பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>

This entry is part of 38 in the series 20090820_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காதலோ காதல் !
வானக் கோபுரத்தில்
ஏறின முகில்கள்
சாதித்து விட்டச்
சலவைப் பெண் போல் !
நீல நிறத்தில்
மின்னும் அவை எல்லாம்
ஒற்றைத் தாரகை போல் !
கடல், கப்பல், அந்த நாள் யாவும்
புலம்பெயர்ந்தன ஒருங்கே !

நீ பருவ காலத்தில் வந்து பார்
நீரில் செங்கனிப்* பழங்களை !
பிரபஞ்சத்தின் வட்டச் சாவி
விரைவாய்க் கண நேரத்தில்
நீலத் தீயைத் தொட்டு விடும்
பூவிதழ்கள் உலர்ந்து விழுவதற்கு முன் !

ஒளிவிளக்குக் கொத்துக்கள்
எண்ணிக்கையில்
உள்ளதைத் தவிர வேறில்லை !
தென்றலின் கனிவைத்
திறந்து விட்டது
விண்வெளி
இறுதி ரகசிய நுரையை
விட்டுவிடும் வரை !

வானத்தின் நீல வண்ணம்
வாயு குன்றும் நீல வண்ணம்
இவ்விதப் பல்வேறு
நீல நிறங்களில்
சிறிது குழம்பிப் போயின
நமது கண்கள் !
உள்ளுணர்வில் அவர்கள்
உளவ இயலாது
காற்றின் ஆற்றலைத் தெரியாமல்
கடற் புதிர்களின்
காரணம் புரியாமல் !

***************************
*செங்கனிப் பழங்கள் – Cherry Fruits

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 17, 2009)]

Series Navigation