மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

அ கா பெருமாள்

தடிவீரசாமி கதை

திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் ஆகியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர் சாதியினர் வாழ்ந்த ஏழு ஊர்களிலும் (ஏழு ஊர்கள் முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை எனக் கூறுவர்) உள்ள நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்தனர். இந்த நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. இந்த மூன்று பேர்களில் தலைவராகக் கருதப்பட்டவர் செம்பாரக் குடும்பன் . இவர்தான் பயிர் செய்த நிலங்களின் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பஙகை வரியாக அரண்மனைக்குக் கொடுத்து வந்ததார்.

ஏழு ஊர்களிலும் உள்ள குடும்பன்மார்களுக்குத் துணி வெளுக்கும் பொறுப்பை நீலவண்ணான் என்பவன் கவனித்து வந்தான். இவன் சாதியில் புரத வண்ணான். இவனது மனைவி புரதமங்கை என்ற மாட வண்ணாத்தி . இவர்கள் இரண்டு பேரும் ஏழு ஊர்களில் வாழ்ந்த பள்ளர்களின் வீட்டில் அழுக்கை வெளுத்து வாழ்ந்து வந்தனர்.

நீலவண்ணாளுக்கு முப்பத்திரண்டு வயதானது. குழந்தை பிறக்கவில்லை.ஆகவே அவள் மனம் நொந்து இருந்தாள். குழந்தைககாக நேர்ச்சை செய்தாள். தண்ணீர் பந்தல் சுமைதாங்கி எனப் பலவும் செய்து வைத்தாள். தான தருமங்கள் செய்தாள். பரதேசிகளுக்கும் பிராமணர்களுக்கம் தானம் செய்தாள். பசுவையும் பூமியையும் தானமாகக் கொடுத்தாள். குருடர்களுக்குத் தானம் செய்தாள். இப்படிப் பலவகையான தான தர்மங்கள் செய்தாள். ஆனால் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. இதனால் மிகவும் மனம் நொந்த புரதவண்ணாத்தி பிள்ளை இல்லாதவர்கள் வீட்டில் பெரியவர்கள் சாப்பிடமாட்டார்களே என்ன செய்வேன் என நொந்தாள்.

அவள் கணவனிடம் இரந்து கேட்டாள். ‘ ‘கணவனே என் கணவனே நான் சொல்வதைக் கேட்பாய். எனக்கு சங்கரநயினார் கோவிலுக்குப் போகவேண்டும். மாதம் ஒருமுறை சென்று தவம் இருக்கவேண்டும் ‘ ‘ என்றாள். அவனும் அதற்கு இணங்கினான். அவள் நேர்ச்சைக்குரிய மாப்பலகாரம் பொரிவிளங்காய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அந்தக்கோவிலுக்குப் பயணமானாள்.

அவள் ஏறாங்குடிப் பட்டணம், பண்டாரகுளம், தாழவூத்து, நஞ்சான்குளம், மாவிடி, மானூரு, தேவகுளம், பனைவிடலி போன்ற இடங்களக் கடந்து ஆவிடைப் பொய்கையில் தீர்த்தமாடினாள். பின் சங்கரன்கோவில் வந்தாள். அங்கு 41 நாட்கள் தவமிருந்தாள். அப்போது அக்கோவிலில் இருந்த இறைவன் சங்கரலிங்கம் கயிலைக்குச் சென்றார். சிவனைத் தரிசித்து ‘ ‘புரதமங்கைக்கு ‘ ‘ குழந்தை வரம் கொடுக்கவேண்டும் என்றார். சிவனோ அவளுக்கு இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவள் வயிற்றில் நீயே குழந்தையாகப் பிறப்பாய். நீ 18 ஆண்டுகள் உயிரோடு இருப்பாய் என வரமளித்தார்.

பின்னர் சங்கரலிங்க பகவான் சங்கரன்கோவில் வந்தார். தவமிருந்த மங்கையிடம் ‘ ‘உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு 18 ஆம் வயதில் ஒரு தத்து உண்டு ‘ ‘ என்றார். அவளும் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குச் சென்றாள். சங்கரலிங்க பகவான் வரம் கொடுத்த பத்தாம் மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பெற்றாள். அதற்கு மந்திரமூர்த்தி எனப் பெயர் கொடுத்தாள்.

மந்திரமூர்த்தி சிறுவயதில் மந்திரங்கள் படித்தான். கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை கற்றான். அவனுக்கு 12 வயது ஆனது. பூதப்பாண்டியில் உள்ள சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை மணந்தான். அவள் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து, வெள்ளாவிப் பானை வைத்து வெளுப்புத் தொழிலை ஒழுங்காக நடத்தி வந்தாள்.

இப்படி இருக்கும்போது நாடார் குலத்தில் பிறந்த புதியவன் என்பவன் மந்திரமூர்த்தியிடம் மந்திர வித்தைகள்படிக்க வந்தான். மந்திரமூர்த்தியும் முறைப்படியான வித்தைகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான். அவனும் வித்தைகளைக் கவனமாகக் கற்றான். ஒருமுறை புதியவன் மந்திரமூர்த்தியைப் பார்த்து ‘ ‘ என்ன இருந்தாலும் நீ ஈன சாதியினன் அல்லவா ‘ ‘ எனக் கேட்டுவிட்டான். அதனால் கோபமுற்ற மந்திரமூர்த்தி ‘ ‘ என்னை அவமானப்படுத்திய உன்னைப் பழி வாங்குவேன் ‘ ‘ என்று கூறிச் சென்றான்.

திருச்செந்தூர் நகரில் செம்பாரக் குடும்பனுக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இளையவளாக சோணமுத்து என்ற பெண் பிறந்தாள். அவள் பத்து வயதில் பெரிய பெண் ஆனாள். அவள் தோழிமார்களுடன் தாமிரபரணியாற்றில் நீராடப் புறப்பட்டாள். நீராடிவிட்டுப் புதிய சேலையை உடுக்க விரும்பினாள். அதற்கு மாற்றுச் சேலை வேண்டி வண்ணாரத் துறைக்கு வந்தாள். மந்திரமூர்த்தியைக் கண்டு சேலை வேண்டும் எனக் கேட்டாள்.

மந்திரமூர்த்தி சோணமுத்துவைக் கண்டான். இவள் சுந்தரியோ இந்தரியோ என மயங்கினான். அவள் பேரில் மையல் கொண்டான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினாள். அவளுக்கு நல்ல சேலை தருவேன் என்றான். மந்திரம் படித்த அவன் சோணமுத்துவின் உருவையும் அவன் உருவையும் சேலையில் வரைந்து மந்திரம் உரு ஏற்றி அவளிடம் கொடுத்தான்.

சோணமுத்து சேலையை உடுத்ததும் மந்திரமூர்த்தியன் பேரில் ஆசைப்பட்டாள். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வகைவகையாய் சமைத்தாள். சம்பா அரிசி எடுத்து சோறு பொங்கினாள். ஆட்டுக்கறி, கோழிக்கறி வைத்தாள். கருவாட்டுக் குழம்பு வைத்து ஏழடுக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு மோகினி ஒருத்தி பின்தொடர மந்திரமூர்த்தியின் குடிசைக்கு வந்தாள். வகைவகையாய் அவனுக்கு உணவு பரிமாறினாள். அவன் உண்ட மிச்சத்தை அவள் உண்டாள். பின்னர் இருவரும் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். இருவரும் கட்டிலில் ஒன்றாகப் படுத்தார்கள். அவளை இறுக்கமுடன் கட்டித் தழுவினான் மந்திரமூர்த்தி.

இப்படியாக யாருக்கும் தெரியாமல் மந்திரமூர்த்தியைப் பலமுறை சந்திக்க வந்தாள் சோணமுத்து. ஒருநாள் புதியவன் நாடான் மந்திரமூர்த்தியின் குடிசையை அடுத்த பனையில் ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவும் மந்திரமூர்த்தியும் சேர்ந்திருப்பதைப் பார்த்தான். ‘ ‘ஆகா மந்திரமூர்த்தியைப் பழிவாங்க இதுதான் சமயம் ‘ ‘ என்று கருதினான்.

அடுத்தநாள் புதியவன் பனை ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவின் சகோதரர்கள் கள் குடிக்க வந்தார்கள். அப்போது புதியவன் ‘ ‘அண்ணே உங்க்ள தங்கயைை வண்ணான் மந்திரமூர்த்தி வைப்பாக வைத்திருக்கிறான் தெரியாதா ? ‘ ‘ என்றான்.

சகோதரர்களுக்கு ஆவேசம் வந்தது. புதியன் சொன்னான். ‘ ‘நாளை உன் தங்கை சோணமுத்து சந்திக்கும்போது கையும் களவுமாகப் பிடித்துக்கொள் ‘ ‘ என்றான். குடும்பர்களும் அவன் சொன்னபடியே மந்திரமூர்த்தியின் வீட்டின் அருகே மரத்தில் மறைந்து இருந்தான். சோணமுத்து அடுக்குபானையுடன் வந்தாள். மந்திரமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தாள். இதைக்கண்ட சகோதரர்கள் அவன் வீட்டை வளைத்தனர்.

