சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Hemloc is given to Socrates

“நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் தினம் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்குகிறார். மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
நாலங்க நாடகம்
அங்கம் -4 காட்சி -5

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

மெக்கில்லஸ்: (கண்ணீர் வடித்து வேதனையோடு): ஏதென்ஸ் ஞானிக்கு நான் நஞ்சைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கிட்ட உத்தரவு ! நான் அதைச் செய்ய நடுங்குகிறேன் ! கடவுளே ! நான் அந்தக் கொடுமைச் செய்ய வேண்டுமா ? அந்தப் பாபத்திலிருந்து விடுபட சாக்ரடிஸ் ஓடிப் போக வாய்ப்பு அளித்தாலும் அவர் தப்பிச் செல்ல மறுத்து விட்டாரே ! என் கடமையிலிருந்து நான் தப்ப நினைத்தேன் ! சாக்ரடிசுக்கு நான் நஞ்சைக் கொடுத்தேன் என்று ஏதென்ஸ் சரித்திரம் என்னை நெடுங்காலம் தூற்றும் ! என் மீது சாபம் போடும் ! நான் என்ன செய்வது ? சாக்ரடிஸ் தப்பி ஓடிப் போகமாட்டார் ! நான்தான் இந்தக் கடமையை நிறைவேற்றாது இப்போது ஓடிப் போக வேண்டும் ! என்ன செய்வது சாக்ரடிஸ் நீங்களே சொல்லுங்கள் ?

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ சிறைக் காவலன் ! நான் சிறைக் கைதி ! தண்டிக்கப் பட்ட ஒரு கைதி ! தப்பிச் சென்றாலும் நான் விடுதலை அடைய முடியாத ஓர் அரசாங்கக் கைதி ! பலி ஆடு எப்படி வாள் வைத்திருப்பவனுக்கு ஆணையிட முடியும் ! ஏதென்ஸ் நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது உன் கடமை ! பலி ஆடு தன் தலையை நீட்டுவது அதன் கடமை !

அல்ஸிபயாடஸ்: போதும் உங்கள் தர்க்கம். தப்பிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

·பயிதோ: ஆம் ! விடிவதற்குள் ஓடிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

ஆகாத்தான்: குதிரையும் வாகனமும் தயாராகக் காத்திருக்கின்றன சாக்ரடிஸ் !

கிரிடோ: கடவுளே நீங்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பம் தருகிறார் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கிரிடோ ! நான் ஒரு குற்றவாளி ! ஆனால் கள்ளம், கபடு, சூது கொலை ஏதும் செய்யாதவன் ! நான் தப்பிச் செல்லக் கடவுள் வழி செய்கிறார் என்று தவறாக விளக்கம் தராதே ! நான் ஒரு கயவன் அல்லன் ஓடிப் போக ! நீதி நெறிகளுக்குத் தலை வணங்குபவன் ! நான் நண்பரிடம் விடை பெறத்தான் கடவுள் உம்மை எல்லாம் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் ! நான் போகிறேன் என்னினிய நண்பர்களே ! கண்ணீர் சிந்தாமல் விடை கொடுங்கள் எனக்கு !

மெக்கில்லஸ்: (கண்ணீருடன்) நான் என் கடமையை முடிக்கா விட்டால் என் தலை சீவப்படும் ! நானொரு கொலைகாரன். தெரிந்தே செய்கிறேன் ஒரு கொலையை ! என்னை மன்னித்து விடுவீரா சாக்ரடிஸ் ! நான் போகிறேன் ஐயா, ஹெம்லாக் கொண்டுவர !

(மெக்கில்லஸ் உள்ளே போகிறான்.)

சாக்ரடிஸ்: கொண்டு வா அந்த நஞ்சு மருந்தை மெக்கில்லஸ் ! என்னால் உன் தலை உருளக் கூடாது ! நிம்மதியான தூக்கத்திற்கு நிரந்தர மருந்து ஹெம்லாக் ! கொண்டு வா மெக்கில்லஸ் ! கொண்டு வந்து என் அருகில் வை !

(மெக்கில்லஸ் கையில் ஒரு கிண்ணத்தையும் குவளையையும் கொண்டு வருகிறான்)

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! தயவு செய்து இந்த நஞ்சின் கோரத்தைப் பற்றி எதுவும் அதிகமாகப் பேசாதீர் ! எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சாக்ரடிஸ்: அதிகம் பேசத்தானே நான் ஏதென்ஸில் பிறந்திருக்கிறேன்.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உணர்ச்சி வசப்பட்டால் அது ஹெம்லாக் மருந்துக்கு இடையூறு செய்யும் ! அப்புறம் இரண்டாவது கிண்ணம் நீவீர் அருந்த வேண்டி வரும்.

சாக்ரடிஸ்: அப்படியானால் நான் பத்துத் தடவை குடிக்க வேண்டி வரும் நிச்சயமாய் நான் மடிவதற்கு !

·பயிதோ: நான் ஒன்று கேட்க வேண்டும் சொல்வீரா சாக்ரடிஸ் ? உண்மையாகச் சொல்வீர்.
துணிந்து உயிரைப் போக்கிக் கொள்வது எளிதாக இருக்குமா ? நெஞ்சுறுதியோடு மரணத்துடன் போராடுவது இலகுவானதா ? மரணம் அடைவதில் உமக்கு இச்சை உள்ளதா ? அச்சம் ஒன்றும் இல்லையா ?

சாக்ரடிஸ்: நாம் பிறக்கும் போது தனியாக வந்தோம். இறக்கும் போது தனியாக மரிப்போம். இறப்புக்குப் பயமில்லை எனக்கு. மரணம் கசப்பானது. ஆனால் நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்கிறார். (மெக்கில்லஸை நோக்கி) மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (கண்கலங்கி) நான் எப்படி இந்த நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிஸ் ? நானே அதைக் குடித்துச் சாகலாம் உமக்குக் கொடுப்பதற்குப் பதிலாக ! நானொருவன் சாவதால் ஏதென்சுக்கு எந்த இழப்பும் நேராது ! ஆனால் நீவீர் மரிப்பதால் நேரும் பாதகங்கள் அநேகம் !

சாக்ரடிஸ்: நீ சாவதால் ஏதென்ஸ் நீதிபதிகளின் கோபத்துக்கு நீ ஆளாவாய் ! நான் மரிப்பதால் ஏதென்ஸ் மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்து குதூகலிப்பார் ! நீ சாவதை விட நான் போவதே நியாயமானது. கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

மெக்கில்லஸ்: உலக ஞானிக்கு நான் ஹெம்லாக்கைக் கொடுப்பதா ? உமக்கு நீதிபதிகள் கொடுத்த மரண தண்டனை நியாயமற்றது ! அது அநியாயம் !

சாக்ரடிஸ்: நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (அழுது கொண்டே) ஹெம்லாக் மருந்தைக் கொடுப்பது கொடுமை. அதை வாங்கி நீவீர் குடிப்பது மடமை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: நமக்குள் ஏனிந்த போராட்டம் ? என் காலம் முடிந்து விட்டது மெக்கில்லஸ் ! நீ என் ஆயுளை நீடிக்க முயற்சி செய்யாதே ! விதியைச் சதியால் நிமிர்த்தத் துணியாதே ! கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 6, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -4

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig, 1
The Last Day of Socrates

“எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
நாலங்க நாடகம்
அங்கம் -4 காட்சி -4

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

சாக்ரடிஸ்: எல்லாப் பாதைகளும் மரணத்தை நோக்கித்தான் செல்கின்றன கிரிடோ ! அதுதான் நீதியிலிருந்தும் நாட்டு நியதியிலிருந்தும் என்னை விடுவிக்க ஒரு காரணமா ?

கிரிடோ: இந்தக் கேடு கெட்ட விதிகளுக்கு நீங்கள்தான் பெரு மதிப்பு அளிக்கிறீர்.

சாக்ரடிஸ்: என்னைக் கொல்லப் போவதாக இருந்தாலும் நான் விதிகளை மீற மாட்டேன். நாட்டில் சட்ட திட்ட விதிகளை எழுதி வைத்திருப்பது ஒரு புனித ஏற்பாடு ! நாம் அந்த விதி முறைகளைப் போற்ற வேண்டும். எழுதிய சட்ட திட்டங்கள் கேடு கெட்டவை என்றால் அவற்றை அறிஞர் மாற்ற வேண்டும். அதனால் நாட்டு விதிகள் மீதுள்ள நமது மதிப்புக் குறையக் கூடாது.

கிரிடோ: இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. விதியைச் சீர்திருத்த முன்வருவார் யாருமில்லை ! விதியைத் திருத்த வேண்டும் என்றால் முதியவர் எல்லாம் கோபப்படுகிறார் ! விதிகள் மாறுவதில்லை !

சாக்ரடிஸ்: என் ஆயுட் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இப்போது நான் விதிகளை ஒதுக்கினால் விதிகள் என்னைப் பார்த்துக் கேட்கும் : “ஏன் நீ பாசாங்கு செய்கிறாய் எம்மை மதிப்பதாக ? எம்மால் பலா பலன்கள் இருக்கும் போது ஏன் எம்மைத் தள்ளுகிறீர் ? நீவீர் நீதி தவறி நாட்டு விதியை நிராகரிக்கலாமா ?” என்று.

கிரிடோ: ஒருவர் சாகப் போகும் தருவாயில் சட்டங்களை மதித்தால் என்ன ? இல்லை மிதித்தால் என்ன ?

சாக்ரடிஸ்: சாகும் போது கூடச் சட்ட விதிகளை மதிக்காது மீறினால் மக்கள் என்னைத்தான் தூற்றுவார். சட்டத்தால் நான் சாகும் போது அவற்றை மதிப்பதால், என் மீது மக்களுக்கு உண்டாகும் மதிப்பு இரட்டிப்பாகிறது.

கிரிடோ: எங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்கள் உயிரைக் காக்க நாங்கள் ஒளிந்து வந்திருக்கிறோம். அதுபோல் சிறைக் காவலர் மெக்கில்லஸ் உயிர் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்களைக் காப்பாற்றவும் துணிந்து விட்டார். இப்போது உங்கள் உயிர் போவ தோடு எங்கள் உயிருக்கும் ஆபத்து வரப் போகிறது. அதுதான் எங்கள் பணிக்குக் கிடைக்கும் வெகுமதி !

சாக்ரடிஸ்: இத்தனை உயிர்கள் ஆபத்தில் சிக்கி என்னுயிர் பாதுகாக்கப் பட வேண்டுமா ?

கிரிடோ: எதுவுமே உம்முயிரை மீட்க உமது மனதை மாற்றாதா ? எங்களைத் துடிக்க வைப்பது உங்களை ஓர் அசைவும் செய்வதில்லையே !

சாக்ரடிஸ்: கிரிடோ ! உன் ஆர்வமும், துணிச்சலும் என்னை திகைக்கச் செய்கின்றன ! ஆனால் தனி மனிதன் வாழ்வு, குடும்பம், சொத்து சுகம் எல்லாம் நாட்டுக்குப் பிறகுதான் எனக்கு !

கிரிடோ: நீவீர் தியாகம் செய்ய நினைக்கிறீர். நீவீர் சட்டத்துக்கு ஓர் அடிமைப் பிறவி !

சாக்ரடிஸ்: உன்னோடு நான் ஓடிப் போனால், என் குற்றம் இரட்டிப்பாகிறது ! சட்டத்தின் கண்களைக் குத்தினால் குற்றத்தைக் குற்றத்தால் தாக்குவதாகிறது ! என் உள்ளத்தின் உட்குரல் எனக்குச் சொல்வதைத்தான் நான் கேட்பேன். இப்போது உன்னோடு ஓடிப் போவது தவறு என்று அது எனக்குச் சொல்கிறது.

கிரிடோ: எனக்கு இதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. நான் போகிறேன் சாக்ரடிஸ் ! (கிரிடோ வெளியே சென்று மெதுவாய்க் கூப்பிடுகிறான்) ·பையிதோ (Phaedo) ! ஆகாத்தான் (Agathon) ! அல்சிபியாடஸ் (Alicibiades) ! நீங்கள் வந்து சாக்ரடிசிடம் பேசுங்கள். என்னால் அவர் மனதை மாற்ற முடியவில்லை !

சாக்ரடிஸ்: நான் மெக்கில்லஸைக் கூப்பிடுகிறேன் ! கிரிடோ ! இதற்கு மேல் நானும் சொல்ல எதுவுமில்லை ! (திரும்பி) மெக்கில்லஸ் ! நீ உள்ளே வரலாம்.

(மெக்கில்லஸ் மீண்டும் நுழைகிறான்)

மெக்கில்லஸ்: என்ன முடிவு செய்தீர் சாக்ரடிஸ் ! தப்பி ஓடப் போகிறீரா ? பயணம் எப்போது துவங்கும் ?

சாக்ரடிஸ்: ஹெம்லாக் தேனைக் குடித்ததும் என் புதிய பயணம் துவங்கும் மெக்கில்லஸ் ! உன்னைப் போன்ற உத்தம சீலன் கரங்கள் ஈந்து நானதைக் குடிப்பதில் ஆனந்தம் அடைகிறேன். நாட்டுத் துரோகிகள் எனக்கு நஞ்சு ஊட்டுவதை நான் வெறுக்கிறேன்.

மெக்கில்லஸ்: (மன வேதனையோடு) என்ன ? நீங்கள் தப்பி ஓட வில்லையா ? என் கையால் ஓர் உலக ஞானிக்கு நஞ்சைக் கொடுப்பதா ? படு பாதகச் செயல் அது சாக்ரடிஸ் ! என்னால் அந்தக் கொலை ஒருபோதும் நேராது !

சாக்ரடிஸ்: எப்போதும் நான் தப்ப முடியாது என்பதால் நான் ஓடிப் போக முயலவில்லை !

மெக்கில்லஸ்: அப்படியானால் சரி நான் என் வேலையைச் செய்கிறேன்.

(வெளியே போகும் போது அவன் கிரிடோ, ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபயாடஸ் நால்வரையும் சந்திக்கிறான். நால்வரும் சிறைக் கொட்டத்தில் நுழைகிறார்)

சாக்ரடிஸ்: (மகிழ்ச்சியோடு) உங்கள் யாவரிடமும் கடைசி நேரத்தில் விடை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனக்கு !

ஆகாத்தான்: என்ன ? உமக்குக் கடைசி நேரம் என்றா சொல்கிறீர் ?

சாக்ரடிஸ்: எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 29, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates in Jail

“மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர் வாழும் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் நாட்டை ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
நாலங்க நாடகம்
அங்கம் -4 காட்சி -2

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

மெக்கில்லஸ்: (கதவுக்குப் பின் மறைந்து கொண்டு) யாரும் என்னைத் தவிர சிறைச்சாலைக் காப்புக்கு ஏற்பாடு செய்யப் படவில்லை ! வருவது யார் ?

(கிரிடோ உள்ளே நுழைகிறான். உடனே மெக்கில்லஸ் பின்னால் பாய்ந்து சென்று கிரிடோவின் கழுத்தைப் பிடித்துக் கத்தியை நீட்டுகிறான்.)

கிரிடோ: (பதட்டமுடன்) சிறைக்காவலனே பொறு ! நான் பகைவன் அல்லன் !

சாக்ரடிஸ்: அடப் பாவி ! கிரிடோ நீயா ? எதற்கு நீ தனியாக வந்தாய் ? அரசாங்கப் பாதுகாப்புகளை எப்படி மீறி வந்தாய் ? நானிருக்கும் இடம் எனக்கே தெரிய வில்லை; உனக்கு எப்படித் தெரிந்தது ?

(மெக்கில்லஸ் கிரிடோவின் பிடியைத் தளர்த்திக் கத்தியை உறைக்குள் சொருகுகிறான்)

கிரிடோ: என் கழுத்தை அறுத்திருப்பாய் ! நீ என் முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்ததால் வந்த பயங்கரச் செயல் இது ! நான் யாரென்று நீ அறிவாயா ?

மெக்கில்லஸ்: நீ யாராய் இருந்தால் என்ன ? சிறைக்குள் புகுவோரைச் சிரச்சேதம் செய்யென்று எனக்கு உத்தரவு ! உன் தலை தப்பியது சாக்ரடிஸ் வரவேற்பால்தான் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! கிரிடோ என் பழைய தோழன். நானும் அவனும் பல தடவைக் குடித்து ஒன்றாய்த் திரிந்திருக்கிறோம். அவனை விட்டு விடு. அவன் அப்பாவி.

கிரிடோ: என்னைப் பாதுகாப்பதற்கு நன்றி சாக்ரடிஸ் ! உம்மைப் பாதுகாக்க இப்போது யாருமில்லை ! அதுதான் என் கவலை.

மெக்கில்லஸ்: உண்மையைச் சொல் ! உனக்கு எப்படித் தெரியும், சாக்ரடிஸ் இங்கு அடை பட்டிருப்பது ? எனக்குத் தெரிய வேண்டும் அது !

கிரிடோ: (கவலையற்று) இதெல்லாம் ரகசியம் ! எமக்குத் தெரியும் இந்த ரகசியச் சிறை !

மெக்கில்லஸ்: உமக்கு யார் சொன்னது ? எனக்குத் தெரியம் உமது ரகசியம் ! நான்தான் ஒரு ரகசியத் தகவலை உங்கள் வேலைக்காரன் ஒருவன் மூலம் அனுப்பினேன். அப்படித்தான் உமக்குத் தெரிந்தது ! அந்தத் தகவலை அனுப்பியன் நான்தான் !

கிரிடோ: (நன்றி ஆர்வமோடு) ஓ ! நீதான் அந்தத் தகவலை அனுப்பியவனா ? அது எனக்குத் தெரியாது.

மெக்கில்லஸ்: (குரலைத் தாழ்த்தி) மெதுவாகப் பேசு ! ரகசியம் வெளியே தெரிந்தால் என் வேலை போய்விடும் ! ஏன் என் தலையே தரையில் உருண்டோடும் !

