதேயில்லை.
….
பூடம் தெரியாமலேயே
சாமி ஆடினான்
புதிதாக அருள் வந்த
அரைக்கொடியான் மகன்.
….
ஒவ்வொரு கொடைக்கும்
ஆடுவதற்கு ஆளின்றி
அமைதியாகவே இருக்கிறார்
உள்ளிவிளை சாமி.
….
பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?
….
egnath_raj@sifycorp.com
egnath_raj@sify.com

Series Navigation

ஏக்நாத்

ஏக்நாத்

கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

இளைய அப்துல்லாஹ்


ஆத்மார்த்தம்

—-
அவன் தர முடியாத எல்லாவற்றையும்
நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை
என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில்
நான் திளைக்கும்படிஸ

என் எல்லா உணர்வுகளின்
நேரங்கள் பவித்திரமானவை
அவை அவனுக்கானவை ஆனால்
உன்னிடம் தான் இருக்கின்றன.

என் ஆகர்ஷிப்பை நீ சுவாசமாக்கியதனால்
என்னுள் நீ பஸ்ப்பமானாய்
உன்னை என்னுள் புகுத்தி
அல்லது பத்திரப்படுத்தி
எனக்குள்ளாகவே இருத்திக்கொள்வேன்.

எக்காலத்திலும்
அவன் உன்னாக ஆக முடியாது
நெடுங்காலமான சிறுமைகளை விட
உன் நொடிப்பொழுதும் திருப்தியும்
என்னோடு ஸ்பரிசிக்கும்.

எனது சுய சிந்தனையின் தெளிவிலும்
விகர்ஷிப்பிலும் உன்னுள் என்னை
செலுத்துவதை விரும்புகிறேன்.

அது உயிரில் உயிர் மீதான
ஒருவகை கேளிக்கை.

நான் எப்பொழுதும் நானாக
இருந்தபடிக்கு உன் நேசங்களை
எல்லாப்பொழுதிலும் சுதந்திரமாக உணர்வேன்.

ஏனெனில் நான் சுதந்திரமானவள்.


அது
—-
அந்த உற்பவிப்பு எல்லோருக்கும்
வாய்க்காதது.
ஒரு முகிழ்த்தல் போலத்தான்.
முகிழ்த்தல் என்பது எவ்வளவு அற்புதம.;

பூக்கள்,விதைகள்,குழந்தை,மனம்,என்றபடிக்கு
முகிழ்த்தல் அகலும்.
ஒரு மெனளத்துள்; ஆழ்வதும்
அதனை ஸ்பரிஸிப்பதும் ஒரு முகிழ்த்தல்தான்

ஒரு சூழலுக்கு இயைவதும்
சூழல் எமக்குள் புகுவதும் இன்பம்
மென்புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து
சிறு குருவி நுழைவதும் மென்மை

மனத்திடை சில நேரம் உதிர்த்தும்
மென் இழைகள்,நெகிழ்வுகள்,மெல்லியகாதல்,
ஒரு பச்சாதாபம் எல்லாமே
அற்புதம் நிகழ்த்தும் முகிழ்த்தல்கள்.

எரியும் தீயிடை ஊன் உருகுவதுமாகி
எந்த ஒப்பனையுமற்றதும்
எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும்
உள் மனதில் அது பற்றிய ரீங்காரமும்
எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்

வெண்பனியிடை மெல்லிதழ் தொடுவதாய்
உணர்வதும் எல்லாக்காலங்களும்
எல்லாப்பாதைகளும்
நந்தவனத்தை நோக்கியதாய்
அமைவது போலவும்

இருப்பது ஒன்றெனில்
அது காதல் தானே.


இளைய அப்துல்லாஹ்
இலங்கை

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

வா.மணிகண்டன்.


1.
பிரிதல் நிமித்தம்

கண்ணீர்த்துளி
கசிகின்ற
கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது.

மெளனமான
இடம்பெயர்வொன்று.

2.
நிகழ்வு

எவருடைய
நிழலும்
வருடியிராத
இந்தப்புள்ளியில்தான்

எரிமலையின்
சிதறலொன்று
கடந்து சென்றது.

வண்ணத்துப்பூச்சியின்
மெல்லிய சிறகடிப்பை.

—-
kvmanikandan1@yahoo.co.in

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்

கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

இளைய அப்துல்லாஹ்


அவன்

அந்தி கரையாப்பொழுதுகளில்
அவளோடுறைந்திருந்து விட்டு
அப்படி ஆகுமென்றென நான் நினைத்திருக்கவில்லை

அழகிய வானத்தையும் இளம் தெனறலை விடவும்
அவள் அணைப்பும் அவள் அருகும்
அழகாகவே இருந்தன் இருந்தாள்.
வெறிகொண்ட முத்தத்தால்
இருவரும் நனைந்தழுதோம்.
இந்நிலை வருமெண்றெண்ணா
கனவுகளில் புதைந்து..

அவள்

என்னுரிமைகளில் அவன்
பங்கெடுத்தவனாகி விட்டான்
அவனணைப்பினதும் அரையாடையின்றிய கட்டிலருகும்
என்னை வெகுவாகவும் கவர்ந்ததில் வியப்பில்லை
அவன் ஆண்மை அற்புதமானதுதான்.
என்னுடையவனாய் வரித்துக்கொண்டதனால்
அவனுக்கு என்னைக் கொடுக்க முடிந்தது.

அவனை இப்பொழுதெல்லாம் இழந்து விட்டேன்.
இந்நிலை வருமென்றெண்ணா கனவுகளில் புதைந்து..
எனது எதனை அவன் கேட்கிறான் ?

அவனிழப்பறியாததும் நான் நானாகவும் இருப்பேன்.
என்னைப்புரிந்துகொள் ஒரு பெண்ணாக மட்டுமல்ல என்பதனையும்ஸ..

அவன்

சோராமல் நீண்டு கரையும் அவள் நினைவுகளும்
அவளும் வேண்டுமெனக்கு..
அவள் யாரென்றறியா முன்னரை விடவும்
எனக்கு பிடித்தமாகி விட்டாள்.

(18.01.2005)


நான் வந்த பொழுது ..

மானுடனே!
உன்னை நான் அங்கீகரித்த
பொழுதுகளிளெல்லாம்
எனே;னாடு அளவளாவினாய்
என் மடியில் படுத்துறங்க
உன்னை ஆண்டாண்டு
அனுமதித்தேன்.

உன் லீலைகளையெல்லாம்
என் மீது அரங்கேற்றினாய்.

மானுடனே!
நான் உன்னிடம்
வந்த பொழுது
ஏன் என்னைஸ.

செல்வங்கள் கொடுத்து
சீராட்டி வளர்த்தேனே
உன் வாழ்வுக்காய்
உன் விடியலுக்காய்

என்னைக்கிழித்து
எத்தனை கோலங்கள் செய்தாய்

எல்லாக்களஞ்சியங்களையும்
உனக்காய்த்திறந்தேனே
முத்தென்றும் மீனென்றும்
அள்ளிப்பேபாகையிலே
ஆர்ப்பரித்தேனா இல்லையே

ஒரே ஒருமுறை தானே உன்னிடம் வந்தேன்
ஊழிக்காலம் என்று ஏசி வைகின்றாயே

மானுடனே நான் உன்னிடம் கோபப் பட்டு
நீ பார்க்கவில்லையல்லவா இன்றைத்தவிர இப்படி

குளித்து குதுாகலித்து
குடும்பத்தோடு மகிழ்ந்திருந்து
கொஞ்சி விளையாடிய
நாட்களெல்லாம் மறந்து போய்
ஒரே ஒரு முறை உன் வீட்டுக்கு
வந்த என்னை வைது வாங்குகின்றாய்.

செல்வத்தை கொடுத்தவன் வந்தானே
வீட்டுக்கு என்றா வரவேற்றாய் ?
ஊழியே போ! என்றே விரட்டுகிறாய்.

போகிறேன் என்னோடு கோபப்பட்டு
என்ன முடியும் உன்னால் ?
ஆனால் உனக்கு கோபம்; போகிறேன்.
நீ மீண்டும் என்னிடம்
வருவாய் என்பது எனக்குத்தெரியும்.

உன் காலடி மண்ணைத்தொட்டுக்கும்பிடவே வந்தேன்.
இறந்து போய் விட்டாய்.

கோபக்கார மானுடனே!
உன் கோபம் தணியும.;

மீண்டும் உன்னை வரவேற்கிறேன்
உன் வருகை எனக்கு மகிழ்ச்சிதான்.

வாழ்வின் வனப்புகளையெல்லாம்
என்னுள் வைத்திருக்கிறேன்.

வா என்னிடம் வருவாய்
மீண்டும் ஒரு முறை
நான் வரலாம் எத்தனை ஆண்டுகளாகுமோ!

அப்பொழுது என்னை வரவேற்பாயா
என் ஆதங்கங்களோடு
இப்படிக்கு கடல்.
30.12.2004


பிடுங்கப்பட்ட மண்ணும் ஒரு கிழவியின் வேதனையும்

உம்மா
உன் பார்வையின் ஏக்கம்
எனக்குப் புரிகிறது!
எழுத்தறியா உன் வேதனையை
என் விளக்கங்களால்
விளங்கிக் கொள்ள முடிகிறது.
உன் பூநிலம் பிடுங்கப்பட்ட தரிசுபோல
நீ சுருக்கமிழந்து அழுவது எனக்குக்
கேட்கிறது!
எந்த மண்ணும் ஒத்து வராது
என்கிற உன் அஞ்சுதலை
என்னால் ஆதரிக்க முடிகிறது..

அந்த வேப்பங்காற்றும்
பனையோலைத் தென்றலும்
நிழல் கிழுவையின் மணமும்
கத்தாழை பரந்த வீதியும்
உன் கிடுகு வீடும்
என்றுமே நீ யாசித்தவை என்பது
எனக்குத் தெரியும் தாயே!

உம்மா!
நீ சிறு வயதோடு
பிரயாசப்பட்ட மண்
பலவந்தமாகப் பிடுங்கப்பட்டது
உன்னைப் போல எனக்கும்
அதிா;ச்சிதான் தாயே ?
யாாிடம இதனைக் கேட்க
செவிகளை மூடிவிட்ட
தேவர்களோடு என்ன பேசி
என்ன விளங்க ?

கரைந்தொழுகும் காலங்களில்
உனக்கும் நம்பிக்கையில்லைத்தான்
மூப்பும் நரையும்
உன்னை இறப்புக்கு அழைக்க முன்னம்
இந்தக் காதகச் சுமைகளால்
அரசியல் பட்டவர்த்தனமற்ற
ஒரு சுபீட்சத்தை நீ தேடுவது
தெரிகிறது தாயே.


காதல் பற்றிய ஒரு விவாதம்

மானுட எல்லைகளைக் கடக்க முடியாது
என்றா நினைக்கின்றாய் ?
எல்லாமே உதிரிகளல்ல
உன் சிந்தனை எனக்கு விளங்காமலா ?
உறவுகளின் வீரியம் பற்றிய சிந்தனைகளில்
நான் இன்னும் ஏமாறவுமில்லை
தோற்றுப் போகவுமில்லை…
எத்தனை காலங்கள்…
இது ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கிறது
அவளின் கடிதங்களை நானும்
என் கடிதங்களை அவளும்
சேகரிக்கத் தொடங்கிய காலம்
அது இன்னும்
அன்னியமாகிவிடப்போய்விடவில்லைதான்..
அவளுடைய கவிதைகளில்
வீாியம் உண்டென்று சொல்லுவேன்
என் கவிதைகளை அவள்.

கவிதைகள் அவளால் வீரியம் பெறுகிறதா
என்றெல்லாம்
தனிய சிந்திக்கவேண்டும் போலிருக்கிறது.
ஒரு பொழுது ஆகி விடப்போவதில்லை
அவளின் சிரி;ப்பொலி என் காதில் கேட்காமல்…
அவளுக்கும் எனக்கும் ஒற்றுமை இருப்பதாய்
அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
சிலவேளைகளில்
பேய்த்தனமாகவும் உரையாடுவாள்.

ஆனால் எல்லாவற்றையும்
ரசித்துக் கொண்டிருக்கும் படியாய்
நான் ஆக்கபப்பட்டிருக்கிறேன்.
ஆண்கள் அழுது காணவில்லையென்றும்
அதைக் காண்பதற்கு ஆசையென்றும் சொன்னாள்.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி
அவளுக்கு அழுதுகாட்டுகிறேன்.
ஒருமுறை தொலைபேசி செக்ஸ்பற்றி
இருவரும் கதைத்தோம்.
காதல் பற்றி இப்பொழுதெல்லாம்
ஒரு விவாதம் வருகிறது மனதில்…


இளைய அப்துல்லாஹ்
இலங்கை
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

கவிதைகள்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

மதியழகன் சுப்பையா


—-
ஒன்று

இறகுதிர்க்கும்
பறவை ஒன்று

மரித்துப்போன
மரக்கிளையில்
அமர்ந்துள்ளது

வலிய பறவையதை
கொத்திச் செல்கின்றன
சிறியவைகள்

காம்பு பிரியும்
காய்ந்த பூவைப்போல
விழுந்துபடலாம்
ஒரு நாள் அந்த
வீர்யப் பறவை.

காத்திருக்கிறது
இறுதி இறகு
இற்று விழும்வரை.

—-
இரண்டு

கனத்த கருமை
இரவுகள்
சின்னச் சின்ன
கருப்பு நினைவுகள்
சேர்ந்து கருக்கிறது.

தூக்கக் கொப்புளங்களை
குத்திப் பார்க்கிறது
கருப்பின் கூர்மை

நிகழ்வுகள்
அனைத்தும்
நினைவுகளாகிறது

நித்தம் நீள்கிறது
நித்திரை தொலைத்த
இரவுகள்.

—-
மதியழகன் சுப்பையா
மும்பை

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

மதியழகன் சுப்பையா


பேசித் திரிகிறார்கள்.

பென்சி பற்றிப்
பேசுகிறாள் ஜோ

ஜோ பற்றிப்
பேசுகிறார் பென்சி

பென்சி- ஜோ பற்றிப்
பேசுகிறாள் பிரகாஷி

பிரகாஷி பற்றிப்
பேசுகிறாள் தீபா

எல்லோர் பற்றியும்
பேசுகிறான் அஜய்

ஒருவர் பற்றி
மற்றொருவர் பேச
மகிழ்ந்து கழிகிறது
அவர்களின் பொழுது

பேசாமலும்
பேசப்படாமலும்
இருக்கிறான்
இயங்குகிறான் மதியழகன்.

—-

இன்னும் தொடர்கிறது
என்றோ தொடங்கிய கவிதை

அனுபவங்களை விழுங்கி
பலப்படுகிறது

எத்தனை புசித்தாலும்
பசித்தே அலைகிறது நாளும்

எழுதுபவரின் ஆயுள்
முடியலாம்
கவிதை இறவாது

இன்றோ, நாளையோ
நான் மரித்து விடுவேன்
இன்னும் தொடரும்
அந்தக் கவிதை
என்றும் தொடரும்.