தனக்கு ஆபத்து வருவதைஉணர்ந்தான் மந்திரமூர்த்தி. மாரண மையை சோணமுத்துவின் நெற்றியில் தடவினான். அவள் மாயமாய் மறைந்தாள். மந்திர மூர்த்தி பூனையாக மாரினான். குடும்பர்கள் இருவரையும் காணாமல் திகைத்தார்கள். புதியவன் மந்திர மையைப் போட்டுப் பார்த்தான். ‘ ‘ அந்தப் பூனையைத் துரத்திக் கொல்லுங்கள் ‘ ‘ என்றான். குடும்பர்களும் பூனையைத் துரத்தினர். பூனை பாம்பு அரணையாக மாறியது. அதையும் துரத்தினர் குடும்பர்கள். பாம்பு அரணை பல்லியாக மாறியது. பின் பல்லியாகவும் எலியாகவும் மாறி ஒரு வைக்கோல் படைப்பில் நுழைந்தான். குடும்பர் படைப்பில் தீ வைத்தனர். எலி வெள்ளெலியாக மாறி ஒரு மடைக்குள் நுழைந்தது. குடும்பர்கள் மிளகு வைத்து கொளுத்தினர். வெள்ளெலியோ புகையாக மாறி மறைந்தது. குடும்பர்கள் அவன் இறந்துபோனான் என்று கருதி வீட்டிற்குச் சென்றனர்.

மந்திரமூர்த்தி மாயமாக வீட்டிற்கு வந்ததும் வசிய மருந்து மூலம் சோணமுத்துவைத் தன் மீண்டும் வீட்டிற்கு வரவழைத்தான். அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அப்போது நடுநிசி. அந்த வேளையில் கொண்டையன் கோட்டு மறவர்கள் அங்கே வந்தனர். மந்திரமூர்த்தியின் வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தனர் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர். அங்கே மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் சேர்ந்திருப்பதைக் கண்டனர்.

கொண்டையன் கோட்டு வீரர்கள் இந்தச் செய்தியைக் குடும்பர்களிடம் கூறினர். அவர்கள் ஊர்க்காரர்களையும் திரட்டிக்கொண்டு வந்தனர். சட்டென்று உள்ளே புகுந்து மந்திரமூர்த்தியைப் பிடித்துக் கட்டினர். ஊர்த்தலைவர் வடமலையப்ப பிள்ளையிடம் கொண்டு சென்றனர். அவர் நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்துவிட்டு அவனை வெட்டிவிட ஆணையிட்டார். காவலர்கள் மந்திரமூர்த்தியக் காட்டுக்கு அழைத்துச் சென்று வடதிசை நோக்கி நிறுத்தினர். வாளால் வெட்டினர். ஆனால் அவன் சாகவில்லை. அப்போது மந்திரமூர்த்தி என் உடலில் ஒரு மந்திரக்குளிகை உள்ளது. அது இருக்கும்மட்டும் நான் சாகமாட்டேன். நானே அதை எடுத்துத் தருகிறேன் என்று கூறியபடி அந்த குளிகையை எடுத்துத் தந்தான்.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு சாத்தப்பிள்ளையும் சோணமுத்துவும் அழுதபடி ஓடி வந்தனர். அவன் உடல் கிடந்த இடத்தில் தங்களை மாய்த்துக்கொண்டனர். இறந்துபோன மந்திரமூர்த்தி நடுநிசியில் ஆவியாக புதியவனின் வீட்டிற்கு வந்து அவனைக் கொன்றான். பின் ஏழு ஊரிலும் ஆரவாரம் செய்தான். குடும்பர்கள் மந்திரமூர்த்திக்கு கோவில் எடுத்து தடிவீரய்யன் எனப் பெயர்கொடுத்து வழிபட்டனர்.

—-

Series Navigation

மக்கள்தெய்வங்களின் கதைகள் 8

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

அ. கா.பெருமாள்

வெங்கலராசன் கதை

[இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது]

சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான நாடு. அங்கு புட்டாபுரம் என்ற ஒரு இடம் உண்டு. அதில் ஏலாகினி என்ற சுனை இருந்தது. அச்சுனையின் கரைப்பகுதியில் வித்தியாதர முனிவர்கள் இருந்தனர். அவர்கள் அருந்தவம் செய்தவர்கள். அச்சுனையில் நீராடி தவம் செய்துவந்தார்கள். அந்நாளில் சப்தகன்னிகைகள் எனப்படும் தெய்வப்பெண்கள் அச்சுனையில் நீராடவந்தனர். அவர்கள் அழகைக்கண்ட வித்தியாதரமுனிவர்கள் காமுற்றனர். அந்த முனிவர்களின் வழி தெய்வப் பெண்களிடம் ஏழு மக்கள் பிறக்கவேண்டும் என்ற சாபமும் ஏற்கனவே உண்டு.

ஒருமுறை தெய்வப்பெண்கள் ஏழுபேரும் ஏலாகினி சுனைக்கு நீராட வந்தனர். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து ஆலமரத்தில் வைத்துவிட்டு சுனையில் நீராட இறங்கினர். சுனையில் நீராடும் நிர்வாணக் கன்னிகைகளைக் கண்ட முனிவர்களுக்கு ஆசை மிகுந்தது. அந்தப் பெண்களைப் புணர விரும்பினர்.

முனிவர்கள் அந்த நேரத்தில் புயலும் மழையும் வருமாறு எண்ணினர். அவர்கள் தவ வலிமையால் புயலும் மழையும் பெய்தது. தெய்வப் பெண்கள் பெரும் மழையைக் கண்டு சுனையின் கரையில் ஏறினர். கரையில் நின்ற முனிவர்கள் அவர்களை அணைத்தனர். உடனே ஏழு குழந்தைகள் பிறந்தன. சப்த கன்னிகைகள் அக்குழந்தைகளைக் கண்டு அஞ்சினர். இந்தக்குழந்தைகளை எப்படி வானுலகத்துக்குக் கொண்டு செல்லமுடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் கன்னியர்கள். ஆகவே நீங்களே குழந்தைகளை வைத்துக்கொள்ளுங்கள் என்று முனிவர்களிடம் சொன்னார்கள். ஒருசங்கில் முலைப்பாலைப் பீய்ச்சி முனிவர்கள் கையில் கொடுத்தனர். முனிவர்கள் இது காணாது என்றதும் காட்டில் மேய்ந்த பாண்டிய மன்னனின் காராம் பசுக்களின் பாலைக் கறந்து கொடுத்தனர். ஏழு குழந்தைகளுக்கும் செங்கமலன், அழகேசன், விக்கிரமன், சேதுங்கத் தலைவன், காளிநாதன், ஏனாதிநாதன், ஏலாதிநாதன் எனப் பெயரிட்டனர்.

காட்டுப் பசுக்களின் பாலைக் குடித்து குழந்தைகள் வளர்ந்தன. பசுக்களின் பால் குறைவதன் காரணத்தை அறியாத இடையர்கள் திகைத்தனர். பசுக்களின் பின்னே ஒளிந்து சென்று பார்த்தனர். ஏழு பாலகர்களும் காட்டுப் பசுக்களின் பாலைக் குடிப்பதைக் கண்டனர். இதைப் பாண்டிய மன்னனிடம் முறையிட்டனர். பாண்டியன் கானகத்தில் வளரும் பாலகர்களை விரட்டவேண்டும் என எண்ணி பெரும் படையுடன் வந்தான். இதை அறிந்த முனிவர்கள் பாலகர்களைப் பத்திரகாளியிடம் ஒப்படைத்தனர். காளி குழந்தைகளை வளர்க்கக் கொண்டு சென்றாள். அவர்கள் காளியின் வலங்கைப்பக்கம் இருந்தமையால் வலங்கைமக்கள் எனப்பட்டார்கள்.

நாவலந்தீவில் தாருகனின் கொடுமை அளவுக்கு மீறியது. அவன் தேவர்களைத் துன்புறுத்தினான். பிடித்துகொண்டு சென்று சிறையிலடைத்தான். துயரம் தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் காளியை அழைத்தான். ‘ ‘உன் மக்களுடன் சென்று தாருகனை வென்றுவா ‘ ‘ எனப் பணித்தார். காளி தன் வலங்கை மக்கள் ஏழு பேர்களுடனும் இடப்பக்கம் நின்ற பேய்ப்படைகளுடனும் போருக்குப் புறப்பட்டாள். வலங்கையரின் படையைக் கண்ட தாருகன் ஓடி ஒழிந்தான். வலங்கையர் பின்னால் துரத்தி சென்றனர். காளி சீறி நின்றாள். தாருகனை உடைவாளால் வெட்டினாள். அவன் கோட்டை அழிக்கப்பட்டது. தேவர்கள் காக்கப்பட்டனர்.

போரை முடித்துக்கொண்டு காளி காட்டுவழி வரும்போது தன் மக்களிடம் அருகிலே நீர்சுனை இருந்தால் அறிந்து வாருங்கள் என்றாள். எழுவரும் ஒரு மரத்தின் மேலே ஏறி சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கு கண்ட காட்சியைக் காளியிடம் சொன்னார்கள். ‘ ‘இந்திரன் விண்ணுலக நெறி தவறிய சுவேதாமுனியைக் கீழுலகில் தள்ளுமாறு தேவர்களிடம் ஆணையிட்டான். அம்முனிவரும் அவர் பத்தினியும் பூமியில் தள்ளப்பட்டனர். பூமியில் விழுந்த அவர்கள் ஒரு சுனையை உருவாக்கி அதன் கரையில் மகிழ்வாய் வீற்றிருக்கின்றனர் . அவர்களை நாங்கள் இப்போது கண்டோம் ‘ என்றனர்.

