- அன்புள்ள ஆசிரியருக்கு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
- இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை
- பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை
- கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)
- ’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11
- ரியாத்தில் கோடை விழா – 2011
- மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்
- அரூப நர்த்தனங்கள்
- “யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்
- இனிவரும் வசந்தத்தின் பெயர்
- ஒரு பூவும் சில பூக்களும்
- மகிழ்ச்சியின் வலிகள்
- யாளி
- சூரியச் சிறகுதிர்ந்து..
- என்ன வாசிப்பது..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10
- பம்பரக் காதல்
- l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்
- நீ தானா
- இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்
- ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
- தட்டுப்பாடு
- கடக்க முடியாத கணங்கள்
- தொடுவானம்
- பிராத்தனை
- பிராத்தனை
- பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்
- அதிர்வு
- யார் அந்த தேவதை!
- கூடடையும் பறவை
- சிதறல்
- சுடருள் இருள் நிகழ்வு-06
- புழுங்கும் மௌனம்!
- செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி
- விழி மூடித் திறக்கையில்!
- வீட்டின் உயிர்
- முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!
- வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)
- ஈழம் கவிதைகள் (மே 18)
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்
- இன்றைய காதல்
- கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு
- சந்திப்பு
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் இல்லம்)
இந்த நாடகத்தைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.
1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங் களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தை களின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்களின் துயர்க் கொடுமைகள் ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.
நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் முதல் உலகப் போர் வான வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் அரிய கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.
++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:
1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)
2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை
3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை
4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)
5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி
6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.
8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)
9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.
10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்
11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.
12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)
13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் அங்கம் – முடிவுக் காட்சி)
இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.
நேரம் : நள்ளிரவு
அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது. ஒருவரை ஒருவர் வக்கணை அடித்து நக்கல் செய்து வரும் போது வானிலிருந்து திடீரென்று பெரு வெடிப்புகள் அடுத்தடுத்து எழுகின்றன. எல்லோரும் பரபரப்படைந்து ஓடி ஒளிகிறார். முதல் உலகப் போர் விமானத் தாக்குதலின் ஆரம்பக் கட்டத்தோடு நாடகம் முடிகிறது.
++++++++++++++++++++
அங்கம் -3 பாகம் -11
(மூன்றாம் அங்கம் : இறுதிக் காட்சி)

(பெருத்த வெடிச் சத்தம் தூரத்திலிருந்து மீண்டும் மீண்டும் வானில் எழுவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்து ஓடுகிறார். திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்து, மீண்டும் எரிகின்றன.)
மாஜினி: (பரபரப்பாக) இந்த வான வெடிப்புத் தாக்கலில் மிஸ்டர் மாங்கன் எங்காவது வழியில் சிக்கிக் கொண்டாரா ?
ஹெஸியோன்: இல்லை. மிஸ்டர் மாங்கன் தோட்டத்துக் குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். வெடிப்புச் சத்தம் கேட்டதும் வெளியே போகவில்லை.
காப்டன்: என் வெடிமருந்தும் அங்குதான் இருக்கிறது. அது மாங்கனைக் கவர்ந்திருக்க வேண்டும்.
ஹெக்டர்: பாதி வெளிச்சம் தெரியுது. வானத்துக்கு நாம் நெருப்பு வைத்து விட்டோமா ?
மிஸ். எல்லி: (எரிச்சலோடு) ஹெக்டர் ! வீட்டுக்கு நெருப்பு வைப்பது நீதான் !
ஹெஸியோன்: வேண்டாம் ஹெக்டர், எங்கள் இல்லம் இது !
ஹெக்டர்: எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நேரம் சரியாக இல்லை அது.
காப்டன்: (வெடிப்புச் சத்தத்துக்கு அஞ்சி) தீர்ப்பு நாள் வந்து விட்டது ! வெறும் மன ஊக்கம் மட்டும் உம்மைப் பாதுகாக்காது ! ஆனால் உமது ஆத்மா இன்னும் உயிரோடு இருப்பதை நினைவூட்டும்.
ஹெஸியோன்: பேச்சை நிறுத்துங்கள் ! கேட்டீரா மீண்டும் வெடிச் சத்தத்தை ?
(எல்லாரும் மேல் நோக்கி வானைப் பார்க்கிறார்.)
ஹெக்டர்: (மிஸ். எல்லியை நெருங்கிப் பரிவுடன்) குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !
மிஸ். எல்லி: (அஞ்சாமல்) நான் காப்டனை விட்டுவிட்டு எங்கும் போக மாட்டேன்.

