This entry is in the series 20090430_Issue

சுரேஷ்



தும்மலின் முடிவில்

அன்று நான்

அனிச்சையாய் கூறிய ‘அம்மா’,

நினைவூட்டியது எனக்கு

மறுநாள் அவளுடைய

பத்தாம் ஆண்டு திதி என்று.

தும்மிய பின் மெளனம் காக்கும்

என் பையனிடம்

”அம்மா’ ‘அப்பா’ சொல்லிப் பழகு’

என்கிறேன் சில நாட்களாய்.

தும்மலுக்கு நன்றி.


ksuresh1984@gmail.com

Series Navigation