இதைக்கேட்ட காளி கோபம் கொண்டாள் ‘ ‘ தங்கள் தவறுக்கு வருந்தாத அந்த முனிவனையும் அவர் மனைவியையும் பிடித்து வாருங்கள் ‘ ‘ என்றாள். புத்திரர்கள் அவர்களைப் பிடித்து வந்தனர். காளி அவர்களைச் சினந்து சாபமிட்டாள். முனிவனும் அவன் மனைவியும் காளியின் சாபத்தால் பனை மரத்தில் ஏறி அதன் அமுதத்தைக் கபாலத்தில் ஊற்றிக்கொண்டு வந்தனர். அம்மை அந்த அமுதத்தைக் குடித்தாள். அவள் கோபம் தனிந்தது. பின்பு காளி பனையின் கனியை எடுத்துப் பாற்கடலில் போட்டாள். தேவர்கள் பாற்கடலைக் கடையும்போது அவர்கள் கையில் அது கிடைத்தது. இறைவன் அந்தப் பனம்பழத்தை எடுத்து வலங்கையர் கையில் கொடுத்து ‘ ‘ இக்கனியை நிலத்தில் ஊன்றிப் பயிராக்கி உலகம் புகழ வாழுங்கள் ‘ ‘ என்றார். காளி தன் மக்களை அழைத்து ‘ என் மக்களே நீங்கள் தாருகளை வென்ற ஜகவீரராஜர்கள். உங்கள் குலம் தழைக்கட்டும் ‘ ‘ என்று வாழ்த்தினாள்.

தாருகனின் இளைய தம்பி சமிகரன் என்பான் மாகாளியை எதிர்த்து வந்தான். காளியின் துணைக்குப்போன வலங்கையர் அவன் தலையைத் துண்டித்தனர். சில நாட்கள் கழித்து காளி தன் பிள்ளைகள் ஏழு பேருக்கும் ஆஞ்சகாயக் கந்தருவனின் பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துவைத்தாள். அதன் பிறகு அவர்களின் இனம் பெருகியது.

இப்படியிருக்கும் நாளில் சோழ மன்னனை வலங்கையர் எழுவரும் சந்தித்தனர். சோழன் அவர்களை தன்னுடன் இருக்கும்படி வேண்டினான். ஏழு பேரும் சோழனின் நாட்டில் குடிபெயர்ந்தனர். அப்போது சோழநாட்டின் மீது போர்தொடுத்த சம்பரன், கலியாணன், அமந்திகன் ஆகியோரை வலங்கையர் வெற்றி கொண்டனர். இந்தநாளில் இடங்கையர்கள் சோழநாட்டு வணிகர்களுக்குத் துன்பம் கொடுத்தனர். அவர்களை ஒடுக்க மன்னன் வலங்கையரிடம் சொன்னான். இடங்கையரை வலங்கையர் கவுதாரி வடிவெடுத்து அழித்தனர். அதனால் வணிகர்கள் வலங்கையரை வாழ்த்தித் தோளில் தூக்கி பாராட்டினர்.

இவ்வாறு இருக்கின்ற நாளையில் சோழநாட்டில் மழையில்லாமல் பஞ்சம் வந்தது. பெண்கள் கற்பின் வழுவியதே மழையின்மைக்குக் காரணம் என்றனர் அமைச்சர்கள். வலங்கைத் தலைவன் சொன்னான் ‘ ‘ நான் கடவூர் என்ற ஊருக்குப் போயிருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. கேளுங்கள் .கடவூரில் கம்மாளர் சாதியில் ஒரு தச்சன் இருந்தான். அவனுடைய மனைவி மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவள். ஒருநாள் அவள் கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவள் கணவன் அவளை அழைத்தான். அவள் வாளிக்கயிற்றைப் பாதியிலே விட்டுவிட்டு ஓடி வந்தாள். அவள் திரும்பிச் செல்லுமட்டும் கிணற்றின் வாளி அப்படியே இருந்தது. அத்தகைய கற்புடைய பெண் அவள். அவளை அழைத்து வந்து மழை பெய்யுமாறு சொன்னால் நாட்டில் மழை பொழியும் ‘ ‘ என்றான்

மன்னன் அந்தப் பெண்ணை அழைத்து வரச் செய்தான். அவளிடம் சோழநாட்டில் மழை பொழிய வைக்க வேண்டினான். பெரும் மழை பொழிந்தது. குளங்கள் நிரம்பின. ஆறுகள் உடைத்துப் பெருகின. பெருக்கெடுத்த காவிரியை அடைப்பதற்கு வலிமை உடையவர் யார் எனக் கேட்டான் மன்னன். ஒரு சிறுகுடி வேளாளன் தக்க தருணம் இது என்று கண்டு ‘ ‘ வலங்கை பரம்பரையின் 700 பேரும் சேர்ந்தால் பெரிய அணையையே கட்டிவிடுவார்கள் மன்னா ‘ ‘ என்றான். மன்னன் வலங்கையரை அழைத்தான். காவிரியின் அணையைக் கட்டவேண்டும் எனப் பணித்தான். வலங்கையர் மன்னா ‘ ‘ அது எங்களால் முடியாது ‘ ‘ என்றனர். மன்னன் ‘ ‘ இது அரச கட்டளை ‘ ‘ என்றான். அவர்கள் அசையவில்லை. ‘ எக்காரணத்தாலும் நாங்கள் கூடை தொட்டு மண் சுமக்கமாட்டோம் ‘ ‘ என்றனர்.

மன்னனின் காவலர்கள் வலங்கையரைச் சுற்றி வளைத்தனர். வலங்கையர் ‘ ‘ நாங்கள் இறந்தாலும் கூடை தொடமாட்டோம் இது உறுதி ‘ ‘ என்றனர். சோழநாட்டு அமைச்சர்களில் சிலர் ‘ ‘ மன்னா இவர்கள் காளி புத்திரர்கள் நம்மைப்பல இன்னல்களில் இருந்து காத்தவர்கள், இவர்களைப் பழித்தால் சோழநாடு அழியும் ‘ ‘ என்றனர்.

ஆனால் கோபம் கொண்ட ஆணவக்காரனாகிய சோழ மன்னன் அமைச்சர்களின் பேச்சைக் கேட்கவில்லை. கொலை யானையை வரவழைத்தான். வலங்கையரில் ஒருவனை யானைக்காலால் இடறச் செய்தான். அதைக் கண்டபிறகும் பிற வலங்கையர்கள் ‘ ‘ எங்கள் கூட்டத்தை அழித்தாலும் கூடை தொடமாட்டோம் ‘ ‘ என்றனர். மன்னன் அடுத்த வலங்கை வீரனின் தலையையும் இடறச் செய்தான். அந்த வீரனின் தலை தெறித்துப் போகும்போது கண்திறந்து ‘ ‘மன்னா எங்கள் தலைகள் தெறித்தாலும் நாங்கள் கூடை தொடமாட்டோம் ‘ ‘ என்றது.

அப்போது மன்னனின் கண்கள் திறந்தன. அமைச்சனின் பேச்சைக் கேட்காமல் அழிந்தோமே என மனம் வெதும்பினான். மற்ற வலங்கையரிடம் ‘ ‘ நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் . என் நாட்டை விட்டு நீங்குங்கள் ‘ ‘ என்றான். வலங்கையர் காளியிடம் சென்றனர். காளி சோகத்தை உரைத்தனர். காளி சீறினாள். ‘ ‘என் மக்களைச் சோழன் அழிந்தானா ? 12 ஆண்டுகள் அவன் தேசத்தில் மழை பெய்யாமல் இருக்கவேண்டும் ‘ ‘எனச் சாபமிட்டாள்.

சோழநாடு மழையின்றித் தவித்தது. குடிக்க நீரின்றி மக்கள் வாடினர். மன்னன் சோதிடனை அழைத்து மழையின்மைக்குக் காரணம் கேட்டான். சோதிடன் ‘ ‘மன்னரே வலங்கையரைக் கொன்றதற்கு காளியிட்ட சாபம் இது. காளியிடம் சரணடைந்து வேண்டுக ‘ ‘ என்றான்.

சோழன் காளியைப் பணிந்தான். ‘ ‘ என் தவறுக்குச் சிறுகுடியில் பிறந்த வேளாளன் ஒருவனே காரணம். அவனை உனக்குத் தந்துவிடுவேன் அவன் சொல்படித்தான் வலங்கையரை மண் சுமக்கச் செய்தேன் ‘ ‘ என்றான். காளி சோழனை மன்னித்தாள். சிறுகுடியினரை இனிமேல் நெசவுத்தொழில் செய்யுமாறு தண்டனை கொடுக்க மன்னனிடம் கூறினர் வலங்கையர். மன்னனும் அவ்வாறே ஆணையிட்டான். வலங்கையருக்குப் பொன்னம் பொருளும் வீரமார்த்தாண்டன் என்ற பட்டமும் கொடுத்தான்.

வலங்கையரில் இறந்தவர் இருவர் போக மீதி ஐந்து பேரில் சோழ நாட்டில் ஒருவன் தங்கினான். மற்ற நான்கு பேரும் கண்டிநாடு, கதிர்கொண்ட நாடு என வேறு இடங்களில் வாழ்ந்தனர். ஒருவன் மட்டும் இலங்கைக்குச் சென்றான். அங்கு பனைமரங்களை நட்டு அதன் அமுதத்தைப் பலருக்கும் கொடுத்து சிறப்போடு வாழ்ந்து வந்தான்.