மாஜினி: கண்மணி எல்லி ! குகைக்குள் ஒளிந்து கொள்வதில் எந்தவித அவமதிப்பும் இல்லை. ஒரு படை அதிகாரி படை வீரரைப் பாதுகாப்பு இடத்துக்குப் போக உத்தரவு செய்வதில்லையா ? ஹெக்டர் கற்றுக்குட்டி போல் அறிவற்று நடமாடி வருகிறார். மிஸ்டர் மாங்கனும், திருடனும் அறிவோடு குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் இருவரும்தான் இந்த வெடிகளுக்குத் தப்பிப் பிழைக்கப் போகிறார். நீயும் போய் ஒளிந்து கொள் !
மிஸ். எல்லி: (மாஜினியைப் பார்த்து) நானும் கற்றுக்குட்டி போல் நடந்து வருகிறேன். ஆனால் நீங்கள் ஏன் இங்கு பலியாக உமது தலையைக் கொடுக்கிறீர் ?
மாஜினி: ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் படும் வேதனையைப் பார் !
(அடுத்தோர் பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளக்கிறது. அத்தனை பேரும் அலை மோதிக் கொண்டு இங்குமங்கும் ஓடி மறை விடத்தைத் தேடிப் போகிறார். வீட்டுச் சாளரங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறுகின்றன.)
மாஜினி: (அடியில் ஒதுங்கிக் கொண்டு) யாராது வெடியில் காய மடைந்தாரா ?
ஹெக்டர்: வெடி எங்கே தாக்கி யுள்ளது என்றே தெரியவில்லை ?
பணி மாது கின்னஸ்: சில வினாடிகளுக்கு முன் வெடி புதைக்குழி அருகே விழுந்ததைப் பார்த்தேன் ! ஓ கடவுளே ! குகைக்குள் இருந்தவர் அடிபட்டுப் போயிருப்பார். அங்கிருந்த என் பதியும் மிஸ்டர் மாங்கனும் என்ன வானாரோ ? தெரியவில்லை ! (அலறிக் கொண்டு புதைக்குழி நோக்கி ஓடுகிறாள்)
ஹெக்டர்: முதல் கள்வன் பலி ! மரணம் ! ஏன்தான் இந்த இல்லத்தில் திருட வந்தானோ ? பரிதாபம் !
காப்டன்: முப்பது பவுண்டு வெடி மருந்து வீணானது ! போயும் போயும் இந்தத் திருடன் மீதா வெடி விழ வேண்டும் ?
மாஜினி: பாவம் மிஸ்டர் மாங்கன் ! என்ன வாயிற்றோ அவருக்கு ?
ஹெக்டர்: யாரும் நிரந்தரமாய் வாழப் போவதுண்டா ? அடுத்த வெடி விழப் போவது நம் தலைமீது தான் ! எங்கே போய் ஒளிவது ? இந்த இல்லத்தில் எதையும் பாதுகாக்க முடியாது !
(மேலும் மெதுவான ஒரு வெடிப்பு வானில் கேட்கிறது. ஹெஸியோனும், மிஸ் எல்லியும் பரிவோடும், பயத்தோடும் அணைத்துக் கொள்கிறார்)
எரியட்னி: நல்ல காலம் ! வான வெடி நம்மைத் தாண்டிச் செல்கிறது ! இப்போது பயமில்லை ! ரான்டல் நீ தூங்கப் போகலாம் ! புல்லாங் குழலை நாளைக்கு ஊதலாம் நீ உயிரோடி இருந்தால் !