மதியழகன் சுப்பையா

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

விசிதா


உறை பனி வார்த்தைகள்

சொன்ன சொற்களில் சில
உறைபனிக்குள் சிக்கி உறங்குகின்றன
வேறு சில இலையுதிர்கால இலைகள் போல்
உதிர்ந்து எங்கோ போயின மக்கின
இன்னும் சில என் மனதிற்குள் நுழையவே இல்லை
வழியிலே தொலைந்துவிட்டன
ஆயினும் சில
என்னுள் சூல் கொண்டுள்ளன
வேறு சில நானறியாமல் என்னுள்
நம் சொற்களாயின
இரவுகளிலும் பகலிலும்
துணையாயின

இவற்றில் எதுஎதுவென நீயறியாய்
நான் சொன்னாலும்


மூன்று கடிகாரங்கள்

இதயத்தில் மூன்று கடிகாரங்கள்
உன் காலத்தினை உணர்த்த ஒன்று
என் காலத்தினை அறிய ஒன்று
என்றோ வரக்கூடும் நம் காலத்திற்காக
இன்னொன்று


தேடல்

நினைவுகள் போதாத போது
குரலோ புகைப்படமோ வேறெதற்கோ இட்டுச் செல்லும் போது
தேடுகிறேன் உன் உடலை
நீயோ வேறொரு காலப்பிரதேசத்தில்
தினம் உன் உறக்கத்தினைக் கலைக்கும்
என் நெருப்பு மூச்சு
உன்னது என்னதை கலைப்பது போல்
—-
wichitatamil@yahoo.com
http://wichitatamil.blogspot.com

Series Navigation

விசிதா

விசிதா

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

கோமதி நடராஜன்


மண்ணில் விழுந்த,
மழைத்துளியின்
சலசலப்பு,
எல்லோர் காதிலும்
இசைத்தது,
அமிர்தவர்ஷிணி ராகத்தை.
—-
நடுநிசியில் பெய்த மழை
வானழாவ மகிழ்ச்சியை
மனதில் எழுப்பியது.
மறுநாள் அதிகாலை,
‘குடை ரிப்பேர் ‘என்று
புறப்பட்ட ஏழையின்,
குரல் இதயத்தைத் தொட்டது.
—-
ரயில் பயணத்தில்,
இறங்கவேண்டிய நிலையம்
வந்து விட்டால்
உற்சாகமாய் இறங்கியவன்,
வாழ்க்கைப் பயணத்தில்
இறங்க வேண்டிய நிலையம் வந்தால்
நிலை குலைந்து போவதேன் ?
—-
சொத்தென்ற சிறுகல்
சொத்தென்று விழுந்தது.
ஒற்றுமையாய் உணவருந்திக்
கொண்டிருந்த,
சிட்டுக்குருவிகள்
திசைக்கொன்றாய்,
பறந்தன.
—-

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

கவிதைகள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பாஷா


காத்திருப்பேன் காதலா

பாஷா

என்னைச்சுற்றி நீ
விட்டுப்போன கேள்விகள்
நீயில்லாத வெற்று நிமிடங்களை
சுமந்துகொண்டு சூன்யவெளியில்
அலைந்திருக்கும்!

கனவில் வந்து
கன்னம் வருடிப்போகும்
உன் உள்ளங்கை உரசலை
இனி யாரிடம் சொல்வேன்!

மறுபிறவி நம்பியவளில்லை
உன்னை மறுக்கும்வரை
இன்று சொல்கிறேன்
இந்த பிறவியுடன்
இனியென் உடன் நீ
வரும் பிறவிகள் ஏராளம்!

இனிஒரு பிறவியில்
உன் மதத்தில்
உன் குலத்தில்
உன் பிரிவில்
உன் முறையாக
பிறக்கும் ஒரு நாளில்
பிறந்த என் காதல் சொல்வேன்
அதுவரை
இறந்துகிடக்கட்டும்
சொல்லப்படாத என் காதல்
முற்றுபெறாத இந்த கவிதையுடன்!


மயானம்

பாஷா

அது ஒரு தனி உலகம்
அலைபாயும் காற்றில்
நிபந்தனைகளற்ற அன்பு
தொட்டில்கட்டி ஆடுமிடம்!
ஆரம்பத்தின் பிறப்பிடம் அந்த சாம்பல்மேடு
அர்த்தநாரீஸ்வரன் ஆடும் காடு
ஆணவம் தொலைப்பவர் வீடு!

திருவாசகம் பாடும்
மாணிக்கவாசகர்களும்
தெருகல்லென தூற்றும்
நாத்திக நீசர்களும்
நித்திரைகொள்ளுமிடம்!

குடுமிகொண்ட மண்டையோடும்
குருதிதொலைத்த பிண்டமும்
கணக்கில்லா உடல் எச்சங்களும்
கூடிக்கிடக்கும் ஒரே
குலமிலா உலகது!

காதலாய்,கண்ணீராய்
அவமதிப்பாய்,அன்பாய்
தெளிக்கப்படும் வார்த்தை கலைந்து
ஆபாச நகர இரைச்சல்களுக்கிடையே
அமைதி சொல்லும்
மயான பூமியின்
துருப்பிடித்த கதவு திறந்து
விருப்பி வாருங்கள் தனியனாக
ஒருமுறையேனும்!


Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

வந்தியத்தேவன்


மனித நேயம்

– வந்தியத்தேவன்

புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்

மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்

கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள் ?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை

கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான் ?

உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்

இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்

ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு

பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்

உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ ?

புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்

கானல் கனவு

– வந்தியத்தேவன்

இருட்டறையில்
அகல்விளக்கு
இருளைக்
கொன்றதாய்
இறுமாப்பு

அமைதியாய்
அதனடியே
ஆடியது
நிழல்

====
t_sambandam@yahoo.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்

கவிதைகள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

இவா


என் செல்லத் தோழி
சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறாள்
அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட
நாற்காலியில்…
தாடையும் தலையும்
சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது
கண்கள் திறக்க முடியாதவாறு
மூடப்பட்டிருக்கின்றன
கைகள் நாற்காலியின் கைகளுடன்
கட்டப்பட்டிருக்கின்றன
குரலை வைத்து என்னை
அடையாளம் கண்டுகொண்டாள்
போல…
அவள் விட்ட பெருமூச்சின்
சூட்டில் காற்றில்
அனல் பறக்கிறது.

—-

புதைந்து போன சொற்களின்
அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி
ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கிறேன்
என்னைப் போலவே பலர்
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது
மெதுவாகச் சென்று உற்றுப்பார்க்கிறேன்
திடாரென ஒரு அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித்தழுவி
நெற்றியில் முத்தமிட்டது
அது உணர்வோடுதானிருந்தது
கண்கள் மிளிரச்சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள்

—-
ivaan@rediffmail.com

Series Navigation

இவா

இவா

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

லட்சுமி நாராயணன்


கனவு

மலை முகடுகளில் நான்.
விரிந்தும் பரந்தும் பாதைகளில் மேகம்,
பறவையாய், எரிமலைகளுக்குள் நான்,
தொடர்ச்சியான உலகில், விடுபட்ட கண்ணியாய்
பட்டாம்பூச்சியாய் பாறைகளை தூக்கி நீந்தும் நான்,
இடித்த இடியில் விதையை தூவி மறைந்தேன்,
விழித்து எழுந்தது நாய்.

இருந்தும்

அவனா நான் என்ற என்
இயல்பான குழப்பத்தில்
நான்( ?) ,இயந்தரத்தின் உண்மையால்,
சரியாக வரையறுக்கப்பட்டு,
அவன் நேரேயும், நான் மேலேயும் சென்றோம்,
இருந்தும், அவனா நான்.
—-
klnarayan@yahoo.com

Series Navigation

லட்சுமி நாராயணன்

லட்சுமி நாராயணன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

கோமதி நடராஜன்


பிறந்த பயன்
—-
அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம்
அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம்
ஏன் வந்தோம் எதற்கு வந்தோம்
என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத்
தொட்டுத் தொட்டு மறைந்தோம்.
பள்ளிச் சிறாரின் விரல் தொட்டு
கலகலவென்று சிரிக்க வைப்போம்
பல்லிழந்த மூத்தோர் பாதம் தொட்டு
ஆசிபெற்று மகிழ்வோம்.
ஆழ்கடல் சாட்சியாகக் காதலிப்போர்,
ஆடையில் ஒட்டிய மணலைத் தட்டும் போதே
காதலையும் தட்டி விட்டுச் செல்லும்,
காதலர்களென்று கண்டு வியப்போம்.
இதற்கு மட்டும்தானா நாங்கள் என்று,
எண்ணியதுண்டு-
இதற்கும் மேலாக ஏதுமுண்டா என்று
ஏங்கியதுண்டு.
இதைக் காணவா ஓயாமல் அடித்தோம் ?
இதற்காகவா உறங்காமல் ஒலித்தோம் ?
மக்கள் தண்இருக்காக வாடும் பொழுதும்
தண்இர் தேடி திணறும் பொழுதும்,
உப்புக்கரித்து, ஊருக்கு உதவாமல்,
உருவெடுத்தோமே என்று அழுவோம்
தவித்த வாய்க்குத் தண்இர் தராதவனென்று
பேரெடுத்தோமே!என்று பதறுவோம்.
சிதம்பர ரகசியமாய் இருந்த எங்கள்
ஆதங்கத்தைப் புரிந்து கொண்டார் ஒருவர்.
அவலத்தை அறிந்து கொண்டார் ஒருவர்.
எங்கள் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தமுண்டு,
எங்கள் பிறப்பிற்கும் ஒரு காரணமுண்டு
என்றெம்மை உணர வைத்தார்,
தமிழர்களின் தாகம் தீர்க்க வந்த,
தங்க மகன்.
அன்று
ஆழ்கடலில் கப்பல் ஓட்டினார்
வ.ஊ. சிதம்பரம்.
இன்று
ஆழ்கடல் நீரை அமுதமாக்கத் திட்டமிட்டார்
ப. சிதம்பரம்.
இனி
அடிக்கும் எங்கள்
ஒவ்வொரு அலைக்கும்
ஒரு அர்த்தமுண்டு.
ஒவ்வொரு அலையோசைக்குள்ளும்
ஒரு இசையுண்டு.
நாங்கள்-
பிறந்த பயனைப் பெற்று விட்டோம்
வந்த நோக்கம் புரிந்து கொண்டோம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!
ஒளிர்க தமிழ்நாடு!.
—-கோமதி நடராஜன்

[லண்டன் மாநகரில் கால் எடுத்து வைத்த முதல் நான்கு மாதங்கள்,தமிழ் கேளாது வாடி நின்ற வேளையில்,பி.பி.சி.வானொலியின் தமிழ் ஒலிபரப்புச் சேவையைச் செவிமடுத்த அடுத்த கணமே என் பேனா எழுதிய வாழ்த்துமடல் இது.
1991 ஜனவரியில் லண்டன் சன்ரைஸ் வானொலியில் வாசிக்கப்பட்டது.]
—-
மரக்கலம்
====
தணியாத,தமிழ்தாகத்துடன்
தனியாக நான் இங்கு தவிக்கின்றேன்.
அடங்காத என் தாகத்துக்குத்
துளி நீரென, ‘ஸன்ரைஸ் ‘ தமிழ் தருகிறது.
பைந்தமிழ் ஆற்றில் பலமணி நேரம்
நீந்தி மகிழ எண்ணும் என் தவிப்பை
இச்சிற்றோடை நீர் எங்ஙனம் ஆற்றும் ?
தமிழ் பேசாது
நா துவழ்கிறது,
தமிழோசை கேளாது,
செவியும் செயலிழக்கிறது.
தமிழ் இல்லாத இடம் அது-
சொர்க்கமென்றாலும் கசக்கிறதே!
ஆழ்கடலில் வீழ்ந்தவனுக்கு
அற்ப மரத்துண்டும்,மாபெரும்
மரக்கலமாவது போல்
இச்சொற்ப நேரத் தமிழ் எனக்கு
உவகை அள்ளித் தருகிறது.
உலகை மறக்கச் செய்கிறது.
இரவில் தமிழொளி வீசும்
இவ்வானொலி ஆதவனுக்கு
என் மனம் கனிந்த பாராட்டுக்கள்,
இப்பணி இனிதே தொடர
என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
—-

[1989 ஆகஸ்ட், ஊட்டியில் ஒரு சாலை விபத்தில்,மயிரிழையில் உயிர் பிழைத்து ,மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய அடுத்த நிமிடம்,எழுதப்பட்ட கவிதை.காலனின் காலடிவரை சென்று திரும்பிய கர்வமே, என் எழுத்துக்குத் தூண்டுகோல்.]
—-
காலனே காத்திரு!
—-
எல்லோருக்கும் விடியும்
காலைப் பொழுது
எனக்காகவும் விடியுமென்று
தலையில் எழுதியிருந்தால்
மலையுச்சியிலிருந்து நான்
குதித்தாலும் -குதித்த என்னைப்
பதமாகத் தாங்கிக் கொள்ளப்
பஞ்சுமெத்தைகள் பரந்து கிடக்கும்.
அகிலத்துக்காக எழும் ஆதவன்
அடியேனுக்கும் சேர்த்து
எழுவது தொடருமென்றால்
ஆழ்கடலில் நான் வீழ்ந்தாலும்
வீழ்ந்த என்னைப்
பூவாய் ஏந்திக்கொள்ளப்
புல்தரைகள் புதிதாய் முளைத்து நிற்கும்
இழுத்து விடும் என் இறுதிமூச்சு
இன்னும் தள்ளிப் போகுமென்று
விதித்திருந்தால்,
ஆலகால விஷத்தை விழுங்கினாலும்,
நான் விழுங்கிய
விஷத்துக்கும் விஷமாகி
விடியலைக் காண விழித்தே இருப்பேன்.
—-

—-
உதிரிப் பூக்கள்.
—-
1-தானாக வந்த தீமைக்குப் பின்னே ஒரு நன்மை இருக்கும்
தேடிப் போய் பெற்ற ஒரு நன்மைக்குப் பின்னே ஒரு தீமை இருக்கும்.
2-எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால்,யாரோ ஒரு சிலரிடம் நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
3-எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னால்,ஒரு சிலரிடம் நீங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
4- ஒரு பகைவனை நண்பனாக்குவது நூறு நண்பர்களை உருவாக்குவதற்கு சமம்.
5-பக்திக்கு அடையாளம் அன்பு,அந்த அன்புக்கு அடையாளம் மன்னிப்பு.அந்த மன்னிப்புக்கு அடையாளம் புன்னகை,அந்தப் புன்னகைக்கு அடையாளம் பளிங்குபோல் உள்ளம்.அந்தப் பளிங்கு போல் உள்ளத்துக்கு அடையாளம் பக்தி.
6-பிறரிடம் பெற்ற உதவிகளைக் கல்லில் செதுக்கி வைப்போம்,பிறருக்குச் செய்த உதவிகளைக் கற்பூரமாய்க் காற்றில் கரைய விடுவோம்.
7-நாம் சிரித்து மகிழ, நான்கு இடங்கள் சென்றால்,அடுத்தவரை, சிரித்து மகிழ்விக்க ஒரு இடமாவது சென்று வருவோம்
8-நேருக்கு நேர் நடத்தப் படும் போரை விட,பனிப்போர் ஆபத்தானது.
9-கோபத்தை,அடுத்தவரைத் தாக்கும் ஆயுதமாக எடுக்காமல்,நம்மைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஏந்துவோம்.
10- ‘வயது தந்து வருவதில்லை விவேகம் ‘,இந்த உண்மைக்கு சாட்சியானார் , ஸ்வாமி விவேகாநந்தர்.
11- ‘எளிமையிலும் ஏற்றம் காணலாம் ‘ ,இந்த வாக்கியத்தை உண்மையாக்கினார்,கடமை வீரர் காமராஜர்.
12- ‘அன்பினால் உலகை ஆளலாம் ‘,இதை வாழ்க்கைக்குத் தேவையான வாக்கியமாக்கினார் அகிலத்துக்கும் பாசக் கடலான அன்னை தெரசா.
—-
கோமதி நடராஜன்.
ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஜீவன்


1.

