காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !

This entry is part of 44 in the series 20080410_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதிக்குத் தெரியாத காட்டில் – உனைத்
தேடித் தேடி இளைத் தேனே ! . . . .
கால்கை சோர்ந்து விழலானேன் ! – இரு
கண்ணும் துயில்படர லானேன் !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 14
சிறிய படகுக்கு வழிகாட்டு !

கடலில் மிதந்து செல்ல
இச்சிறிய
படகுக்கு வழிகாட்டு !
பயணக் கட்டணம் தருவதற்குக்
கையில் என்ன உள்ளது ?
மாறும் நம்முலகில் துயரைத் தவிர
வேறில்லை ! அதன்
பிடியிலிருந்து
விடுவிப்பாய் என்னை !
கர்ம வினையின்
எட்டுப் பிணைப்புகள் என்னைக்
கட்டிப் போட்டுள்ளன !
கோடிக் கணக்காய்
கருப்பைகளில் நெளிகின்றன
படைக்கும்
பிறவிகள் எல்லாம் !
கோடிக் கணக்கில் சிசுக்களாய்
வெவ்வேறு வடிவத்தில்
நாமாக
வெளிப்படு கின்றோம் !
மீரா அழுகிறாள் :
கருமை நிறக் கண்ணா !
தூரக் கரையிலே
சேர்த்திடு
சிறிய படகினை
பிறப்பையும் இறப்பையும்
முடிவாக நிறுத்தி !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 8, 2008)]

Series Navigation