கிரிடோ: (அன்புடன் நெருங்கி மெக்கில்லஸ் கையைக் குலுக்கி) நன்றி நண்பனே ! நாங்கள் இந்த நன்றியை மறக்க முடியாது ! கடைசி தினத்தில் சாக்ரடிஸை இப்படி நேராகக் கண்டது என் அதிர்ஷ்டமே !

மெக்கில்லஸ்: (மெதுவாக) கிரிடோ இது ரகசியமாய் இருக்கட்டும் ! மறந்துவிடு இச்சம்பவத்தை. என் பெயர் வெளியே தெரியக் கூடாது ! என் தோலை உரித்து விடுவார் !

கிரிடோ: (சாக்ரடிஸைப் பார்த்து) உமது மனைவி பிள்ளைகள் உம்மைப் பார்க்க வந்தாரா ?

சாக்ரடிஸ்: பார்க்க அனுமதி தந்தார். நான்தான் பார்க்க மறுத்தேன். நேராகப் பார்ப்பது எனக்கும் மன வேதனை, அவருக்கும் மன வேதனை ! ஆனால் உனக்கொரு தனி அனுமதி வாங்க மறந்து போனேன். நீயே நேராக இப்போது வந்து விட்டாய்.

கிரிடோ: எமது உடை வாட்கள்தான் எங்களுக்கு அனுமதி தர வல்லது. ஆறு பேர் இப்போது உருவிய வாளுடன் வெளியே ஒளிந்து கொண்டு நிற்கிறார். நான்தான் முதலில் இங்கு தலையை நீட்டியவன் !

சாக்ரடிஸ்: எப்படிக் காவலர் கண்காணிப்பைக் கடந்து வர முடிந்தது ?

மெக்கில்லஸ்: நான்தான் சொன்னேனே, என்னைத் தவிர வேறு யாரும் நியமிக்கப் பட வில்லை. யாரும் சாக்ரடிஸைப் பார்க்க வரக் கூடாது என்பது எனக்கிட்ட விதி ! அப்படி வந்தால் அவரைக் கொன்று விடும்படி எனக்கு உத்தரவு !

கிரிடோ: எங்களைக் காவலர் தேடிக் கொண்டிருக்கிறார். நாங்களும் காவலர் கண்ணில் படாது ரகசியச் சிறைக்கு அருகே வந்து விட்டோம். எங்களை ஆபத்து விரட்டிக் கொண்டு வருகிறது. எந்த நிமிடத்திலும் நாங்கள் சிக்கிக் கொள்ளலாம் !

சாக்ரடிஸ்: அப்படியானால் ஓடிப்போ கிரிடோ ! என்னால் உன்னுயிருக்கு ஒன்றும் நேரக் கூடாது ! உங்கள் ஆட்களுக்கும் ஆபத்து நேரக் கூடாது. போ கிரிடோ போ ! சீக்கிரம் போய்விடு !

கிரிடோ: கவலைப் பாடாதீர் சாக்ரடிஸ் ! (மெதுவாக) வெளியே வாகனங்கள் தயாராக உள்ளன. பிரைவ்ஸ் (Piraievs) துறைமுகத்தில் ஒரு கப்பலே தயாராக நிறுத்தப் பட்டுள்ளது. நாங்கள் உம்மைக் கடத்திச் செல்ல வந்திருக்கிறோம். உம்மைத் தனியே விட்டுச் செல்லப் போவதில்லை.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! இதுதான் என் திட்டமும். ஆனால் நான் நேராக அவ்விதம் என் தகவலில் எழுத வில்லை ! ஒருவேளை என் தகவல் அரசாங்கக் காவலர் கையில் கிடைத்தால் கடத்திச் செல்லும் திட்டம் கைகூடாமல் போகும்.

சாக்ரடிஸ்: ஆனால் கிரிடோ ! இங்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. நன்றி கூறுவேன் தோழர் மெக்கில்லஸ் காவலருக்கு ! அரசாங்கக் கைதி மரியாதை அல்லவா எனக்குக் கிடைத்துள்ளது.
என்னைக் காப்பாற்ற நீ முயல வேண்டாம்.

மெக்கில்லஸ்: (சினத்துடன்) அப்படிப் பேச வேண்டாம் சாக்ரடிஸ் ! கெம்லாக் நஞ்சை நீங்கள் குடிப்பதை நான் தாங்கிக் கொள்ள முடியாது. என் கண்முன் நீங்கள் மரிப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது ! ஓடி விடுங்கள் கிரிடோவுடன் ! நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! எனக்கு வியப்பாக உள்ளது ! நீ இப்படி அரசாங்கத்தை ஏமாற்றுவாய் என்று நீதிபதிகள் அறிய மாட்டார். காவல் அதிகாரியே என்னைக் கடத்திச் செல்ல விடுவதா ?

மெக்கில்லஸ்: கிரிடோ ! இந்தச் சதி வேலையைச் செய்வதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். முதலில் என்னை அடித்துக் காயப்படுத்த வேண்டும் ! நான் சண்டையில் காயப்பட்டு மயக்கம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படியானால் எனக்குச் சிரச்சேதம் கிடைக்காது. என் வேலையும் பறி போகாது. சாக்ரடிசும் தப்பிக் கொள்வார். நானும் தப்பிக் கொள்வேன்.

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ கொஞ்ச நேரம் வெளியே நிற்பாயா ! நானும் கிரிடோவும் தனியாக இதைப் பற்றிப் பேச வேண்டும்.

கிரிடோ: இல்லை நாம் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது விவாதிக்க நேரமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் விடிந்து விடும். இருள் முடிவதற்கு முன்னே நம் கடத்தல் வேலை முடிய வேண்டும் !

மெக்கிலஸ்: சரி நான் வாசலில் நிற்கிறேன். நீங்கள் தனியாகப் பேசுங்கள்.

(மெக்கில்லஸ் வெளியே சென்று மறைவில் நிற்கிறான்)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !”

சாக்ரடிஸ்

“ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்றது ஒன்று உள்ளதா என்று ? அப்போது அந்த முறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

“ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவருடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

சாக்ரடிஸ்

******************************

Fig. 1
Secret Prison of Socrates

சாக்ரடிஸின் மரணம்
நாலங்க நாடகம்
அங்கம் -4 காட்சி -1

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான்.

மெக்கில்லஸ்: (சாக்ரடிஸை மெதுவாகத் தட்டி) சாக்ரடிஸ் ! சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (கண் விழித்தும் கண் மூடியும் எழுந்து) ஓ மெக்கில்லஸ் ! விடிந்து விட்டதா ?

மெக்கில்லஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! இன்னும் பொழுது விடிய வில்லை ! கீழ்வானம் மட்டும் சிவந்துள்ளது ! சிவந்த கண்ணுடன் கதிரவனின் கதிர்கள் அக்ரபோலிஸ் மலைச் சிகரத்தை எட்டி விட்டன ! பொழுது புலர்வதற்கு முன்னே நீங்கள்தான் என்னை எழுப்பச் சொன்னீர்.

சாக்ரடிஸ்: (எழுந்து உட்கார்ந்து) நன்றி மெக்கில்லஸ் ! நல்ல தூக்கம் எனக்கு ! நன்றாகத் தூங்கி விட்டேன் ! மீளாத உறக்கத்துக்கும் முன் மேலான தூக்கம் ! சுகப் பொழுதாய் விடியப் போகிறது.

மெக்கில்லஸ்: (மனம் வருந்தி) என்ன சுகப் பொழுதா ? எப்படி நிம்மதியாகத் தூங்க முடிந்தது ? எனக்குத் தூக்கம் வரவில்லை சாக்ரடிஸ் ! இன்று இறுதிக் காலை அல்லவா ? (சங்கிலியைக் கழற்றி) நான் இப்போது சங்கிலியை நீக்குகிறேன். சட்டப்படிக் கடைசி நேரத்தில் கட்டிய சங்கிலியை நீக்கலாம் என்று விதி உள்ளது !

Fig 2
Socrates in Prison

சாக்ரடிஸ்: புன்னகை புரி மெக்கில்லஸ் ! மீண்டும் சூரியன் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உமது விடுதலை பறிபோனதற்கு நான்தான் பழிக்கப்பட வேண்டியவன்.

சாக்ரடிஸ்: ஒரு திசையில் பார்த்தால் அது சரியாகத் தோன்றுகிறது. ஆனால் வீணாய்க் கலங்காதே நீ ! யாருக்குக் கேடு நேர்ந்தாலும் பழிக்கு ஒருவர் மட்டும் காரணமாக இருக்காது ! நானும் அதற்கோர் காரண கர்த்தா ! நீதிபதிகள் என்னை மன்றத்தில் குற்றவாளியாக முத்திரை அடித்துள்ளார் !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் அரசாங்க ஆணைக்கு அடி பணிந்து போகிறீர். நானோ சிறைக் கதவைப் பூட்டும் சாவியைக் கையில் வைத்திருப்பவன் ! மனித இனத்துக்கு விடுதலை வாழ்வுதான் முதல் மூச்சு ! முடிவான மூச்சு ! விடுதலை இல்லாத மனிதன் பாதி செத்தவன் !

சாக்ரடிஸ்: விடுதலை தேடுவது அடிமைகளின் வழிபாடு ! ஆனால் நான் அடிமை அல்லன் ! உரிமை பறிபோன அரை மனிதன் ! உயிர் போன பின் அரை வாழ்வும் பூஜியமாகிறது !

மெக்கில்லஸ்: அடிமை இனத்தார் பரம்பரையாய் முடங்கிக் கிடக்கும் நடைப் பிறவிகள் ! அடிமைத் தனத்தை விட்டு வெளியேறப் பலர் விருப்பம் அடையார் !

சாக்ரடிஸ்: நம்மைப் போல் அடிமைகளாய் இல்லாதவரும் ஏதாவது ஒரு விதிமுறைக்கு அடிமை யாகத்தான் வாழ்கிறார் !

மெக்கில்லஸ்: நாம் அடிமைகள் அல்லர் ! நாம் விடுதலை மனிதர் !

சாக்ரடிஸ்: நாம் விடுதலை மனிதரா ? உறக்கமற்ற ஒருநாள் இரவு ! உணவில்லாத ஒருநாள் பகல் ! உடல் மறைக்கும் ஆடையில்லாத வறுமை ! தங்குமிட மில்லாத தரித்திர நிலை ! அவை அனைத்தும் நம் அடிமை ஆத்மாவைச் சுட்டெரிக்கின்றன ! ஒரு சில நாட்களிலோ ஒரு சில மாதங்களிலோ ஒரு சில ஆண்டுகளிலோ நாம் மரித்து விடுவோம் ! நாமிந்த உடம்பில் முடங்கி உயிரோடு வாழும் வரை நாமெல்லாம் உடம்புக்கு அடிமையாக வாழ்கிறோம் ! வயிற்றுக்குப் பசி, வாயிக்குத் தாகம், உடலுக்கு உறவு – இப்படி உடல் இச்சைகள் நம்மை விலங்கிட்ட அடிமைகள் நாம் ! முற்றிலும் விடுதலை அடைவது முடிவில் மரணத்தில்தான் ! உயிர் வாழ்க்கையே மனிதருக்கு அடிமை வாழ்வுதான் ! மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர்ப் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !

மெக்கில்லஸ்: அது என் வேலை இல்லை சாக்ரடிஸ் ! நாட்டை விட்டே நான் ஓடி விடுவேன் கெம்லாக் நஞ்சைக் குடிக்க நேரிட்டால் ! (சிறிது தயங்கி) நடைச் சத்தம் கேட்கிறதா ? யாரோ வருகிறார் உம்மைக் கடத்திச் செல்ல !

சாக்ரடிஸ்: ஆமாம் யாரோ வரும் அரவம் கேட்கிறது ! அடுத்தோர் சிறைக் காவலனாக இருக்கலாம் !

(கையில் கத்தியுடன் மெக்கில்லஸ் கதவுக்குப் பின்புறம் ஒளிகிறான்.)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 9, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -8

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரத்திற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை இப்போது அளிக்கிறது ! உன் முதிய வயதை மன்றம் நினைவில் கொண்டுள்ளது. இளவயதில் நீ தைரியமாய் ஏதென்ஸ் நகருக்காக போர்ப்பணி புரிந்ததையும் நினவிலே வைத்துள்ளது ! இப்போது நீ வறுமையில் வாடுவதையும் மறக்க வில்லை ! வாழ்நாள் பூராவும் நீ மெய்ஞானத்தைத் தேடியே வறுமையில் வீழ்ந்தாய் என்பதும் தெரியாமல் இல்லை ! எப்போதும் நீ நேர்மையாக வாழ்ந்தாய், மிக்க நேர்மையாக வாழச் சொன்னாய் என்பதையும் யாம் அறிந்தோம். இங்கு உன்னைக் குற்றம் சாட்டியோர் கூட உன்னைப் பொய்யன் என்று சொன்னதில்லை. லஞ்சம் வாங்கி மனம் மாறுபட்டதாகக் குறை கூறவில்லை. ஐயமின்றி நீ ஓர் ஞானி. திருச்சபையினர் (Oracle) நீவீர் ஓர் உலக மேதை என்று உனக்குப் புகழாரம் சூட்டினார். உமது கணிப்புக்கு நீவீர் ஒரு பிழையும் செய்யாதவர் என்று எமது முன்பாகக் காட்டிக் கொள்கிறீர் ! நாங்கள் பொது நபர் என்ற முறையில் எங்களுக்கு நீவீர் குற்றவாளியாகத் தெரிய வில்லை ! ஆனால் நீதிபதிகள் என்னும் முத்திரையில் எங்கள் முன்பு நீவீர் ஒரு குற்றவாளியாகத்தான் நிற்கிறீர் ! உமது வழக்கில் எதிர்ப்பு வாதங்கள்தான் முடிவில் உம்மைக் காப்பாற்றப் போகின்றன ! உம் மீது தாக்கப் பட்டக் குற்றச் சாட்டுகளை நீவீர் மறுத்துள்ளீர் ! குற்றம் சாட்டியவரை முட்டாள்கள் என்று சுட்டிக் காட்டி நீவீர் உமது குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளீர் ! சாக்ரடிஸ் ! விதி உமது கண்களைக் குருடாக்கி விட்டது இவைதான் உமது குற்றத்துக்குக் காரணம் என்பதை உமக்குக் காட்டாது. நீவீர் எள்ளி நகையாடி இருப்பதை நோக்கும் போது ஓர் ஞான ஏதேட்சைவாதியாக ஆகியிருப்பதன் காரணம் தெரிகிறது ! உமது உள் நோக்கம் எதுவாக இருப்பினும் சரி இப்போது நீவீர் ஏதென்ஸ் நாட்டின் புரட்சித் தளபதி என்பது தெளிவாகிறது. பாதிக்கப்படப் போவது உமது வாழ்க்கையா அல்லது ஓராயிரம் ஏதென்ஸ் மக்கள் வாழ்க்கையா ? நியாயத்துக்குச் சார்பாக உனக்கு மரணத் தீர்ப்பா அல்லது ஏதென்ஸ் மாந்தர் இன்னல்களா என்று நீவீர் தராசில் நிறுத்துப் பார்ப்பதில்லை ! நியாயம் இருக்கலாம் உமது எதிர்ப்பு வாதங்களில் ! ஆனால் நீதிபதிகளான நாங்கள் பாரபட்சம், பரிவு, ஓரவஞ்சகம் காட்ட முடியாது ! பரிவோடிருந்தால் நாங்கள் உமக்காக ஓராயிரம் நபருக்குப் பாதகம் இழைக்க வேண்டும் ! உமக்குப் பாரபட்சமா ? ஏராளமான ஏதென்ஸ் மக்களுக்கு ஓரவஞ்சகமா ? இதுதான் எங்கள் மனப் போராட்டம் ! சாக்ரடிஸ் ! ஓட்டெடுப்பு விளைவை இப்போது வெளியிட விரும்புகிறேன் ! 242 பேர் உனக்கு எதிராகவும் 185 பேர் உனக்கு ஆதரவாகவும் ஓட்டளித்திருக்கிறார். மூன்றில் இருபங்கு ஜூரர் உம்மைக் குற்றவாளியாகக் கூறியுள்ளார். ஆதலால் நான் உனக்குத் தண்டனை விதிக்கிறேன் ! குற்றம் சாட்டியோர் என்ன தண்டனை தரலாம் என்று ஆலோசனை கூறலாம் !

(மன்றத்தில் ஒரே கைதட்டல் ! ஆரவாரம் எழுகிறது.)

மெலிடஸ்: (சட்டென எழுந்து) எங்கள் ஆலோசனை சாக்ரடிசுக்கு மரண தண்டனை !

லைகான்: ஆம் நீதிபதி அவர்களே ! மரண தண்டனைதான் ஏற்றது !

ஆனிடஸ்: சாக்ரடிஸ் குற்றங்களுக்குத் தண்டனை மரணமே !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: அதற்கு நீவீர் கூறும் காரணங்கள் என்ன ?

மெலிடஸ்: அதற்கு நாங்கள் கூற வேண்டுமா ?

நீதிபதி டிரிப்தோலிமஸ்: காரணமின்றி ஒருவனைக் கொல்ல நீவீர் விரும்புகிறீரா ? அதற்குப் பதிலாக அவரை நாடு கடத்தலாம் அல்லவா ?

ஆனிடஸ்: ஏதென்ஸ் மாந்தர் நன்மைக்கு மரணம் ஒன்றுதான் இந்த மனிதனை ஒழிக்க முடியும். தீர்த்துக் கட்டுங்கள் சாக்ரடிஸை ! இனிமேல் இந்தக் கீழ்நிலை எமக்கு நேராது ! எமது செவிகளில் இனிமேல் அவரது வரட்டு உபதேசம் ஒலிக்காது ! நாடு கடத்தப் பட்டவன் மீண்டும் நாட்டுக்குள் நுழையலாம். ஆனால் செத்தவன் மீள மாட்டான் !

