கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2

This entry is part of 36 in the series 20100627_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++++++
ஊழ்விதி
+++++++++++++++++++++++++++++++++

“உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது.”

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++
<< ஊழ்விதி >>
++++++++++++++++++++++++

இராப் பகலாகச் சிந்திக் காதவர்
எவர் உங்களில் இருக்கிறார்
போதை ஏறிய
பூத மன்னர் ஆட்சியில்
விதவைகள் கண்ணீரும்
அனாதைகள் அழுதிடும் நீரும்
விழுந்திடும்
உலகத்து ஊழ் விதியை
ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?
பரிணாம விதியை நம்புவோரில்
ஒருவன் நானும் !
பூரண விடுதலைப் புரட்சிகள்
கோர மாந்தரால்
உதித்தெழும் என்று
நம்புவோன் நான் !
மதங்களும் அரசாங் கமும்
உன்னத பீடத்துக் குயரும் என்று
நம்புவோன் நான் !

+++++++++

எனைச் சுற்றி இருப்பவர்
அனைவரும்
பூதங்கள் உதிப்பதைக் காணும்
குள்ளர்கள் !
தவளைகள் போல்
கத்துவார் இந்தக் குள்ளர் !
இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்
இருப்பிட மாய்த்
திருப்பி வந்துள்ளது !
விஞ்ஞானக் கல்வி படைத்தவை எல்லாம்
இந்தப் புது ஆதி வாசிகளால்
அந்த மாகி அழிந்தன !
கற்காலத்துக் குகை வாசிகளாய்
தற்போது மாறி விட்டோம் !
நாம் படைத்த
நாச எந்திரங்களும்
நுணுக்கத் தொழிற்துறைக்
கொலைக் கருவிகளும்
மினுப்பதைத் தவிர
நம்மைத்
தனித்துக் காட்டு வதில்லை !

++++++++++++

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 22, 2010)

Series Navigation