அறிய கவிதைகள்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

தமிழில் புதுவை ஞானம்


—-
அசட்டை

ஒவ்வொருவரையும்
கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்
ஆழ்ந்த சிந்தனைக் குரியவை
வாழ்வும் சாவும்.
எல்லாமும் கடந்துவிடும்
இனம் மூடித் திறப்பதற்குள்
முழுமையான
விழிப்புடன் இருங்கள்
ஒவ்வொருவரும்.
அசட்டையும் சோம்பலும்
அசத்தி ஆழ்த்திவிடும்.

(ஒரு ஸென் கவிதை)


விலங்குடன் விலங்காய்

மனிதனுக்குத் திருப்பித் தருகிறோம்
உலகத்தை-
மனிதனைத் திருப்பித் தருகிறோம்
மனிதனுக்கு.
இனி…
வெறுக்கத்தக்க இழிநிலை விடுத்து
பெருந்தனமையடைவான்.

சிரஞ்சீவித்தனமுடைய
ஆன்மாவின் பேரால்
அழித்துவிடக்கூடாது
அவனது அறிவை.
வீரியமிக்கதும்
ஆக்க பூர்வமானதும் ஆன
அறிவு இல்லாவிட்டால்
வாழ்வான் மிருகமாய்–
ஆன்மாவும் இல்லாமல்
அடையாளமும் இல்லாமல்-
மர1/2ிப்பான் விலங்காய்.

அவனது கலைகளையும்
அவனது அறிவியலையும்
அவனது சுதந்திரத்தையும்
அவனுக்கே திருப்பித் தருகிறோம்
தனிநபராக முகமுள்ளவனாக
உ1/2ரவும் சிந்திக்கவும்.

எந்தவொரு
சமயக் கோட்பாட்டுடனும்
விலங்கிடப்பட்டு-விலங்குடன்
விலங்காய்
அழிவதற்கு அல்ல.

(மைகேலேஞ்சலோ)

****
வார்த்தைகள்-வார்த்தைகள்

ஐயத்திற்கிடமில்லை
காயப்படுத்த முடியும்
கூரிய அம்பாய்–
கு1/2ப்படுத்த முடியும்
குளிர் மருந்தாய்–
அழிக்க முடியும்
பெருமழையாய்ச் சாடி–
அமுதமாய்ப் பொழியவும் முடியும்
பயிர் செழிக்க–
ஐயத்திற்கிடமில்லை
வல்லமை வாய்ந்தவை
வார்த்தைகள்.
(Martin Gray Book of Life)


கணிதப் புதிர்

ஒவ்வொரு குழந்தைக்கும்
ஒவ்வொரு அம்மா
ஒவ்வொரு அப்பா.

இரண்டு பாட்டிகள்
இரண்டு பாட்டன்கள்.

ஒரு சகோதரன்
ஒரு சகோதரி
பத்துப் பன்னிரண்டு
அத்தை மக்கள்
மாமன் மக்கள்
சித்தப்பன் பெரியப்பன்
சித்தி அத்தை

ஆக….
இருப்பத்தேழு
இரத்த சம்பந்தங்கள்

அதனை நேசிக்க

இருப்பத்தேழை அறுபது கோடியாய்
பெருக்கிக் கொள்ளுங்கள்
ஆயிரத்து எண்ணூற்று இருபது கோடி

இப்படி அனேக உறவுகள் இருக்க
எப்படிக் குழந்தைகள் மரிக்கப் போகும் ?

பசியால்
துயரால்
துப்பாக்கி ரவைகளால்

யார் குற்றவாளி ?
யார் பொறுப்பாளி

விளக்கம் கூற
விவஸ்தை உண்டா ?
நாம் இருப்பதோ
முன்னூறு கோடிப் பேர்களே.

(MARIN KOLEV. 1939,BULGARIA )

1939 உலகின் மொத்த ஜனத்தொகை 300கோடி
குழந்தைகள் தொகை 60கோடி

****
சீறும் புயலில்

சீறும் புயலில்
குமுறும் கடலில்
தத்தளிக்குமொரு தோணியில்
நம் பயணம்.

ஒருவருக்கொருவர்
கைகோர்த்து
நம்பிக்கையளிப்பது
நம் தலையாய கடமை.

(G.K.CHESTERTON)

****

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்