வாழ்க்கை

தேவையாயிருக்கிறது
அவசரமேதுமில்லாதொரு
மாலைப்பொழுது
பொன் மஞ்சள் நிறத்தொரு வானம்
மெத்தென கிடக்க
ஒரு பச்சைப் புல்வெளி
மெதுவாய் தாலாட்டிப்போக
கொஞ்சக் காற்று

வேலையில்
தொலைந்து போகிறது
பகல்
வேலைக்காய்
தொலைகிறது
இரவு

சூரியனைப்பார்த்து
நெடுநாளாகிறது
எனக்கு.

இயந்திரம் சப்பியது
போக
எப்போதாகிலும்
தேவையாயிருக்கிறது
அவசரமேதுமில்லாதொரு
மாலைப்பொழுது

—-

2.

வாழ்க்கை

வீசும் காற்றின்
சுகம் தொலைந்து
போயிற்று
மெல்லிய
பூவின் சுகந்தம்
நினைவிலின்றிப்
போகிறது

ஓர்
இனிய இசையை
கேட்கமறுத்து
மறுநாள்
வேலைக்கென்றானது
இன்றைய துாக்கம்

பார்த்துப்புன்னகைக்கும்
சிறு குழந்தையின்
கையசைப்பை
தழுவமறுத்து
செல்லுகிறது
காலம்

அலாரம் வைத்து
புணர்ந்தாயிற்று

இன்னுமென்ன ?

நேரத்தில் தொலைத்து
பெரும் நகரத்து
இயந்திரச்சகதிக்குள்
சிக்கி
குடல் தெறிக்க
ஓடும் வேகத்தில்
தேய்கிறது
மிச்சமிருக்கும்
வாழ்வு.

—-

3.

நினைவு

நம்பத்தகுந்த
சேதிகள் ஏதும்
இருப்பதாகப்படவில்லை
சொல்லி
பெருங்குரலெடுத்து
ஊளையிட்டு போகிறது
காற்று

சன்னதமாடி
தொடர்ந்து துரத்துகிறது
உயிர் பிடுங்கிப்பிசாசு
இன்னமும்
எனக்கான
புதைகுழியை தோண்டுகிறார்கள்
அவர்கள்

என்முன்னே
ஓடிக்கொண்டிருக்கிறான்
நேற்றுக்கிழித்து
உப்பு வைத்துத்தைத்த
முதுகின்
சொந்தக்காரன்

குண்டுதுளைத்துப்
போகிறது
உடல்

நினைவில்
வந்து போகிறாள்
கையசைத்து
விடைசொன்ன காதலி

விரித்தபடி கிடந்த
ஓலைப்பாயை
சுருட்டும் போது
அழுதிருப்பாள்
அம்மா

அவளுக்குரியதாகிறது
அன்று
காணாமல்
போவதான காலம்

நினைவுத்தொடர்பறுந்து
கண்விழிக்க
மூத்திரத்தில்
நனைந்து போயிருக்கிறது
சாரம்

கண்களை மூட
தொடர்ந்து துரத்துகிறது
உயிர் பிடுங்கிப்பிசாசு

—-

4.

ஊர் திரும்பல்

மெதுவாய் கேட்கும்
அதிகாலைப் புகைவண்டிச் சத்தம்
கால் நனைத்துப் போகும்
காலைக்கடல்
காங்கேசன்துறைப்புகை
களங்கண்டி மீன்
இரட்டைப்பனை
கோவில் புளிமாங்காய்
சம்பேதுறுவார் கோவில்
மணியோசை

இப்படிதொலைந்து
போனவை அதிகம்

உடல் சிதறிச்செத்துப்போனான்
நண்பன்

குருவிசுட்ட சேதியாய்
போயிருந்தனர்
அனேகர்

குருத்து
கருகிப்போனது
பனைமரம்
பாழடைந்து
போய்க்கிடக்கிறது
கிணறு

வீடு போக
அடையாளம்
சொல்லிநிற்கிறது
ஒத்தை
செவ்வரத்தைப் பூ

—-

கவிதைகளும் ஓவியமும் : ஜீவன்
(நந்தா கந்தசாமி)
nandakandasamy@hotmail.com

Series Navigation

ஜீவன்

ஜீவன்

கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

பாஷா


கல்லறை பாடல்

உனக்காக என்
உணர்வுக் கருவறையில்
உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு
ஒரே முகம்தான்.
வார்த்தைகளை கோர்த்து
வாக்கியம் உருவாக்கும்
உணர்வுகளை உனக்குள்
தேடிக்கொள் தேவையெனில்
உன்னால் ஜனித்த நாளன்று
எனக்குள் உதித்த உன் உணர்வுகள்
என் கல்லறையையும்
அதன் கருவறையாக்கி
உனக்கான என் பாடலை
பிரசவித்துகொண்டிருக்கும்
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு நாள் வந்து
என் கல்லறை பாடலை
காதால் கேட்டு செல்!

—-

இனம்

பூங்காவிலிருந்த பூவொன்று
புயல்காற்றில் எடுத்தெறியப்பட்டு
என்மடி சேர்ந்தது

எடுத்தெறியப்பட்ட பூ
எனக்கென்று நானிருக்க
வாடும் பூ
வீடு தேடியது

வீடும்தேடும் பூ
வீசியெறியும் கண்ணீர்துளிகள்
உயிர்வேர்வரை சென்று எரித்ததால்
பிரிய பூவை மீண்டும்
பூங்காவிட்டு வந்தேன்

பின்னொரு நாள்….
பூங்காவழி செல்லும்போது
மரபுவேலி பின்னாலிருந்து
மற்ற பூக்களோடு சிரித்திருக்கும்
என் பிரிய பூவை பார்க்கிறேன்
என் உதடு முணுமுணுக்கிறது
‘பூங்காவிலிருக்க நானொன்றும் பூவில்லையே! ‘

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பாஷா


நிகழ்வுகள்

சில சொற்களால்
சில நிகழ்வுகள்
நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது
சொற்கள் சம்பிரதாயமாக
தெளிக்கப்பட்டபோதும்….

உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து
உதடுகள் வார்த்தைகள்
ஒப்பிக்கும் இயந்திரங்களாய்
மாறிப்போனது.

சமூக பார்வையாளர்களின்
ஜன்னல்வழி காட்சிக்காக
நித்தம் ஒரு
நாடகம் நடந்தேறிகொண்டிருக்கிறது.

கல்யாணமென்றே வழிப்போக்கர்களின் வாழ்க்கை
குப்பை காகிதத்தில்
கோட்பாடுகளாக நிரப்பபடுகிறது.

சகித்துகொள்வேனென்றே
சாவிகொடுக்கும் பொம்மைகளாய்
மாறிப்போனது அன்னையர் இனம்

காதல்,கண்ணீர்
பாசம்,அன்பு
இவையெல்லாம் இலக்குதேடி
பிரபஞ்ச வெளியில்
அலைபாய்ந்துகொண்டிருக்கிறது
நாகரீகம் மட்டும்
நைல் ஆற்றிலேயே
மூழ்கிப்போனது!
—-
நீ இல்லாத நான்

அந்திம நாட்களின்
இருண்ட இரவுகளோ இவை ?
உன்சுவடுகள் வருடாமல்,
மூன்று இரவுகள் நினைவுதப்பி
கருந்துளையில் காணாமல்போய்விட்டது.

உன்குரல் எழுப்பாமல்
என் தொலைபேசி
உறக்கத்திலேயே உயிர்துறந்துவிட்டது
பூஜையறை,சமையலறை
இவற்றுடன் என்
உயிரிலும் ஒரு
வெற்றிடத்தை விதைத்துவிட்டாய்.

இப்பொழுதெல்லாம் எழுதும்
என்கவிதைகளை கிழித்தெறிகிறேன்
உன்பிரியத்தை எனக்கல்ல,
என்கவிதைக்கே கொடுத்தாயென்ற
பொறாமையால்….

கடல்நடுவில் மிதக்கும்கட்டையில்
தனித்துவிடப்பட்ட குழந்தையாய்
கதறியழுகிறேன்!
வேலைபளு கொண்டவனாய்
வேதனை புதைக்க
வேடம்தரித்து திரிகிறேன்
இதயம்பிளக்கும் வேதனையை நீ
இல்லாத வெறுமைக்கு
சொல்லிகொண்டிருக்கிறேன்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

சி.கருணாகரசு, சிங்கப்பூர்


பிரிவு

நட்பில்லாதவனுக்கு
உடல் அசைவு,
நட்புடையவனுக்கு
உயிர்க் கசிவு!

இளமை

இது வயதின்
புன்னகை!

வேர்

மண்ணுக்குள்
மறைந்திருக்கும்
மரத்தின் முகவரி!

விமானம்

பாலுட்டிகளின்
பால்வீதிப்
பறவை!

மாலை

மலர்க் கூட்டத்தின்
கல்லறைத் தோட்டம்

கவிதை

ஈருயிர் சங்கமிக்காத
ஓருயிரின் மூலத்திலே
உருவாகும்
அதிசயக் குழந்தை!

-.-

Series Navigation

சி.கருணாகரசு

சி.கருணாகரசு

கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

பாஷா


காத்திருக்கிறேன்

உன் தங்கைகளுக்காகவும்
சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில்
உன் உறவுகளை நினைத்து
என் நெஞ்சில்
நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும்
என் காதலை
என் நெஞ்சில் சமாதிவைத்து
மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!

ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத
திசைகளின் விளிம்பில்
ஒரு நாள் சந்தித்தோம்
நீ வந்த திசையின்
சாலையிலெல்லாம் நீ
தெளித்த கண்ணீர்.
ஒரு புன்னகையை மட்டும்
உன்னிடமிருந்து வாங்கி
உன்னை உன் திசை
அனுப்பிவிட்டு
கரையான்களாய் அரிக்கும்
உன் நினைவுகளுக்கு
வெற்று வெளியில்
சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!

இருந்தாலும்….
உன் ஜானவாசத்தில்
என் ஜன்னலோரம் தாமதிக்கும்
உன் உறவு கூட்டம்
உன்பெயர்கொண்ட கடவுள்
வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்
உனக்கு பிடித்த பாடல்
நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு.
இவையாவும்
உன் நினைவுகளை
எரியும் சிதையிலிருந்து
எடுத்து போடுகிறது!

காதலை காற்றில்
கரைத்து வாழ்க்கை
அங்கிகரித்த அந்தஸ்த்தின்
பரிவட்டத்தை தரித்திருக்கிறாய்
இன்னும் நான்
உன் நினைவுகளுடன் மட்டுமே
போராடி தோல்வியுற்று
ஆயுளை அவசரமாய் கழிக்க
ஆண்டவனிடம் வரம்கேட்டு
நீ வரும் குளக்கரையில்
கல்லெறிந்து காத்திருக்கிறேன்!
—-
நிராகரிப்பு

மழைகழுவிய சாலையில்
நிலைகுலைந்த நிர்வாண பிச்சைக்காரியாக
ஏழைவீட்டில் மரபுசிறையிலிருக்கும்
இளம் விதவையாக
ஆயிரம்காலத்து பயறுக்காய்
ஆறாண்டுகளாக அரிதாரம்தரிக்கும்
கனவுசுமந்த பெண்ணின்
கனத்த மெளனாமாய்
நரைகொண்டு உடல்கூனி
தீர்ந்த இருமல் மருந்தை
தன்மகனிடம் சொல்ல
வார்த்தகள்கோர்த்து ஒத்திகைபார்க்கும்
கிழவனின் வறட்டு இருமலாய்
காற்றின் திசையாவும்
நிராகரிப்பு….

தரையோடு தரையாக தேயினும்
திரும்ப திரும்ப எழும் வீம்பாய்
விழுந்த இடத்திலேயே
வீழ்ந்துகிடக்கும் விரக்தியாய்
உரிமைகள் மறுக்கப்பட்டபோதும்
உயரத்தைமட்டும் பார்க்கும் பிடிவாதமாய்
ஒருதலை காதலில்
உயிர்துறக்கும் மடமையாய்
ஒன்றாய் தோன்றி
பலபரிமாணங்களெடுக்கும்
நிராகரிப்பு….

சுடலைமாடனாடும் செங்காட்டில்
சவக்குழியாவும் சொல்லும்
கதையிலெல்லாம் கருவாக இருக்கும்
நிராகரிப்பு….
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்…

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்)


1.கப்பல்… கப்பல்…

அவன்
சின்னஞ்சிறியவன்
என்னுயிர் சேர்ந்தவன்.

நான்
பூவரைந்து காட்டினால்
பூவாய் மலர்ந்து புன்னகைப்பான்.

காளையை வரைந்தால்
முட்டு என்று ஓடுவான்.

குருவியைத்தான்
வரைய நினைத்தேன்.

அவன்
கப்பல் என்றான்.

அந்நேரம்
எழுதுகோல் எழுதாமல்
பிடிவாதம் பிடிக்க…
அவனும் கேட்காமல்
அடம் பிடிக்க…


கைமூடி கைதிறந்தால்
கையில் காசுபோல…
காகிதத்தை
மடித்தேன்…பிரித்தேன்…
கப்பல்…

இனிய கடிதத்தை
எழுதி மடித்ததில்…
பிரித்துப் படித்ததில்…

எழும் மகிழ்ச்சி
எனக்கும் அவனுக்கும்.

உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
உரக்கக் கத்தினான்
கப்பல்…கப்பல்…

கற்றது கையளவு என்பார்கள்…
அவனுக்கு
கடலும் கையளவு…

2.இல்லை இல்லை

பூக்காத மரத்தில்
பறித்த பூ ?

பதரைக் குத்தி
புடைத்த அரிசி ?

திறந்த கூண்டில்
இருந்த குருவி ?

அம்புக்குத் தப்பி
வீழ்ந்த புறா ?

உழுதவன் கணக்கில்
எழுதி வைக்கும் இலாபம் ?

நிரில்லாக் காவிரியில்
நீந்தியிருக்கும் மீன் ?

சிவகாசி மத்தாப்பு
சிரித்த பின் மிச்சம் ?

விடிந்த பின் வானில்
வெளிச்சமிடும் தாரகை ?

புறபடும் நொடியில்
அடைந்த தூரம் ?

ஓடி முடித்து
நின்ற நொடி வேகம் ?

விண்வெளி மிதக்கையில்
விழ வைக்கும் ஈர்ப்பு ?

புத்தகம் புறட்டினான்
சின்னவன் என்னவன்
கிளையிலிருந்த
கிளிகளை எண்ணினான்.

கிளிகள் பறந்த பின்
கிளையிலிருப்பது ?

இருப்பது
இல்லையென்று சொல்லாமல்
கிளையில் கிளி
சுழி என்றான்
சுட்டிப்பயல்.

3.ஓவியமாய்…

உங்களுக்கனுப்ப வாங்கிய
வாழ்த்தட்டை படத்தில்
உங்களோடு நானுமிருக்கிறேன்.

ஆமாம்
யார் கண்ணிலும் படாமல்
அந்த ஒவியத்தில்
அதோ…
அந்த மரத்துக்குப் பின்
மல்லிகைப்பூச்செடி மறைவில்
நீங்களும் நானும்
ஒளிந்து பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
வெகுநேரமாய் இந்த
வாழ்த்தட்டை வண்ணப் பூங்காவில்.

—-
thamilmathi@yahoo.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

புதுவை ஞானம்


ஆணவத்தின் உச்சம்
****

என்று தணியும்….
வாய்ப்புக்கும் வசதிக்கும்
பேறுக்கும், புகழுக்கும்
தவித்தலையும் தாகம் ?
கருக்கலில் எழுந்து
நடுநிசியில் தலை சாய்க்கும்
நாய்ப் பிழைப்பு.