இவர்கள் இப்படி இருக்க வித்தியாதர முனிவரில் ஒருவன் தன் மகன் ஈழத்தில் இருப்பதை அறிந்து பார்க்கச் சென்றான். ஈழத்தில் வலங்கை மகனின் வீட்டிற்குச் சென்றபோது அவன் இல்லை. அவனது குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் ‘ ‘ குழந்தைகளே மிகவும் பசிக்கிறது . அமுது இருக்குமா ? ‘ ‘ எனக் கேட்டார். குழந்தைகள் ‘ ‘ இன்று எங்கள் வீட்டில் சமைக்கவில்லை ‘ ‘ என்றனர். முனிவர் ‘ ‘ காளி அருளிய பனை அமுது இருக்கிறதா ? ‘ எனக் கேட்டார். குழந்தைகள் மகிழ்ந்து ‘ இதோ கொண்டு வருகிறோம் ‘ ‘ என்றனர். குருத்தோலைப் பட்டையை முனிவர் கையிலே கொடுத்து அமுதைப் பெய்தனர். முனிவர் அமுதை நிரம்பக் குடித்தார். பின் குழந்தைகளிடம் ‘ ‘ உங்கள் வீட்டில் இரும்புப் பொருட்கள் ஏதாவது இருக்கின்றனவா ? ‘ எனக் கேட்டார். குழந்தைகள் தந்தையின் பாளை அருவாளைக் கொண்டு கொடுத்தன. முனிவன் ஒரு பச்சிலையை அதன்மீது தடவினான். இதை எரியும் அடுப்பில் கொண்டு வைத்துவிடுங்கள் என்றார். முனிவன் மாயமாய் மறைந்துவிட்டான்.

சிறிதுநேரம் கழித்து வலங்கைத் தலைவன் வீட்டிற்கு வந்தான். குழந்தைகள் அடுப்பிலிருந்த அருவாளை எடுத்துக் கொடுத்தன. முனிவர் வந்த வரலாற்றையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கூறின. தலைவன் அரிவாளைப் பார்த்தான். அது பொன்னாக மாறியிருப்பதைக் கண்டான். குழந்தைகளிடம் அந்த முனிவர் தேய்த்த பச்சிலைகள் எங்கே தெரியுமா எனக் கேட்டான். குழந்தைகள் முனிவன் சென்ற வழியைக் காட்டின.

வலங்கைத் தலைவன் முனிவன் சென்ற வழியை அடையாளம் கண்டு போனான். முனிவர் இரும்பில் தேய்த்த பச்சிலை கசக்கப்பட்டு கிடப்பதை இனம் கண்டான். ஈழத்து இரும்புகளை எல்லாம் தொகுத்துப் பச்சிலை தேய்த்து பசம்பொன்னாக்கினான். அதைவைத்து அவன் பெரும் செல்வந்தனானான். அப்பணத்தால் பெரிய வெங்கல கோட்டைக் கட்டினான்.

வலங்கைத் தலைவனுக்கு ஒரு பெண்மகள் இருந்தாள். அவள் பெயர் தங்கப்பொன்னம்மை. அவள் உரிய பருவத்தை அடைந்ததும் அவளுக்கு வீரசோழநாடன் என்பவனை மணமுடித்து வைத்தான். மகளையும் மறுமகனையும் தன் கோட்டையிலேயே வைத்துக்கொண்டான்.

பத்தாம் மாதத்தில் தங்கப்பொன்னம்மை ஒரு ஆண்குழந்தை பெற்றாள். வெண்கலக் கோடையில் பிறந்தமையால் அதற்கு வெங்கலராசன் எனப் பெயரிட்டான். வெங்கலராசன் வலங்கை கோட்டையிலேயே வளர்ந்தான். வாலிப வயதைக் கடந்ததும் வெங்கலராசனுக்கு மேடை அழகி என்பவளை மணம் செய்து வைத்தான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மூத்தவளுக்கு சின்னதம்பி என்றும் இளையவளுக்கு சாலைகுளத்தம்பி என்றும் பெயரிட்டான்.

ஈழத்தில் வெள்ளையர் ஆட்சி வந்தது. வலங்கைத் தலைவன் நம்மிடம் இருக்கும் தங்கபாளங்களை வெள்ளைக்காரன் கண்டால் கவர்ந்துவிடுவான் அதனால் அதை மறைத்துவைக்கவேண்டும் என் எண்ணி பெரிய குழி வெட்டி அதில் எல்லா தங்கப்பாளங்களையும் போட்டு மண்ணால் மூடிவைத்தான். அதில் வாழைகளை நட்டான். வாழைகள் வளர்ந்தன. ஒரு வாழை இரண்டு குலைகள் தள்ளியது. இந்த அதிசயத்தை எல்லோரும் வந்து பார்த்தனர். வெள்ளைக்காரனும் வந்து பார்த்தான். அவனுக்கு சந்தேகம் வந்தது. வாழைகளை வெட்டினான். மண்ணைக் கிளறினான். மண்ணின் அடியில் தங்கப் பாளங்களைக் கண்டான். வலங்கையனைக் கட்டி வைத்தான். இத்தனை தங்கம் எங்கிருந்துவந்தது என்று கேட்டான்.

வலங்கையனுக்கு வேறு வழியில்லை. இரும்பைத் தங்கமாக்கிய மூலிகை பற்றிச் சொன்னான். அப்போது வெள்ளையனிடம் காளி அருளிய அருவாள் பெட்டி முதலான சின்னத்தைத் தங்கக்காசின் ஒரு புறத்தில் அச்சடித்து அதைச் சாணான் காசு என பிரகடனப்படுத்த வேண்டிக்கொண்டான் வலங்கையன்.

வெள்ளைக்காரன் வலங்கையனின் நிபந்தனைக்கு இணங்கியதுபோல் நடித்து வலங்கையனைக் கொன்றுவிட்டான். ஆகவே வெங்கலராசன் இனி நாம் இங்கே இருத்தல் கூடாது என நினைத்தான். சோழ நாட்டிலும் போகமுடியாது வேறு நாட்டிற்குப் போவோம் என முடிவு கட்டினான்.

கோட்டை கொத்தளங்களைப் பிரித்தான். தங்கப்பாளங்களையும் அரிசி, வெஞ்சனப் பொருட்களையும், ஆடைகளையும், அலங்காரப் பொருட்களையும், ஆனை, ஆடு, மாடுகள், கோழிகள் எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றினான். கப்பல் ஈழத்தை விட்டுப் புறப்பட்டது. பாய் விரித்தோடியது.

காவிரிபொழி முகம், பாம்பனாறு, செந்தூர்பதி, குலசேகரப்பட்டினம் ஆகிய பல இடங்களைக் கடந்து மணவைத் துறைமுகத்தில் கப்பல் வந்தது . வெங்கலராசன் கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு கரைக்கு வந்தான். கடற்கரை ஊர்கள் பலவற்றைப் பார்வையிட்டான். அவற்றில் சிறந்த வளங்களுடன் இருந்த சாமிக்காட்டுவிளையில் தங்க முடிவு செய்தான். கப்பலிலிருந்து வெங்கலக்கோட்டையை இறக்கி அங்கேயே பொருத்தினான். மாட மாளிகைகளைக் கட்டினான். தங்கப் பாளங்களை மாளிகையில் கொண்டு அடுக்கினான். மாளிகையில் இனிமையாகக் காலத்தைக் கழித்தான்.

அந்நாளில் வெங்கலராசனின் மகள் சாலைகுளத்தம்பி பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் ஆறாட்டு விழாவைக் கண்டுவரவேண்டும் என தந்தையிடம் கேட்டாள். தந்தை மறுத்தார். ‘ ‘அங்கு பல பேர் வருவார்கள். உங்களை யார் எனக் கேட்பார்கள். வினையை விலை கொடுத்து வாங்கவேண்டாம். மகளே சும்மாயிரு ‘ ‘ என்றான்.

சாலைகுளத்தம்பியோ ‘ ‘ நான் ஆறாட்டுக்குக் கட்டாயம் போய் வருவேன் ‘ ‘ என முரண்டு பிடித்தாள். வேண்டா வெறுப்பாகதத் தந்தை இசைந்தார். மகள் பட்டுடுத்து ஒப்பனை செய்து ஏழு தோழிப் பெண்களுடன் பறக்கைக்குச் சென்றாள்.

பறக்கை ஊரில் நாலுவீதிகளிலும் சுற்றி நின்று விழாக்கோலத்தைக் கண்டாள். அன்று ஆறாட்டு விழாவிற்கு வஞ்சி மன்னனும் வந்திருந்தான். சாலைகுளத்தம்பியின் அழகில் கவரப்பட்ட அமைச்சர்கள், அவளைப் பற்றி அரசனிடம் சொன்னார்கள். ‘ ‘ வலங்கை குலத்தில் உதித்த அப்பெண்ணைப்போல் மலைநாட்டில் நாம் கண்டதில்லை ‘ ‘ என்றனர். மன்னன் அவளை மணக்க விரும்பினான். இந்தச் செய்தியை அறிந்த வலங்கைப் பெண் வேகமாகப் போய் தன் கோட்டையை அடைந்தாள். கோட்டையில் வாய்மூடி மெளனமாக இருந்தாள்.

வஞ்சி மன்னன் ராமவர்மாவுக்கு அந்தப் பெண்ணை மறக்கமுடியவில்லை. அவளை மணப்பது என்று முடிவு கட்டினான். வெங்கலராசனுக்கு ஓலை எழுதினான். ஓலையை ஒட்டன் கையில் கொடுத்து ‘ ‘ இதை வெங்கலராசனிடம் கொடுத்துப் பதில் கேட்டுவா ‘ ‘ என்றான்.

ஒட்டன் சாமிக்காட்டுவிளைக்குச் சென்று ஓலையை வெங்கலராசனின் கையில் கொடுத்தான். ஓலையைப் படித்த வலங்கை மன்னன் ‘ ‘ இழிவான ராமவர்மாவுக்கு என் மகளைக் கொடுக்கவா ? என்ன துணிவு இவனுக்கு ? ‘ ‘ என வஞ்சி மன்னனைப் பழிந்து பேசினான். பெண் தரமுடியாது என மறுத்து அனுப்பினான். செய்தி அறிந்த வஞ்சிகுல மன்னன் வெங்கலராசன் மகளை சிறை எடுத்துத் திரும்புவேன் என வஞ்சினம் பேசினான். படை திரட்டிக்கொண்டு சாமிக்காட்டுவிளைக்கு வந்தான்.