நீதிபதி ·பிளிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாடியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 18, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நமக்கு ஞானம் உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

******************************

Fig. 1
Socrates in Trial at Athens

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -6

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: ஏதென்ஸ் அரசாங்கத்தை இங்கே குறை கூறுவது சரியில்லை சாக்ரடிஸ் ! உன் மீதுள்ள குற்றச் சாட்டு ஏதென்ஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தாய் என்பதே ! அதை இப்போது ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: அரசாங்கத்தை எதிர்க்கும் புரட்சி என்றால் என்ன ? எனக்குப் புரியவில்லை நீதிபதி அவர்களே ! நேர்மை நெறியில் இருக்க வேண்டிய அரசாங்கத்தின் கீழான போக்கை எடுத்துக் காட்டுவது புரட்சியா ? சத்தியம் இகழப் படுவதா ? இப்போதைய ஏதென்ஸ் அரசாங்கம் நேரிய நெறியில் மக்களை ஆளுகிறதா ?

நீதிபதி ·பிளிப்: அது உன் பொறுப்பில்லை. பெரும்பான்மை குடிமக்கள் தேர்ந்தெடுத்த ஒன்றை நீவீர் தூற்றக் கூடாது. அதை நீவீர் ஆதரிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே ! நான் அரசாங்க விதிகளுக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் நான் அதை ஆதரிக்க மாட்டேன் ! பெரும்பான்மைக் குடிமாந்தர் வடித்த அரசாங்கம் தன் வசதிக்கு விதிகளைப் புகுத்தி வைத்திருக்கிறது. இருபது பேரை ஒப்ப வைப்பதை விட ஒருவரை ஒப்ப வைப்பது எளிது. ஆனால் அது இருபது பேர் கூற்றை நியாயப் படுத்துமா ? பலர் நம்புவதால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? எத்தனை ஓட்டுகள் இருந்தால் ஒரு பொய் உண்மையாகும் ? பெரும்பான்மை நபர் ஆதரித்தால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? சொல்லுங்கள் அறிவுமிக்க நீதிபதிகளே ! நான் அறிவற்ற மனிதன், அதுவும் முதிய மனிதன் !

நீதிபதி ஸைரஸ்: யோசித்துப் பார் சாக்ரடிஸ் ! குடிமக்கள் ஆள்வதற்கு உதவி செய்தால்தான் நாம் அரசாள முடியும். அல்லது அது கொடுங்கோல் ஆகும். மறக்காதே இதை. பொது மக்கள் போற்றும் அரசாங்கத்தின் கை, கால், கண் யாவும் கட்டப் பட்டுள்ளன. அதை இங்கும் அங்கும் இழுத்துச் செல்கின்றன பணிய வேண்டிய காட்டுக் கழுதைகள்.

லைகான்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு அரசாங்கத்தை இழிவாகப் பேசுகிறார் சாக்ரடிஸ் ! அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

மெலிடஸ்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டார்களைத் தூற்றுகிறார் சாக்ரடிஸ். ஆம் அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

சாக்ரடிஸ்: தேச நேசர் லைகானைப் போற்றுகிறேன் நான்.

மெலிடஸ்: சாக்ரடிஸ் போக்கை மறுபடியும் நான் கண்டிக்கிறேன்.

சாக்ரடிஸ்: ஓட்டார்களைப் போற்றும் மெலிடஸை நான் பாராட்டுகிறேன்.

மெலிடஸ்: எனது நாட்டுக் குடிமக்கள் மீது நான் கொண்டுள்ள நேசம் அளவில் அடங்காது.

சாக்ரடிஸ்: மெலிடஸ் ! ஆனால் ஏதென்ஸ் நாட்டுக் குடிமக்கள் தவறு செய்த போது நீவீர் தடுத்தீரா ? அல்லது வெறும் எச்சரிக்கையாவது செய்தீரா ? ஆனால் நான் தடுத்தேன் ! அதற்குத் தண்டனை இட்டால் ஏற்றுக் கொள்கிறேன்.

மெலிடஸ்: (எழுந்து நின்று கூக்குரலில்) ஒட்டார்கள் ஒருபோதும் தவறு இழைத்ததில்லை ! அவர் அமைத்த ஏதென்ஸ் அரசாங்கம் உயர்ந்தது ! உன்னத சேவை செய்கிறது !

நீதிபதி சைரஸ்: (கோபமாக) உட்கார் மெலிடஸ் ! நீதிபதி வேலையை நீ செய்ய வேண்டாம். உன் நியாயங்களை நீயிங்கு பரப்பாதே ! வாயைத் திறக்காதே மெலிடஸ் ! (சாக்ரடிஸைப் பார்த்து) சாக்ரடிஸ் ! இப்போது குடிமக்கள் எமக்கிட்ட வேலையை நீவீர் நிறுத்த முயல்கிறீர் !
ஒருவேளை அவர் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் வேண்டியதை யாம் செய்து முடிப்போம். ஆனால் நீவீர் அதைத் தாழ்வு படுத்திப் பெருமைப் படுகிறீர். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் உம்மை போன்ற வேதாந்திகள் உபதேசிக்கிறார். எமது பொறுப்பு என்ன செய்யலாம் என்பது. உம்மைப் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு இரண்டும் வேறு என்பது தெரிவதில்லை !

சாக்ரடிஸ்: சீர்திருத்தவாதிகளின் தொழில் நாட்டைச் சீர்திருத்த வேண்டும் என்பதே ! அதைத் தடுப்பவர் அரசாங்கவாதிகள். குடிமக்கள் மாற்றத்தை விரும்புகிறார். ஆனால் அதை அரசாங்கம் வெறுக்கிறது. புதிதாகப் பொதுநபர் எதைக் கொண்டு வந்தாலும் அதன் முதல் எதிரி அரசாங்கம் ! பெரும்பான்மயோர் தவறாக இருக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர். அப்படிக் கருதினால் சிறுபான்மையோர் சொல்வதில் நியாயம் இருக்கலாம் ! எத்தனை பேர் எதிர்த்தாலும் சிறுபான்மையோர் பேச உரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் அவரது கூற்றில் உண்மைக் குரல் தொனிக்கிறது. அதுதான் கடவுளின் மெய்ப்பாடு ! நுழையாத உங்கள் செவியில் மெய்ப்பாட்டைத் திணிக்கக் கடவுள் என்னைத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் ! என் பணி கடவுளின் பணி.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: எச்சரிக்கை செய்கிறேன் ! கர்வத்துக்குத் தண்டனை மரணம் தெரியுமா ? நீ கடவுளின் தூதனா ? அப்படி நீ பெருமை அடித்துக் கொள்கிறாயா ? கடவுளுக்கு நீ என்ன உறவினனா ? உன்னையா கடவுள் ஏதென்ஸைத் தூயதாக்க அனுப்பியுள்ளார் ? இதை யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உன்னைத் தண்டிக்க நீயே தக்க ஒரு காரணத்தைக் கூறி விட்டாய் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இதை நினைவில் வைத்துக் கொள்வீர் ! நான் இங்கிருக்கிறேன் இப்போது. நாளை இங்கு யார் இருப்பார் என்பது தெரியாது. கடவுள் இருதரம் உமக்கு எச்சரிக்கை செய்யாது ! வாழ்ந்திடு இன்றேல் மாய்ந்திடு என்பதே என் மனக் கோட்பாடு. நீவீர் உம்மை மூடராய் ஆக்கிக் கொண்டால் விடுதலை உணர்ச்சி கொண்ட ஒருவர் உமக்கதைச் சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு அந்த சுதந்திரம் உள்ளது ! நான் மனிதத் தவறுகளைக் கண்டால் எடுத்துரைக்கத் தயங்க மாட்டேன் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 4, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

Fig. 1
Socrates under Trial in Athens

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -4

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! இப்போது தெளிவாகச் சொல்வீர் ! நீவீர் எவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர் ?

மெலிடஸ்: (ஆவேசமாய் முந்திக் கொண்டு) நான் சொல்கிறேன் அவரைப் பற்றி ! பேய், பிசாசு, போலித் தெய்வம் ! பாதி மனிதனும் பாதித் தெய்வமான அரைத் தெய்வம் ! சாக்ரடிஸ் காதிலே எப்போதும் ஏதோ ஓர் அசரீரி ஆன்மா உரையாடுவதாகச் சொல்வார் ! அதுவே அவர் செய்வதை ஆணை இடுவதாகச் சொல்வார் ! அது உண்மையா இல்லையா ? சொல் சாக்ரடிஸ் !

நீதிபதி ·பிளிப்: மெலிடஸ் ! ஏன் குறுக்கே பாய்கிறாய் ? சாக்ரடிஸ் சொல்லப் போவதை யூகித்து நீ கூறுவது வழக்காடல் ஆகாது ! வழக்கு நெறி தவறிய செயல் அது !

மெலிடஸ்: (மீண்டும் குறுக்கிட்டு) நான் சொல்வது உண்மை தானே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (மெதுவாக, பொறுமையாக) நீதிபதி அவர்களே ! நான் பேய், பிசாசு, போலித் தெய்வங்களை நம்பாதவன் ! அரைத் தெய்வம் என்றால் புரியவில்லை எனக்கு ! ஆனால் ஓர் அசரீரி ஆன்மா என் காதில் எனக்கு ஆணை இடுவது உண்மைதான் ! அதன்படி நடப்பவனும் நான்தான் ! அதன் ஆலோசனகளில் நன்னெறிகள் இருக்கும்.

நீதிபதி ·பிளிப்: அதென்ன அசரீரி ஆன்மா ? எனக்குப் புரியவில்லை.

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) ஆத்மா சுத்தமாக இருப்பவர் காதில்தான் அந்த அசரீரி பேசும் ! அதை ஒரு குட்டிக் கடவுள் என்று வைத்துக் கொள்வீர். அல்லது ஒரு தெய்வத்தின் பிள்ளை என்றும் நினைத்துக் கொள்ளலாம். தப்பாகப் பிறந்த பிள்ளை !

மெலிடஸ்: எமக்குத் தெரியும் அது ! தெய்வத்தின் பிள்ளையை இப்படித் தப்பான பிள்ளை என்று கேலி செய்யும் நீவீர் தந்தையான தெய்வத்தையும் அவமதிக்கிறீர் !

சாக்ரடிஸ்: நான் இந்தப் போலி தெய்வத்தையே நம்பாத போது அதன் பிள்ளையை எப்படி நம்புவேன் ? நான் குதிரையை நம்புகிறேன் ! கோவேறு கழுதையை நம்புவதில்லை.

மெலிடஸ்: தெய்வத்தைக் கோவேறு கழுதைக்கு இப்போது ஒப்பிட்டுக் காட்டுவது கண்டிக்கப் பட வேண்டும் !. கனம் நீதிபதி அவர்களே ! உடனே இவரைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும் !

நீதிபதி: நான்தான் இங்கே நீதிபதி ! குற்றதை ஏற்றுக் கொள்ள வைக்காமல் கண்டிப்பதோ தண்டிப்பதோ தவறு ! அதை நிர்ணயம் செய்வது நான் ! மெலிடஸ் ! வாயைத் திறக்காதே அழைக்கப் படாமல் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது எனக்கு ஓர் விளக்கம் தேவை ! தெய்வம் என்பது என்ன ? யாராவது எனக்கு விளக்கம் தர வேண்டும். இதில் அரைத் தெய்வம் எது ? முழுத் தெய்வம் எது ? மனிதத் தெய்வம் எது ?

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இத்தகைய வினாக்களைத் தொடராமல் நிறுத்த வேண்டும் ! சாக்ரடிஸ் சாமர்தியசாலி ! இப்படி முதலில் விளக்கம் கேட்பார் ! பிறகு அதிலே பதில் அளிப்பவனை மூழ்க்கிவிடுவார் ! அவரைச் சொல்லாடி யாரும் வெல்ல முடியாது ! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! எனக்குப் புரியாத ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. சொல்லுங்கள் ! கடவுள் என்பது என்ன ? நீங்கள் விளக்கம் தராவிட்டால் என் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருப்பீரா ?

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! முதலில் இதற்குப் பதில் சொல் ! கடவுளைப் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய் ?

சாக்ரடிஸ்: கடவுள் என்பது ஒன்று ! நான் நம்புவது அந்த ஒற்றக் கடவுளைத்தான் ! பற்பல தெய்வங்களை நான் நம்புவதில்லை ! என் காதில் கேட்கும் பல தெய்வங்கள் புராண நூல்களில் எழுதப் பட்டவை ! இதிகாசக் கதைகளில் காணப்படுபவை ! சில தெய்வங்கள் சினம் கொண்டவை ! சில தெய்வங்கள் செந்நெறி யுடையவை ! சில தெய்வங்கள் மூர்க்கத்தனம் படைத்தவவை ! சில பயங்கரத் தெய்வங்கள் மக்களைக் கொல்கின்றன ! கதைகளில் வரும் அவை யாவும் கடவுள்கள் அல்ல ! அவைதான் பேய்கள், பிசாசுகள் ! நான் அவற்றை நம்புவதில்லை ! இதிகாசக் கதைகளில் நாம் தெரிந்து கொண்ட அந்தத் தெய்வங்கள் நம்மை மகிழ்விக்கவோ, பயமுறுத்தவோ அல்லது துயர்ப்படுத்தவோ சொல்லப் பட்டவை ! நான் அவற்றை நம்புவதில்லை ! நான் நம்புவது உலகம் அனைத்துக்கும் ஒன்றான கடவுளை ! ஒற்றைக் கடவுளை ! புராண நூல்களில் எழுதப்பட்ட அநேகத் தெய்வங்களை அல்ல ! ஆனால் புராண நூல்களில் அந்த ஒற்றைக் கடவுளின் ஒளிவீசலாம். அந்த ஒப்பற்ற கடவுள் இந்தப் பேருலகில் இருக்கிறது. அழகுமயம், சத்திய நெறி, நீதி நெறி (Beauty, Truth & Justice) என்பவை அந்தக் கடவுளுக்கு உள்ள சில பெயர்கள் ! அந்தக் கடவுளுக்கு உள்ள மற்ற பெயர்கள் எனக்குத் தெரியாது ! ஆனால் ஒன்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கடவுள் பிறரிடம் உள்ள நன்னெறிகளைக் காண எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அக்கடவுள் நன்னெறிகளை எனக்குப் புகட்டுகிறது. கடவுளை அறிவது என்று கூறுவது நேர்மை நெறி அதுவென்று அறியப்படுவது. அந்தக் கடவுளை அறியாமல் இருப்பது பாபம் என எண்ணப்படுவது. மனிதரின் பாபத் தவறுகள் மூன்று : வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை. இதுதான் என் கடவுள் நம்பிக்கை. இதைத்தான் நான் ஏதென்ஸ் நகர் வாலிபருக்குப் பல்லாண்டுகளாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன். இது உங்களுக்குத் தெய்வத் துரோகமாகத் தெரிகிறதா ? நான் ஏதென்ஸ் வாலிபரைக் கெடுத்தேன் என்பதில் நியாயம் உள்ளதா ?

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 22, 2009)]

Series Navigation

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
The Trial of Socrates in
Athens

“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -3

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! உன் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு என்ன சொல்கிறாய் ? தெய்வ அவமதிப்பு ! அரசாங்க எதிர்ப்பு ! (Blasphemy & Sedition) செய்திருக்கிறாய் நீ. அவற்றைப் பற்றி நாம் காலை முழுவதும் பேசி இருக்கிறோம்.

சாக்ரடிஸ்: காலை முழுவதுமா ? நான் என் வாழ்வு முழுவதும் அவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறேன்.

லைகான்: பார்த்தீரா ? வாழ்க்கை முழுவதும் பயங்கர மனிதனாக வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் !

நீதிபதி ·பிளிப்: குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் அவற்றைப் பேசினேன் என்பது உண்மை. ஆனால் நான் அவற்றில் ஈடுபட வில்லை. நாட்டுக்காகப் போரிட்டவன் நான் ! நாட்டை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை நான் ! கடவுளை மதிப்பவன் நான் ! அதன் மீது நம்பிக்கை கொண்டவன் நான் ! கடவுளை அவமதிப்பவன் நான் அல்லன் !

சைரஸ்: புகை உள்ள இடத்தில் தீ இருக்கும் ! கடவுளை மதிப்பவன்தான் ஏதென்ஸின் நாட்டுத் தெய்வங்களை அவமதிக்கிறான்.

சாக்ரடிஸ்: ஆமாம் புகை எங்கிருக்கிறதோ அங்கு தீ இருக்கும் ! உலகத்தின் உன்னத ஞானி என்று புகழப் பட்டவன் இப்போது மூடனாய் இகழப் படுகிறான். ஆனிடஸ் ! தெய்வ அவமதிப்பு என்றால் என்ன என்று விளக்குவாயா ?

ஆனிடஸ்: நான் விளக்க மாட்டேன் ! உமக்கு விளக்க மறுக்கிறேன் !

சாக்ரடிஸ்: ஏன் மறுக்கிறாய் ?

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உன்னை நான் நன்றாக அறிவேன் ! நீ சாமர்த்தியசாலி ! நான் சொல்வதை மடக்கி என் மீதே அதைக் கணையாக ஏவி விடுவாய் நீ ! உன்னிடம் மன்றத்தில் வாதாடினால் நான் தோற்று விடுவேன் ! எனக்குப் புரிந்ததைப் புரியாமல் செய்து விடுவாய் ! பிறகு மன்றத்தார் என்னை பரிதாபமாகப் பார்ப்பார் !

சாக்ரடீஸ்: நீ என்ன பேசுகிறாய் என்று உனக்குத் தெரியாதா ?

ஆனிடஸ்: எனக்குத் தெரியும் நான் பேசுவது. அதுபோல் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் உன்னைத் தவிர !

சாக்ரடிஸ்: வேடிக்கையான குற்றச் சாட்டு ! தெய்வ அவமதிப்பு என்று குற்றம் சாட்டி விட்டு எதிர்வாதிக்கு அது என்ன வென்று சொல்லத் தெரியவில்லை.

லைகான்: சாக்ரடிஸ் ! உனக்குத் தெரியும் ! நீ எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுபவன்.

டிரிப்தோலிமஸ்: நானும்தான் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்.