காப்டன்: கடவுள் நம்மைக் காப்பாற்றி விட்டார். திரும்பி வாருங்கள் ! என் கப்பலுக்கு அபாயம் இல்லை. கப்பல் நம்மைக் காப்பாற்றி விட்டது. (நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்து கொள்கிறார்)
மிஸ். எல்லி: (வியப்புடன்) அபாயம் அப்பால் போய் விட்டதா ?
ஹெக்டர்: (வெறுப்புடன்) ஆமாம் ! இப்போது அபாயம் இல்லைதான். திடீரென்று வானம் விழித்துக் கொண்டு வெடிமேல் வெடி விட்டு ஊரே மாறிப் போய் விட்டது ! உடைந்த கண்ணாடித் துண்டுகளை நாம் ஒன்று சேர்க்க முடியாது !
மாஜினி: நான் எல்லியிடம் சொன்னது தவறு ! பிழைத்தது நாமெல்லாம் ! ஆனால் மாண்டது மாங்கனும், திருடனும் ! என் கண்மணி எல்லியும் குகையில் தங்கி இருந்தால் இப்போது செத்திருப்பாள் !
ஹெக்டர்: செத்தது ஒரு திருடன் இல்லை ! இரு திருடர்கள் !
எரியட்னி: இல்லை ! இரு பெரும் வாணிபத் தீரர்கள் ! அனுபவ மானிடர் !
மாஜினி: பாவம், இருவரும் இறந்து விட்டார் ! பரிதாபப் பாதிரியார் இல்லமும் வெடியில் இடிந்து பொடியானது ! ஐயோ இடிந்த போன இல்லங்கள் எத்தனை ! எத்தனை !
ஹெஸியோன்: போரால் என்ன கோரமான விளைவுகள் ? மிஸ்டர் மாங்கனைக் கைப்பிடிக்க எத்தனை பேர் இச்சை யுற்றார் ? எல்லாருக்கும் ஏமாற்றம் ! பெருத்த ஏமாற்றம் ! நாமொன்று நினைக்க நடப்ப தொன்று உலகில் !
காப்டன்: (கவலையோடு) கட்டப் பட்டவை இடிக்கப்படும் ! தகர்க்கப் பட்டவை மீண்டும் நிறுவப்படும். புயலடித்துக் கப்பல் பாறையில் மோதினால் கடலில் மூழ்கிப் போய்விடும் ! மீண்டும் அது உயிர் பெற்று எழாது !
(முற்றும்)

*******************************
தகவல் :
Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)
(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(D) Heartbreak House By : Elyse Sommer.
(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)
(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)
(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 11, 2011)














“ஊர்ச் சமூகக் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். கூட்டங்களில் பேச்சுரை நிகழ்த்தித் தாள்களில் கருத்துக்களை எழுதிப் பரப்பி வந்திருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். எங்களிடம் போதுமான காசு, பணம் கிடையாது. சாதாரண மனிதர் நாங்கள். நானொரு புரட்சியை எதிர்பார்த்தேன் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழ வில்லை. முடிவில் நடந்தது என்ன ? குடி, குற்றம், கொந்தளிப்பு, ஏழ்மை தவிர எதுவும் தோன்ற வில்லை. புரட்சி நிகழாது இனிமேல் ! எப்படி நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது விந்தையாய் உள்ளது !”















































































































நெஞ்சை முறிக்கும் இல்லம்























“நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லி நீ என்னைப் பயமுறுத்தலாம் என்று நினைக்காதே ! பிரான்ஸ் தனித்துள்ளது. கடவுள் தனித்திருக்கிறது. என் நாடும், என் கடவுளும் தனித்துள்ள போது என் தனிமைக்கு என்ன அச்சம் ? தனித்திருப்பதால் கடவுள் வல்லவர் ஆகிறார். கடவுளோடு நான் தனித்திருப்பதுதான் நல்லது. அவரது துணை எனக்குத் தோல்வியைத் தராது. அவரது அன்பு எனக்கு இழப்பைத் தராது. அவரது ஆலோசனை எனக்கு உதவாமல் போகாது.” 






“சில சமயங்களில் ஸ்•பிட் (Jonathan Swift) மனித சமூகத்தைச் சகிக்காதது அல்லது வால்டைர் (Voltaire) மனித இனத்தையே ஒட்டு மொத்தமாக வெறுத்தது மேன்மை யானது, தேவையானதும் கூட !” 













“நேசிக்கும் ஓர் ஏழை மனிதனோடு வாழ்ந்து துயர்ப்படுவதை விட நேசிக்காத ஒரு செல்வந்தருடன் காலம் தள்ளுவது மேலானது அல்லவா ?” 





“சீமான் மாங்கன் அசுர ஆட்டு மந்தையைச் சேர்ந்தவர். அவரது ஆன்மா கப்பல் உடைப்பாகி நட்பில் வஞ்சித்தார். காதலில் முட்டாளாக்கப் பட்டார். இப்போது முதுமை ஆகி நரை வெளுத்துப் போனார்.” 





“நானோர் உலக மாது ஹெக்டர் ! நீ எப்போதும் நேர்மையானதையே சொல்லவும் செய்யவும் சிரமம் எடுப்பாயானால் நானுக்கு உறுதி அளிப்பேன், நீ எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்று.” 