கழுதை மேல் பயணித்தும்
பஞ்ச கல்யாணி மேல்
பவனி வரும் பேராசை.

அமைச்சர்களாக இருந்த போதிலும்
அரச பதவி மேல் மோகம்.

கூற்றுவனின்
ஐந்தொகைக்கு அஞ்சாமல்
உண்ணவும் உடுத்தவும்
உளைச்சலும் உழைப்பும்.

பேரனுக்கும் மைந்தனுக்கும்
பெருஞ்செல்வம் தேடுமிவர்
ஒரு பொழுதும் ஓயார்
மறுபுறத்தைப் பாரார்.

வாய்ப்பும், வசதியும்
பேறும் புகழும்
விதிக்கப்பட்டிருக்கிறது-
ஏற்கனவே.

எப்போதும் ஒதுக்க வேண்டும்
நெஞ்சத்தின் கபடுகளை
ஆழமும், அகலமும் ஆன
ஒழுக்கத்தின் நற்கனிகள்-
நேர்மையும், சத்தியமும்.

ஆராயாமல் செய்யப்படும்
சின்னஞ்சிறிய தவறுகள் கூட
பெற்றுத் தந்துவிடும்
வானுலகின் தண்டனையை.

இதுவரை புலப்படா விட்டாலும்
காலாகாலத்தில் தண்டித்து விடும்
தெய்வ நீதி.

வேதனையும், வீழ்ச்சியும்
ஏற்படுவது ஏனென்று
எரிக்கும் சூரியனைக் கேட்டால்
நெறிமுறைகளை மீறி
அண்டத்தின் ஒழுங்கை
அலங்கோலமாக்கும்
‘ஆணவத்தின் உச்சம் ‘ -என்பான்.

— மூலம்; யுவான் சுவாங்
[JOURNEY TO THE WEST
Eng. by Anthony C.YU

****

முரண்பாடில்லை
****

புகழுக்காக அலைபவர்கள்

புகழுக்கே பலியாவார்கள்.

பொருளுக்கு அலைபவர்கள்

பொருளாலே அழிவார்கள்.

புலிவால் பிடித்தவர் தாம்

பதவிக்கு அலைபவர்கள்.

பாம்பு சுற்றிய காலுடன் நடப்பவர்கள்

சலுகை தேடுபவர்கள்.

நீலம் கவிந்த மலைகளிலும்

நீலம் தெளிந்த நீரோடைகளிலும்

கவலையற்று வாழும் நம்

வாழ்க்கைக்கு

ஈடாகுமா ? அவர் தம்

இழிவாழ்க்கை ?

வறுமையிற் செம்மை தேடும் நமக்கு

விதியுடன் முரண்பாடில்லை.

****

பண்டமல்ல பிண்டம்
****

நொந்து சலித்துப் போன

குடும்பத்தலைவன்

(அலுவலகம்) – தொழிற்சாலையில்

உழைத்துக் களைத்து உளைத்துப் போன

(வணிகன்) – தொழிலதிபர் – அதிகாரி

குடும்பத்திற்குள்

பெரும்பாலும்

ஒன்றுக்கொன்று

முட்டாள் தனமாக முரண்படுவதும்

சூழலுக்குச் சூழல்

மாறுபடுவதுமான

உட்பொருளைச் சுமந்து சுமந்து

இளைத்துப் போனவர்கள்

என்பது மட்டுமல்ல….

வெவ்வேறு
உள்முகமான சமூகப் போக்கின்
உயிரிகளாக உண்மையில்
சாட்சிய மாகிறவர்கள்.
இணை இணையான
பொருட்கள் அல்லர்.

****

கரையோர அலைகள்
****

விருப்பு , வெறுப்பு
சினம் , சமரசம்
நம்பிக்கை, அவநம்பிக்கை என
நிரந்தரமான
உணர்ச்சிப் பிழம்புகள்
ஏதொன்றும் இல்லை – ஓர்
உயர்மட்டப் புரிதலில்
சிறப்பாகவும், பருண்மையாகவும்
விசேஷமாகவும், ஸ்தூலமாகவும்
வரையறை செய்து – எவ்விதமாகப்
பொதுமைப்படுத்தினும்
ஒவ்வொரு உணர்ச்சியும்
ஒருவர் அல்லது மற்றவரின்
குழுச் சார்பை பொறுத்த
உள்வாங்கலின்
விகற்பமான வெளிப்பாடு தான்.
சமூகச் சார்பின் பின்புலத்தில்
ஒருவனின்
உள்ளும், புறமும் ஆன
உறவுகளுக்குப்பால்
அடிப்படையான
உணர்வுகளோ
உணர்ச்சிகளோ
ஆளுமையோ
இல்லவே இல்லை.

****

சீறும் புயலில்

குமுறும் கடலில்

தத்தளிக்குமொரு தோணியில்

நம் பயணம்

ஒருவருக் கொருவர்

கை கோர்த்து

நம்பிக்கையளிப்பது

நம் தலையாய கடமை.

****

மனமற்ற மனம்
****

மனம் தான் புத்தர்
புத்தர் தான் மனம்
மனமும் , புத்தரும்
உன்னதமானவை.
மனமும் இல்லை
பொருளும் இல்லை
என்று நோக்கினால்
தர்மகாயம்
உன்னுடையதாகும்
காட்சியும் இல்லை
வடிவமும் இல்லை
தர்மகாயத்துக்கு.
முத்தன்ன ஜொலிப்பில்
பலதையும், பிரதிபலிக்கும்
உடலற்ற உடல்தான்
உண்மைக் காயம்.
வடிவற்ற வடிவம்தான்
உண்மை வடிவம்.

****

உயர்வு தாழ்வு பேசும் மனம்
****

வடிவமும் இல்லை
வெளியும் இல்லை
வெற்றிடமும் இல்லை
வருதலும் இல்லை
போதலும் இல்லை இல்லை ‘
முரணுமில்லை
சமனுமில்லை
உளதுமில்லை
அலதுமில்லை
கொடுத்தலும்
எடுத்தலுமில்லை
நம்பிக்கையின்
ஏக்கமும் இல்லை.
உள்ளிலும்
வெளியிலும்
ஒளிரும் சுடர் ஒன்றே.

****

துளி மணலில்
****

துளியத்தனை மணலில்
பல்லாயிரம் துகள்கள் கொண்ட
புத்தரின் ஆட்சி
ஒரு மனம் அல்லது
ஓர் உடல்
பதினாயிரமாய்க்
காட்சி தருகிறது.
மனமற்ற மனநிலையைக்
கைக் கொள்ள வேண்டும்.
இம்மாட்சிமையறிய.
பிணைப்பும் களங்கமும்
அற்றது தான் தூய வினை.
நல்லதும் பொல்லதும்
பலதும் செய்யாதே ‘
சாக்கிய முனியைச்
சரணடையும்
சன்மார்க்கம்
இது வென்றுணர்.

****

பாழ்
****

ஒரு கணமும்
விடுதலறிது
‘தாவோ ‘ – வை
விடுக்க
முடிவது
‘தாவோ ‘ அல்ல.
தெய்வீக ஆயுதங்கள்
களவு போனால்
தேடியவன் உழைப்பு
பாழ் ‘ பாழ் ‘ ‘ பாழ் ‘ ‘ ‘

****

தீர்வின் கனி
****

பிரதோஷத்துக்குப்
பிரதோஷம்
அமுதின் சுவை
இயல்பானது – நிலை
முழுமையானது.
பொறுக்கி எடுத்ததை
ஸ்புடம் போட்டு (உலையிலிட்டு)
வஸ்திர காயம் செய் (சுத்திகரி)
தீர்வின் கனி
மேல் உலகில்
உள்ளது.

(அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் மூன்று நாள் முன்பு வருவது பிரதோஷம்.)

****

திடஉரு
****

நூற்றாண்டுகள் உருண்டோடுகின்றன
ஓடையில் பிரவகிக்கும் வெள்ளம் போல.
ஆயுள் பரியந்தம் ஆற்றிய பணிகள்
நொப்பும், நுரையுமாய்…
நேற்றைய முகம் ஜொலித்தது
மாம்பழச் சிவப்பாய். ஆனால்
இன்றைய நெற்றி குருதியற்று
பனித்துகளாய்ப் பாரித்து….
கரையான் புற்றெனக் கலைந்து போயிற்று
வாழ்வெனும் மாயத்தோற்றம்.
‘திரும்பி வா — திரும்பி வா ‘ எனக்
கருங்குயில் அழைக்கிறது.
இரகசியமாய்ச் செய்யப்படும்
நற்பணிகள் நீட்டிக்கக் கூடும் வாழ்வை
ஒழுக்காற்றில் ஒழுக
கழிவிரக்கம் தேவையில்லை – ஏனெனில்
விண்ணுலகம் அதனைக்
கவனித்துக் கொள்ளும்.

****

ரசவாதம்
****

நீரும், நெருப்பும் கலந்து
ஒன்றையொன்று இழுக்கும் – இத்தகைய
இணையொன்றை உருவாக்க
அன்னை பூமியின் அருள் வேண்டும்.
வெறுப்பும், பகையுமின்றி
மூன்றையும் கலக்க வேண்டும்.
நீண்ட நதியில் நீரும்
அகண்ட வானில் நிலவும்.
முதல் கால் ஆணுக்கும்
பின் கால் பெண்ணுக்கும்
பெண்ணுக்கு மத்தியில்
ஆணுக்கு இடையில்
உலோக நீரை(metal water)
திடவுருவின்
திரவத்தை
எப்படிப் பெறுவாய் ?

****

போகுமிடம் வெகு தூரமில்லை
****

பிறப்பிலிருந்து மூப்புவரை
நடக்கலாம் – பின்னர்
மீண்டும் இளமை பெறும் வரை.
ஆயிரம் முறை இவ்வாறு சுழன்றாலும்
அடைய வேண்டிய இலக்கு
அப்பாலுக்கும் அப்பால்.
எண்ணத் திண்மையில்
கண்ணுற்று நோக்கினால்
எல்லாப் பொருளிலும்
புத்தரைக் கண்டால்
எல்லா சிந்தனைகளும்
தோற்றுவாய்க்குத் திரும்பினால்
அக்கணம் அடைவாய்
ஆன்மீக மலையை.

–யுவான் சுவாங்

****

சோதி
****

மங்கலாக இருந்தது சிந்தனை
இளமைக்காலம் தொட்டே.
மந்த கதியான சோம்பல் வாழ்க்கை
ருசித்திருந்தது எனக்கு.
பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை
கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை.
நாட்களைக் கடத்தி வந்தேன்.
மாயையிலும், குழப்பத்திலும் – திடாரென
சந்திக்க நேர்ந்தது
நிச்சலனத்தில் வீற்றிருந்த
சத்திய புருஷனை
வெப்பத்தையும் குளுமையையும்
வாதத்தையும், பித்தத்தையும்
வகைத்துரைத்தார் எந்தனுக்கு
வாழ்வு என்பது முடிவற்ற துயரம்
விட்டொழி உலகியலை என்றார்.
மனந்திருந்து ‘ ஒருநாள்
வாழ்வின் அந்திமத்தை எட்டுவாய்
அப்பொழுது….
காலம் கடந்த பின்னர்
எண்வகைத் தவிப்பும்
மூவகைப் பாதையும்
வெருட்டி விழிக்க வைக்கு என்றார்.
உன்னிப்பாய்க் கேட்டு
உறுதி பூண்டேன் மனந்திருந்த.
வருந்தி மனம் மாறி
வாழ்பியல்பை விட்டொழிந்தேன்.
ஊழ்ப்பயனாய்
உயர்ந்ததோர் குருவாகி
விண்ணையும், மண்ணையும்
நவகோளின் சுழற்சியையும்
வியத்தகு அற்புதங்களை
விளங்க உரைத்ததுடன்
நவகோளின் குளிகைதனை
நயமாக ஊட்டிவிட்டார்.
இரவும் பகலுமாய்த்
தொடர்ந்து என் பயிற்சி
சிரசின் சேற்றுப் பரப்பையும்
உட்காலின் ஊசித்துளைகளையும்
சென்றடைந்தது நவ பாஷாணம்.

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சேவியர்


தவறான புரிதல்கள்

0

மொட்டை மாடியில்
தனியே அமர்ந்து
நட்சத்திரங்களின்
கவியரயரங்கத்தை
ரசித்துக் கொண்டிருக்கையில்,

இருளின் மெளனத்தை
காகிதத்துக்குப்
புரியும் வகையில்
எழுதிக் கொண்டிருக்கையில்,

தென்னை மரத்தடியில்
மாலை வேளையில்
தென்னம் பூக்களை
நலம் விசாரிக்கையில்,

புழுதியற்ற காற்றுக்கு
புன்னகை
கொடுத்துக் கொண்டிருக்கையில்

அம்மா
அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பாள்
எனக்கு
கல்யாண வயதாகி விட்டதாய்.

0
….
காதல் இலவசமில்லை

0

உனக்கும் எனக்கும்
இடையே
நீண்டு கிடக்கும் சாலையில்
சீறிப் பாய்கின்றன
வாகனங்கள்.

நீ இந்தப் பக்கமும்
நான் அந்தப் பக்கமும்
காயமின்றிக்
கடந்து வரல்
சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறதெனக்கு.

வாகனங்கள்
எப்போதுமே
வழிவிடுவதில்லை.

பொறு
இரவு
சாலையில் இறங்கிய பின்
சந்தித்துக் கொள்ளலாம்.

அதுவரைக்கும்
காப்பாற்றி வைத்திரு
என் காதலையும்
உன்னையும்.

====

விழாக்கால வாழ்த்துக்கள்

0

வயலோர
ஒற்றையடிப்பாதையில்
சாயமிழந்து போன
சைக்கிளை நிறுத்தி
வைத்து விட்டு
வருவார் தபால்காரப் பெரியவர்.

கிறிஸ்மஸ்,
புது வருடம்,
பொங்கல்
என
ஒவ்வோர் பண்டிகைக்கும்
அவருக்கான
காத்திருப்பு அதிகரிக்கும்.

காத்திருத்தலைக் கலைக்க
ஒரு சில
வாழ்த்துக் கடிதங்களேனும்
இருக்கும்
அவருடைய கைகளில்
எனக்காய்,

எப்போதும்
தோன்றியதே இல்லை
அவருக்கும்
ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.
—-
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சாந்தி மனோகரன்


இறந்தவன் சொன்னது…!!!

புரியாத உண்மைகள்
பொதிந்துள்ளதோர்
புதிரான புத்தகமே வாழ்க்கை
உண்மைகள் சில நேரம்
புரியும்போது-இந்த
உலக வாழ்வே பொய்யென்பதுவும்
புரிந்துபோகும்..ஏனென்றால்
ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர
வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த
ஒப்பற்ற வாழ்க்கை


இறப்பவன் சொன்னது..!!!

கண்களை திறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை
கைகளை அசைக்க நினைக்கின்றேன்
அசைவில்லை
உறக்கத்தில் விழித்துக்கொண்டது
உள்மனது…
இன்னும் எனக்கு புரியவில்லை
நான் இறந்து கொண்டிருப்பதை…!!