சாக்ரடிஸ்: நீ ஒரு வர்த்தகன் ! செல்வம் திரட்டும் வியாபாரி ! உன் உதடுகள் பணக் கடவுளை வழிபடும் ! நீ கடவுளை நினைப்பதன் காரணம் வேறு. நான் கடவுளை நினைப்பதின் காரணம் வேறு. பணத்தைக் குறி வைத்துத் தேடும் நீதான் கடவுளை அவமதிக்கிறாய் ! குணத்தைக் குறிவைத்து நான் கடவுளை நினைக்கிறேன். அது நான் வைத்துள்ள பேரருள் மதிப்பு.

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உண்மையைச் சொல். நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை வழிபடுவதில்லை ! பதிலாக இழிவு படுத்தினீர் ! இல்லையா ? தெய்வ அவமதிப்பு என்றால் ஏதென்ஸ் மக்கள் வணங்கும் தெய்வங்களை நீ முழுக்க முழுக்க நம்பாதது !

சாக்ரடிஸ்: ஏதென்ஸில் அநேக தெய்வங்கள் உள்ளன ! அவற்றில் எந்த தெய்வங்களைக் குறிப்பிடுகிறீர் ?

ஆனிடஸ்: ஏதென்ஸின் உள் நாட்டுத் தெய்வங்கள். வெளிநாட்டுத் தெய்வங்கள் அல்ல.

சாக்ரடிஸ்: உள்நாட்டுத் தெய்வங்கள் எவை ? வெளிநாட்டுத் தெய்வங்களை எனக்குத் தெரியாது.

ஆனிடஸ்: ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தெய்வ நம்பிக்கை உள்ளது !

சாக்ரடிஸ்: உதாரணமாக நான் கேட்கிறேன், எகிப்தியர் நமது தெய்வங்களை நம்புகிறாரா ?

ஆனிடஸ்: இல்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: எகிப்தியர் தெய்வங்கள் நமது தெய்வங்களை விட உயர்ந்தவையா ? அல்லது தாழ்ந்தவையா ? ஆழ்ந்து சிந்தித்த பிறகு பதில் சொல் ஆனிடஸ் !

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது விசாரணை என் மீதா ? அல்லது சாக்ரடீஸ் மீதா ? கேள்விகள் என் மீது ஏன் வீசப் படுகின்றன ? என்னை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் பிரபு ! இந்தக் கிழவர் என்னை மடக்கிப் போடச் சுற்றி வளைத்து வருகிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் இரண்டு வேலை செய்கிறேன். ஒரு புறம் குற்றம் சுமத்தப் பட்டவன் ! மறுபுறம் குற்றவாளிக்காக வாதாடுபவன். என் தரப்பில் நான்தான் எதிராளியைக் கேள்வி கேட்க முடியும் ! சொல் ஆனிடஸ் ! ஏதென்ஸ் உள்நாட்டுத் தெய்வங்களை நான் நம்பா விட்டால் அது தெய்வ அவமதிப்பா ?

லைகான்: பாருங்கள் சாக்ரடிஸே குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ! உள்நாட்டுத் தெய்வங்களைத்தான் நம்ப வில்லை என்பதை அவரே அறிவிக்கிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் எதையும் ஒப்புக் கொள்ள வில்லை. லைகான் ! இதை மட்டும் நான் ஒப்புக் கொள்கிறேன் : ஒன்று எல்லாக் கடவுள்களும் உலகில் பொதுவானவை. நாம் உலகக் கடவுள்கள் அனைத்தையும் நம்ப வேண்டும். உள்நாட்டுக் கடவுளோ வெளி நாட்டுக் கடவுளோ எல்லாம் உலகக் கடவுள்கள்தான். ஏதென்ஸ் கடவுள்களும் அவற்றில் அடங்கும். இதை நம்பும் நான் தெய்வ இகழ்வாளியா ? ஏதென்ஸ் தெய்வங்களை மட்டும் நம்பாமல் உலகில் எல்லா தெய்வங்களையும் நம்பும் நான் ஒரு தெய்வ அவமதிப்பாளனா ?

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 14, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates Trial in the Open
Forum of Athens

“நான் ஏதென்ஸ் நகரத்து மனித அல்லன். கிரேக்க நாட்டுப் பிறவி அல்லன் உலகத்தின் ஒரு குடிமகன் நான்.”

“நினைவில் வைப்பீர் : எதைச் செய்வது தகுதியற்றதோ அதை வாயால் சொல்வதும் தகுதியற்றது.”

“இந்த உலகத்தில் நேர்மை நெறியுடன் வாழும் உறுதியான குறுகிய பாதைதான் மெய்யானது. ஒழுக்க நெறிகளை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பேரளவில் நமக்கு வல்லமை அளிக்கும்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -1

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

முதல் காவலன்: எழுந்து நிற்பீர். வருகிறார் ! வருகிறார் ! நீதி மன்ற மாஜிஸ்டிரெட்டுகள் வருகிறார். வழியை மறைக்காதீர் !

[·பிளிப் (Philip), ஸைரஸ் (Cyrus), டிரிப்டாலிமஸ் (Triptolemus) மூன்று மாஜிஸ்டிரேட்டுகள் நுழைகிறார். அவரவர் ஆசனத்தில் அமர்கிறார். அவையோர் மூவரையும் கைதட்டி வரவேற்கிறார்.]

·பிளிப்: (மேஜையைத் தட்டி) அமைதி ! அமைதி ! நீதி மன்றம் துவங்குகிறது. கொண்டு வாரீர் குற்றவாளியை ! குற்றம் சாட்டியோர் இங்குள்ளாரா ?

லைகான், மெலிடஸ், ஆனிடஸ்: (மூவரும் எழுந்து) ஆமாம் மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே !

(சாக்ரடீஸை இரண்டு காவலர் சங்கிலில் இழுத்து வருகிறார்)

·பிளிப்: (காவலரைப் பார்த்து) கைச் சங்கிலி கால் சங்கிலியை அகற்றுவீர் !

(சாக்ரடிஸ் சங்கிலியை அவிழ்த்ததும் பீடத்தில் ஏறி நிற்கிறார். )

மெலிடஸ்: (சட்டென எழுந்து) கால் சங்கிலியை நீக்காதீர் ! கிழவர் ஓடி விடுவார் ! அவரைக் கண்டுபிடிக்கவே ஏழு நாட்கள் ஆகி விட்டனளெமக்கு ?

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் பருத்த உடம்பைப் பாருங்கள் ! என்னால் ஓட முடியாது. என்னால் நடக்கத்தான் முடியும். நான் தப்பி ஓடி ஏதென்ஸில் எங்கே ஒளிவது ?

மெலிடஸ்: நீவீர் ஓடா விட்டாலும் உமது தோழர் உம்மைத் தூக்கிச் சென்று ஒளித்து வைப்பார்.

·பிளிப்: மெலிடஸ் ! கூறுவாய் ! சாக்ரடிஸ் செய்த குற்றங்கள் என்ன ?

மெலிடஸ்: ஏதென்ஸ் வாலிபர் கெடுப்பு ! தெய்வத் துவேசம் ! தேசத் துரோகம் !

·பிலிப்: சாக்ரடிஸ் ! இந்த மூன்று குற்றங்களை நீவீர் ஒப்புக் கொள்கிறீரா ?

சாக்ரடிஸ்: எப்படி ஒப்புக் கொள்வது எனக்குப் புரியாத போது ? என் மீது சாட்டிய குற்றங்கள் என்ன என்பது புரிய வில்லை கனம் நீதிபதி அவர்களே ! குற்றம் சாட்டியவர் ஒவ்வொன்றாய் எனக்கு விளக்க வேண்டும் ! நான் அறிவில்லாதவன் ! ஆனால் அறிவைத் தேடுபவன் ! இந்த அறிவில்லாதவனுக்கு அறிவாளிகள் அறிவைப் புகட்ட வேண்டும் !

·பிலிப்: சாக்ரடிஸ் ! எங்கே உமது வழக்கறிஞர் ? உமது சார்பில் வாதாட வழக்கறிஞர் இல்லையா ?

சாக்ரடிஸ்: இல்லை, எனக்கு வழக்கறிஞர் இல்லை ! நான் ஏழை கனம் நீதிபதி அவர்களே ! என்னை நான்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் !

மெலிடஸ்: முதலில் பெரிய குற்றம் : ஏதென்ஸ் நகர வாலிபரைக் கவர்ந்தது கெடுத்தது !

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் தோற்றத்தைப் பாருங்கள் ! என் பூத வடிவம் யாரையாவது கவர முடியுமா ? ஏதென்ஸ் நகர வாலிபர் என்னைத் தேடி வருகிறார் ! என்னிடம் கேள்வி கேட்கிறார் ! பதில் தெரியாமல் நான் அவருக்கு வினாக்களைத் தொடுக்கிறேன். அவர் தரும் விடைகளே எனக்கு அறிவைக் கொடுக்கிறது. நானவரைக் கெடுத்தேன் என்பதற்குச் சான்றுகள் கொடுப்பீரா ? எனக்கு அறிவைப் புகட்டியவர் ஏதென்ஸ் வாலிபர் !

மெலிடஸ்: இந்தக் கிழவர் இப்படித்தான் குற்றத்தைக் கூடக் குணப்பாடு போல் மாற்றுவார் ! உண்மையத் திரிப்பார் ! இவர் சொல்வது புளுகு !

சாக்ரடிஸ்: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா ? புள்ளி விபரம் உண்டா ?

·பிளிப்: மெலிடஸ் ! சாக்ரடிஸ் யார் யாரைக் கெடுத்தார் ? எத்தனை பேரைக் கெடுத்தார் ? எப்போது கெடுத்தார் ? இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா ?

மெலிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இப்போது அந்தப் பெயர் நிரல் என் கைவசம் இல்லை ! என் வீட்டில் மறந்து வைத்து விட்டேன் ! கொண்டு வரவில்லை. மன்னிக்க வேண்டும் என்னை.

·பிளிப்: ஆதாரமில்லாமல் முதல் குற்றம் நீக்கப் படலாமா ?

மெலிடஸ்: நான் அடுத்த வழக்காடல் தினத்தில் கொண்டு வருகிறேன்.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 30, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“உனக்குச் சினமூட்டுவதை நீ பிறருக்கு உண்டு பண்ணாதே.”

“உன் நேசத்தை செம்மையான உணர்ச்சி அடையாளங்களுடன் காட்டிக் கொள்ளாது வெறும் பாராட்டுதல்களை மட்டும் தெரிவித்து நீ உன் நண்பனைத் தேர்ந்து கொள்ளாதே !”

“உண்டும், குடித்து வருவதற்கு மட்டும் வசித்து வருவோர் வாழத் தகுதி இல்லாதவர் ! உயிர் வாழ்வதற்கு உண்டும், குடித்தும் வருவோர் வாழத் தகுதி பெற்றவர்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

Fig. 1
Socrates & Daemon

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -12

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் ஆகாத்தான் இல்லத்தில் நுழைந்து சாக்ரடிஸைத் தேடுகிறார் ! நண்பர் எல்லோரும் மறைந்து கொள்ள சாக்ரடிஸ் மட்டும் தைரியமாகத் தனியாக வந்து காவலரோடு உரையாடுகிறார். திடீரென்று குற்றம் சாட்டிய ஆனிடஸ் நுழைந்ததும் காட்சி மாறுகிறது.

(முன்பாகத் தொடர்ச்சி)

சாக்ரடிஸ்: ஏதென்ஸ் நகர மாந்தர் சோம்பேறிகள். விழாவில் பங்கெடுக்க பழைய பசு மாட்டுக்கு அலங்காரம் பண்ணிப் படுக்க வைத்தது போல் ஏதென்ஸ் நகரம் தெரிகிறது. பால் காம்புகள் (Teat) தெறிப்பதற்கு முன்பு பசுவை விரட்டி ஓட்ட வேண்டும். அதை விரட்ட வேண்டுமானால் அதன் மீது அமர்ந்துள்ள மாட்டு ஈயைக் (Gadfly) கொல்ல வேண்டும். ஏதென்ஸ் நகரின் மாட்டு ஈ சாக்ரடிஸ் ! மாட்டு ஈயிக்கு அது பிடிக்க வில்லை. பசு மாடு தன் வாலால் ஈயைத் துரத்தப் பார்க்கிறது. அந்த மாட்டு வால்தான் நீங்கள் ! மாட்டு ஈயை விரட்ட வந்தவர்கள்தான் நீங்கள்.

முதல் காவலன்: அப்படியா ? பசு மாட்டின் எந்த உறுப்பைச் சேர்ந்தவர் நீங்கள் ?

சாக்ரடிஸ்: நான் பசு மாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவன் அல்லன். நான்தான் அந்த மாட்டு ஈ !

இரண்டாம் காவலன்: என்ன ? என்ன சொல்கிறீர் ? நீர்தான் சாக்ரடிஸா ? உலகத்திலே மிக உன்னத அறிவாளியா ? பார்த்தாலும் தெரியவில்லை ! பேசினாலும் தெரிய வில்லை !

சாக்ரடிஸ்: அப்படித் தேவ தூதர்தான் தீர்ப்பு அளித்திருக்கிறார். நான் அறிவைக் கற்றுக் கொள்ளும் இளைஞன் !

முதல் காவலன்: கிழவர் உம் கண்ணுக்கு இளைஞராகத் தெரிகிறாரா ? வேடிக்கையாகப் பேசுகிறீர் ! உமது காலில் செருப்புக் கூட இல்லையே !

சாக்ரடிஸ்: என்னைப் போன்ற பயங்கர மனிதனுக்குக் பையில் காசில்லை !

இரண்டாம் காவலன்: உயிர்த் தோழர் எல்லாம் உம்மை விட்டோடி விட்டாரா ? மதுக் கிண்ணங்கள் எல்லாம் நிரம்பி யுள்ளன ! அதைக் குடிக்க மனிதர்கள்தான் இல்லை.

சாக்ரடிஸ்: நான்தான் தோழர்களை விட்டு விட்டு சுதந்திரமாய் வந்திருக்கிறேன். அவரெல்லாம் சற்றுக் குடிபோதையில் கிடந்தது எனக்கு வசதியாகப் போயிற்று !

முதல் காவலன்: அப்படியானால் யார் சாக்ரடிஸ் ? நீரா அல்லது வேறொருவரா ?

சாக்ரடிஸ்: நான் யாரென்று அறிந்து கொள்ள முயல்கிறேன் ! மற்றவர் என்னை சாக்ரடிஸாக நினைக்கிறார் !

இரண்டாம் காவலன்: நீர்தான் சாக்ரடிஸ் என்பதை நாங்கள் எப்படி நம்புவது ? நிரூபித்துக் காட்டுவீரா எமக்கு ! உண்மையான சாக்ரடிஸ் நீர் என்றால் எங்கள் முன்பு இப்படிப் பயமில்லாமல் உரையாட மாட்டீர் ! நீவீர் எம்மை ஏமாற்ற முற்படுகிறீர் ! நாங்கள் அவரைக் கண்டுபிடிக்கத்தான் இங்கு வந்திருக்கிறோம்.

சாக்ரடிஸ்: நான் நியாயத்துக்கு அஞ்சாதவன் ! என் தோழரை விட்டுவிட்டு நான் உங்களிடம் சரணடைய வந்திருக்கிறேன் !

முதல் காவலன்: நீர் சாக்ரடிஸ் இல்லை. நாங்கள் தேடிச் செல்லும் சாக்ரடிஸ் ஓடிக் கொண்டிருக்கிறார் ! எங்களிடம் சரணடையும் சாக்ரடிஸ் முதலில் ஏன் தலைமறைவாய் ஒளிந்து கொண்டிருந்தார் ?

சாக்ரடிஸ்: அவரை ஒளித்து வைத்தது அவரது அன்புத் தோழர்கள் !

இரண்டாம் காவலன்: உங்கள் மூளையைச் சோதிக்க வேண்டும் ! பைத்தியங்களை அடைக்கும் சத்திரத்தில் இருக்க வேண்டியவர் நீவீர் !

சாக்ரடிஸ்: சொல்வதைக் கேட்பீர் ! சிறை செய்யும்படிச் சரண் அடைகிறேன் ! எங்கே உமது காப்டன் ? எனக்கு நீதி மன்ற விசாரணை வேண்டும் ! எனக்கு விசாரணை தேவை ! அதுவே எனது வேண்டுகோள்.

(காப்டன் தோட்டத்திலிருந்து உள்ளே நுழைகிறார்)

முதல் காவலன்: ஈதோ எமது காப்டன். அவரிடம் பேசுவீர் ! யாரென்று தெரியாமல் யாம் உம்மைச் சிறைப்படுத்த முடியாது ! பேரென்ன என்று அறியாது யாரும் உம்மைக் கைது செய்ய மாட்டோம் !

(அப்போது கோபத்துடன் கதவைப் படாரென்று திறந்து கொண்டு ஆனிடஸ் நுழைகிறான்)

ஆனிடஸ்: (சாக்ரடிஸைக் காட்டி) அதோ இருக்கிறார் பிடியுங்கள் ! அவர்தான் சாக்ரடிஸ் ! தப்பிச் செல்ல விடாதீர் ! காப்டன் ! கைது செய்வீர் ! அவர்தான் சாக்ரடிஸ் !

முதல் காவலன்: முதலில் நீ யாரென்று சொல் !

ஆனிடஸ்: என் பெயர் ஆனிடஸ் ! நான் அரசாங்க அதிகாரி ! சாக்ரடிஸைப் பிடித்து என்னிடம் ஒப்புவிக்க உத்தரவு பிறந்துள்ளது ! இந்தக் கிழவன் போடும் வேடங்களை நம்பாதீர் ! அவர் சொல்லும் கதைகளை நம்பாதீர். உடனே கைது செய்வீர் ! ஓடிப் போகும் முன்பு விலங்கிடுவீர் !

இரண்டாம் காவலன்: இந்த முதியவர் ஓடிப் போகாமல் எம்மிடம் சரண் அடைந்தவர் ! இவர் எந்த வேடமும் போடவில்லை.

ஆனிடஸ்: சொல்வதை கேட்பீர் சாக்ரடிஸ் ! உம்மைக் கைது செய்ய எமக்கு அரசாங்க ஆணை உள்ளது ! நாங்கள் உம்மைக் குற்றவாளியாய் நாளை மாஜிஸ்டிரேட் முன்னால் நிறுத்த வேண்டும் !

