பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>

This entry is part of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விலை மிக்க அணிகலக்
கற்களாய் நீ இருப்பாய் என்றோ
ரோஜாக்
கணை அம்புகளைக்
கனல் மூலம்
அனுப்புவாய் என்றோ
நானுன்னை நேசிக்க வில்லை !
ஏதோ கறுப்பி ஒருத்தியாய்
நினைத்து
உனை நேசிக்கிறேன்
இரகசியமாய்
என் நிழலுக்கும் ஆத்மா வுக்கும்
இடையிலே !

பூவே ஒருபோதும் மலராத,
ஆயினும்
ஒளிந்துள்ள மலர்கள் ஏந்தி
நிமிர்ந்துள்ள
பூச்செடி போல் உன்னை
நேசிக்கிறேன் !
பூதளம் மேல் எழுந்து
கருமையாய் என் உடம்பில்
இருக்கும்
ஒரு நறுமணம் நாடும்
உன் இச்சைக்கு
நன்றி கூறுவேன் !

எப்படி யானவள் நீ,
எங்கிருந்தவள் நீ,
எப்போது வந்தவள் நீ
என்று அறியாமலே
உன்னை நான் நேசிக்கிறேன் !
கர்வப் படாமல்
சிக்கல் ஏதும் இல்லாமல்
நேர்மையாக நான் உன்னை
நேசிக்கிறேன் !
ஏனெனில் இவ்வழி தவிர எனக்கு
வேறெதுவும் அறியாததால்
நானுனை நேசிக்கிறேன் !

“எனக்கு” என்று எதுவும்
இருப்ப தில்லை
அது போல்
“உனக்கு” என்று ஒன்றும்
நிலைப் பில்லை !
அருகில்
என் நெஞ்சின் மேல் இருக்கும்
உன் கரம்
என் கைகள் தான் !
உன் கண்களும் மூடி விடும்
அண்டையில்
என் கண் மூடி நான்
விழும் வேளை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2009)]

Series Navigation