சேரனின் பெரும்படை வருவதை அறிந்த வெங்கலராசன் தன் வெங்கலக்கோட்டையின் வாசலை அடைத்தான். சேரனின் படை கோட்டையை வளைத்தது. வெங்கலராசன் மயங்கி நின்றான். ‘ ‘மகளே உன்னால் வந்த துன்பத்தைப் பார்த்தாயா ? ஆறாட்டுக்குப் போகாதே என்றேனே! கேட்டாயா ? இப்போது எல்லோரும் மாண்டொழியப் போகிறோமே என்ன செய்வது ? ‘ ‘ என்றான்.

சாலைக்குளத்தம்பி தன் தந்தையைப் பார்த்துச் சொன்னாள். ‘ ‘வலங்கை குலத்தில் பிறந்த தீரரே! தந்தையை வாழ்நாள் நிலையில்லாதது. எல்லோரும் சாகத்தான் போகிறோம். என் தலையைக் கொய்து கோட்டைக்கு வெளியே எறிந்துவிடு. உடலற்ற தலையைப் பார்த்த மன்னனின் ஆசை அடங்கிவிடும். திரும்பிவிடுவான் ‘ ‘ என்றாள். வெங்கலராசனோ உன் தலையை எறிந்து நாங்கள் உயிர் வாழ்வதா ? உலகோர் என்ன சொல்லுவார்கள் ? ‘ ‘ என்றான்.

அழகியோ அப்பாவைக் கட்டாயப்படுத்தினாள். ‘ ‘ என் தலை போகட்டும். வலங்கை குலம் அழியவேண்டாம் ‘ ‘ என்றான். வலங்கையனும் மகளின் தலையை அறுத்து அப்பால் எறிந்தான்.

கோட்டைக்கு வெளியே விழுந்த தலையைக் கண்ட வஞ்சி மன்னன் நடுங்கிவிட்டான். மனம் நொந்தான். இந்த அழகிக்காக நாம் பட்டபாடு போச்சே என்றான். தலையை எடுத்துக்கொண்டு போய் எரித்தான். தன் படையுடன் தன் தலைநகர் திருவிதாங்கோட்டுக்குப் போனான்.

வெங்கலராசனின் இன்னொரு மகளான சங்குமுத்தழகி சின்னத்தம்பி ‘ ‘தந்தையே நம் குலத்தைப் பாதுகாக்க தங்கையின் தலையைக் கொடுத்தோம். இனி வஞ்சி மன்னன் வாளா இருக்கமாட்டான். படை நடத்தி வருவான். தனால் நாம் வேறு நாட்டிற்குச் சென்றுவிடுவோம் ‘ ‘ என்றாள்.

வெங்கலராசனும் சாமிக்காட்டுவிளையிலிருந்து புறப்பட முடிவு செய்தான். தன் பொருள்களையும் நிறைய தங்கப்பாளங்களையும் கப்பலில் ஏற்றினான். கப்பல் பாய் விரித்தோடியது. திருச்செந்தூர் பதியை அடைந்தது. மணப்பாட்டு பொழிமுகத்திலே கப்பலை நிறுத்தினான். திருச்செந்தூருக்கும் மணப்பாட்டுக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தான். அங்கு காட்டை அழித்து கோட்டை கட்டினான். கப்பலில் உள்ள பொருட்களை அங்கே கொண்டு நிரப்பினான்.

மணப்பாட்டுக் கோட்டையில் வெங்கலராசன் வாழ்ந்துவரும் காலம். வலங்கையனின் மகள் சின்னத்தம்பி ஏழு தோழிகளுடன் சுனையாடச் சென்றாள். சுனையாடிவிட்டு வீட்டுக்கு வந்தவள் தன் கோட்டை வாசலில் நின்று தலை கோதினாள். அவளது தலைமுடி ஒன்று காற்றில் பறந்துபோய் பக்கத்து ஊரில் உள்ள குறும்பூர் கோட்டையின் அருகே விழுந்தது.

சின்னத்தம்பியின் ஒரு முடியைப் பார்த்த குறும்பூர் அமைச்சன் இந்த முடிக்குரியவள் பேரழகியாக இருக்கவேண்டும் என குறும்பூர் அரசன் நளராசனிடம் கூறினான். மன்னன் அவளை எப்படியாவது கண்டுபிடித்து வா என்றான். இளைஞனான அந்த அமைச்சன் சின்னத்தம்பியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். நளராசன் அவளைத் திருமணம் புரிய ஆசைப்பட்டான் ஒட்டனிடம் வெங்கலராசனுக்கு ஓலை கொடுத்து அனுப்பினான்.

ஒட்டன் கொடுத்த ஓலையைப் படித்த வெங்கலராசன் கொதித்து எழுந்தான். ‘ ‘ வலங்கை குலத்தில் பிறந்தவன் மகளைக் குறும்பூரான் எப்படி பெண் கேட்கலாம். ஒட்டனே ஓடிவிடு. ஓலையை உடைப்பில் போடு ‘ ‘ என்றான். ஒட்டன் வெங்கலராசன் கூறியதை நளராசனிடம் கூறினான்

நளராசன் ‘ ‘நம் நாட்டில் கோட்டை கட்டி வாழும் ஒருவர் நம்மை இகழ்ந்துவிட்டானே. நம்மைவிட அவன் குலம் உயர்ந்ததா ? இப்போதே அவன் கோட்டையை அழித்து அவளைச் சிறை எடுப்பேன் ‘ ‘ என்றான்.

அமைச்சன் நளராசனைத் தடுத்தான். ‘ ‘மன்னா பெண்ணைச் சிறை எடுப்பது பாவம். அது நம் குலத்திற்கு இழிவு. அதனால் சூழ்ச்சியால் அவளை நாம் கொண்டுவரவேண்டும். ஆண்டுதோறும் நம் தோட்டத்தில் விளையும் வருஷக்கனியை அவள் நீர்கொண்டு செல்லும் குடத்தில் விழும்படிச் செய்யவேண்டும். இதற்குச் செங்கிடாக்காரனுக்குப் பூசை செய்து ஏவிவிடலாம் ‘ ‘ என்றான்.

அமைச்சன் சொன்னது மாதிரியே செங்கிடாக்காரன் வருஷக்கனியாக மாறி சங்குமுகத்தழகி சின்னத்தம்பியின் குடத்தில் கிடந்தான். அவளைச் சோதித்த காவலர்கள் அவள் கனியைத் திருடியதாகவும் அவளைக் கைது செய்து நளராசனிடம் கொண்டு சென்றனர்.

சங்குமுகத்தழகியைத் திருடி எனக் காவலர்கள் கைது பண்ணிக் கொண்டு சென்றதும் வெங்கலராசன் திடுக்கிட்டான். மகள் உண்மையில் திருடி ஆகிவிட்டாளோ என வருந்தினான். குலத்துக்கு தீராப்பழி வந்ததே என்று மான்முடைந்தான். அப்பழியை நீக்கவேண்டும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்.

சங்குமுகத்தழகி நளராசனின் அரண்மனையில் சிறைப்பிடிக்கபட்டு நின்றாள். மன்னன் அவளைப் பல ஆண்களின் முன் திருடி என்று பரிகசித்தான். அவள் ‘ ‘ பாவி உன் குலம் அழியும். உன் நாடு பாழாகும். உன் நாட்டில் மண்மாரி பொழியட்டும். கூகைகள் அடையட்டும் ‘ ‘ என சாபமிட்டாள். உடனே அவளும் இறந்தாள்.

அவள் சாபம் பலித்தது. நளராசன் நாட்டில் மண்மாரி விழுந்தது. நாடு அழிந்தது. மன்னரும் பிறகும் வெங்கலராசன் சிறப்பையும் வலங்கைகுலத்தின் மகிமையையும் அறிந்தனர். அவர்களை கோயில்கட்டி வணங்கினர்.

—-

Series Navigation

மக்கள்தெய்வங்களின் கதைகள் 7

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

அ. கா. பெருமாள்

மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அ கா பெருமாள்

7. பிச்சைக்காலன் கதை

காஞ்சி நகரில் படைத்தலைவானாக சமர்த்தன் என்ற மறத்தலைவன் இருந்தான் . அவன் நாட்டில் பிச்சை என்ற மறத்தி வாழ்ந்தாள். மிகச்சிறந்த அழகி அவள். அவளது அழகைக் கண்ட மாடப்பன் என்ற மறவன் ஆசைகொண்டு மாலையிட இசைந்தான். திருமணம் நடந்தது. மாடப்பன் அவளை மணந்து ஊற்றுமலைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அஙகு மகிழ்வாக வாழும் நாளிலே பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அரிதிப்பிள்ளை எனப் பெயரிட்டனர். பிச்சை அம்மாளுக்கு இன்னொரு ஆண் குழந்தையும் வேண்டும் என்ற ஆசை. அதற்காக மாடப்பன் தவம் இருந்தான்.

அவளது பெருந்தவத்திற்கு இறைவன் இரங்கவில்லை. அவள் குமரிப்பதியில் நீராடி இறைவனை வேண்டிப் பார்ப்போம் என்று முடிவு செய்து தென்குமரிக்குச் சென்றான். அம்மனை வணங்கிவிட்டு தக்கலை வழி திருவனந்தபுரம் வந்தாள். கோயில் செல்லும் வழியில் வழியில் குறமகள் ஒருத்தி பிச்சை அம்மாளைக் கண்டு குறி சொன்னாள். அவள் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவனுக்குத் தென்காசி வன்னியப்பன் பெயரை வைப்பாய். அவன் வீரமானவனாகவும் புகழ்மிக்கவனாகவும் இருப்பான் என்றாள்.