சாக்ரடிஸ்: நாம் என்றால் யார் யார் இதில் அடக்கம் ?

ஆனிடஸ்: லைகான், மெலிடஸ் மற்றும் நான் ! மூன்று பேர் !

சாக்ரடிஸ்: ஆனிடஸ் ! உன்னை நான் அறிவேன் ! எப்போதும் என் கருத்தை நீ எதிர்ப்பவன் ! என்னை ஏன் கைது செய்ய உத்தரவு வந்துள்ளது ? நான் என்ன தவறு செய்தேன் ?

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் ராஜ துரோகம் செய்தவர் ! மதத் துரோகம் செய்தவர் ! நாட்டுக் கடவுள்களை அவமதித்தவர் ! தனிப்பட்ட கடவுளைத் திணித்தவர் ! வாலிபர் மனதைப் பாழ்படுத்தியவர் ! உமது குற்றங்களுக்கு உம்மை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: நீதி மன்றத்தில் நான் தர்க்க மிடுவேன் ! முடிவில் நீதிபதி தரும் தண்டனையை நான் முழு மனதாய் ஏற்றுக் கொள்வேன் ! என் விதி கடவுளின் கைகளில் உள்ளது.

ஆனிடஸ்: இல்லை சாக்ரடிஸ் ! அதற்கு கால தாமதமாகி விட்டது ! நீவீர் உதவிக்கு விளிக்கும் அந்தக் கடவுள் எங்கேயும் இல்லை ! அவர் உமது மனதில்தான் உள்ளார் ! நீவீர் தப்பி வாழ முடியாது. தோற்றுப் போவீர் ! நாங்கள் ஆறு மாதங்களாய்த் திட்ட மிட்டு வருகிறோம். உமக்கு முடிவு காலம் வந்து விட்டது !

சாக்ரடிஸ்: உங்கள் தீர்ப்பை ஏற்கனவே முடிவு செய்து விட்டீர் !

காப்டன்: குற்றத்தையும், தீர்ப்பையும் சில நிமிடங்களில் சொல்லி விட்டீர் ! சாக்ரடிசுக்குத் தயார் செய்ய அவகாசம் தர வேண்டாமா ?

சாக்ரடிஸ்: எனக்குத் தேவையில்லை காப்டன் ! என் வாழ்வு பூராவும் இதை எதிர்க்கத்தான் நான் என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன்.

ஆனிடஸ்: ஏன் தாமதிக்கிறீர் இன்னும் ? கைது செய்யுங்கள் கிழவரை !

(இரண்டு காவலரும் சாக்ரடிஸை விலங்கிட்டுக் கைது செய்து இழுத்துச் செல்கிறார்)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 23, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates talking to State Guards

“வாழ்வின் குறிக்கோள் முடிவில் கடவுளைப் போல் பூரணத்துவம் அடைவது. கடவுளைப் பின்பற்றிச் செல்லும் ஆத்மா தெய்வத்தைப் போல் இருப்பது.”

“ஆழ்ந்து ஆராய்ந்து வாழாத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

“நன்னெறியைப் பின்பற்றாது வெறுமனே மண்ணில் வாழ்ந்து வருவதால் எந்தப் புண்ணியமும் இல்லை.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -11

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் ஆகாத்தான் இல்லத்தில் நுழைந்து சாக்ரடிஸைத் தேடுகிறார் ! நண்பர் எல்லோரும் மறைந்து கொள்ள சாக்ரடிஸ் மட்டும் தைரியமாகத் தனியாக வந்து காவலரோடு உரையாடுகிறார்.

முதற் காவலன்: சாக்ரடிஸ் ஒரு வேதாந்த ஞானியாம் ! உயர்ந்த ஞானியாம் ! உலக மேதையாம் ! இது உண்மையா ? என்னால் நம்ப முடியவில்லை !

சாக்ரடிஸ்: அப்படி நான் சொல்ல மாட்டேன் ! ஏதென்ஸ் மாஜிஸ்டிரேட் கூறியது ! அவர் ஒரு சாதாரண மனிதர் ! அவருக்கு எதுவும் தெரியாது. பிறரிடம் கேட்டுத்தான் அவர் உலகைப் பற்றி அறிந்து கொள்கிறார்.

இரண்டாம் காவலன்: மாஜிஸ்டிரேட்டுக்கு எப்படித் தெரியும் சாக்ரடிஸ் உலக ஞானி என்று ?

சாக்ரடிஸ்: தேவதூதர் (Oracles) தீர்ப்பில் அவ்விதம் சொல்லியிருக்கிறார்.

முதற் காவலன்: உமது தீர்ப்பென்ன ? அவர் செய்தவை தவறா ? அவரைத் தண்டிக்க வேண்டுமா ?

சாக்ரடிஸ்: எதுவும் அறியாத மனிதர் அவர் ! சொந்த அறிவு சுத்தமாகக் கிடையாது. பிறர் வாயைக் கிண்டி விட்டு தனக்கேற்ற கருத்தைப் பற்றிக் கொள்கிறார். உண்மை ஞானம் என்பது ஒளிச்சுடர் வீசும் சூரியனைப் போன்றது. ஆனால் மக்கள் நரிகளைப் போல் அடித்தளக் குகைக்குள்ளே வசித்து வருகிறார் !

இரண்டாம் காவலன்: இரவு, பகல் ஏழு நாட்களிலுமா ?

சாக்ரடிஸ்: ஆமாம் எல்லா நேரத்திலும் அங்குதான் வசிக்கிறார். அதை விட்டு வெளியே அவர் வருவதில்லை ! அங்கேதான் அவர் எல்லாம் பிறந்தார் ! அங்கேதான் அவர் எல்லாம் இறப்பார் !

முதல் காவலன்: இது மிருக வாழ்க்கை விடக் கேவலமானது ! விலங்குகள் கூட வெளியேறி உணவு தேட வேட்டையாடச் செல்லும் !

சாக்ரடிஸ்: அது மட்டுமில்லை ! கேள் ! குகையை விட்டு வெளியேற அவருக்கு விடுதலை கிடையாது ! கனமான இரும்புச் சங்கிலியில் அவர் நகர முடியாதபடிக் கட்டப் பட்டிருக்கிறார். இப்போது அந்தக் குகையில் இருட்டாகப் போகிறது ! கணப்பு அடுப்பில் தெரியும் ஒரு மின்மினித் தீயைத் தவிர வேறு வெளிச்சம் கிடையாது அங்கே.

முதற் காவலன்: யாரும் நகர இயலாத குகையில் யார் கணப்பு அடுப்பைக் கண்காணிப்பது ?

சாக்ரடிஸ்: அது ஒரு மாயத் தீ ! யாரும் தீயைப் பார்க்க முடியாது. அவரும் சங்கிலிப் பிணைப்பில் நகர முடியவதில்லை. அவர் காண்ப தெல்லாம் தீயொளியால் சுவரில் விழும் வெறும் நிழல்கள் ! அவரது சிந்தனையில் விளைந்த திரிபான பொருட்கள் ! ஆனால் திரும்பி நோக்கினால் உண்மையான பொருட்களைக் காண முடியும் ! குகைவாசிகள் நிழல்களைப் பார்த்துதான் மூலப் பொருட்களை அறிந்து கொள்கிறார் !

இரண்டாம் காவலன்: நீவீர் சொல்வது புரிந்தும் புரியாமல் இருக்கிறது ! எதற்காகக் குகைவாசிகளைப் பற்றி எம்மிடம் பேசுகிறீர் ? அவர்களைச் சங்கிலில் பிணைத்தது யார் ? அவர் ஏன் அடங்கி முடங்கிக் கிடக்கிறார் ?

சாக்ரடிஸ்: ஒருநாள் அவர்களில் ஒருவன் விலங்கை அறுத்து விட்டு வெளியேறுவான் ! பலநாள் பயணம் செய்து புதுக் காற்றைச் சுவாசித்து ஒளிமயமான பகலவனைக் காண்பான் ! அப்போது வெறும் நிழலை மட்டும் கண்ட விடுதலை மனிதன் நிஜ வடித்தைக் காண்பான் ! ஒளிமயத்தைக் கண்டவன் மீண்டும் அந்த மின்மினி வெளிச்சக் குகைக்குப் போனால் என்ன காண்பான் தெரியுமா ?

முதல் காவலன்: யார் அப்படி மூடத்தனமாக மீண்டும் அந்த குகைக்குப் போவான் ?

சாக்ரடிஸ்: வெளியே தான் கண்ட ஒளிமயத்தையும், சுவாசித்த புதிய காற்றையும் நண்பருக்குச் சொல்லப் போகலாம் அல்லவா ? ஆனால் தான் புதியாகக் கண்டவற்றைக் கூறினால் நண்பர் முதலில் நம்ப மாட்டார். தமது காதை மூடிக் கொள்வார் ! அவனை அறிஞன் என்றா கூறுவர் ? பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடுவார் ! யானை வயிற்றுக்குள்ளே இருந்து கொண்டு ஒருவன் யானையை எப்படிக் காண முடியும் ? அதுபோல் பிரபஞ்சத்தில் வசித்துக் கொண்டு ஒருவன் கடவுளைக் காண முடியாது ! ஒளிமயத்தைக் கண்டவன்தான் உண்மையை அறிந்தவன் ! அவன்தான் வேதாந்தி !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 8, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates & His Friends at
Agathon’s Home
(Last Supper)

“எல்லோருடைய இழப்புகளையும் அவப்பேறுகளையும் (Misfortunes) ஒன்றாகக் குவித்து ஒவ்வொருவரும் சமப்பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினால் பெரும்பாலோர் தமது சொந்தப் பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வர்.”

“செம்மையான முறையில் தம்மை வேதாந்தச் சிந்தனைகளில் ஈடுபடுத்துவோர் நேரடியாக மரணத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்கிறார் என்பதைச் சாதாரண மக்கள் உணர மாட்டார்.”

“கவிஞர்கள் கடவுளைப் பற்றி ஆழ்ந்த விளக்கங்கள் கொடுப்பவர்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -10

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் வாசலில் வந்து நிற்கிறார் !

அல்சிபியாடஸ்: (ஆச்சரியமாக) இராணுவ விருந்தாளிகள் வந்திருக்கிறாரா ? சாக்ரடிஸைப் பிடித்துப் போக வந்திருக்கிறாரா ?

கிரிடோ: இப்போது பேச நேரமில்லை ! ஆகாத்தான் ! கதவைத் திறக்கச் சிறிது நேரம் தாமதம் செய் ! நாங்கள் போன பிறகு இராணுவக் காவலரை வரவேற்பாய் ! வாருங்கள் சாக்ரடிஸ் ! இந்த அங்கியால் மூடிக் கொள்வீர். துணியில் முகத்தை மறைத்துக் கொள்வீர்.

அல்சிபியாடஸ்: என்ன திட்டம் ? நாமெல்லாம் வெளியே போகிறோமா ?

·பாய்தோ: ஆமாம் தோழரே !

அரிஸ்டோதானிஸ்: (அதிர்ச்சியுடன்) இரும்பு இராணுவத் தொப்பிகள் தோட்டத்தின் நிலா வெளிச்சத்தில் உலாவி வருவதைப் பார்த்தேன்.

சாக்ரடிஸ்: (அமைதியாக) ‘ஓடிப் போகாதே’ என்று என் உள்ளிதயம் எச்சரிக்கை செய்கிறது.

அரிஸ்டோதானிஸ்: இராணுக் காவலர் உம்மைப் பிடித்துச் செல்வதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். எங்கள் உள்ளிதயம் அப்படி எச்சரிக்கை செய்கிறது சாக்ரடிஸ் !

ஆகாத்தான்: முதலில் உம்மைக் காப்பது எம் பொறுப்பு. இராணுவக் காவலர் தோட்டத்தின் வழியாக நுழைவார். நாம் பலகணி வழியே குதித்து அவர் கண்ணில் படாமல் ஓடிவிடலாம்.

சாக்ரடிஸ்: நான் பலகணி வழியாக ஏறிக் குதித்தால் என் காலை முறித்துக் கொள்வேன்.

ஆகாத்தான்: உம்மைப் பாதுகாப்பாய் நாங்கள் பலகணி வழியே இறக்கி விடுவோம். சாக்ரடிஸ் ! கவலைப் படாதீர். (ஆகாத்தானும், அரிஸ்டோ·பானிசும் சாக்ரடிஸை பலகணி வழியே இறக்கிச் செல்கிறார். மீண்டும் பலமாய்க் கதவு தட்டும் அரவம் கேட்கிறது).

கிரிடோ: யார் கதவைத் தட்டுவது ? அதுவும் நடுநிசியில் !

வெளியே இருந்து குரல்: நான் ஸார்ஜென்ட் ! இராணுவக் காவல்துறை அதிகாரி !

(கிரிடோ கதவைத் திறந்ததும் நான்கு காவல்துறை அதிகாரிகள் வாளேந்தி நிற்கிறார். உள்ளே நுழைந்து நாற்புறமும் நோக்குகிறார். இருவர் அறை அறையாய்ப் போய்த் தேடுகிறார்)

முதல் காவலன்: (மதுக் கிண்ணங்களைப் பார்த்து) பலர் இருந்தது தெரிகிறது ! சமீபத்தில்தான் நழுவிச் சென்றிருக்கிறார் ! பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் ! மதுக் கிண்ணங்கள் நிரப்பப் பட்டுள்ளன ! ஒரு வாய் கூட அருந்தாமலே ஓடி இருக்கிறார் ! (ஒரு மதுக் கிண்ணத்தை எடுத்து மடமடவெனக் குடிக்கிறான்). மதுபானம் சுவையாக இருக்கிறது ! (அடுத்து ஒன்றை எடுத்துக் குடிக்கிறான்)

இரண்டாம் காவலன்: அந்த ஆரஞ்சுப் பழத்தை எடு ! வயிறு காலியாக உள்ளது ! எட்டு மணிநேரம் தேடி யிருக்கிறோம். அந்த சாக்ரடிஸைப் பிடிக்க முடிய வில்லை ! (முதல் காவலனைப் பார்த்து) சாக்ரடிஸ் எப்படி இருப்பார் ? அவர் வாலிபரா ? அல்லது வயோதிகரா ? தாடி வைத்திருப்பாரா ? தலை வழுக்கையா ? குட்டையா அல்லது அவர் நெட்டையா ?

(இவர்களைக் காணாது சாக்ரடிஸ் தோட்டத்தின் மறைவிலிருந்து வெளியே வருகிறார்)

முதல் காவலன்: (சாக்ரடிஸைப் பார்த்து) இதோ இந்தக் கிழவரைக் கேட்போம் ! ஐயா ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? எங்கே ஒளிந்திருக்கார் ? நாங்கள் அவருடன் பேச வேண்டும் !

சாக்ரடிஸ்: யார் நீங்கள் ? எதற்காக இங்கே வந்தீர் ? ஏன் ஆயுதம் ஏந்தி நிற்கிறீர் ?

இரண்டாம் காவலன்: ஓர் பெரிய பயங்கரவாதியைப் பிடிக்க வந்திருக்கிறோம் ! பெயர் சாக்ரடிஸ் ! போர்த் தளபதியாக அவர் ஏதென்ஸில் போர் புரிந்தவர் என்று கேள்விப் பட்டோம் !

சாக்ரடிஸ்: ஏனப்பா சாக்ரடிஸை நீவீர் தேடுகிறீர் ?

முதல் காவலன்: அவர் ஒரு பெரிய பயங்கரவாதி ! அவர் மீது பல குற்றங்கள் சாட்டப் பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம் ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? உடனே சொல் ! அடையாளம் சொல்வீரா எமக்கு ? தேடித் தேடி நாங்கள் கால் ஒடிந்து களைத்துப் போனோம் !

சாக்ரடிஸ்: ஏன் அவரைப் பயங்கரவாதியாகப் பழி சுமத்துகிறீர் ? அவரை யாரைப் பயமுறுத்துகிறார் ? உங்களை அனுப்பியது யார் ?

இரண்டாம் காவலன்: அதையெல்லாம் சொல்ல மாட்டோம் ! ஏதென்ஸ் நகரத்தில் வாழும் அப்பாவித் தகப்பனார்களை அவர் பயமுறுத்துகிறார் ! அவரது வாலிபப் புதல்வரை எல்லாம் வசீகரப் படுத்தித் தனது சீடராக இழுத்துக் கொண்டார் ! அவரது இளம் மனதைப் பாழ்படுத்திப் பெற்றோருக்குப் பகைவராய் ஆக்கி விட்டார் ! ஏதென்ஸ் தெய்வங்களை அவர் ஏற்று கொள்ளாமல் தனது இச்சைத் தெய்வத்தை மக்களிடம் புகுத்துகிறார் ! அவர் உலக ஞானியாம் ! எங்கள் ஏதென்ஸ் ஞானிக்கும் மேலான உலக ஞானி இங்கு வசிக்கக் கூடாது !

சாக்ரடிஸ்: அவரால் ஏதென்ஸ் அரசுக்கு என்ன தீங்கு நேர்ந்தது சொல் ! அந்த வயோதிகர் எந்த வாலிபரையும் இழுத்துக் கொண்டு போக வில்லை ! வாலிபரே வயோதிகரிடம் வருகிறார் தமது ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள ! தகப்பனார் தீர்க்காத வினாக்களுக்கு விடை தேட அவரை அண்டுகிறார்.

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“மரணமே மனித இனத்தின் அதி உன்னத ஆசீர்வாதம்.”

“நட்பில் தடம் வைக்கும் போது மெதுவாக நடந்து செல் ! நண்பராய் ஆகிய பிறகு உறுதியாக நட்பைத் தொடர்ந்து நிலைத்திரு !”

“மனிதனை ஈர்க்கும் அழகுத்துவம் (Beauty) தன்னினத்தை மகிழ்வோடு பெருக்கும் ஒரு தூண்டில்.”

“பிறருடைய எழுத்துப் படைப்புகளைப் படித்து உன்னைச் செம்மைப் படுத்த நேரத்தைச் செலவழி. அதனால் மற்றவர் மெய்வருந்திக் கற்றவற்றை நீ எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.”