“மாதராகிய நாங்கள் ஆண்களின் நேர்மைக் குணத்தை எதிர்பார்த்திருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கப் போவதில்லை எமக்கு.” 






“நாம் ஆழ்ந்து திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் ! இல்லையா ? நாம் இருவரும் ரோமியோ ஜூலியட் என்று பாவனை செய்து கொள்ளக் கூடாது ! நம்மிருவருக்கும் பொருத்தமான தேர்ந்தெடுப்பு தேவை ! நாமதை எதிர்பார்க்க வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு திருமணத்தில் குதிக்கக் கூடாது ! உமது பரிவான இதயம்தான் எனக்குப் பாதை காட்ட வேண்டும்.”












நம்மில் சிறந்த பாதிப் பெண்ணினத்தை ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறோம் நாம் ! 










“நீவீர் யாவரும் விஞ்ஞானச் செருக்கு ஆடை அணிந்த அடிப்படை வாதிகள் ! அதனால்தான் அரசியலில் மூடத்தன மரபுவாதிகளாகவும், பிற்போக்காளராகவும் (Conservatives & Reactionists) இருக்கிறீர் ! பொறுமை இல்லாது விஞ்ஞானத்தையே தடுக்கிறீர் ! உங்களை நீக்க வேண்டிய தருணம் வரும் போது நீவீர் யாவரும் ஒரே சிந்தனை உடையவர்தான் : நிறுத்துவீர் அதை ! சவுக்கால் அடிப்பீர் அதை ! அறுத்து விடுவீர் அதை ! வெடி வைப்பீர் அதற்கு ! காலடியில் போட்டு மிதிப்பீர் அதனை !”




“செய்ய வெட்கப்படும் ஒன்றைச் செய்யும் மூடன் ஒருவன் அதைத் தன் கடமை என்று எப்போதும் அறிவிக்கிறான்.” 




“விடுதலை என்றால் பொறுப்பு என்று அர்த்தம். அதனால்தான் பல மனிதர் அதற்கு அஞ்சுகிறார்.” 




“மதக்குருக்கள், போப்புகளிடம் உள்ள குறைபாடுகள் என்ன ? புனிதராகவும், திருத்தூதராகவும் விளங்குவதற்குப் பதிலாக அவர் வெறும் பதர்களாய் (Empirics) இருக்கிறார் ! நான் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்வதற்குப் பதிலாக நான் எல்லாம் அறிந்தவன் என்று கூறுபவர் அவர். ஞானிகள் ஐயப்பாட்டுக்கும் ஆக்க வினைக்கும் (Scepticism & Activity) வணக்கம் செய்யும் போது மதக் குருமார் வழிபாடு எளிதில் எதையும் நம்பும் தன்மையாய் (Credulity) இருக்கும்.” 




“வாழ்ந்து கொண்டிருப்பவை யாவும் தீயவை என்று முடிவு செய்வோர் ஒன்று கடவுள்தான் கேடு விளைவிக்கத் தீயவற்றை உண்டாக்கக் கூடிய தென்றோ அல்லது கடவுள் பல தவறுகளை இழைத்துள்ள தென்றோ நம்ப வேண்டும்.” 










“தேசப்பற்று : நீ பிறந்திருக்கும் ஒரு காரணத்தால் அந்த தேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று நீ கொண்டிருக்கும் அழுத்தமான கருத்து” 








“தைரியம் உம்மைக் காப்பாற்றாது. ஆனால் உமது ஆத்மாக்கள் இன்னும் உயிரோடு உள்ளன என்பதை அது காட்டும்.”











“புரட்சிகள் ஒருபோதும் கொடுமை ஆட்சியின் பாரத்தை எளிதாக்க மாட்டா ! அவை ஒரு தோளிலிருந்து அடுத்த தோளுக்கு திருப்பி விட்டிருக்கிறது.” 



“வாழும் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு நாள் ! அதை அறிந்து கொள்வது எல்லா நிகழ்ச்சிகளின் முடிவு என்றாகாது. ஆனால் மெய்யான நாகரீக யுகத்தின் துவக்கமே அதுதான்.” 

“இதைக் குறித்து வை : மனித இனத்தை அழிக்கும் வேட்கைகள் காரணமோடு எத்துணை நேர்மையாகத் தெரிந்தாலும் அவை யாவும் இயற்கைக்கு முரணானவை.” 