தாரை தப்பட்டைகளுடன்
வீர முழக்கமிட்டே…யார்மீதோ
சேறை வாரியிறைத்து
கொடியேற்றி
வாக்குறுதி தந்தார் தலைவர்…
எல்லாம் பறந்தது
வழக்கம்போல் காற்றில்


shanthi_yem@yahoo.com

Series Navigation

சாந்தி மனோகரன்

சாந்தி மனோகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ப.வேல், சிங்கப்பூர்


காதல்
நடப்பு ஆண்டு
நகரா ஆண்டாகிறது!
நாட்காட்டி
நங்கூரம் போடுகிறது!
கடிகாரம்
கடிவாளம்
போடுகிறது!
நிமிடங்கள்
நிலைக்குத்தி
நிற்கிறது!
நொடிகள்
நொடித்துப்போய்
நிற்கிறது!
தெரிந்தால் சொல்…
காதலுக்கு
காப்புறுதி எடுக்கும் வழி!
—-
காதல்
உன் பார்வைப்
பிச்சைக்காகத்தான்
அந்த வானம்
நிலாத் தட்டு
ஏந்துகிறது!
நீ…
அண்ணாந்து
பார்ப்பாய் என்றுதான்
அந்த நிலா
குப்புறக் கிடக்கிறது!
உன் ஒவ்வொரு
நடையிலும்
பூமி தன்னைத்
தன்னைத்
துடைத்துக் கொள்கிறது!
நீ குளிக்கும் போது
தண்ணீர்தான்
குளித்துக் கொள்கிறது!
பார்த்தாயா ?
நடப்பனவாய் பிறந்த
நான்..
உன்னால்
பறப்பனவாவதை!

Series Navigation

ப.வேல், சிங்கப்பூர்

ப.வேல், சிங்கப்பூர்

கவிதைகள்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


ஒட்டு மாமரம்

அந்தப்பக்கம் போய்
ஆண்டுகள் ஆகிவிட்டன

ஒரே ஊருக்குள்ளிருந்தும்
எட்டிப்பார்க்காமல் திரும்பியது
என் மனத்தில் சுமைதான்

அதன் நினைவையும்
நிழலையும்
நான் அதிகமாகத்தான்
எழுதியிருந்தேன் என்பதைவிட
ஆழமாய் உணர்ந்து
அவதிப்பட்டிருக்கிறேன்

எட்டிப்பார்க்காததை எண்ணி
அது ஏதோ வாய்திறந்து
அழுவதாக நினைத்து
மனம் தானாகக்கனத்துக்
கரைகிறது கண்களில்

கோடையின் வாடையை
வரவிடாமல் தடுத்த
அதன் அடர்த்தியை
உணர்ந்தவர்கள் எல்லாம்
கைதிகள் ஆனார்கள்

விடுதலை வேட்கையை
விட்டுத்-தாலைத்தார்கள்

சூரியக்குதிரைகள்
நுழைய முடியா
அடர்த்தி அரண்

நான்
அதன் அணைப்பில்
து-ங்கி விழித்தவன்

அதன் பரிசுகளைச்
சுவைத்து ருசித்தவன்

எப்போதோ வரும்
மின்னல் நினைப்போடு இருந்து-காண்டு
எழுதிக்குவிப்பதில்
எத்துணைப் போலித்தனம்
என்னிடம்…!
—-
மேகமே ஒரு கேள்வி!
பிச்சினிக்காடு இளங்கோ , சிங்கப்பூர்

படைபடையாய் வான்தரையில்
படையெடுக்கும் கூட்டமே
படையெடுக்கக் காரணம்தான்
பகருவீர்கள் கொஞ்சமே! —- மண்ணில்

விடையிலாது ஏங்குகின்ற
விளைபயிர்கள் பார்த்துதான்
விழிநீரைச் சிந்தவே
விரைந்துவந்தோம் நாங்களே

வெள்ளுடைதான் žருடையோ
விதவைக்கோ லம்தோனுதே
விதவைகூட வான்வெளியில்
வீதியுலா ஆகுமோ ?—- விண்ணில்

உள்ளக்குறை உள்ளவர்கள்
ஒருவர்கூட இல்லையே
உலவநாங்கள் விதவைபோல
ஒருதடையும் இல்லையே!

உப்புநீரில் மூழ்கமூழ்க
உடல்தூய்மை போனதோ
உப்புநீரில் குளிக்கயுங்கள்
உள்ளம்மிக ஒப்புமோ ?—-போற்றும்

ஒப்பிலாத மழைவளத்தை
உலகம்உய் யதூவவே
உப்புநீரா ? பார்ப்பதில்லை
உள்ளம்மிக ஒப்புமே

மழையிலாது வாழ்வதற்கு
மனிதயினம் முயலுமோ
மழைமறந்து மரமழித்து
மனிதன்வா ழஇயலுமோ!—-நாளும்

தழைத்திருக்கும் இயற்கைவளம்
தரணியெங்கும் காணவே
உழைத்துநாங்கள் சிந்துகிறோம்
உயர்மழையாம் வியர்வையை

ஏழையென செல்வரென
இரண்டுப்பார்வை இல்லையே
இருளடைந்த நெஞ்சிருக்கும்
இழிபிறப்பு தொல்லையே –ஓங்கும்

தோழமையை உயிரினங்கள்
தோள்கொடுத்துப் பேணவே
தோன்றுகிறோம் கார்முகிலாய்
தொழுதுநீங்கள் வணங்கவே
—-
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

கவிதைகள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

புஷ்பா கிறிஸ்ரி


இரத்த தானம்

இன்னொருவர் நலம் காத் திரங்கி
இன்னொருவர் துயர் போக்குமி ன்பத்தில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
அத்தனை மகிழ்விலும் மனத்தினில் கிளர்ச்சி

அத்தனை நிகழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி
எத்தனை சக்தி என்னுள் எத்தனை சக்தி
இன்னும் இனிக்கும் இள மனத்து வெற்றி
மண்ணில் நிலைக்கும் மனித மன முக்தி

எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள்
எத்தனை குணங்கள் எத்தனை குலங்கள்
அத்தனை மனிதரிலும் எத்தனை எண்ணங்கள்
அன்பை மதித்திடும் மனிதாபிமான வண்ணங்கள்

குருதியின் நிறம் சிவப்பென்று ஒன்றாய்
உறுதி கூறி நின்ற பெரியவர் சிறியவர்
தானம் தந்து நின்றே தம் மனிதத்து
மானம், மாண்பு காத்து நின்றார்

நானும் ஒரு துகளாய், பொறியாய்
வானின் கீழோர் நிழலாய் நின்று
பாசம் காத்து மனித நேயம் பார்த்து
தானம் செய்த நாளை மறந்திடேனே

எத்தனை தாய், தந்தை, தம்பி, தங்கை
அத்தனை அண்ணன், அண்ணி, மாமன், மாமி
நல்ல நட்புகள், நேசங்கள், பாசங்கள், எல்லாம்
நலமாகிட உதவும் என் இரத்த தானம் தானே

புஷ்பா கிறிஸ்ரி
—-

அந்த வீடு

மனம் வியாகுலமாய்

அழுது கொண்டது

காலாரக் கொஞ்சம் நடந்து போக

அந்தப் பெரிய வீடு வந்தது

நாயும் தெரியவில்லை

வாசலில் பலகை இல்லை

நாய்கள் ஜாக்கிரதை என்று

காவல் காரனும் இல்லை

மஞ்சள், சிவப்பு என்று

பலவர்ண கலவையில்

குரோட்டன் செடிகள்

வீட்டைச் சுற்றி

அழகு காட்டினாலும்

சுவர்கள் மட்டும்

அழுக்காகிக் கிடந்தன

உள் வீட்டு மனிதர்

மனத்தைப் போல்

இரவு மட்டுமே பல்துலக்கி

காலை தேனீர் குடித்து

வாரம் ஓருமுறை குளித்து

மறு நாட்களில்

வாசனைத் தைலம் பூசி

அழகாய் உடுத்திக் கொண்டு

குளிருக்குப் பயந்து

குளிக்க மறந்த

வெள்ளைக் காரனாய்

உயர்ந்து நின்றது

அந்த வீடு

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி

கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சுமதி ரூபன் (கனடா)


கவிதை 1

குடும்பம்

இறுக்கங்கள் தளர
இதயத்தின் அடியிலிருந்து வந்தது அது.

உன் முகத்திலும் இறுக்கமில்லை
எனக்கு அதில் சங்கோஜமுமில்லை

விழிகளின் கலப்பில்
சின்னதாய் அதிர்வுகள்.

நெருடல்களும் இருவருக்குமாய்.

என் பிரசவத்தில் உதிர்த்தது
உன் உதிரமே!

உன் புன்னகையின் செயற்கைத் தனம்
என்னிடத்தில் இருப்பது
உனக்குப் புரிவது எனக்கும் தெரியும்.

பதில் காணாக் கடந்து விட்டோம்
காத தூரத்தை
பரீட்சை வேண்டாம்

எனக்கான உச்சத்ததை நானும்
உனக்கான உச்சத்தை நீயும்
எங்கேனும் அடைந்து விட்டு
ஒரே படுக்கையில் தூங்குவோம்
வேறுவேறாய்.

—-
கவிதை 2
வீணாய் சில நிகழ்வுகள்

இறப்பை நோக்கி ஓரடி
இன்றும்..

சிதறிக் கிடக்கும் விட்டில்கள்

மழைத்துளியின் ஈரம் தாங்கா
இறந்து போன செவ்விலைகள்

கரையேற முயன்று
தோற்றுப் போகும் நுரையலைகள்

பற்களில் இடுக்கில்
பாழாய்ப் படுத்தும்
இறைச்சித் துகள்

முகிலின் பின் மறையும் சூரியன்
தூசு படிந்த சந்திரன்
சிதறிக் கிடக்கும் விட்டில்கள்
இறந்து போன செவ்விலைகள்

நாளை..
இறப்பை நோக்கி மீண்டும் ஓர் நகர்வு.

சுமதி ரூபன்

கவிதை 3
நிழல்

மற்றைய நேரங்களில்
நானுன்னை மறந்து போயிருக்கலாம்.

கீறிப்பிளந்த வானம்
தெப்பமாய் நனைத்திருக்க
நகர்வின்றி நகரும்
மண்புழுக்சுட்டத்தினுள்
நீ
நகர்வாய்

ஒற்றை
குச்சி மர நிழலடியில்
இளைப்பாறும்
கரு அணில்

பனிப்படி வெடிக்க
கால் புதைந்து
எங்கேனும்
நீயும் காத்திருக்கலாம்
பேரூந்துக்காய்

புரியாமல் இருக்கிறது
உன் தாண்டல் நடையில்
கடக்கிறான் என் மகன்

சீப்பினுள் சிக்குது
நரை மயிர்

குடும்பம் சுமந்து
வழுக்கலாம் உன் தலையும்

போடா வெட்கங் கெட்டவனே
ஓய்வற்ற ரச்சகனே!

உன்னை நான் மறந்துதான் போனேன்

பத்திரிகை புரட்டையில்
பத்தாண்டுச் சிரிப்போடு
உன்னை நான் படிக்கும் வரையில்
—-
thamilachi2003@yahoo.ca

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட்


———————–

காலம் – மாற்றம் – தலையிடி

என் இரவுகள் பகலைவிட
நீண்டவை
என் உணர்வுகள் அறிவைவிட
அதிகமாகி
அமைதியை வேண்டியே பொழுதுகள்
கழிகிறது
ஏன் என்று எழுவது நின்று
இருக்கலாம் என்று ஆகிவிடுகிறது
அலையாக வந்த சிந்தனைகள் அமைதியாகிப்
போய்விடுகிறது
இப்போதெல்லாம் வாழ்வு பற்றிய பயம் –
எதிர்காலம் பற்றிய சிந்தனை
விசுபரூபமாகி மனம் சோர்ந்து கழைத்து
கவலைப்படுகிறது
பகலை விரும்பா இரவும்
.இரவை விரும்பா பகலுமாக
வாழ்கை நகருகிறது
முன்பில்லாமல்
புதியவை பழையவையை அதிகம்
நினைவுட்டி பயத்தைத்தருகிறது


மோகம்

விலக்க முடியாத போர்வையின்
கண கணப்பை விலக்கி
நான்
உன்னைத்தேடுகிறேன்
நீ
அங்கு இல்லை
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
இனிய முத்தங்களும் நினைவுகளும் மட்டுமே

உனது மார்பில் கனவுகாணவோ
உனது உடலை ரசித்திருக்கவோ
உனது இதளைச் சொந்தமாக்கிடவோ
உனது குரலில் மயங்கிக்கிடக்கவோ
உனது கரங்களை வருடிக் கொடுக்கவோ
அணைத்திருந்து விவாதங்கள் செய்யவோ
மெல்லிய இரவில் உனது தேகம் தந்துவிட்ட
மோகத்தை நினைத்திருக்கவோ
ஏல்லாத்திற்குமாகவே உன்னை என்னவனாக்கவோ
முடியாதிருப்பினும்
அன்பைக் கொடுக்கவும் அன்பை எடுக்கவும்
எமக்கிருக்கும் உாிமை பறிபோகாதவரை
நாம் காதல் செய்வோம் .

ranjini@marley-x.de
***

Series Navigation

ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட்

ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட்

கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பாஷா


1.
கோபமாய்,கெஞ்சலாய்
அழுகையாய்,ஆத்திரமாய்
உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது
என்னில் நீ நிரைத்து
வைத்த காதல்!

2.

நட்சத்திரங்கள் தொலைந்த
நள்ளிரவு நேரம்
நிலா இல்லாத வானம்
கன்னம் வருடிப்போகும்
தென்னங்காற்று
என் வீட்டு மாடியிலமர்ந்து
நீயில்லா நிமிடங்களை
தீயிட்டுக்கொண்டிருக்கிறேன்

நான்
இருக்கும்போதெயென்னை
இறக்கும் நிலையெய்ய
செய்துவிட்டாய்.
அனிச்சையாக நடக்கும்
உடலின் இயக்கங்கள்
நான் இறந்தவனாகவே
கட்டியம் கூறுகின்றன
இறப்பு துயறமானதுதான்
இருந்தபோதும்
நீ
எடுத்து தந்ததால்
ஏற்றுக்கொள்கிறேன்!
——————————-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

தேவஅபிரா


அறியாததும் உணராததும்

ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை

பள்ளியில் உணர்ந்துகொண்டேன்.

ஒன்றா இரண்டா காதல்

உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை

பள்ளிப் பெறுபேற்றில் உணர்ந்துகொண்டேன்.

பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய

பன்னெடும் காலத்தோழமை பிரிய

பின்னிரவின் பழுவை

அன்றெழுந்த நிலவில் அறிந்துகொண்டேன்.

தார் அழிந்து தடம் சிதறிய வழியெங்கும்

உருக்குலைந்தோடும் மனிதரில்

வாழ்க்கையை அறிந்துகொண்டேன்.

காணாமல் போனவர்களை

காலத்தின் மேனியில் கதியற்றுச் சிதைந்தவர்களை

கதையற்றுக் கண்ணீரையும் விழுங்கி

இறுகிய விழிகளில் அறிந்துகொண்டேன்.

நீதியற்ற காலத்தின் நாசத்தை

போரில் உணர்ந்துகொண்டேன்.

போரை; போய் வெடிக்கும்

பிஞ்சுகளில் அறிந்துகொண்டேன்.

உண்மைகளின் வலியையோ

இப்பெரு வெளியிலே தனித்தபோது உணர்ந்துகொண்டேன்.

இன்னும் அறியாததும் உணராததும் எதேனுமிருக்குமென்றால்

அதுவே…

யாரொடு நோகவென்றும் யார்க்கெடுத்துரைக்கவென்றும்…

புரட்டாதி 2003.

தேவஅபிரா

ிரஎயநெனெசயெ@ாழஅந.டெ

—————————————–
அரளிப் பூவும் தரங்காவும்…

மழலையின் விரல்கள் வருடச் சிலிர்க்கும்

மானுட முகம் போல்

மென்சிறு இலைகளின் வசந்த உயிர்ப்பு

ஒளிரும் காலைப் பொழுதில்

உன் காதலின் அழைப்பில்

ஏக்கமுறும் என் இதயம்

உன் செவ்விதழ்களில்

என் காதலைத்தரக் காலம் இல்லையே!