சாக்ரெடிஸ்

******************************

Fig. 1
Socrates – A Life Examined

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -9

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். பொழுது போக்க ஒரு வாத்திய குழுவினரை ஏற்பாடு செய்துள்ளார் ஆகாத்தான்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். உரை நிகழ்த்தி ஒருரை ஒருவர் பாராட்டிப் பூச்சரத்தைத் தலையில் வேடிக்கையாக அணிவிக்கிறார்.

கிரிடோ: இந்த நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டுவது கேட்கிறது. எல்லா விளக்குகளையும் அணைத்து விடுங்கள் ! தோட்டத்தில் நடமாடும் உருவங்கள் தெரிகின்றன.

(வீட்டு விளக்குகள் அணைக்கப் படுகின்றன. ஆகாத்தான் கதவைத் திறக்கப் போக்கிறார்.)

கிரிடோ: சாக்ரடிஸை ஒழித்து வைப்போம் ! கையில் ஆயுதம் எடுத்துச் செல் ஆகாத்தான் !

சாக்ரடிஸ்: நான் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை ! போருக்குத்தான் ஆயுதங்கள் தேவை ! இங்கென்ன யுத்தமா நடக்கிறது ? ஆயினும் நம்மை ஆயுதங்கள் பாதுகாக்க மாட்டா !

கிரிடோ: ஆனிடஸ் ! ஜன்னல் வழியே எட்டிப் பார் ! தோட்டத்தில் உலவுவது யாரென்று ஒளிந்து பார் ! சாக்ரடிஸை சைப்பிரஸ் பூங்காவில் மறைத்து வைப்போம் !

ஆனிடஸ்: ஜன்னல் வழியே பார்த்தால் ஒரே ஒர் உருவம் மங்கலாகத் தெரிகிறது. ஆயுதம் கையில் இருப்பது தற்காப்புக்கு !

சாக்ரடிஸ்: பகைவருக்கு நாம் அஞ்ச வேண்டுமா ? பகைவர் நமக்கல்லவா அஞ்சுகிறார் !

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உமக்காக அவருக்கு அஞ்சுகிறோம் !

சாக்ரடிஸ்: எனக்கு சிறிதும் அச்சமில்லை ! என்னைப் பிடித்து என்னை மாற்றப் போகிறாரா ?

ஆனிடஸ்: உம்மை இந்த உலகிலிருந்து மேல் உலகுக்கு அனுப்பப் போகிறார் சாக்ரடிஸ் ! அதை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஆகாத்தான்: (கதவை திறக்கிறார். ஆச்சரியம் அடைகிறார்) வேறு யாருமில்லை ! நம் தோழர் அல்சிபியாடஸ்தான் ! வா உள்ளே வா ! பகைவர் என்று நாங்கள் யாவரும் பயந்து போய் விட்டோம் ! இந்த நட்ட நடுநிசியில் எந்த துட்டன் வருவான் இங்கே ?

சாக்ரடிஸ்: பகைவரில்லை என்று நான் ஒருவன்தான் நம்பினேன் ! பகைவர் நமக்கில்லை ! பயமும் நமக்கில்லை !

அல்சிபயாடஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! பகைவர் உம்மைச் சிறைப் படுத்தத் தேடுகிறார் ! நான் என் கண்ணாலே அவரைப் பார்த்தேன் ! இங்கும் தேடிக் கொண்டு வரலாம் ! நீங்கள் முகம் காட்டாது மறைந்திருப்பதே நல்லது !

(ஆகாத்தான் ஒயினைக் கிண்ணத்தில் ஊற்றி அல்சிபிடசுக்குத் தருகிறான்)

ஆகாத்தான்: முதலில் உன் தாகத்தைத் தணித்துக் கொள் அல்சிபயாடஸ் !

அல்சிபயாடஸ்: என் தாகம் தீராது ஆகாத்தான் ! படைவீரர் சாக்ரடிஸைத் தேடிக் கொண்டிருக்கிறார் ! இதுவே சாக்ரடிசுடன் நான் அருந்தும் கடைசி மதுபானம் ! (கடகடவென ஒரே மூச்சில் குடிக்கிறான் ஒயினை)

ஆனிடஸ்: கடைசி மதுபானக் குடிப்பு என்று ஏன் சொல்கிறாய் ?

அல்சிபயாடஸ்: (மெதுவாகக் கவலையோடு) வரும் வழியில் தேடும் படையினரைக் கண்டேன் ! அவரை சந்தித்துப் பேசினேன் ! சாக்ரடிஸ் எப்படி இருப்பார் என்று என்னிடம் கேட்டார் ! ஆகாத்தான் வீட்டு முகவரியைக் கேட்டார் என்னிடம் ! பாதுகாக்க வந்த உமது பரம நண்பர்கள் ‘பை பை’ சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது சாக்ரடிஸ் ! அவரிடமிருந்து தப்புவது கடினம் ! படையினர் நாலாப் பக்கமும் உளவி வருகிறார் ! அவரது ஒரே வேலை உம்மைக் கைது செய்வது !

ஆனிடஸ்: நீ என்ன பதில் சொன்னாய் ? ஆகாத்தான் வீடு எங்கே உள்ளது என்று சொன்னாயா ? சாக்ரடிஸ் எப்படி இருப்பார் என்று அடையாளம் காட்டினாயா ?

அல்சிபயாடஸ்: சாக்ரடிஸ் என்னுயிர்க் குரு ! நான் காட்டிக் கொடுப்பேனா ? சாக்ரடிஸ் யாரென்று தெரியாது என்று சொல்லி விட்டேன் ! ஆகாத்தான் இல்லம் எங்குள்ளது என்றும் நான் சொல்ல வில்லை ! ஆனால் அவர்கள் கண்டுபிடித்து விடுவார் என்றோர் அச்சம் உள்ளது எனக்கு ! அது அவரது கடமை. சாக்ரடிஸைக் காப்பது நமது கடமை !

கிரிடோ: நாம் ஆகாத்தான் வீட்டிலிருந்து சாக்ரடிஸ் உடனே கடத்துட் செல்ல வேண்டும் !

சாக்ரடிஸ்: நான் இந்தக் கணப்பு அடுப்பு முன்னே குளிர்காய வேண்டும் ! என்னை எங்கே கொண்டுபோய் மறைத்து வைத்தாலும் ஒருநாள் இருப்பிடம் தெரியத்தான் போகிறது ! ஏதென்ஸ் நகரில் ஒளிவதற்கு இடமில்லை எனக்கு ! எத்தனை நாட்கள் இப்படி என்னை ஒளித்து வைப்பீர் ? ஒன்று பகைவர் கையில் அகப்படுவேன். அல்லது மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்வேன் ! கிழவன் ஒருநாள் ஒழியத்தான் போகிறான் !

கிரிடோ: அது ஏதென்ஸ் படையினர் கைகளாக இருக்கக் கூடாது ! கடவுள் எடுத்துக் கொள்ளும் உயிர் வேறு ! இந்தக் கொடுங்கோலர் உயிரைப் பிடுங்குவது வேறு !

(கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது. ஜன்னல் வழியே ஆகாத்தான் எட்டிப் பார்க்கிறார்)

ஆகாத்தான்: (அலறிக்கொண்டு) சாக்ரடிஸைப் பின்வழியே மறைத்துச் செல் கிரிடோ ! இராணுவப் படையினர் வீட்டு வாசலில் நிற்கிறார் ! போ சீக்கிரம் போ ! நீங்கள் போனபின் நான் கதவைத் திறக்கிறேன் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 25, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் -தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸ் சொல்கிறார் : “இருவரது நட்பில் நீண்ட முன்னேற்றம் காணப்படும் போது ஒருவர் காதல் அடுத்த ஓர் ஆத்மாவோடு பிணைத்துக் கொள்வதாய் எண்ணப்படும்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு நகரத்தை ஆளுமை செய்ய விரும்புவோன் ஒருவன், அதன் குடிமக்களுக்கு முதலில் நேர்மை நெறியைக் (Virtue) காட்ட வேண்டும்.”

சாக்ரடிஸ் அல்சிபியாடஸிடம் சொல்கிறார் : ஏதென்ஸ் மாந்தர் உன்னை ஓர் லஞ்ச ஊழலனாய் அழகீனப் படுத்தாதுவரை உன் மீது என் நட்பு நீடித்திருக்கும்.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

Fig. 1
Socrates & His Friends in
Agathon’s Home -1

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -8

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். பொழுது போக்க ஒரு வாத்திய குழுவினரை ஏற்பாடு செய்துள்ளார் ஆகாத்தான்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். உரை நிகழ்த்தி ஒருரை ஒருவர் பாராட்டிப் பூச்சரத்தைத் தலையில் வேடிக்கையாக அணிவிக்கிறார்.

ஒரு தெருப் பாடகனும் அவனது சகாக்களும் ஓரத்தில் நின்று சோக இசையில் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கிறார்.

பாடகச் சிறுவன்: (பாடுகிறான்)

இதயம் எழுகிறது பொங்கி ! மேலே ஏறுகிறேன் நான்
குன்றில் ஓங்கி வளர்ந்த சிகரத்தின் உச்சிக்கு !
பச்சைப் புல் கம்பளத்தில் படுக்க வேண்டும் நான் !
எட்டித் தொடும்படி இருக்குது வானத்தின் கூரை !

காற்றடித்து முகில் கூட்டம் விரைந் தோடுமே !
எதிரே கரை ஒட்டிய கடல் அலைகள் ஆடுமே !
தெளிந்த வெள்ளம் மெதுவாய்க் கரையைத் தழுவுமே !

காற்று அமணமாய் அடிக்கும் என் ஆத்மாவை ஊடுருவி
காலம் நில்லாமல் ஓடுது ! நதியில் நீர் துள்ளி ஓடுது !
வாழ்வும் நகைப்பும் நகர்ந்து மறைவது போல்
காதல் இங்கே என்னை விட்டுவிட்டுப் போகுது !

(ஆகாத்தான் கை அசைக்க வாத்தியக் குழுவினர் இசைப் பாடலை நிறுத்தி வெளியேறுகிறார்)

Fig. 2
Socrates Friends in
Agathon’s Home -2
.

சாக்ரடிஸ்: இசைக் கானத்தின் உன்னதம் நம் இதய சொர்க்கத்தின் எதிரொலிப்பை எழுப்பிடும் ! ஆனால் வாத்தியக் குழு ஏனின்று சோக கானத்தைப் பாடி விட்டுப் போனது ?

ஆகாத்தான்: இனிய கீதத்தைப் பாடத்தான் ஏற்பாடு செய்தேன். சிறுவன் சோக கீதத்தை பாடியது எனக்கும் கோபத்தை உண்டாக்கியது. பாட்டு முடிந்ததும் தொடராமல் நிறுத்தி வெளியே அனுப்பி விட்டேன். குடியை நிறுத்திக் கொள்வோம் ! நமது தலைகள் நேராக நிற்கவேண்டும். கண்கள் தெளிவாகக் காண வேண்டும். நிறையக் குடித்தவர் விழுந்து தூங்கட்டும் ! குறையக் குடித்தவர் சாக்ரடிஸ் பக்கத்தில் கரங்கோர்த்துக் கவசமாய் நிற்க வேண்டும். கழுகுக் கூட்டம் நம்மிடத்தைக் காண முடியாது ! கண்டுவிட்டால் போராடவும் நாம் தயாராக வேண்டும்.

ஆனிடஸ்: குடிப்பீர் தோழரே ! இரவின் குளிரணைப்பில் நம்மை நாமே சூடாக்கிக் கொள்ள வேண்டும். நள்ளிரவில் இங்கு யாரும் நம்மைத் தாக்கப் போவதில்லை. பாதுகாப்பான உமது மாளிகையில்தான் நாம் யாவரும் பதுங்கி இருக்கிறோம். இரவின் மறைவில் காதல் உறவைப் பற்றிப் பேசுவோம். கன்னியர் உடலைத் தீண்டுவது பற்றி பேசுவோம். மதுபானம் நம்மை மயக்கட்டும் ! மங்கையர் விழிகள் நம்மை எரிக்கட்டும் !

சாக்ரடிஸ்: ஆனிடஸ் ! நாமிங்கு ஒளிந்திருப்பது காதல் புரிவதற்கா ? மதுமானம் குடிப்பதற்கா ? இல்லை, மங்கையர் விழிச்சுடர் நம்மை எரிப்பதற்கா ?

ஆகாத்தான் : நாமிங்கு மறைந்திருப்பது உலக ஞானியைக் காப்பாற்றுவதற்கு ! அவர் நீண்ட ஆயுள் பெற்று நெடுங்காலம் ஞானமழை பொழிவதற்கு !

கிரிடோ: ஆனிடஸ் ! குடித்துவிட்டு நீ உளறுகிறாய் ! நாம் தூங்கிப் போய்விடக் கூடாது. நம் எதிரிகள் விழித்திருக்கிறார் ! குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கக் கூடாது. சதிகாரக் கூட்டம் சாக்ரடிஸ் விதியை மாற்றக் காத்துக் கொண்டிருக்கிறது ! இந்த இருட்டு வேளையில் சதிகாரர் எந்த வீட்டுக் கூரையைப் பிளக்கப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. நமது முதுகுக்குப் பின்னால் எந்தக் கத்தி குத்திடக் காத்துள்ளதோ நாம் அறியோம் !

ஆகாத்தான்: அமைதி ! ஏதோ ஓர் அரவம் கேட்கிறது ! காது கொடுத்துக் கேட்க வேண்டும் !

கிரிடோ: யாரோ நமது தோட்டத்தில் நடமாடும் பாதச் சத்தம் கேட்கிறது.

ஆனிடஸ்: வேடிக்கையாகத் தெரிகிறது ! இரவுப் பிராணிகள் உலவுவது மனிதர் நடப்பது போல் கேட்கிறது உனக்கு ! இந்த நடுநிசியில் யார் நம்மைத் தேடி வருகிறார் ?

கிரிடோ: இந்த அமைதி வேளையில் ஏதென்ஸ் மனித நேயத்தை நாடுவோம் ! சதிக்கூட்டம் ஒழியாது ! இன்றில்லா விட்டாலும் நாளை நம்மைத் தொடர்ந்து வரலாம் ! மனித நேயமே தெய்வ நேயம் ! அன்பே தெய்வம் என்பது மெய்தானே !

சாக்ரடிஸ்: உண்மையாகச் சொன்னால் அன்புக் கடவுள் இல்லை !

கிரிடோ: சாக்ரடிஸ் ! என்ன உரை இது ? அன்பே கடவுள் என்பது உண்மை அல்லவா ?

சாக்ரடிஸ்: தெய்வங்கள் பட்டினியாகக் கிடக்குமா ? தெய்வங்களுக்குப் பசி எடுக்குமா ?

கிரிடோ: இல்லை !

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குத் தாகம் உண்டாகுமா ? தெய்வங்கள் தண்ணீர் குடிக்குமா ?

கிரிடோ: இல்லை,

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குச் சோகம் உண்டாகுமா ? துக்கம் ஏற்படுமா ?

கிரிடோ: நிச்சயம் இல்லை !

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குக் களைப்பு ஏற்படுமா ? தெய்வங்கள் இளைப்பாறுமா ?

கிரிடோ: இல்லை ! நீங்கள் குறிப்பிட்டவை அத்தனையும் மனித இன்னல்கள் !

சாக்ரடிஸ்: அப்படியானால் மெய்யாகப் பசி, தாகம், சோகம், துக்கம், மனச்சோர்வு போன்ற எதுவும் தெய்வங்களுக்கு உண்டாகாது. அதுபோலவே விருப்பும், வெறுப்பும், அன்பும், பகையும் ஒற்றுமையும், வேற்றுமையும் தெய்வங்களுக்கு இல்லை !

ஆகாத்தான்: அழிவில்லாத கடவுள் அழிந்து போகும் மானிட இன்னல்களைச் சுவைப்பதில்லை.

சாக்ரடிஸ்: ஆனால் அன்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு.

·பாய்தோ: அப்படிச் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: ஆனாலும் அதுதான் உண்மை ·பாய்தோ ! அன்பின் வேதனைகள் எண்ணில் அடங்கா ! பசிக்கும், தாகத்துக்கும், நமது இச்சைகளுக்கும் தேவைகளுக்கும் எல்லை யில்லை ! முடிவில்லை !

ஆகாத்தான்: சாக்ரடிஸ் ! நீங்கள் குறிப்பிடுவது அற்பத்தனக் காதலரைப் பற்றி ! உன்னத அன்பான மனித நேயத்தைப் பற்றி யில்லை ! அதுதான் தெய்வீக அன்பு !

சாக்ரடிஸ்: நீ சொல்வது ஆத்மீக நேயம் ! ஆத்மா என்பது கடவுள் மனித இனத்துக்கு அளித்த உயிரொளி ! அழகத்துவத்தைத் (Beauty) தேடிச் செல் ! அப்போது நீ அன்புப் பணியைச் செய்வாய் ! அன்பின் முக்கிய வினை ஆக்கம் ! நமது கடமை வானுலகின் மெய்நெறித் திட்டங்களை நாம் பூமியில் நடமிடும் போது நிறைவேற்றுவது ! நமது பிள்ளைகள் நம் உடலின் முடிவின்மையைத் துவக்குகிறார் ! ஆனால் சிந்தனைகளில் நமது ஆத்மா ஓர் அச்சமற்ற முடிவின்மையை விளைவு செய்ய வேண்டும். ஆதலால் மனித நேயமே பரம்பரையாய்ப் படைப்புக் கருவியாகக் கையாளப் படுகிறது.

(அப்போது கதவு தட்டும் அரவம் கேட்கவே அனைவரும் எழுகிறார். சாக்ரடிஸைத் தவிர மற்ற யாவரும் தம் ஆயுதங்களை ஏந்துகிறார். சிலர் சாக்ரடிஸைக் கடத்தி வேறு மறைவிடத்துக்குச் செல்கிறார்)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 19, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates Quotation

சாக்ரடிஸ் சொல்கிறார் : நம்மை மேலாகச் செம்மைப் படுத்திக் கொள்ள முடியாது நாம் யார், நாமென்ன செய்ய இயலும் என்று நமது சுயரூபம் நமக்குத் தெரியும்வரை.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : நம் சுயரூபம் அல்லது நமது ஆத்மா என்பது சுயரூபம் பயன்படுத்திக் கொள்ளும் நமது உடம்பில்லை !

