பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>

This entry is part of 33 in the series 20091119_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சுடரொளி புரளும் கடல் மேல்
மஞ்சள் பாறைகளின்
உள்ளே,
தேன் போல் அற்புதமாய்
கொந்தளிப்பில்
சிதையாது,
நாற்புறமும் நேர் கோணத்தில்
தூயதாய் வைத்து !

++++++++++

தீப்பொறிகள் வெடித்துச்
சிதறுவது போல்
அல்லது
பச்சை இலைகள் ஊடே
பதுங்கிய தேனீக்கள் போல்
பகல் வெளிச்சம் ரீங்காரமிடும் !
பச்சை இலைகட்கு மேலே
பட்டொளி வீசும்
மினுமினுத்தும் மெல்ல
முணுமுணுத்தும் !

+++++++++++

தீயிக்குத் தீராத தாகம் !
வேனிற் காலம்
எல்லா வற்றையும் எரித்து
வெந்திடச் செய்யும்.
பச்சை இலைகளைப் பின்னி
ஏடன் பூங்காவைக்
கட்டி முடிக்கும் !
காரணம்,
கரிய முகம் கொண்ட
காசினி
இன்னலுற விழைவ தில்லை !

++++++++++++

பூமியானது
நீர், நெருப்பு, உணவை
ஒவ்வொரு வருக்கும்
புதியதாய் அளிக்க விரும்புகிறது !
மாந்தரை எதுவும் பிரிக்கக்
கூடாது
பரிதி, நிலவு, பகல் இரவு
அனைத்தும் ஒன்றே !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 17, 2009)]

Series Navigation