இதய ஆழத்திருந்து எழுந்து

வாழைக்குருத்தென விாிய

கடும்காற்றில் கிழிந்த கனவுகளோடு

ஆறாத இரணங்களின் பிணமானேன.;

அதுவொரு காலம்.

மீண்டும்…

வெண் அரளிப் பூக்களின் கொத்தைப் பறித்தெடுத்தேன்.

பூவிரண்டு தா

பூஜைக்கென்றாய்

மானுடர்க்கே அன்றிப் பூஜைக்கல்ல என்றேன் முகா;ந்தபடி.

செம்மை தீண்டப் பிடிவாதமுடன் சொல்கிறாய் ‘பூஜைக்கே ‘

மென்நய மெளனத்தில்

அரளிப்பூவின் விளிம்போரம் படரும்

செம்மையைப் பார்த்தேன் – உதடுகள்.

சூழவுள்ள விழிகளைத் தப்பி

மொழிகளையும் தப்பி

நீ எதையோ தேடுவதை

நான் மட்டும் உணர்வதேன் ?

அந்தி மாலையில்

நித்திய கல்யாணிப் பூக்களை

என் முன்றலில் நீயேன் கொய்து கோர்க்கிறாய் ?

விலகிச் செல்லும் என் ஆத்மாவின் சுனையில்

ஊற்றின் குமிழியொன்று

எழஎழப் பொிதாகும் உணர்வில் துடிக்கிறேன்.

தீபாணி தரங்கா

பிாியும் நாளில்

நானும் அழுவேன்.

ஆனி – 1995

தேவஅபிரா
————————————

முடிந்துபோன ஆண்டு

ஆவணி

தேமா மலாின் திரள்கள்

காற்றில் கிளர்ந்து கடலின் திரையென உயரத்தாழ

விசையுறும் உள்ளம்.

மாலைப் பொழுது…

ஆழக்கடலின் மோகத்துளிகள் மோதிச்சிதறும் கரையில்

தனியக் கிடந்தேன்.

கடலின் மடியில் நிலவின் தடமும் அழியும் முகிலின் திரளில்.

பின்னிரவில் பேய்க்காற்றிற்; பேதலித்தலையும் மரங்கள்.

மென்முலையோடணையா மழலைக்குரலோ அழுகிறது.

புரட்டாதி

அன்றோ

காற்றடங்கிய பகலில் மே மலர்களில் தீ எாிந்தது.

இன்றோ

ஓங்கார ஓலமிட்டு உலகத்தின் உதிர்வெல்லாம்

அள்ளி வந்தது சோளகம்.

இரவிலோ

நெடிதுயர்ந்த ஆலமரத்தின் கீழ்

நிலவில் பாடும் பைத்தியக்காரனுடன்

தனித்திருந்தேன்.

ஐப்பசி

இரவினில் எங்கிருந்தோவரும் இசையுள் மூழ்குதல்…

கனவினுள் அமிழ்ந்து கடலுடன் பேசுதல்…

இல்லையெனில்

கண்ணீர் வழியத்

தேமாமரங்களுடன் தேம்புதல்…

கார்த்திகை

இரவின் மீது இரைகிற காற்றில்

விருட்சங்களின் இலைகள் பேசுகின்றன.

நிலவைத் தழுவ எழும்பும் கடலின் அலைகள்

ஏங்கி விழுகின்றன.

முன் மார்கழி

மானுட ஆன்மாவின் புன்னகையைத் தேடி நடந்த

காலத்திடலின் நடுவில்

புல் தேய்ந்தழிந்த தடமோ நீள்கிறது.

மழையில் நனைந்து

நிலவில் தனித்த பூக்கள்

உதிரும்.

நடு மார்கழி

மாாிகால இரவிற் புதைந்து

மண்ணெது விண்ணெது

கடலெது கரையெது

என்றறியா இருளிலும்

ஆழியின் இசையெனத் திரள்வது எதுவோ ?

பின் மார்கழி

நீள் தெருவெங்கும் நிராசை சிந்திப் பின்

அதிகாலைக் கடலில் ஆடும் படகில் வாழ்க்கை,

தீராக்காதலைத் தேடித் தீராத காதலில்

ஆறாத இன்பமருளும் மாயக் குகையுட் போனதென்றார்.

நாளை நதிமுகக் கலப்பில் இன்பம் நுரைக்கையில்

நறுமலர்ப் பொய்கையின் பொன்தாது கொண்டு வருமென்றார்.

போரும் பொய்மையின் பாதையில் போயழிந்த காலமும்

போற்றிப்பாடும் புலவரைப் பொரிந்து போனதென்றால்

பொய்யாம்!

அச்சமும்

அச்சத்தின் கனவுகளும் பற்றிப்பிடித்தலைக்க

ஆதரவற்ற காலத்தில் அணைந்து கொள்ள

ஆருமற்றுப் போனதடி வாழ்வு.

வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல

என்றறைகிறது ஆழி.

எல்லாம் மூடிய இருளிலும்

வெள்ளி அலைவீசி விண்ணின் ஒளி வீழ்த்தும்

என் இனிய கடலே!

ஆழத்தின் ஆழத்தில் உறையும்

உன் மெளன வர்மத்தின் துளி பருகி

உயிர் நிறைந்து

உயர்ந்து வரும் என் வாழ்க்கை

என்றுன் கரையில்

மணலின் துகள்கள் எண்ணிக் காத்திருப்பேன்.

மார்கழி – 1996

சாிநிகா;
puvanendran@home.nl

Series Navigation

தேவஅபிரா

தேவஅபிரா

கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

தேவேந்திர பூபதி


அரூப வெளியில்

கூச்சல்களூடே

பீறிட்டெழும் யானை

புலனடக்கம் பேசித் திரியும் நாவுகள்

பொருள் புரியும் வரம் வேண்டி

குருமார்களின்

வாயில்களில் குடியிருக்கும் மனசு

கடைசி வரைக்கும்

திறக்காத கதவு

விளையாததன் காரணம் தேடி

பூமிக்கு விசாரனை

கீறிப் பிளந்து

உள் வைத்து தைத்து பின்

அன்னாந்து பார்த்து

முந்நூறு முட்டைக் கேட்கும்

ஊரெல்லாம் மக்கள்

************************************
ஆலகாலத்தை

படிமமாய் உடலில் புதைத்து

இடத்தைக் கொடுத்தாலும்

வலத்தைக் கொடுத்தாலும்

விஷ விஷமாய்த்தான்

காத்துக் கிடக்கும்

உயிரை வேண்டி

சுடுகாட்டுப் பித்தன்

பெண்ணைக் கைப்பிடிக்க

கல்யாண சுந்தரனாய்

புறப்பட்ட பொழுதினின்றே

ஆரம்பமானது

பித்தலாட்டம் திருவிளையாடலாய்

————————————————–

Series Navigation

தேவேந்திர பூபதி

தேவேந்திர பூபதி

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

மதியழகன் சுப்பையா


1.
ிற்பங்களோடு
ஓவியங்களோடு
புகைப் படங்களோடு
புணரத்துடிக்கிறேன்

புத்தகங்களை
முகர்ந்துவிட்டு
மூடி விடுகிறேன்

கிள்ளி எறிந்துவிட
நினைக்கிறேன்
விறைத்த உறுப்பை

உறுப்பில் இல்லை
கோளாறு என்பதை
உணருவதே இல்லை.

2.
கட்டம் போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருந்தது

வியர்வையாலும்
இந்திரியச் சகதியாலும்
ஈரமாகிப் போகிறது நாளும்

ஒதுங்கி சுருங்கி விடுகிறது
கசங்கி நைந்து
கிழிந்து விடலாம்
விரைவில்

இன்றும்
சுத்தம் மணக்க
பூப்போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருக்கிறது.

3.
பறவைகளை பிடிக்காது உனக்கு

பூக்களை கசக்கி முகர்வாய் நீ

மழையை திட்டித் தீர்த்திருக்கிறாய்

வீட்டைச் சுற்றிய எல்லா மிருகமும்
உதைப் பட்டிருக்கு உன்னிடம்

அலறல் சங்கீதத்தை
அப்படி ரிப்பாய்

எப்படி அழைக்கிறாய்
‘டேய்! செல்லம்! என.

4.
நான் தனிமையில்
இருக்க வேண்டும்

முதலாளியின் கட்டளைகள்
பீயைப் போல்
துடைத்து விடு

நண்பர்களின் நினைவுகள்
இறகு போல்
பிடுங்கி விடு

குடும்பத்தாரின் பரிவுகள்
மலர்களைப் போல்
கிள்ளிவிடு

உடல் துவாரங்கள்
வழியாய் என்னுள்
ஊற்றி நிறை

நான் தனிமையில்
இருக்க வேண்டும்
உன்னில் மிதந்தபடி.

5.
இதுவரை
நான் பெற்ற
முத்தச்சுகங்களை
மொத்தமாய்
ஓர் நாள் உன்னிடம்
ஒப்புவிக்கையில்
வெளியில் ிரித்து
உள்ளுக்குள்
அழுதிருப்பாய்.

6.
நான்கடி விலகி நின்று
பேிய போது

தோளில் கைப் போட்டபடி
நடந்த போது

கெஞ்ிக் கேட்டு
முத்தம்
கொடுத்த போது
பெற்ற போது

சந்திப்புகளில் பரிசுகளை
திணித்த போது

மணிக் கணக்கில்
காத்திருந்த போது

பல நிலைகளில்
மெளனமாய் இருந்து விட்டு

உடல் பிசைந்து
உச்சம் கண்ட
ஒரு பொழுதில் கேட்டாய்
‘இதுதான் காதலா ? என .

7.
பகல் முழுவதும்
தேக்கி வைத்து
இரவில் ஈரப் படுத்துகிறாய்

எச்ிலில் ஊறி
உருவான புழுக்கள்
பியால் நெளிகிறது
வீடெங்கும்

நொடிப் பொழுதுகளில்
வடிந்து விடுகிறது
உன் காதல்
துளிகளாய்

உன் காதல் சுனை
வற்றி வரண்டு
போய்விடும் நாளில்
துவங்கிடக் கூடும்
என் காதல்.

8.
நேற்றைய
நகக்கீறல்களோடு
இன்றையதை ஒப்பிட்டு
உறுதி செய்து கொண்டாய்

நாயாய் முகர்ந்து
நாற்றத்தில்
மாற்றமில்லையென
அறிந்து மகிழ்ந்தாய்

வழக்கமான் இரு
வார்த்தைகளை
கூறினாய் கரகரப்புடன்

உடலை உருவிக்கொண்டு
சோர்ந்து விழுந்தாய்

கோடாய் வழிகிறது
உன் காதல்.

9.
என் ஏவல்களை
கடமையாகக் கொள்கிறான்

என் அலங்காரங்களால்
கலவரப் பட்டிருப்பான்

என் இயல்பான
தொடுடல்களை
தெய்வத்தின் தீண்டுதலாய்
உணர்வான் போலும்
ிலிர்த்துக் கொள்வான்

உள்ளாடையின் கொக்கி
மாட்டிவிட்டது முதல்
முகம் பார்த்து பேசுவதில்லை

இப்பொழுதெல்லாம்
அக்காவென்று விளிக்காமலே
பேச முனைகிறான்.

madhiyalagan@rediffmail.com
http://madhiyalagan.blogspot.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

மோனிகா


இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை

என் முன்னே ..
சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட
சுக்குநூராய் போன கண்ணாடியூடே

நான் என்று உணர்ந்த நான்
நானாகிப்போன நான்
என் முகவெட்டும் புகைப்படமும்
என் கொங்கைகளும் தாய்மைப்பசியும்
மனவெளியும் ஒவியமும்
இன்னும் பலவும்.

பிணி கொண்டலையும் புலியைப்போல
அனுபவம் மதர்த்த தனிமைதேடலில்
நான் பெரிய மிகப்பெரிய
போரில் புஜம் தட்டும் பகவானேபோல
என் முன்னே..

மரமாய், கிளையாய், மதில் சுவராய்,
கற்றூணாய், காகிதமாய்

எனக்குவெளியே
எதிரொலி மறுத்த நிஜமாய் ..
பறந்து சென்ற குருவி அற்ியாத ரகசியமாய்.
சொல்லின் பொருளுக்கப்பால்
செயலாய் சுயமுற்றெழுந்த நான்
இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து
கற்பதற்கொன்றுமில்லை.

-மோனிகா

வாமனப்பிரஸ்த்தம்

அப்பாவுக்கு போன்சாய்களைப்
பிடிக்காது.
அம்மாவின் பிறந்தகத்தை
குந்தகம் சொல்வார்.
ஓவியம் தெரிந்தும் அம்மா
வரைய மட்டாள்.
பாடத்தெரிந்தும் லவகுசா
மட்டுமே பாடி கண்ணீர் துளிர்ப்பாள்
அம்மாவின் செருப்பு எப்போதும்
குழந்தைகளின் அளவுகள் நடுவே.
நாற்பது வயதில் நடு வீட்டில்
கோலி விளையாடும் குழந்தையானாள்.
வாமனப்பிரஸ்த்தமாம் போன்ஸாய்கள்.
அப்பாவுக்கு போன்ஸாய்கள்
பிடிக்காது.

-மோனிகா

காதல் கொண்டு செல்

களம் பெரிது.
கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.
நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட
மொட்டை மாடியென
நினைவு பொய்யில்லை.
நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்
பருத்துக் கிடக்கும்
கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு
நகருகையில் நீண்டு நீண்டு
நெருங்க முடியாமல் ஒடும்
நாட்குறிப்பு.
குறிக்க நாளா இல்லை
கொண்டா கொண்டாவென
களம் வெரியும் காற்றேபோல்.
நினைவுகள் பெரிதாகிப்
பின் நாட்குறிப்பை
கிழித்துக்கொண்டு கொட்டும்.
வருகின்ற நாட்கள் முட்டித்தலை சாய்க்க
கடந்ததன் நகமாய் காலம்
பிடித்துந்த, கழிவிரக்கம்
கொண்டு சொல்லும்
காதல் கொண்டு செல் என.

-மோனிகா

அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்
தோன்றிற்று இந்த அலமாரி.
கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்
தோன்றின புத்தகங்கள்.
சொல்லும் கருத்தும் தாண்டி
வடிவுற்று வியாபித்த செவ்வகங்கள்.
புதியன கொண்ட வாசனை,
பழையன கொண்ட பூச்சி வாசம்,
அட்டை கிழிந்து தொங்கும் அழகு,
நூலகத்திலிருந்து தப்பி வந்தவை,
நண்பர்கலிடம் திருப்பித்தராதவை
என
நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்
எனது அலமாரி,
அழகிகள் உறங்கும் நகரம் என.

-மோனிகா

பாலத்தின் கீழ் நிற்கும் ஒற்றை மரம்

இப்படியே நின்றது அன்றும்
இரவிரவாய் காயும் நிலவு
ந்ிற்காமல் ஒடும் நீர்நிலையென.
இன்று காணக்கிடக்கிறது
மணற்படுகை.
நடுவிலுள்ள பாலம்.
பாலம் சுமக்கும் மக்கள்
மணற்கடலில் நிலாச்சோறுண்டு
மரத்து உச்சி நிலவில் காதல் பேச
பாலம் கனவு மரம் உண்மை.
ஒற்றை மரக் கிழிக்குஞ்சு
உயரப் பறக்கும் கனவுகள்
உரக்கக்கத்தியும் தொலைவுகளில் மணல்வெளி.
ஒற்றை மரமும் கனவு
மணல்வெளிபோல்.