நாட்கள் பல சென்றன. மாதம் 10 கழிந்தது. நிறைமாத கர்ப்பிணி பிச்சையம்மாள் ஆண் மகவு ஒன்றைப் பெற்றாள். அழகிய குழவியைக் கண்ட தோழிகள் குரவை இட்டனர். மகிழ்ந்தனர். குழந்தைக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்தனர். தென்காசி வன்னியப்பன் நினைவாக

குழந்தைக்குப் பிச்சைக்காலன் என்று பெயரிட்டனர்.

அரிதிப் பிள்ளையும் பிச்சைக்காலனும் அழகொளிர வளர்த்தனர். அவனது பிறந்த நாள் விழாவிற்கு எல்லா மறவர்களையும் அழைத்து மாடப்பன் அறுசுவை உண்டி படைத்தான். அன்று மறவர்கள் ‘ ‘நாம் நாளை எல்லோரும் நிரை மறிக்கப் போவோம் ‘ ‘ என்றனர். [மறவர்கள் கூட்டமாகச் சென்று பிறரது கால்நடைகளை கவர்ந்துவருதல் ஒரு சடங்கு. அதற்குரிய பிணைத்தொகையைப் பெற்றுக் கொண்டு கால்நடைகளைத் திருப்பித்தருவார்கள். சங்க காலத்தில் இது ஆநிரைகவர்தல் என்று அழைக்கப்பட்டது] மறுநாள் மாடப்பன் தலைமையில் பலவகை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மறவர்கள் நிரை மறிக்கப் போனார்கள்.. ஆனால் கால்நடைகளுக்கு உரிமை உடைய தோட்டிகளோ பெருந்திரளாக வந்து மாடப்பனைக் கொன்றுவிட்டார்கள். மற்றவர்களும் அவர்களைக் கண்டு அஞ்சி திரும்பிவிட்டனர்.

இந்தச் செய்தியை அறிந்தாள் பிச்சைக்காலம்மை. மனம் உடைந்து ஒப்பாரிவைத்து அழுதாள். கணவனை இழந்தபிறகு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊர்விட்டு புறப்பட்டாள். களைப்புடன் நடந்தாள். பெரியாற்றைக் கடந்து நடந்தாள்.

பசித்தபோது வழியில் உள்ள ஊர்களில் பிச்சை எடுத்தாள். தோட்டங்களிலும் சாலையோரங்களிலும் வளர்ந்துகிடக்கும் அறக்கீரையைப் பறித்து உப்பில்லாமல் அவித்துத் தின்றாள். மகன் பிச்சைக்காலன் ‘ அம்மா பசிக்கிறதே ‘ பசி என்று அழுதான். அவள் ‘ மகனே நாஞ்சில் நாடு செல்வோம். அது வளம் மிக்க மண். அங்கே போநால் உன் பசி ஆறும் அமைதியாக இரு ‘ என்றாள்.

நடந்து நடந்து பல இடங்களைக் கடந்து கோட்டாற்றுக்கு [நாகர்கோவில் ] வந்தாள். அங்கு நிலப்பாறை பணிக்கர் என்பவரிடம் சென்று ‘பணிக்கரே கணவனை இழந்தவள். குழந்தைகளுடன் அனாதையாக இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வாழ வழி காட்டும். பலநாள்ப் பசியால் தவிக்கிறேன் ‘ என்றாள்.

பணிக்கர் ‘ நான் ஒன்றும் செய்ய முடியாது. சூரநகரில் சேனைக்குட்டி நாடார் என்பவர் இருக்கிறார். மிகுந்த செல்வாக்குடையவர். அவரிடம் சென்றால் உனக்கு வாழ வழி காட்டுவார் ‘ என்றார்.

பிச்சையம்மாளும் பல ஊர்களைக் கடந்து சூரநகர் வந்தாள். அங்கே வாழ்ந்த நிலக்கிழாரான சீரங்கம் சேனைக்குட்டி நாடாரைக் கண்டாள். தன் வரலாற்றை எடுத்துரைத்தாள். நாடாருக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது. ‘ எனக்குப் பிள்ளை இல்லை. அந்தக் குறையைக் போக்க நீ வந்தாய். கவலை விடுக ‘ என்றார். அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தார். நல்ல ஆடை கொடுத்தார். தன் தோப்பு துரவுகளைக் கட்டிக் காப்பாற்ற உதவுங்கள் என்றார் . அவர்களும் அவருக்கு உதவுவதற்காக அவரது வீட்டின் அருகே குடியமர்ந்தனர்.

பிச்சைக்காலனுக்கு வயது 12 ஆனது. சேனைக்குட்டிநாடாரின் தோப்பையும் வயலையும் வீட்டைஉம் கவனிக்கும் பொறுப்பை அவனே செய்தான். வேலைக்காரர்களை அடித்து வேலை வாங்கினான். மாடம்பிமார்களுக்குத் தப்பாமல் விருந்து வைத்தான். எல்லாம் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அனைவரும் அவனை அஞ்சினார்கள்.

சேனைக்குட்டி நாடாரிடம் பண்ணையாட்கள் சென்று ‘ ‘ ஐயா எங்கள் குறைகளைக கேளுங்கள் . எங்களுக்கு பசி பொறுக்கவில்லை. புதிய மறவன் எங்களைக் கொல்லுகிறான். நல்ல தீனி தருவதில்லை. மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறான். ‘ ‘ என்றனர். அவர் மனதில் பிச்சைக்காலனைப்பற்றி தவறான எண்ணம் ஓரளவு உண்டாயிற்று. ஆனால் பிச்சைக்காலன் பண்ணை ஆட்களை வைத்து வயலைப் பயிரிட்டுச் செழிக்க வைத்திருந்தான்.லாகவே அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரது ஊழியர்கள் அனைவரும் பிச்சைக்காலனை வெறுத்து தருணம் பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் வயலில் நல்ல பாம்பு வந்தது. அதைக்கண்ட பிச்சைக்காலன் ‘ ‘ இது கெட்ட சகுனமல்லவா, இதனால் நமக்கு எதேனும் கெடுதி வருமோ ‘ ‘ எனக் கவலையுற்றான்.

அவ்வூரைச் சேர்ந்த கள்ளச்சிலம்பன் என்ற நாடான் எப்படியாவது பிச்சைக்காலனை அழிக்க வழி பார்த்தான். காரணம் அவன் அனைவரையும் சுரண்டி வாழ்பவன். அவனுக்குப் பிச்சைக்காலன் வந்தபிறகு வருமானம் குறைந்தது. இந்தநிலையில் வயல் நல்ல விளைந்து, பயிர் அறுவடை ஆகும் நேரமும் வந்தது. அவ்வூரைச்சேர்ந்த காவேரி என்பவளிடம் பிச்சைக்காலன் ‘நாடாரை வயலின் செழிப்பை வந்து பார்க்கச் சொல் ‘ என்று ஓலை எழுதினான். அவரும் வந்தார்.

கதிர் விளைந்து நின்றதனால் பிச்சைக்காலன் இரவு காவலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். மேலே துப்பட்டா போட்டுக்கொண்டான். கருமறத்தி அவனுக்குக் கோழிக்கறி வைத்துக் கொடுத்தாள்.

கள்ளச்சிலம்பனோ அவனை அழிக்க தன் கூட்டாளிகளுடன் சிந்தித்தான். அவர்கள் காவேரி நாடாத்திக்கும் பிச்சைக்காலனுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி சண்டை மூட்டிவிடுவதே நல்லவழி என்று முடிவு கட்டினர். அதற்கு ஆதாரமாக பிச்சைக்காலன் எழுதிய கடிதத்தை சாட்சியாக்கினார்கள்.

எல்லோருமாகக் கூடி சேனை குட்டி நாடார் வாழ்ந்த புளிக்குளத்துக்குச் சென்றனர். சேனைகுட்டி நாடாரைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். நாடார் அவர்களைப் பார்த்து ‘ ‘ நடந்ததென்ன பிச்சைக்காலனுக்கு ஆபத்தா ? சொல்லுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் ‘ ‘எப்படிச் சொல்லுவோம். நாக்கே கூசுகிறதே. ஐயோ நம் நாடாத்தி பிச்சைக்காலனுக்கு கோழிக்கறி கொடுத்தாள். அதன்பின் இருவரும் கூடியிருந்தனர். மகிழ்ந்தனர். வேறு என்னவெல்லாமோ செய்தனர் ‘ ‘ என்றனர்.

அதைக்கேட்ட நாடார் கொதித்தெழுந்தார். ‘ குலமுறை தவறிய மறவனைச் சும்மா விடக்கூடாது. இப்பொழுதே அவனைக் கட்டிப்பிடித்து இழுத்து வாருங்கள் ‘ ‘ என்றார்.

அவர்களும் உற்சாகமாக ‘ ‘சரி என்று கூறி விடை பெற்றனர். அவர்கள நேராகப் பிச்சைக்காலனிடம் சென்று ‘ ‘ உன்னை நாடார் அழைக்கிறார் ‘ என கூறினர். அவனும் எங்கே அவர் என்ற கேட்காது அவர்கள் பின் சென்றான்.

சாயக்காரர் மடத்தில் நாடார் இருந்தார். அவர் அருகே சென்றான் பிச்சைக்காலன். அப்போது கள்ளச்சிலம்பன் ஓடிவந்து பிச்சைக்காலனைக் கட்டினான். பிச்சைக்காலன் திகைத்தான். ‘ ‘ இந்த நடு இரவில் என்னை ஏன் கட்டுகிறீர்கள் ? என்ன ஆயிற்று ? நான் என்ன தவறு செய்தேன் ? ‘ என்றான்.