சாக்ரடிஸ் சொல்கிறார் : உட்பரிமாற்றம் (Interchange) என்பது ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவோடு சொற்கள் மூலம் தொடர்பு கொள்வது.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : சுயக் கட்டுப்பாடுடன் இருப்பது என்றால் ஒருவர் தானே தன்னைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்வது.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -7

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ·பிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ·பிலிப்பின் மாளிகை. ·பிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான். பின்னால் லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) அங்கே வருகிறார். அடுத்து சாக்ரடிஸின் பழைய நண்பன் ஆனிடஸ் (Anytus) அவருடன் சேர்ந்து கொள்கிறான்.

(முன் பாகத் தொடர்ச்சி)

Fig. 2
Socrates Talking to a Muse

லைகான்: சாக்ரடிஸை சீக்கிரம் நாம் தொலைத்துக் கட்டாவிட்டால் மேலும் கோமான்கள் வெற்றி பெறுவார் ! நம்மை மூடர் என்று காட்டும் அறிவாளி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழக் கூடாது !

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸ் நம்மை மூடர் என்று இகழ்ந்து சொல்லிய தில்லை ! தன்னை அறிவாளி என்று புகழ்த்திக் கொண்டது மில்லை ! பழிசுமத்துவது மெய்யாக இருக்க வேண்டும்.

லைகான்: அவரைக் கண்டனம் செய்து நான் குற்றம் சுமத்துவேன். குற்றக் கூண்டில் ஏறிச் சாக்ரடிஸ் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். கிரேக்க மலைகளின் எல்லா கெம்லாக் விஷமும் (Hemlock Poison) கூட சாக்ரடிஸ் வாயை மூட முடியாது !

சைரஸ்: அதே சமயத்தில் நாம் சாக்ரடிஸைக் கொன்று உயிர்த் தியாகியாக (Martyr) ஆக்குவது மாபெரும் ஆபத்து !

·பிலிப்: முதலில் கிழவரைக் கண்டுபிடித்தாக வேண்டும் நாம் ! மனிதன் செத்த பிறகு எப்படி நினைக்கப் பட்டால் நமகென்ன ? பித்தர் சாக்ரடிஸ் செத்தபின் உத்தமரானால் என்ன ? அவரது மூடாத வாயை மூடி விடுவோம் அல்லவா ? அது போதும் நமக்கு !

சைரஸ்: உலக அறிவாளியாய் அறிவிக்கப் பட்ட ஏதென்ஸ் ஞானியை ஊமையாக்கி விட்டோம் என்று வரலாறு நம்மைக் குறிப்பிட வேண்டும்.

·பிலிப்: கனவு உலகில் சஞ்சாரம் செய்த பித்த ஞானிகள் இதுவரைத் தம்முயிரை இழந்துதான் போயிருக்கிறார் ! சில கனவு ஞானிகள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பார் ! சில கனவு ஞானிகள் நல்வாழ்க்கையில் நம்பிக்கையை இழப்பார் ! முடிவில் அவர் யாரும் தமது படுக்கையில் மடிவர் ! பிறகு அவர் விட்டுச் சென்ற கடனை யெல்லாம் நாம்தான் அடைப்போம் !

சைரஸ்: ஒரு மரணமா அல்லது பத்தாயிரம் மரணங்களா என்று தேர்ந்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு ! சாக்ரடிஸ் உயிரோடு இருந்தால் உள்நாட்டுப் போர் ஒரு காலத்தில் வரும் ! அதில் சாவோர் ஆயிரக் கணக்கில் இருப்பார் ! சாக்ரடிஸ் மட்டும் செத்தால் அந்த ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும் !

மெலிடஸ்: நமது தெய்வங்களை ஏற்றுக் கொள்ளாத சாக்ரடிஸை நான் நாட்டுத் துரோகியாகக் கருதுகிறேன். நாட்டுத் துரோகியை நாட்டிலே வாழவிடக் கூடாது ! சாக்ரடிஸைக் காப்பாற்ற அவரோடு ஒட்டியுள்ள நபர்கள் யார் தெரியுமா ? கிரிடோ, அல்சிபியாடஸ், ஆகாத்தான், ·பயிதோ, வெல்தி போன்றவர் ! சாக்ரடிஸின் தீவிரச் சீடர்கள் சாமர்த்தியசாலிகள் ! அவரில் பலர் இராணுவப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். சாக்ரடிஸே போர்த் தளபதியாக இருந்தவர். சாக்ரடிஸைப் பிடித்து வர முனையும் போது அந்த படை வீரரோடு நாம் போரிட வேண்டும் ! அதில் சிரமங்கள் உள்ளன !

சைரஸ்: (மெதுவான குரலில்) சாக்ரடிஸ் கூட்டத்தை இரகசியமாய்த் தாக்கி அந்தக் கிழவரை உயிரோடு பிடித்துக் கொண்டுவர வேண்டும் ! சட்ட மன்றத்தில் ஏற்றாமல் நாமே அவரைக் கொன்று விட்டால் என்ன ?

மெலிடஸ்: பிறகு நாம் ஏதென்ஸ் மன்றத்தில் கொலைகாரராய் நிற்க வேண்டியதிருக்கும் ! அது சட்டத் துரோகம் ! சட்டத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் நாம் தலை வணங்க வேண்டும். நீதிக்கும் தண்டனைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாமே சாக்ரடிஸை நேராகத் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம் !

·பிலிப்: சட்டத்தைப் புறக்கணித்து நாமே துணிச்சலோடு செய்வது வெற்றி தரும். சட்டத்தின் மூலம் போய் சாக்ரடிஸ் தண்டனை பெறாது தப்பிக் கொண்டால் என்ன செய்வது ? சட்ட மன்றம் விடுவித்த நிரபராதியை நாம் கொல்வது நியாமா ? நேர்மையா ? நீதியா ?

சைரஸ்: இந்த விதண்டா வாதம் எதற்கும் உதவாது ! முதலில் சாக்ரடிஸை இன்றிரவே பிடிக்க வேண்டும். அதற்கோர் உபாயத்தைச் சொல்வீர் ! எங்கே இருப்பார் சாக்ரடிஸ் ?

ஆனிடஸ்: இன்றிரவு சாக்ரடிஸ் எங்கிருப்பார் என்பது தெரியும் எனக்கு ! ஆகாத்தான் (Agathon) வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

சைரஸ்: நாடக நடிகர் ஆகாத்தான் இல்லத்திலா இருக்கிறார் ?

ஆனிடஸ்: ஆமாம் இன்றிரவு தூங்கும் போது கிழவரைச் சுலமாகச் சிறைப்படுத்தி விடலாம் ! நள்ளிரவுக்குப் பிறகுதான் வீட்டுக்குக் கதவைத் தட்ட வேண்டும். என்னுடன் உங்களில் சிலர் ஆயுதமோடு வர வேண்டும். மறாக்காதீர், சாக்ரடிஸைச் சுற்றிலும் அவரது சீடர்கள் காவல் செய்வார். அவரை எல்லாம் தடுக்க என்னுடன் பத்துப் பதினைந்து பேர் வரவேண்டும்.

சைரஸ்: ஆட்களுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். ஆயுதமோடு வருவார்கள். இன்றிரவு சாக்ரடிஸைப் பிடித்து உயிரோடு கொண்டு வருவது என் பொறுப்பு. ஆகாத்தான் வீட்டைக் காட்ட வேண்டியது ஆனிடஸ் உன் பொறுப்பு ! நள்ளிரவில் இந்த வேலையை இன்று நாம் முடித்து விடுவோம். இது நிச்சயம். சாக்ரடிஸின் முடிவுக் காலம் நெருங்கி விட்டது !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 12, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

Fig. 1
Socrates Statue

சாக்ரடிஸ் சொல்கிறார் : “நாடாளுமன்றக் கோமாளிகளை விடச் சிறிது நல்லவனாக மட்டும் இருக்க நீ உன்னைத் தயார் செய்வது ஒரு வெட்கக் கேடுதான் ! நீ சம்பந்தப்பட்ட முறையில் உன்னால் இயன்ற அளவு உயர்வு அடைவதையே நீ விரும்ப வேண்டும்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் சுயநிலை விருத்தி (Self-Cultivation) என்பது தேவைப்படுகிறது.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “நாம் சுயநிலை விருத்தி அடையாத போதும், சுயநிலை விருத்தி அடைந்து விட்டதாக அடிக்கடி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “சுயநிலை விருத்தி என்பது நம்மை நாமே உன்னதப் பிறவி ஆக்குவது; நாம் அடைத்திருப்பதைச் சீர்மைப் படுத்துவதில்லை.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -6

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ·பிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ·பிலிப்பின் மாளிகை. ·பிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான். பின்னால் லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) அங்கே வருகிறார்.

Fig. 2
Plato’s Dialogues

(முன் பாகத் தொடர்ச்சி)

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸைக் கொல்வது நமது தோலைக் காப்பாற்றாது ! சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் ! தனது இதயத்திற் குள்ளே ஓர் அசுரன் (Demon) இருப்பதாகவும், அது அவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் கூறுகிறார். அதை நான் நம்புகிறேன் ! அந்த அசுரனின் பெயரைக் கூடத் தெரியும் எனக்கு. அதன் பெயர் “நக்கல் அசுரன்” (Demon of Mockery) ! சாக்ரடிஸ் ஒரு நக்கல் பேர்வழி ! அந்தப் போக்கு சாக்ரடிஸைக் குருடராக்கி விட்டது ! இந்த மண்ணிலே ஆன்மீகப் பெருமை இருக்குமே யானால் விதிக்கும் கடவுளுக்கும் எதிரி அந்த முதிய மனிதன் சாக்ரடிஸ்தான் ! கிழவரின் வெளிப்புறப் பணிவு, பசப்பு, பாசாங்கு, சூது, தன் திறமை மேல் தான் கொண்ட தற்பெருமை அனைத்தும் அவரைத் தனித்துக் காட்டும் முரண்பாடுகள் ! நாம் மதிக்கும் நமது கடவுளைப் புறக்கணிப்பவர் சாக்ரடிஸ் ! நமது கடவுளை ஒழித்தால் நன்நெறிகள் சிதைந்து போகும் ! ஏதென்ஸில் நம் செல்வாக்கு அடிப்படையைச் சீர்கேடாக்கும் ! சைரஸ் குறிப்பிட்டுக் காட்டுவது உண்மைதான். கிழவர் சாக்ரடிஸைக் கைது செய்ய வேண்டும் ! அவர் மீது பழிசுமத்த வேண்டும் ! குற்றவாளியாக்க வேண்டும் ! பிறகு அவரைத் தண்டிக்க வேண்டும் !

·பிலிப்: ஏதென்ஸ் நீதி மன்றம் அவரைக் குற்றம் சாட்டி ஏற்ற தண்டனை கொடுக்குமா ?

டிரிப்டோலிமஸ்: ஏன் கொடுக்காது ? ஏதென்ஸ் மன்றம் செல்வந்தக் கோமான்கள் இருக்கும் பேரவை ! அடிமைகளை வைத்து வேலை வாங்கும் வேளாண்மைக் கோமான்கள் அவர்கள் ! அவர்கள் கூடித் தீர்ப்பளிக்கும் மனிதர் யார் ? சாக்ரடிஸ் ! ஏழ்மையைக் குறித்தும் பொதுச் சொத்துப் பங்கீட்டைப் பற்றியும் ஏதென்ஸில் உபதேசிப்பவர் !

·பிலிப்: பொதுவில் இருக்கும் எல்லாமே அவரது பேச்சில் வரும் ! பெண் விடுதலையைப் பற்றிக் கூட மனிதர் பேசி வருகிறார் !

சைரஸ்: ஆனால் மாதரைப் பற்றி மட்டும் சொல்லி விடாதே ! அவருக்கு ஆதரவாய் நீதி தவறிப் போய்த் தப்பிக் கொள்வார் கிழவர் ! நான் அவரைச் சிறையில் தள்ள சரியான ஆட்களைத் தயாராக வைத்துள்ளேன். சாக்ரடிஸ் நிரந்தரமாக ஒழியப் போகிறார் !

·பிலிப்: அப்படியானால் ஒரு சதித் திட்டம் மறைவாக உருவாகி வருகிறதா ?

சைரஸ்: (மெதுவான குரலில்) அதைப் பற்றி யாரும் மூச்சு விடக் கூடாது ! மறைவில் நடப்ப தெல்லாம் திரையில் தெரியக் கூடாது ! நான் பின்னின்று மறைமுகச் சதி வேலைகளை நடத்தி வருகிறேன் ! நான் அந்தப் பெருமையை ஏற்றுக் கொள்கிறேன்: சாக்ரடிஸ் வரலாறுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் புனிதப் பணி என்னுடையது !

·பிலிப்: இப்படி என்னையும் இந்தச் சதியில் புகுத்த நினைக்காதீர். நான் எச்சரிக்கை விடுகிறேன். என் மனச்சாட்சிக்கு எதிராக நான் எதுவும் செய்ய மாட்டேன் ! என் தீர்மானத்தைக் கையாள்வது நான் ஒருவனே ! உங்கள் சங்கை என் வாயில் வைத்து நான் ஊத மாட்டேன் ! ஒரு மனிதனின் வரலாற்றுக் கோபுரம் போதிய உயரம் இல்லாதது ! அது சிறியது ! அதன் மேல் நின்று ஒருவர் உலகை நோக்க இயலாது !

டிரிப்டோலிமஸ்: நாமெல்லாம் மாஜிஸ்டிரேட்டுகள் ! நாம் எதற்கு ஏதென்ஸ் வரலற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் ? நல்லதோ கெட்டதோ, நன்மையோ, தீமையோ, சரியோ தப்போ நாம் ஓர் தீர்மானத்தை முடிவு செய்ய வேண்டும் ! ஒன்றுமே செய்யா திருப்பினும் அதுவும் அரசாங்க வேலைதான் !

·பிலிப்: சாக்ரடிஸ் சொல்லிக் கொண்டே இருக்கிறார் : ஏதென்ஸின் சட்ட திட்ட ஏற்பாடுகள் புனிதமானவை என்று ! அவரை எப்படிக் கலகக்காரன், நம் கடவுளை வழிபடாதவன் என்று இகழ்ந்து கூற முடியும் ? அவரைத் தண்டிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரியுது எனக்கு ! ஆனால் நீவீர் செய்ய முயல்வது எனக்கு நீதியாகத் தோன்ற வில்லை ! சாக்ரடிஸ் செய்தது தவறாகத் தெரிந்தாலும் சட்டப்படி எப்படிக் குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுவது ?

டிரிப்டோலிமஸ்: யாரைப் பற்றி பத்து நிமிடங்கள் பேசத் தகுதியுள்ளதோ அவரைக் கலகக்காரன், கடவுளை நம்பாதவன் என்று சட்டத்தைக் காட்டிக் குற்றம் சாட்டுவது எளிதானது !

·பிலிப்: ஒன்று அறிவோடு பேசு அல்லது உன் வாயைத் திறக்காதே ! நக்கல் அசுரன் என்று சாக்ரடிஸை நீ குறிப்பிட்டது கோமாளித்தனமாக உள்ளது. இதோ லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) இங்கே வருகிறார்.

(லைகானும் மெலிடசும் அங்கே வருகிறார்.)

சைரஸ்: தோழர்களே ! இவர் லைகான் ! அவர் மெலிடஸ் ! இருவருக்கும் உங்களைப் பற்றித் தெரியும். இருவரும் சாக்ரடிஸ் மீது வழக்குப் பதிந்தவர் என்பதைத் தெரிந்து கொள்வீர்.

லைகான்: என் குற்றச் சாட்டு : சாக்ரடிஸ் கலகக்காரர் ! நமது கடவுளை அவமதிப்பவர் !

மெலிடஸ்: மேலும் முக்கியமாக ஏதென்ஸ் வாலிபர் மனதைக் கெடுத்தவர் !

டிரிப்டோலிமஸ்: சட்டப்படிக் குற்றம் சாட்ட இந்தக் காரணங்கள் போதுமா ? இதோ ·பிலிப் ! இவர்தான் சாக்ரடிசுக்கு சரியான எதிரி ! இவரது ஆதாரங்களையும் கேட்டுக் கொள்வீர்.

·பிலிப்: தோழர்களே ! தேவ தூதர் (Oracles) சாக்ரடிஸை ஏன் உலகத்தின் உன்னத அறிவாளர் என்று பேரவையில் அன்று தீர்ப்புக் கூறினார் ?

லைகான்: இதெல்லாம் கடவுளுக்கு எதிராக அளிக்கும் ஒரு லஞ்சம்தான் ! தேவ தூதர் யாவரும் மதக் குருக்கள்தான் (Priests) ! செல்வீகக் கோமான்கள் (Aritocrats) உங்களுக்குப் பரம்பரை எதிரிகள் ! கோமான்கள் மதக் குருக்களுக்கு லஞ்சம் தந்து சாக்ரடிஸை உயர்ந்த அறிவாளி என்று சொல்ல வைத்து உமக்குக் கோபம் உண்டாகத் தூண்டியுள்ளார் !

சைரஸ்: அதில் அவர் வெற்றியும் பெற்றார் ! சாக்ரடிஸ் உன்னத அறிவாளியா ? “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று ஊரெல்லாம் கூறி வருகிறார் ! மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் ! தானாக அவர் எதுவும் சொல்வது மில்லை ! எழுதுவது மில்லை !