-மோனிகா

மெளனம் – சாத்தியம்

வெற்றுத்தாளென ஒரு
ஒற்றைத்தாளை
பார்க்கையில் விளையும்
சந்தோசம் ஏன்
ஒரு வெற்று நாளின்
வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.

பொருளற்ற அறையின்
எதிரொலிச் சாத்தியம்
மனதிற்கும் வாய்க்கையில்
மெளனம்தான் அரவம்.
புற்றின் வெறுமை – காற்றோட்டம்
புதிய பரிணாமம் – வளர்ச்சி.
வெற்றுத்தாளின் முன் மட்டுமே
எண்ணற்ற சாத்தியம்.

-மோனிகா.
—————————————
monikhaa@hotmail.com

Series Navigation

மோனிகா

மோனிகா

கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன்


இருந்து
செய்யவேண்டிய வேலை
ஓடிக்
கொண்டிருக்க நேர்கிறது
ஓடியாடிப்
பண்ணக்கூடிய காரியம்
இருந்த
இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது

கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில்
கஷ்டமாகவே இருக்கிறது
சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால்
சந்தோஷம்தான்

மழை கொட்டக்கொட்ட
பச்சை போர்த்தும்
மரம் செடிகொடிகள்
நதி நிறைய நிறைய
மேனி காணும்
நஞ்சை பூமி
காசு பணம் சேரச் சேர
கொண்டாட்டம்தான்
ஜனங்களுக்கு

********************************************************

விக்ரமாதித்யன் கவிதை

பாதங்களுக்குக் கீழ்
பூமி
ஏறிட்டுப் பார்த்தால்
வானம்
காற்று
வீசுகிறது
உலைத்தீ
எரிகிறது
கொண்டல்கள்
கொட்டுகின்றன
பூமி
தந்துகொண்டேயிருக்கிறது
சூரியனோ சந்திரனோ
வானத்தில்
நட்சத்திரங்கள் சுடர்விட்டதும்
சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா
நமக்கென்ன
பிரச்னை வேறே

***********************************************************************

விக்ரமாதித்யன் கவிதை

மலை வளரும் என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
கடல்கொண்டது என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள்
நம்பத்தான் வேண்டியிருக்கிறது
தீ அழித்தது எத்தனையோ என்பார்கள்
சூறாவளி இழப்பு என்பார்கள்
தெரியும்

பூமி தருகிறது
தெரியும்

வானம் பொழிகிறது
தெரியும்

தெரியவேயில்லை
தெரியவேயில்லை
தெரியவேயில்லை

எளிய தமிழ்
எப்படி கைகூடிவருகிறது

கவிதை
எப்படி தோன்றுகிறது

பாரதி
எப்படி வாழ்ந்தான்

ஒவ்வொரு காலத்திலும்
ஒரு பாரதி

*********************************************************

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்

கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


பைய பைய
என்கிறாள் பெற்றவள்
தத்தித்தத்தி நடந்துவரும்
குழந்தையைப் பார்த்து

பைய பைய
என்கிறான் கணவன்
சூலிப் பெண்டாட்டி
மாடியிலிருந்து இறங்குகையில்

பைய பைய
என்கிறான் யாரோ ஒருவன்
தடுமாறி நடந்துபோகும்
குடிகாரனைப் பார்த்து

பைய பைய
என்கிறார்கள்
சுமை
இறக்கிவைக்கும்போது

பைய பைய
என்கிறார்கள்
சப்பரத்தை
தூக்குகையில்

தடுக்கி
விழும்போது
பைய பைய என்கிறார்கள்

இறங்குகையில்
தடுமாறினால்
பைய பைய என்கிறார்கள்

காதலில்
பைய பைய இல்லை

காமத்தில்
பைய பைய இல்லவேயில்லை

பைய பைய என்பது
பற்று
பைய பைய என்றால்
பரிவு

வாழ்க்கை பூராவும்
எவ்வளவோ பைய பைய.

************************************************************

விக்ரமாதித்யன் நம்பி கவிதை

காற்றாடி
எப்படி சுற்றுகிறது
எனக்குத் தெரியாது

மின்சாரம்
எப்படி வெளிச்சம் தருகிறது
எனக்குத் தெரியாது

தண்ணீரிலிருந்து
எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

பேருந்து
எப்படி ஓடுகிறது
எனக்குத் தெரியாது

விமானம்
எப்படி பறக்கிறது
எனக்குத் தெரியாது

பாலியஸ்டர்
எப்படி நெய்கிறார்கள்
எனக்குத் தெரியாது

வீரிய வித்துகள்
எப்படி கண்டுபிடித்தார்கள்
எனக்குத் தெரியாது

ஃப்ளாட்கள்
எப்படி தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

போட்டோ
எப்படி எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

ஓவர் ப்ரிட்ஜ்
எவன் மூளையில் தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

என்னதான் தெரியும்

வார்த்தைகளைக் கோத்து
வக்கனையாய் வடிவாய்
கவிதை எழுதமட்டுமே தெரியும்

*****************************************************************************

அறிந்தது
அறியாதது

விக்ரமாதித்யன் நம்பி

எங்கள் ஊரில்
இருக்கையில்தான்
இயல்பாய் இருக்க முடிகிறது

அதுவும் எங்கள் தெருவில்தான்
இன்னும்
தன்மையாய் இருக்கிறேன்

அதிலும் எங்கள் வீட்டில்
இருக்கும் பொழுதுதான்
சகஜமாய் இருப்பதே

இலக்கிய கூட்டங்களில்
காண்கிற விக்ரமாதித்யன் வேறு
இங்கே இருக்கும்
இவன் தனி

உளரில் வீட்டில்
பார்க்க வரும் நண்பர்களுக்குத் தெரியும்

குறிப்பாக
வித்யாஷங்கர்
திருமேனி
மகரந்தன்
ஆதவன்

லக்ஷ்மி மணிவண்ணன்
சங்கர ராம சுப்ரமண்யன்
பாலை நிலவன்
அனைவருமே அறிவார்கள்

வீட்டுக்கே வராதவர்களுக்கு
விளங்கிக் கொள்ள முடியாது

போதையிலேயே பார்த்த பிம்பம்
படிந்துவிட்டதற்கு என்ன செய்ய
சாதாரணமாய் இருக்கும் கவியை
சாதாரணமாய் காண ஒரு முறை
வந்து செல்லுங்களேன் நண்பர்களே

சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று
சந்திக்க வேண்டும் தோழர்களே

இவன்
அப்படி சந்தித்திருக்கிறான்

ஜெயகாந்தன்
கண்ணதாசன்
லா.ச. ராமாமிர்தம்
கி. ராஜநாராயணன்
கி.சு. செல்லப்பா
க. நா. சு.
சுந்தர ராமசாமி
அசோகமித்திரன்
நகுலன்
இப்படி
நிறைய சிங்கங்களை.

*********************************************************************

திருப்புன்கூர் நந்தி

விக்ரமாதித்யன் நம்பி

எந்தப் பக்கமாய் விலகியிருக்கும்
இடதுபுறமா வலதுபுறமா எப்படி
இருந்த இடத்திலிருந்து எழுந்து
இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ
நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த
குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது

ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து
நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று

ஆதிநாயகன்தான் அடிமனசில்
ஏது நினைத்திருப்பான்

தீண்டாமை கொடிதென்றே எண்ணியிருப்பார்
திருநாளைப் போவார்தான் தீர்மானமாய்

கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சட்டென்று எழும்பி நகர்ந்து வலதுபுறமாய்
உட்கார்ந்திருக்கிறது பெரியஉருவம் பிரயாசைப்பட்ட வருத்தத்தில் நாக்குத்துருத்தி

திருப்புன்கூரில் மட்டுமல்ல
தேசமெங்கும் நந்தன் சிவன் நந்தி

***************************************************************************

Series Navigation

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நண்பன்


1. கால்கள்……………
***********

சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் –
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே…..

வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன…..

சாதியைத்
தேடாத பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் –
பசியை மறக்க
வைக்கும்
புகை வலிப்பைப் போன்று…

எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை –

நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன்
கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்….

இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா –
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து ?

அரக்கப் பசியுடன்
கால்களைக்
கவனமாகப்
பார்த்துக் கொண்டிருந்தான் –
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்…..
****************************************

2. வார்த்தைகள்………..

வார்த்தைகள்
கை தேர்ந்த
முகமூடியாளர்கள் –

ஒரே சமயத்தில்
ஒன்றாக, பலவாக
பிறப்பெடுக்கும்.

நுகர்வோர் தரமறிந்து
சேவகம் செய்யும்
கை கட்டி….

தடுக்கினால்
குழியும் பறித்து விடும்
பலர் முன்னிலையில்.

இந்த வார்த்தைகளிடம்
கொஞ்சம் எச்சரிக்கையோடு
இருங்கள் –
தனியே ஒன்று;
கூடினால் இன்னொன்று –
வேடமிடுவதில்
இவைகளும் மனிதர்கள் தான்…….

***********************************************
3. பசுவதை……………

கட்டாக்காலி மாடு
நடுவீதியில் –
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.

மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில்
சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு…

மடியில் கனமுள்ள
மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் –
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.

இல்லையென்றால் –
அனாதை ஜீவனம்…

சுவரொட்டி உரித்து…
பந்தக்கால் வாழை திருடி…
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து…
என்று ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்…

இங்கு….
பசுவதை
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.
***************************************
pmdshaji@sify.com

Series Navigation

நண்பன்

நண்பன்

கவிதைகள்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

சுப்பிரமணியன் ரமேஷ்


கவிதை 1:

எனக்கும் அவர்களுக்கும் இடையேயான

கண்ணாடித் தடுப்பை கண்டுபிடித்த நாளில் ஆசுவாசமானேன்

பிரிப்பின் தடுப்பறியா மாந்தர்கள்

என்னிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள

முயல்கின்றனர் ஓயாது!

முடியாத பட்சத்தில் தன் இருப்பின் கூறுகளையேனும் விட்டுச் செல்ல

ஒரு போதும் சமன் குலைக்க இயலா

தடுப்புக்குள் பரவிக் கிடந்தேன்

எனக்கும் நானுக்கும் நடுவே

மற்றொரு தடுப்பைக் கண்டு கொள்ளும்வரை

என்னை சமன் குலைக்க

நான் முயலும் வழிகளைக் கண்டு

எனக்குள்ளே விகசித்தபடி

மெளனப் புன்னகையொன்று
—————————————————————————-

கவிதை 2:

அன்றிலிருந்து பார்த்திருக்கும்
அலுப்பூட்டும் அதே நிலா தான்!

***

இக்கணம் அதே அன்றுதானா

பார்த்தல் அதே பார்த்தல் தானா

அலுப்பு அதே அலுப்புதானா

அதே கூட அதே தானா

நிலவு அதே நிலவு தானா

தானும் அதே தானா!

***

பழமைவாதம், இருத்தலியல்
நவீனத்துவம், பின் நவீனத்துவம்

கழிப்பறை
நவீனக் கழிப்பறை
அதி நவீனக் கழிப்பறை

கொள்வதென்னவோ மலம் மூத்திரம்தான்!

***

கொள்வது அதே கொள்வதே தானா

மலம் அதே மலமா

மூத்திரம் அதே மூத்திரமா

தான் இப்போதும் அதே தான் தானா!

********

சுப்பிரமணியன் ரமேஷ்

subramesh@hotmail.com

Series Navigation

சுப்பிரமணியன் ரமேஷ்

சுப்பிரமணியன் ரமேஷ்

கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

விக்ரமாதித்தன் நம்பி


————————–

வினோத ரசமஞ்சரி

விக்ரமாதித்யன் நம்பி

எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி

அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு

கவிதை மொழியே
கவித்துவம் போல

யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்

நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்

மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை

ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை

மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்

*****************************************************************************

பாவக்கதை

விக்ரமாதித்யன்

உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது

அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்

ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்

பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய

என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.

******************************************************************

எந்த போதையிலும்

விக்ரமாதித்யன்

சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்

சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ

திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்

திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை

பாரதி
ஒரு
கவிஞானி

கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்

பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே

******************************************************************

கவிதை

விக்ரமாதித்யன் நம்பி

என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்

பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்

சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே

கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா

மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்

நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே

என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல

தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா

***************************************************************************

மேலும் மேலும்

விக்ரமாதித்யன் நம்பி

மேலும் மேலும்
குழப்புகிறார்கள்

மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்

மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்

மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்

மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்

மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்

மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்

மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்

மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்

மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்

மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்

மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்

மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்

மேலும்மேலும்
கோழையாகிறார்கள்

மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்

மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்

மேலும் மேலும்
என்ன இருக்கிறது

மேலும் மேலும் எனும்
மனசுதான்

மேலும் மேலும்
என்ன எழுத.

**************************************************************

கூட்டுக் கவிதை

காக்கைப்பாட்டு

காகமே எங்கே போனாய் நீ

எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு

காகமே எங்கே போனாய் நீ

பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ

காகமே எங்கே போனாய் நீ

துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி

காகமே எங்கே போனாய் நீ

காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது

காகமே எங்கே போனாய் நீ

காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்

காகமே எங்கே போனாய் நீ

குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ

என்று சொல்வாயோ

திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ

என கரையும் காகமே எங்கே போனாய் நீ

கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்

(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.
கேள்விகள் எம்.டி.எம். உடையவை.
பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை)
–விக்ரமாதித்யன் நம்பி

***************************************************************************

ஐந்திணை

குறிஞ்சி

விக்ரமாதித்யன் நம்பி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்

* * *

முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்

* * * * *

மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்

* * * * *

நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்

* * * * *

பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா

————————————

Series Navigation

விக்ரமாதித்தன் நம்பி

விக்ரமாதித்தன் நம்பி

கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

மாலதி


சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள்
என் பெயரால்.
தீவிரவாதம் என் உணர்வில்.
ஒளிந்து வாழ விதியும்
பேரொளி எழுப்ப மனமும்
ஒன்றோடொன்று போராடி
எப்போதைக்கும்.
வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன்
அழுந்த அழுந்த கிட்டங்கியில்.
வாழ்நாளில் வெடிக்கவிட
மாட்டேன்.
தற்கொலைப்படையாகவும்
மாட்டேன்.
நட்பில்லாத பெருங்காட்டில்
புதைத்துப் போகிறேன்
இருட்டுகளுக்காகும்
வெளிச்சத்தை
உங்கள் யாருக்கும் நான்
சொந்தமில்லை
துறந்து விடுங்களென்னை
ஈரமின்றி.



கொள்ளை போனவீட்டுச்சொந்தக்காரன்
போலீசுக்கு
ஒப்புவிக்கும் பட்டியல்
எலும்புகளைச் சேகரிக்க மயானத்தில்
உட்கார்ந்த மகன்
காணாமல் போன மகளின்புத்தகக்கட்டில்
தடயம் தேடுகிறபெற்றோர்
தவறின காதலின் ஈமெயில் ஐடியை
வெறிக்கும் தருணங்கள்
போல்கின்றேன்
முதல் சுற்றில் வேகாத கவிதைகளை
இரண்டாம் கட்டத்துக்குத் தேற்றும்
அவசியங்களில்.