அவர்கள் அவனை கட்டிவைத்து அடித்தார்கள் ‘ ‘ என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா ? இங்கே நியாயம் பேச யாருமில்லையா ‘ ‘ என்று பிச்சைக்காலன் கதறினான் . ஆனால் அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே ஒரு குளத்தின் கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவனை அரிவாளால் அவனை வெட்டினர். தூரத்தில் ஒரு பனை ஏறி அவனைவெட்டுவதையெல்லாம் பனையிலிருந்தபடி பார்த்தான்.

வெட்டுப்பட்டு விழுந்த பிச்சைக்காலன் ரத்தம் வழிய அலறியபடி அங்கே இருந்த அய்யனார் கோவிலில் வந்து விழுந்தான். அய்யனாரை அவ்ணங்கி ‘ ‘ எனக்கு நீதி கிடைக்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நியாயம் செய்ய நீயே துணை ‘ ‘ என்று அழுதான். அவனுடைய குரல்கேட்டு அய்யனார் கண்திறந்தார். ‘ ‘நீ அழாதே. நான் நியாயம் அறிந்தவன். உனக்கு என்ன வேண்டும் ? ‘ என்று கேட்டார்

பிச்சைக்காலன் அய்யனாரிடம் வரிசையாய் வரங்கள் கேட்டான். ரத்தஆறு வடிய நின்ற அவனுக்கு அய்யனார் வரங்கள் கொடுத்தார். அவ்வரங்களின் உதவியால் பிச்சைக்காலன் ஆவியாக மாறி ஊருக்குத் திரும்பினான். தன்னை சதிசெய்து கொன்றவர்களை தேடித்தேடிப் பழி வாங்கினான். அவர்களுடைய குலங்கள் அஞ்சி நடுங்கின. பனைமீதிருந்த பனையேறி எல்லா தகவலையும் சொன்னான். அதைக்கேட்ட உறவினர்கள் பிச்சைக்காலனை அங்கே நடுகல்லாக நாட்டி தெய்வமாக வணங்கினார்கள். பலி தந்து அவனை ஆறுதல்கொள்ளச் செய்தார்கள். அடங்கிய பிச்சைக்காலன் அவ்வூரிலேயே தெய்வமாக அமர்ந்து அவர்களுக்கு அருள்பாலித்தான்

—-

Series Navigation

மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அ கா பெருமாள்

நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி அருகே முட்டப்பதி என்ற ஊர் அக்காலத்தில் கோட்டை கோபுரங்களுடன் செழிப்புடைய ஊராக இருந்தது . அவ்வூரில் கோனாண்டி ராசா கொந்தளிப்ப ராசா என்னும் இருவரும் தனித்தனியே கோட்டைக் கட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.

கோனான்டி ராசாவின் கோட்டைக்குள் சிறிய மண்டபங்கள் பல இருந்தன. அந்தப்புரம் உண்டு. கரிபரி கனத்த ரதம் காலாள் வீரர்கள் இருந்தனர். எந்நேரமும் வீரர்களின் கலகலப்பு அங்கு இருக்கும். எப்போதும் ஆரவாரம் மிகுந்திருக்கும். கோட்டைக்குள் மூத்த நயினாருக்குக் கோவில் இருந்தது. அதில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடந்தன.

கோனான்டி ராசனுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை. அவன் மனைவி மந்திரப்பூமாலை குழந்தை வேண்டி நேராத கோவில்கள் இல்லை . அவள் தானங்கள் செய்யாத கோவில்கள் இல்லை. தோழிகளுடன் கோவில் கோவிலாகத் தவமிருக்கப் போனாள்.

ஒருநாள் கோனான்டிராசனின் கோட்டைக்குள் மலைக்குறத்தி ஒருத்தி வந்தாள். கோனான்டி ராசன் அவளுக்கு சீர்வரிசைகள் செய்தான். என் மனைவிக்குக் குறி சொல்லுவாய் எனப் பணித்தான். குறத்தி மந்திரப்பூ மாலையின் கையைப் பிடித்து நல்லகுறி சொன்னாள். ‘ ‘உன் குலதெய்வம் மூத்த நயினாருக்கு நல்ல வழிபாடு செய். ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதற்குத் தோட்டுக்காரி என்று பெயரிடு. அவளின் 12ஆம் வயதில் குமரப்பராசன் அவளை சிறைகொண்டு செல்வான். அதனால் பெரும் போர் வரும். எல்லோருமே மாண்டுபோவீர்கள் ‘ ‘ என்றாள்.

குறத்தி சொன்ன குறி அச்சமளித்தாலும் அவர்களால் குழந்தை ஆசையை அடக்க முடியவில்லை. குறத்தி சொன்னபடி மந்திரப்பூமாலை கர்ப்பமுற்றாள். அவள் குழந்தை பெற ஈத்துப்புரை [பேற்றுக்கான அறை ] கட்டினான் கோனான்டி. இறைவனின் பெயரைச்சொல்லி அவ்வறையில் நுழைந்தாள் அவள். அவளது பேறுகாலத்துக்கு உதவ பொன்னுருவி என்ற மருத்துவத்தாய் வந்தாள். குறத்தி சொன்ன நேரத்தில் மந்திரப்பூமாலை ஒரு பெண் குழந்தை பெற்றாள். அதற்குத் தோட்டுக்காரி எனப் பெயரிட்டனர். இதே நேரத்தில் முட்டப்பதியின் இன்னொரு பக்கத்தில் கோட்டை கட்டி வாழ்ந்த கொந்தளப்பராசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு குமரப்பன் எனப் பெயரிட்டனர்.

தோட்டுக்காரிக்கு வயது 12 ஆனது. அவள் அழகுடன் திகழ்ந்தாள். குமரப்பனுக்கும் வயது 12ஆனது. வாள் , வில் , வேல் போன்ற ஆயுதங்களை, இயக்குவதில் வல்லவனாக இருந்தான். ஒருமுறை அவன் தோட்டுக்காரியின் கோட்டைவழியாகச் சென்றான். கோட்டைவாசலில் பந்தடித்து விளையாடிக்கொண்டிருந்த தோட்டுக்காரியைப் பார்த்து அவள் அழகில் தன்னை இழந்தான். காதலால் கருத்தழிந்து அறிவிழந்தான்.

குமரப்பன் தன் அரண்மனைக்கு வந்து மஞ்சத்தில் விழுந்தான். கொந்தளப்ப ராசன் மகனின் நிலைகண்டு பதறினார். மகனின் மனம் சடைவைக்குக் காரணம் என்ன என மகனைக் கேட்டான். மகன் தோட்டுக்காரியைக் கண்டதைப் பற்றியும் அவளை மணம் செய்யவேண்டும் என்றும் அவளின்றி வாழமுடியாது என்றும் கூறினான். தந்தை ‘ ‘மகனே கவலை வேண்டாம். அவளை உனக்கு மணம் பேசி வருவேன். பெரும்படை நமக்கு உண்டு ‘ ‘ என்றான்.

கொந்தளப்பன் தோட்டுக்காரியைத் தன் மகனுக்கு மணம் செய்ய விரும்புவதாக கோனான்டி ராசனுக்கு ஓலை எழுதி ஒட்டனிடம் கொடுத்து அனுப்பினான். ஒட்டன் கோனான்டியிடம் ஓலையைக் கொடுத்தான். செய்தியைப் படித்த கோனான்டி துள்ளிக் குதித்தான். ‘ ‘என்ன நினைத்தான் இந்த அற்பப்பதர். இவன் என் முறைமாப்பிள்ளையா ? என் சாதியா ? ஒட்டனே ஓடிவிடு. நாக்கை அறுத்துவிடுவேன் ‘ ‘ என்றான்.

ஒட்டன் கொந்தளப்பனிடம் சென்று நடந்ததைச் சொன்னான். அவன் கண்கள் சிவந்தன. ‘ ‘அற்பன் என் படைகளுக்கு முன் அவன் தூசு. என்னை இகழ்ந்தவனை நான் வாழவிடமாட்டேன். வீரர்கள் இன்னும் ஏன் மெளனம் சாதிக்கவேண்டும். படைகள் தயாராகட்டும் ‘ ‘ என்றான்.

அப்போது மகன் குமரப்பன் ‘ ‘தந்தையே என் வஞ்சத்தை நானே தீர்ப்பேன். தோட்டுக்காரியை நானே சிறையிட்டு வருவேன் .நீங்கள் படையுடன் செல்வது என் ஆண்மைக்கு உகந்ததல்ல ‘ ‘ என்றான்.

குமரப்பன் தன் படையுடன் சென்றான். கூட்டப்புளி என்ற இடத்தில் கூடாரம் அடித்தான். தோட்டுக்காரியை சிறையெடுக்க தருணம் பார்த்திருந்தான்.

இந்த நேரத்தில் தோட்டுக்காரி சீயக்காய், நெல்லிப் பருப்பு எண்ணெயுடன் தோழிகள் சூழ சுனையில் நீராட வந்தாள். அப்போது தீய சகுனங்கள் தோன்றின. அவள் அவற்றைக் கண்டாலும் கூட விதி அவள் கண்ணை மறைக்க அவள் சுனைக்கு வந்தாள்.

தோட்டுக்காரி சுனையில் குளித்துக்கொண்டிருக்கும் செய்தியைக் குமரப்பனிடம் ஒருவீரன் வந்து சொன்னான். குமரப்பன் அவளைக் காரணம் இன்றிச் சிறையெடுப்பது சரியல்ல , அதனால் பழி வரும் என்று எண்ணினான். ஒட்டனிடம் ‘ நீ போய் தோட்டுக்காரி நீராடும் சுனையில் நீர் மொண்டுகொண்டு வா ‘ ‘ என்றான்.