லைகான்: சாக்ரடிஸை சீக்கிரம் நாம் தொலைத்துக் கட்டாவிட்டால் மேலும் கோமான்கள் வெற்றி பெறுவார் ! நம்மை மூடர் என்று காட்டும் சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழக் கூடாது !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 5, 2009)]

Series Navigation

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு அறிவுரை கூறும் ஒருவர் போரிலும் சமாதானத்திலும் எது உன்னதமானது அல்லது எது தீங்கு விளைவிப்பது என்று தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு நேர்மையாக நடத்துவோருடன் சமாதானமாக வாழ நீ அறிவுரை கூறுவதற்கு முதலில் நியாய நெறிகள் எவை என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சாக்ரடிஸ் சொல்கிறார் : நாம் தவறுகள் செய்கிறோம், நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொள்ளும் போது.

சாக்ரடிஸ் சொல்லிக் காட்டுகிறார் : ஒரு சிந்தனைத் தலைப்பின் (Subject) அடிப்படைகளை நிராகரிப்பவர் அந்தத் தலைப்பைப் பற்றி அறியாதவரே. அதனால் அந்தத் தலைப்பை அவர் பிறர் கற்றுக் கொள்ளச் சொல்லித் தர இயலாது.

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

Fig 1
Philip & Cyrus Plotting to Kill Socrates

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -4

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ·பிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ·பிலிப்பின் மாளிகை. ·பிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான்.

·பிலிப்: (மாலையைக் காலில் மிதித்து) என்ன பாராட்டு வேண்டி யுள்ளது ? கிழவர் சாக்ரடிஸ் தப்பி ஓடிவிட்டாரா ? எங்கு ஒளிந்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடிப்பதுதான் நமது முதல் வேலை ! அதுவரை எனக்குத் தூக்கம் வராது ! சைரஸ் ! அழைத்து வா படைக் காப்டனை !

சைரஸ்: அதோ காப்டன் ! இங்குதான் வருகிறார். (காப்டன் இராணுவ மரியாதை செய்கிறார்)

·பிலிப்: (காப்டனைப் பார்த்து) படைகளை அழைத்து வா ! ஆயுதங்களோடு வரட்டும் ! என் மாளிகையைச் சுற்றிக் காவல் தேவை ! சுற்றுக் காவல் இரவும் பகலும் தேவை ! ஒரு குழு சாக்ரடிஸைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் ! தப்பி ஓடி விட்டார் கிழவர் ! தண்டனைக்கு அஞ்சி சாக்ரடிஸ் எங்கோ தலைமறைவாய் இருக்கிறார். அவர் தாடியைப் பிடித்து இழுத்து வரவேண்டும் ! உயிரோடு கொண்டு வர வேண்டும் !

காப்டன்: சாக்ரடிஸ் அப்படி அஞ்சி ஒளியும் சிங்கமில்லை ·பிலிப் ! அவரது நண்பர்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் ! நான் போய்ப் பார்த்து வருகிறேன்.

(காப்டன் போகிறார்)

சைரஸ்: என் ஆலோசனை, சாக்ரடிஸ் உடனே கொல்லப் படவேண்டும் ! ஒன்று கொலை செய்வோம் கிழவரை அல்லது அவரது மனத்தை மாற்றுவோம் !

Fig. 2
Socrates Talking to a Muse

·பிலிப்: ஏதென்ஸ் குடிமக்கள் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ! ஒன்று நாம் அல்லது சாக்ரடிஸ் ! சாக்ரடிஸை அவர் தேர்ந்தெடுப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது. சைரஸ் ! சிந்தித்துத்தான் பேசுகிறாயா ? சாக்ரடிஸை நாம் கொல்லக் கூடாது ! அப்படிக் கொன்றால் அவர் உன்னதம் அடைவார் ! மகத்துவம் பெறுவார் ! தெய்வச் சிலையாகிப் பலரால் வணங்கப் படுவார் !

சைரஸ்: உண்மைதான் ! அந்தக் கோணத்தில் நான் சிந்திக்க வில்லை ! ஆம் அவரை நாம் கொலை செய்து ஏன் உத்தமராக ஆக்க வேண்டும் ?

·பிலிப்: சாக்ரடிஸைப் பிடித்து நாம் சட்டத்தின் விலங்குகளில் மாட்டி விடுவோம் ! ஏதென்ஸ் குடிமக்கள் சட்டத்துக்கு அடிபணிவர் ! நாமே சட்டத்தை கையாளக் கூடாது !

சைரஸ்: சட்டம் சாக்ரடிஸை விடுவித்தால் என்ன செய்வீர் ?

·பிலிப்: சட்டம் ஒரு கரடி ! அதன் கோரப் பிடியிலிருந்து சாக்ரடிஸ் தப்ப முடியாது.

சைரஸ்: பலர் தப்பாக எடைபோடுகிறார் ! சாக்ரடிஸ் ஒரு சிந்தனா மேதை ! அவரது மேதமை திறனாய்விலும் தர்க்கத்திலும் உள்ளது. அவர் சுயமாக வேறெதுவும் ஆக்க வில்லை ! அவரது வாய்ப் பேச்சுக்கள் யாவும் வாயுவாக மறைந்து விட்டன ! உருப்படியாக சாக்ரடிஸ் எதுவும் உண்டாக்க வில்லை ! அங்காடி வீதியின் வசீகர மனிதர் அவர் ! கனவு காணும் மனிதர் அவர் ! அவரது கனவுகளில் குடிமக்கள் மனதைப் பறி கொடுக்கிறார். கனவுகள் அரசாங்க நியதிகள் அல்ல ! கனவுகள் மாந்தரை வசப்படுத்தும் வசீகர மருந்துகள் ! சாக்ரடிஸ் தருவதெல்லாம் தனது கற்பனைக் கனவுகளே ! மந்திர மாத்திரைகள் !

·பிலிப்: சாக்ரடிஸைக் கொன்றாலும் அவரது கனவுகளைக் கொல்ல இயலுமா ?

சைரஸ்: இல்லை கொலை செய்வதால் கனவுகள் மறையா ! அதுதான் அழியாத உன்னதம் அளிக்கும் என்று நீவீர் முன்பு குறிப்பிட வில்லயா ? அதற்குப் பதிலாக அவர் கேட்பதையே நாமும் அளிப்போம். அவருக்குச் சத்தியத்தைக் கொடுப்போம் ! நியாயத்தை வழங்குவோம். சட்டமே அவரது தோலை உரிக்க விட்டு விடுவோம், விருப்பு வெறுப்பின்றி, தீய நோக்கமின்றி ! சட்டமே அவரை மென்று விழுங்கட்டும் !

(அப்போது டிரிப்டோலிமஸ் வில்லும் அம்புகளும் ஏந்திக் கொண்டு வருகிறான்)

டிரிப்டோலிமஸ்: (களைப்போடு) நான் கெட்ட சகுனப் பறவைகளைக் கொன்று சலிப்படைந்து விட்டேன் ! இந்த அற்ப வேலையில் கிடைக்கும் ஊதியம் சொற்பம் ! அடுத்து நான் என்னைக் கொன்று நிரந்தர நிம்மதி அடையலாம் !

சைரஸ்: வெறுப்படையாதே ! உன்னைச் சமாதானப் படுத்த உன் மதம் என்ன சொல்கிறது ?

Fig. 3
Socrates on Books

டிரிப்டோலிமஸ்: மதம் ஒழுக்க நெறிகளையும் மெய்யாடுகளையும் கூற வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். என்னை மட்டும் அது அமைதிப் படுத்துவது போதாது ! அது சரி. சாக்ரடிஸ் தண்டனை பற்றி உமது தீர்மானம் என்ன ?

சைரஸ்: எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் கண்டுபிடி ! இன்று இரவே சிறைப் படுத்து ! நாளைப் பகலில் குற்றத்தைச் சுமத்து ! எனக்குத் தெரியும் அவரைக் குற்றம் சாட்டத் தயாராக இருக்கும் மூன்று கோமான்களை ! அவரில் இருவர் இப்போது மன்றத்தில் படிகளில் தயாராக நின்று கொண்டிருக்கிறார் !

·பிலிப்: நமது வெறுப்பை அகற்றிச் சாக்ரடிஸை நேராகக் குற்றம் சாட்டலாமா ? நாம் இப்போது அதிகாரப் பீடத்தில் இருக்கிறோம். சாக்ரடிஸ் தொண்டர்கள் நம்மை அரசாங்கத்திலிருந்து நீக்கி விட முயன்று வருகிறார் ! அவரது தொண்டர்கள் நம்மைத் தள்ளுவதற்கு முன்பே நாம் சாக்ரடிஸை கொல்லலாமா ?

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸைக் கொல்வது நமது தோலைக் காப்பாற்றாது ! சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் ! தனது இதயத்திற் குள்ளே ஓர் அசுரன் (Demon) இருப்பதாகவும், அது அவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் கூறுகிறார். அதை நான் நம்புகிறேன் !

++++++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 21, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

Fig. 1
Socrates

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை தான் கற்றுக் கொள்ள வேண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதில் விரும்பாமல்.”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை, தனக்கு முன்பே தெரியும் என்றோ, தான் ஏற்கனவே கண்டுபிடித்ததாகவோ நினைத்துக் கொண்டிருந்தால்.”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கோ அல்லது ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கோ ஒரு தருணம் வருகிறது அவனுக்குத் தெரியும் என்பதை அவன் அன்று நினைக்காத போது .”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : நீண்ட தர்க்கம் செய்து நான் ஞானத்தைத் தேடி அடைய வில்லை.”

பிளாடோவின் உரையாடல்கள்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -4

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

Fig. 2
Socrates Mosaic

சாக்ரடிஸ்: நான் கவிஞர் கூறும் ஒரு வாசகத்தை எதிர்க்கிறேன் ! அந்தக் கவிஞர் சொல்கிறார் : “ஜீயஸ் தெய்வந்தான் உலகில் எல்லா வினைகளையும் செய்கிறது. சகல உயிர்களையும் உலகில் வளர்க்கிறது. அச்சம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அவமானமும் உள்ளது !” நான் கவிஞர் சொல்லும் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கிறேன். காரணம் சொல்லட்டுமா ?
யூதி·பிரோ: சொல்லுங்கள் சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அச்சமுள்ள இடத்தில் அவமானமும் இருக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக நோய் நொடிகளுக்கு அஞ்சுவோர், வறுமைப் பிணிக்கு அஞ்சுவோர் தாம் அஞ்சும் அவதி, நோய் போன்ற இன்னல்கள் மீது அவமானப் படுவதாகத் தெரிய வில்லை.
யூதி·பிரோ: ஆம் அது உண்மைதான்.
சாக்ரடிஸ்: ஆனால் எங்கே அவமானம் உள்ளதோ அங்கு அச்சம் இருக்கிறது என்று நான் சொல்வேன். ஏனெனில் எவர் ஒருவர் அவமானப் பட்டு முகத்தைக் காட்ட வெட்கப் படுகிறாரோ அவர் தன் பெயர் இகழப்படும் காரணங்கள் மீது அச்சப் படுவது நியாயமில்லையா ? அவமானத்தின் ஆணிவேர் அச்சம் ! இப்படித்தான் இதையும் விளக்குவேன். எவரிடம் தேசப் பற்று உள்ளதோ அவரிடம் நியாய சிந்தனையும் இருக்கிறது. ஆனால் நியாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் தேசப் பற்று இருப்பதில்லை ! ஏனெனில் தேசப் பற்று என்பது நியாயத்தின் ஓர் அங்கம் ! இதை ஏற்றுக் கொள்வீரா ? அல்லது உமது கருத்து வேறானதா ?
யூதி·பிரோ: நீவீர் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது எனக்கு.
சாக்ரடிஸ்: மெலிடஸ் என்னைப் பற்றி புகார் செய்திருப்பதில் எது நியாயம் எது பழிசுமத்தல் என்று நீவீர் கூறமுடியுமா ? எது தெய்வ நீதி எது தெய்வ அநீதி எது தெய்வ பக்தி என்று விளக்கிச் சொல்வீரா ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! தெய்வ நீதி, தெய்வ பக்தி இரண்டுமே நியாயப் பண்பாட்டின் ஒரு பகுதியே. ஒரு பகுதி தெய்வக் கவனப் பகுதி ! மறு பகுதி மனிதக் கவனப் பகுதி !
சாக்ரடிஸ்: நீவீர் அழகாகப் பகுத்துக் கூறியது கண்டு பூரிப்படைகிறேன் ! ஆனால் நீவீர் குறிப்பிடும் கவனம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை ! குதிரைக்காரன் கவனம் குதிரை மேல் என்று சொல்வது போன்ற ஒரு பொருளைக் கொண்டதா ?

Fig. 3
Socrates Statue

யூதி·பிரோ: ஆமாம் அந்த அர்த்தத்தில்தான் கூறினேன்.
சாக்ரடிஸ்: அப்படியானால் இதை விளக்குவீர் எனக்கு ! தெய்வீகச் சக்தியில் ஞானம் உடைய நீவீர் தெய்வத்துக்குப் பணி செய்வதில் உள்ள பயன்களைக் குறிப்பிடுவீரா ? நம்மை எல்லாம் பணியாட்களாய்ப் பயன்படுத்தும் தெய்வங்கள் சாதிக்கும் சாதனைகள் என்ன ?
யூதி·பிரோ: பல்வகை உன்னதப் பயன்கள் உள்ளன சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அவ்விதம் போரில் போர்த் தளபதிகளும் சாதிக்கிறார் இல்லையா ? போரில் வெற்றி பெருவது எத்தகை இடர்கள் நிரம்பியவை தெரியுமா ?
யூதி·பிரோ: ஆம் உண்மைதான்.
சாக்ரடிஸ்: அதுபோல்தான் வேளாண்மைத் தொழிலும் ! இந்த மண்ணை நிலமாக்கி வளமாக்கிப் பயிராக்கி நமக்கெல்லாம் உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போரே ! எத்தகைய புனிதத் தொழில் வேளாண்மை ! அப்படி விளக்கமாகச் சொல்வீர் தெய்வங்களின் சாதிப்பு வினைகள் என்ன வென்று !
யூதி·பிரோ: சொல்கிறேன் ! அதற்கு ஆழ்ந்த அனுபவம் அவசியம். தெய்வத்தை வழிபடும் போதும், வாழ்க்கையில் தியாகம் செய்யும் போதும் மனிதர் சிந்தித்துக் கேட்கும் கொடைகள் முக்கியமானவை ! குடிமக்களின் இல்லங்கள், நாட்டின் பொதுப் பணிகள் ஆகியவை பாதுகாக்கப்பட ஒருவர் வழிபாடு செய்வது அவசியம். இவற்றைப் பாதுகாக்காமல் விட்டுவிடுவது தேசத் துரோகம்.
சாக்ரடிஸ்: ஒருவர் தியாகம் செய்வது தெய்வத்துக்குக் கொடை அளிப்பதுவா ? அதுபோல் ஒருவர் வழிபடுவது தெய்வத்திடம் யாசகம் கேட்பதுவா ?
யூதி·பிரோ: நிச்சயமாக சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அதாவது வழிபாடு என்பது தெய்வதுக்கு எப்படிக் கொடுப்பது என்பதா ? அல்லது தெய்வத்திடம் நமக்கு வேண்டுவதை எப்படி யாசிப்பது என்று அர்த்தமா ? தெய்வ பக்தி என்பது மனிதருக்கும் தெய்வத்துக்கும் இடையே நிகழும் வாணிப உடன்பாடா ?
யூதி·பிரோ: வாணிப உடன்பாடு என்பது சற்று கடுமையான வாசகம் சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: சொல்வீர் எனக்கு ! நாமளிக்கும் கொடைகளால் தெய்வங்கள் பெறும் நலங்களும் பலன்களும் என்ன ? தெய்வங்கள் நமக்களித்த கொடைகளைப் பற்றி நாம் யாவரும் அறிவோம். அவற்றை நாம் அடையா விட்டால் நமக்குப் பெருத்த இன்னல்கள் விளையும் ! அதே சமயம் நாமளிக்கும் கொடைகளைத் தெய்வங்கள் அடையா விட்டால் என்ன நடக்கும் ? அல்லது இப்படிச் சொல்லலாமா ? நாம் மட்டும் தெய்வங்களின் கொடைகளைப் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு நாம் எதுவும் செய்யா விட்டால் என்ன நடக்கும் ? நாமென்ன பரிசுகளைத் தெய்வங்களுக்குத் தர முடியும் ? நாம் அளிக்கும் கொடைகளையும், தியாகத்தையும், பரிசுகளையும் தெய்வங்கள் வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கின்றனவா ? வேறென்ன எதிர்பார்க்கும் தெய்வம் நம்மிடத்தில் ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! நமது கொடைகளைத் தெய்வங்கள் நாடுவதில்லை ! வேறென்ன ? நீவீர் என்ன நினைக்கிறீர் ? நான் யூகிப்பது இவைதான் : மனித நேயம், மனித மதிப்பு, நியாயம், நேர்மை, செய்நன்றி மறவாமை !
சாக்ரடிஸ்: நல்ல பதில் ! இவைதான் தெய்வ வழிபாட்டின் அம்சம் என்று சொல்வீரா ? இப்போது எனக்குச் சொல்வீர் : உமது தந்தையாரை நீவீர் சிறை செய்ததின் உள் நோக்கம் என்ன ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! உண்மையைத் தேடி அறிவது ! குற்றத்தைக் கண்டுபிடிப்பது ! குற்றவாளியைத் தண்டிப்பது ! நியாயம், நேர்மை, நீதி இவைதான் தெய்வப் பணிகள் எனக்கு !
சாக்ரடிஸ்: யூதி·பிரோ ! இன்று உம்முடன் உரையாடியதில் பற்பல புதிய கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். சிறந்த உரையாடல் !
யூதி·பிரோ: நன்றி சாக்ரடிஸ் ! நீவீர் எனது உள்ளத்தைத் தோண்டி நேர்மை நெறிகளைக் கொண்டு வந்தீர் ! நன்றி சாக்ரடிஸ் ! நான் செல்ல வேண்டும். மன்றம் துவங்கப் போகிறது ! மறுபடியும் சந்திப்போம் !
சாக்ரடிஸ்: நான் அந்த நாளுக்குக் காத்திருப்பேன். போய் வாரீர்.
(யூதி·பிரோ நீதி மன்றத்துக்குள் நுழைகிறார்.)

++++++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 14, 2009)]

Series Navigation

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்