இரவுப்படுக்கையில்
என்னைப்புரட்டிப்போடுகின்ற
துக்கங்கள்
அநேக முதல் நாட்களாலானவை.
அழிந்த ஆதிகள்.
கிழிபட்டுக்குதறப்
பட்ட முடிவுகளை
ஆரம்பத்திலேயே
வைத்திருந்தவை.
புரளும்போதெல்லாம்
ஒரு கனவைத் தேடுவேன்
கண்மூடி.
குளிர்மடி கிடைக்கும் வரை
விரல் குவிந்து
மயானத்தைச்
சூட்டும்வரை.
கடைசிக்கான ஆயத்தங்களின்
நபரோடு.

___
malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


ரமலானே வருக! இறையருளை தருக!!
உலகம் அழிக்கும்
மடமை ஒழிக்க
உலகம் வியக்கும்
மறையை வழங்கிய
உயர்வான
ரமலானே வருக! இறையருளை தருக!!
உலகம் அழிக்கும்
மூடநம்பிக்கை ஒழிக்க
உலகம் காக்கும்
இஸ்லாம் அருளிய
துணிவான
ரமலானே வருக! இறையருளை தருக!!
புனித மாதம்
பசியில்லாத இறைவனை
பசிபொறுத்து உணரும்
மாதம்
பெருமான் நபிகள்
போற்றி புகழ்ந்த
மாதம்
மாறாத மறையாத
மறைகுரான் இறங்கிய
மாதம்
பசியெனும் ஏழையினாடையை
பணக்காரரும் அணியும்
மாதம்
கஞ்சனாய் இருந்தவரும்
கணக்கின்றி வாரிவழங்கும்
மாதம்
இரும்பிதயம் படைத்தவரும்
இதயம் கனியும்
மாதம்
விரட்டப்பட்ட ஷைத்தான்
விலங்கு பூட்டப்படும்
மாதம்
அகிலமாளும் அல்லாஹ்வின்
அருள்மழை பொழியும்
மாதம்
முக்காலம் அறிந்தவராம்
முஹம்மதுநபி அகமகிழும்
மாதம்
இந்த
புனித மாதம்
நோன்பு
தொண்டையில் தாகமிருக்கும்
வயிற்றில் பசியிருக்கும்
மனம் நாடாது
பொறுத்து இருக்கும்
வறுமை அல்ல
கடமை..
ஜகாத்*
கழுத்துவரை தேவையிருக்கும்
கையளவே காசிருக்கும்
மனம் விரும்பி
ஜகாத் கொடுக்கும்
விரயம் அல்ல
விவேகம்..
(ஜகாத்* – ஏழைவரி)
நபிமொழி
பசி வந்தால்
பத்தும் பறக்கும்
– இது பழமொழி
பசி பொறுத்திருந்தால்
சொர்க்கம் திறக்கும்
– இது நலமொழி
என்றும் நல்லமொழி
எங்கள் நபிமொழி
முற்றும்.

===================================================================
dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

சேவியர்


பறிக்கப்பட்டவைகள்

—————————————

0

மங்களமா இருக்கும்
வாங்கிக்கோங்க,
கக்கத்தில் இடுக்கிய
கூடை நிறைய
வாசனையோடு நிற்பாள்
பூக்காரி.

பூக்களுக்கே வலிக்காமல்
பூக்களை
பூ போல
அள்ளிக் கொள்தல்
அவளுக்கு விரல் வரம்.

பூக்களைச் சுற்றிச் சுற்றி
அவள்
விரலுக்கும்
முழங்கைக்குமிடையே
வாசனைக் கயிறுகள்
இறுகியிருக்கக் கூடும்.

நல்ல பூ இல்லையா ?
என்றுதான்
பேச ஆரம்பிக்கிறார்கள்,
பேரம் பேச முடிவெடுத்தோர்.

பூவை
பூவாய்ப் பார்க்காமல்
பணமாய்ப் பார்க்கப்
பழகிவிட்டோம் நாம்

ஆயுள் முயற்சி
செய்தாலும்
ஒரு மொட்டை
நம்மால்
மலர வைக்க இயலுமா ?

எந்த தறியில் நெய்தேனும்
ஓர்
இதழின் மென்மையில்
ஆடை தயாரிக்க ஆகுமா ?

புரிந்து கொள்ளவேண்டும்
நாம்.

பணம் கொடுப்பது
பூக்காரிக்குத் தான்
பூவுக்கல்ல.

0

—————————————

கவிதை 2

முரண்கள்

—————————————

முரண்கள்.

0

வழியெங்கும்
தெருப்பிள்ளையார்,
பெரியார் நகர்.

0

நாத்திகன் சொன்னான்
பெரியார் தான்
கடவுள்.

——————————————
கவிதை 3

மழை நிறுத்தங்கள்

——————————————

0

சொல்லாமல்
படியேறி வந்த
பள்ளித் தோழன் போல,
சன்னல் வழியே
கதவைத் தட்டியது மழை.

வானத்துப் புன்னகையின்
ஈர வடிவத்தை
இமைகளிலும்
இறுக்கிக் கட்டி,

அதன்
குளிர்க் குழந்தைகளை
உள்ளங்கைகளில்
ஏந்தி,

அதன்
சிதறிய முத்தங்களை
கன்னக் கோப்பைகளில்
சேகரித்து,

சிலிர்த்துப் போய்க்
கிடந்தேன்
மேகம் தன்
அவிழ்ந்த சுருக்குப் பையை
இறுக்கிக் கட்டும் வரை.

கடிகாரம் துரத்த
வெளியே வந்தால்,

தன்
புனிதத் தோள்களெங்கும்
சாக்கடையைச்
சுமந்து கொண்டும்,

தன்
மெல்லிய மேனியை
சேறுக்குள்
புதைத்துக் கொண்டும்,

வழிமறித்துக் கிடந்தது
வானக வரம்
வீதிகளில் சாபமாய்

அல்லல் பட்டு,
அலுவலகம் நுழைந்து
நிமிர்ந்தால்,
மீண்டும்
ஜன்னலைத் தட்டியது
மழை,
அறிமுகமான தோழனாய்.

விரல் நீட்டி
வரவேற்றேன்
அதே ஸ்னேகத்தோடு.

0

———————————–

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

நீ, நான், அவர்களின் தேசம்…. {}குருட்டு மனசு…{}ஒற்றைக்காலில் ஒரு தவம்…{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர்



நீ, நான், அவர்களின் தேசம்….

மீன் கொத்திகளின்
அலகுகளுக்கிடையே
மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள்.

மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு
தூண்டில்களில்.

நண்டுகளின் விரல்கள் சேர்த்து
அறையப்பட்ட ஆணிகள்,
வளைகளின் வாசல்களிலேயே
வரவேற்கும் சிலுவைகள்.

பாடித்திாியும் வயல்காற்றுக்கு
தீ சுட்ட வடுக்கள்,
பாறைகளில் மோதி மோதி
நதிகளின் முகத்தில் இரத்தக்காயங்கள்.

ஒவ்வோர் சாலைகளின் முடிவிலும்
ஒவ்வோர் பொறி,
ஒவ்வோர் சந்திப்புகளின் கீழும்
சதுப்புநிலப் புதைகுழிகள்.

விருந்துக்காய் வளர்க்கப்படுகின்றன
வெள்ளை உடை ஆட்டுக்குட்டிகள்,
கல்லறைகளின் மேல்
தொடர்கின்றன எங்கள் கட்டுமானப்பணிகள்…

தாலியைக் காப்பாற்றும் கவனத்தில்
கணவனை மறந்தவர்களாய்,
தேசியக்கொடியை நாட்டும் வேகத்தில்
தேசத்தை புதைத்தவர்கள் நாங்கள்.

எல்லாக் கதவுகளும்
இறுக்கமாய்த் தாழிடப்பட்ட பின்னும்,
மிட்டாய்களோடு மட்டும்
இன்னும் தொடர்கிறது
எங்கள் சுதந்திர தின விழாக்கள்


குருட்டு மனசு…

கட்டுக்கட்டாய் திணிக்கப்பட்ட அறிவு
மூளையின் மூலைகளிலும் குடைவிாிக்கும்..
இரத்தப் பாசனம் மட்டுமே செய்யும்
இடப்பக்கம் இருக்கும் இதயப்பை…
கணக்குகள் போட்டு காலண்டர் கிழிக்கும்
சுருக்குப் பையாய் மரங்கொத்தி மனசு.

அறிவு இன்னும் வேண்டுமென்று
ஒவ்வோர் செல்களுக்குள்ளும்
தேனீக்களின் குடைச்சல்.

சேமிப்புக்கள் இல்லையேல்
நாளைய வாழ்க்கை வழியோரத்தில் சிந்தக்கூடும்…
எனவே
உண்டியல்களை உதாசீனம் செய்யாதீர்கள்.
தெருமுனையெங்கும்
வருங்காலத்துக்காய் வாி வாியாய் வழிமுறைகள்.

குழாய்த் தண்ணீர், மனைவியின் கண்ணீர் எனும்
அன்றாடப் பிரச்சினைகளுக்கு
காலத்தை முழுசாய்
உயிலெழுதி முடித்த மனித உணர்வுகள்…

இப்படியே தொடரும் எங்கள் வாழ்க்கை…
எப்போதேனும்
தோல்விகள் முன்வாசலில் தாழிட்டால்,
முழங்கால்கள் முன்வந்து
அர்ச்சனைத் தட்டு முன் மண்டியிட்டும்…
கர்ப்பக்கிரகங்கள் முன்
கன்னங்கள் நேர்ச்சையிடும்.

சோி கடக்கையில் மனசு சொல்லும்..
‘நல்லவேளை.. அவனைப்போல் நானில்லை ‘…
எப்போதேனும்
பாவம் என்னைப்போல் அவனில்லையே
என்று
மெதுவாய் எழும் கேள்விகளை
மென்று விழுங்கி மனசு வெற்றிடமாகும்.


நேரம் இருக்கிறதா ?

வாருங்கள்
என் தோழர்களே…

கருப்பு அங்கி அணிந்து
கிள்ளி வரப்பட்ட புள்ளிவிவரங்களும்,
கட்டம் போட்ட அட்டவணைகளும்,
அணைத்து வாதிடப்போக
உங்களை நான் அழைக்கவில்லை…

நாடித்துடிப்பு பிடித்தெடுத்து,
இரத்த வகைகளை நறுக்கி
மாத்திரைப் பெயர்களைக் கிறுக்கும்
மருத்துவர் வேலைக்கும்
உங்களை அழைக்கவில்லை…

பாறைகளைப் புரட்டி,
மலைகளைக்குடையும்
மந்திரவாதி வேலைக்கும் அல்ல
நான் உங்களை அழைப்பது…
அது எனக்கும் வசதிப்படாது.

அறிவுகளை அடுக்கடுக்காய்
அடுக்கி வைத்தவர் வேலைக்கு
உங்களை அழைக்கமாட்டேன்…

தினவெடுத்த தோள்களின் வேலைக்கும்
நான் உங்களை அழைக்கவில்லை…

எனக்குத் தேவை மனசு…
கல்வியின் கரையான் கூட்டில் நாம்
மறந்து விட்டுப் போன மனசு…
பண்டமாற்றுப் பண்டங்களுக்காய்
நாம் விற்றுத் தீர்த்த மனசு…

நான் உங்களை அழைத்தது
நம் தேவைகளின் தேசத்துக்கல்ல…
சேவைகளின் தேசத்துக்கு
அசோகச் சக்கரத்துக்கு அவசரத்தேவை
மனிதாபிமானம் எனும் அச்சாணியாம்.


ஒற்றைக்காலில் ஒரு தவம்…

அந்த
பருத்தி வண்ண பட்டுக் கொக்கு
ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி,
வயிற்றுத் தவம் இருக்கிறது…

நீளமான அலகுகளை
அவ்வப்போது நீாில் அலசி,
கண்கள் இரண்டை தண்ணீாில் நீந்தவிட்டு
நல்ல மீன் நடந்து வரட்டுமென்று
நாக்கை ஈரப்படுத்தி காத்திருக்கிறது.

வெள்ளிச் சிமிழ்களை விளக்கி விட்டது போல்
சின்னச் சின்ன மீன்கள் மெல்ல
கொக்கின் கால்களைக்
கொத்திக் கொத்தி கடந்து போனது.

கிளிகள் அமர்ந்த
கிளைகள் மகிழ்ச்சியில்
கிள்ளி விட்ட சில வெள்ளைப்பூக்கள்
ஓடை நீாின் முதுகில் அமர்ந்து
குதிரைச் சவாாி செய்து வந்தது.

பழுத்த ஓர் மஞ்சள் மாவிலை
சிவப்பு எறும்பிற்குத் தோணியாய் மாறி
சுய துடுப்பு செலுத்தி
தாண்டிப்போனது.

வெண்கல நிறத்தில் சில
விரால் மீன்கள்
நீர்மூழ்கிக் கப்பல்களாய்
நகர்ந்து மறைந்தன.

மெல்ல மெல்ல சிறகு நனைத்து
அருவியோடு கதைபேசிக் கதைபேசி,
கால் மாற்றிக் கால் மாற்றி
வந்த வேலையை மறந்து
இன்னும்
ரசனை கொத்திக்கொண்டிருக்கிறது கொக்கு.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

கவிதைகள்

This entry is part [part not set] of 2 in the series 20000604_Issue

கோகுலக்கண்ணன்


சிறகு பிளந்து

விழுந்திருந்தது புறா

கவணுடன் மனிதன்

பக்கத்தில்

ரத்தம் கசிந்து சரிந்த

பறவையின் மரணம்

மேலான உன் கேள்வியை

சமாளித்து விட்டேன் மகளே

அவன் கண்ணில் பளிச்சிடும்

கர்வம் பற்றிக் கேட்டால்

என்ன சொல்ல முடியும்

என்னால் ?

**********************

குதிரைகள் தூங்குவது எப்படி

வண்ணங்களின் வகை எத்தனை

கரை நனைக்கும் அலை வருவது எங்கிருந்து

ஏரிக்கரை மீறும் வாத்துகளின் குரல் ஏனிப்படி

எப்போதும் சிரிக்கும் பொம்மை எப்போது வளரும்

எப்போதேனும் வீட்டுக்கு வரும் சாக்கேத் மாமாவின் மீசை எங்கே

நீச்சல் குளத்தில் மீன்களில்லா நிலைமை ஏன்

..

எத்தனை கேள்விகள் உன்னிடம்

ஈடைவெளியற்று

சோர்வற்று

வெள்ளத்தின் வேகத்தோடு

நான் நின்றிருப்பதோ

அறியாமை அருகிலும்

பொறுமையின்மை மத்தியிலும்

பல சமயம் பதிலில் மெளனமே

அதிக விகிதாசாரத்தில்

நிராகரித்து உன் கவனம் திருப்பவும்

முயல்கிறேன் அவ்வப்போது

உன் கேள்விகளை சந்திக்க யலாது

எரிந்து விழுகிறேன் சில சமயம்

என் உதாசீனத்தில்

புண்படாத உள்ளத்தோடு

என் மடியில் ஏறி விளையாடுகையில்

நான் குறுகி போகிறேன்

உன் உயரம் முன்

இன்னும் சில காலம் போனபின்

எனக்கு இருக்கும்

உன்னிடம் கேட்க

ஏராளமான கேள்விகள்

அறியாமையில் விளைவதான

பாவனையுடன்

அப்போது நீ எரிச்சலுற்று

என் கேள்விகளை மெளனமாய்

புறக்கணிக்க செய்யலாம்

தாங்கிக் கொள்ள

இன்றைய உன் பெருந்தன்மை

அன்று எனக்கு

சாத்தியப்படுமா ?

 

 

  Thinnai 2000 June 06

திண்ணை

Series Navigation

கோகுலக்கண்ணன்

கோகுலக்கண்ணன்