காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !

This entry is part of 31 in the series 20080807_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் !
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் !

நேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் !
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கம் !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 31
காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !

காதல் வண்ணக்
கறை பூசும் என் உடம்பில்
கிரிதரன் நிறத்தில் !
உலகத்தின் ஐம்புலன் உடுப்பை
அணிந்த போது
கண்கட்டு விளையாட்டுப்
பெண்ணாகக்
களிப்போடு இருந்தேன் !
அரண்மனை வாசியாய்
சீரும் சிறப்பில்
பேருடன் இருந்த போது,
பிறவிக் கடல் நீக்கும்
கிரிதரன் எனது
கரம் பற்றிக் கொண்டான் !
கருமேனியான்
கவினில் மயங்கிப்
பொருளனைத்தும் வழங்கினேன்
அன்னியருக்கு !
காதலனைக் காணாதவர்
கடிதம் எழுதுவர் !
என்னிதயத்தில் குடியிருப்போன்
புகுவதும் இல்லை ! போவதும் இல்லை !
பிரபுவுக்குத் தன்னை
மீரா அர்ப்பணித்து விட்டாள் !
இரவோ பகலோ காத்திருப்பாள்
கிரிதரனுக்கு !

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4 2008)]

Series Navigation