கவிதை

This entry is part of 60 in the series 20040429_Issue

அபி சுப்ரா


வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர்

உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார்

எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன்

கலந்து பேசி அறிகின்ற உண்மைகள்

கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற

விந்தையை என்னென்று சொல்ல

அறிந்து புரிவது அரை நிமிடம்

அறியாமையில் உழல்வது பல வருடம்

முயன்று தவிக்கின்றேன் – அந்த அரை நிமிடத்தை

ஒரு மணியாக்க, ஒரு தினமாக்க

பகவத்கீதையில் பகவானின் வாக்கு

பார்த்தனுக்கு மட்டுமல்ல இந்த பாமரனக்கும்

என அறிந்து தேடுகின்றேன்

வேதாந்தம் எனக்கு விளங்காத புதிர் தான்

என் ஆதாரம் இது என்று அறிந்து கொண்டேன்

இனி என் தேடலும் முடியாத தொடர் தான்
—-

Series Navigation