ஒட்டன் சுனையில் நீர் மொண்டான் . அதைக்கண்ட அழகி தோட்டுக்காரி வெகுண்டு ‘ ‘கயவனே யாரிடம் கேட்டுக்கொண்டு இங்கே வந்தாய் ? பெண்கள் குளிக்கும் படித்துறையிலா நீ மொள்ளுவாய் ? ‘ ‘ என்று கேட்டாள்.

ஒட்டன் ‘என் தலைவன் குமரப்பனுக்கு நீர்வேண்டி வந்தேன் ‘ என்றான். தோட்டுக்காரி கோபம் கொண்டு குமரப்பனைப் பழித்துப் பேசினாள். அவள் தோழிகள் ஒட்டன்மீது கற்களை எறிந்தனர். அடிபட்ட ஒட்டன் குமரப்பனிடம் ஓடினான். குமரப்பன் இதோ தோட்டுக்காரியைச் சிறைப்படுத்தக் காரணம் கிடைத்தது என மகிழ்ந்து படையுடன் புறப்பட்டான்.

தோட்டுக்காரியைக் குமரப்பன் நெருங்கினான். சுனைக்கரையில் நின்ற அவள் ‘ ‘பெண்ணால் இறந்த அரசர்கள் பலர் உண்டு. வள்ளியூர் அரசன் பெண்ணால் இறந்த கதை தெரியாதோ, அழிந்து போவாய் ‘ ‘ என்றாள்.

காமமும் அகந்தையும் தலைக்கேறிய குமரப்பன் அதைப்பொருட்படுத்தாமல் தோட்டுக்காரியைத் தூக்கி யானை மேல் வைத்தான். தன் கோட்டைக்குள் நுழைந்தான். அவளை மாடப்புரைக்குள் வைத்துப் பூட்டினான்.

மகனின் திறமையைக் கண்ட தந்தை மகிழ்ந்தான். காவலை அதிகரித்து கோட்டையைப் பலப்படுத்தினான்.

குமரப்பன் தன் மகளைச் சிறைப்பிடித்த செய்தி கேட்ட கோனான்டி ராசன் மனம் பதைத்தான். பெரும்படையுடன் கொந்தளப்பனின் கோட்டைக்கு வந்தான். இருவரின் படைகளும் மோதின. பெரும்போர் நடந்தது. வீரர்கள் பலர் மடிந்தனர். குமரப்பன் மட்டும் வடுப்படாமல் நின்றான். குமரப்பனின் கோட்டை அழிந்தது. உறவினர்களும் வீரர்களும் இறந்தனர்.

தோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டதை அறிந்தாள். இனிமேல் உயிரோடு இருப்பது பாவம் என உணர்ந்தாள். ஆதிசிவனையும் ஸ்ரீரங்கனையும் வேண்டினாள். நெருப்புக்குழி உடனே பிறந்தது. அதில் பாய்ந்தாள். அப்போது அங்கே வந்த குமரப்பன் இனி தானும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தான். தோட்டுக்காரி பாய்ந்த நெருப்புக்குழிக்குள் பாய்ந்து உயிரை விட்டான். இருவரும் சேர்ந்து எரிந்தார்கள்.

குமலமானத்துக்காக உயிர் விட்ட தோட்டுக்காரி கைலாசநாதன் அருளால் தெய்வமாகி கோவில்கொண்டாள். அவள் குலங்கள் அவளுக்கு கொடை கொடுத்து பூசை செய்தார்கள். இன்று அவள் ஆலயம் முட்டப்பதியில் உள்ளது.

1. தென்குமரியின் கதை 2 . தெய்வங்கள் முளைக்கும் நிலம் [தமிழினி பதிப்பகம்] கவிமணியின் படைப்புகள் முழுத்தொகுப்பு [செண்பகா ஒபதிப்பகம்]

Series Navigation

மக்கள்தெய்வங்களின் கதைகள் 2

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

அ கா பெருமாள்

பொன்னிறத்தாள் அம்மன் கதை

கடையம் என்ற ஊரிலே அணஞ்சபெருமாள் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பொன்மாரி என்பவள் மிகவும் அழகுடையவள். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ஆண்குழந்தைகள் பிறந்தன. சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் என அவர்களுக்குப் பெயரிட்டிருந்தான்.

ஏழு ஆண் குழந்தைகள் இருந்தும் பெண் குழந்தை இல்லையே என்ற கவலை பொன்மாரிக்கு ஏற்பட்டது . அவள் கோவிலைத் கூட்டிப்பெருக்கி நீர் தெளித்து கடன்செய்தாள். நாள்தவறாமல் விளக்கேற்றி ஈரத்துணி உடுத்து கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலை நாதன், சிவனணைஞ்ச மார்த்தாண்டன் ஆகிய தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக்கொண்டாள். அதன் பலனாக அவள் கர்ப்பமுற்றாள். பத்தாம் மாதத்தில் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பொன்மாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனக்கு உதவி செய்த பெண்களுக்குப் பொன்னை வாரி வாரிக் கொடுத்தாள்.

பொன்னிறமாயிருந்த அக்குழந்தைக்குப் பொன்மாரி எனப் பெயரிட்டனர். அவள் வளர்ந்து அழகிய பெண்ணாக மாறினாள். பொன்னிறத்தாளின் அழகு பக்கத்து ஊரெல்லாம் பரவியது. அவளுக்குத் தோழிகளும் பெருகினர்.

ஒருநாள் பொன்னிறத்தாளும் அவள் தோழிகளும் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே திருமலை நாயக்கனின் தளவாயின் மகன் இணைசூரப்பெருமாள் வந்தான். அவனுடன் துட்டன், வெள்ளையத்தேவன், துங்களபுரி மறவன், ஆசையீட்டிக்காரர்கள் ஆகியோர் வந்தனர். இணை சூரப்பெருமாள் வேகமாய் பந்தாடும் இணையகொடி பொன்னிறத்தாளைக் கண்டதும் மெய்மறந்து நின்றான். ‘ நாட்டிலே இவனைப்போல் அழகியைக் கண்டதில்லை ‘ எனத் திகைத்து நின்றான்.

இணைசூரன் பந்து விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியை அழைத்தான். இவள் யார் எந்த ஊர் எனக் கேட்டான். தோழிகள் ‘ ‘ஐயா இவள் பெயர் பொன்னிறத்தாள். ஊர் தென்காசி. இவள் தந்தை பெருமாள் தலைவன். இவளுடன் ஏழு ஆண் சிங்கங்கள் பிறந்துள்ளனர். இவளது உறவினர்கள் கடையத்தில் வாழ்கின்றனர் ‘ ‘ என்றனர்.

இணைசூரனுக்குப் பொன்னிறத்தின் அழகு அறிவை மயக்கியது. உடம்பை உருக்கியது. தன் அரண்மனையில் சென்று படுத்தான். அவனது சோகக் கோலத்தைக் கண்ட தாய் ‘என்ன நடந்தது மகனே ? ‘ எனக் கேட்டாள்.

மகன் ‘ ‘அம்மா, நான் உலாப்போகும்போது பொன்னிறத்தாள் என்ற பெண்ணைக் கண்டேன். தளவாய் நாயக்கன் மகனாம், அவளில்லாமல் நான் வாழமுடியாது அம்மா ‘ ‘ என்றான். அவன் தாயோ ‘ ‘மகனே அந்தப் பொன்னிறம் உன் முறைப்பெண்தான். அவளை எப்படியும் உனக்கு மணமுடித்து வைக்கிறேன் கவலைவிடு ‘ ‘ என்றாள்.

இணைசூரனின்தந்தைனொரு நன்னாளில் உரிய வரிசைகளுடன் தளவாய் நாயக்கனின் வீட்டிற்குப் போய் ‘ உன் மகளை என் மகனுக்குத் தா ‘ எனக் கேட்டான். இணைசூரனும் மகளைக் கொடுக்க இசைந்தான். நல்லநாளில் இனிதாக திருமணமும் நடந்தது. அவர்கள் மதுரையில் மனம் ஒத்து சிறக்க வாழ்ந்தனர்

திருமணம் முடிந்த இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள். ஏழாம் மாதத்தில் தன் குலவழக்கப்படி தன் தாய் வீட்டிற்கு வந்தாள். வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். படி சறுக்கியது. துர்சகுனமாயிற்றே என்ன ஆகுமோ என நொந்துகொண்டே வீட்டினுள் புகுந்தாள். பொன்மாரி மகளின் பருத்த வயிற்றைக் கண்டு மகிழ்ந்தாள். குலம் தழைக்கப்போகிறது என்று நிறைவு கொண்டாள்.

ஒன்பதாம் மாதத்தில் முளைப்பாரி வைக்கவேண்டும் என்றாள் பொன்னிறத்தாள். அவளது இருபத்தொரு தோழிகளும் ஏழு நாட்கள் விரதம் இருந்தனர். பலவகை வித்துக்களைச் சட்டியிலே இட்டு குருத்தோலை கொண்டு மூடிவைத்தனர். ஏழாம்நாள் வளர்ந்திருந்த முளையை எடுத்துப் பார்த்தபோது எல்லா பெண்களும் வைத்த முளைகளும் வளர்ந்திருந்தன. பொன்னிறத்தாளின் முளை அழுகிப்போய் இருந்தது. எல்லாப் பெண்களும் முளைகளைச் சுனையிலே விட்டனர். எல்லாம் நீரில் மிதந்தன. பொன்னிறத்தாளின் முளையோ நீரில் அமிழ்ந்தது. பொன்மாரி இதைஎல்லாம் அறிந்து என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து வருந்தினாள்.

தோழிகள் சுனையாடச் செல்லப் புறப்பட்டனர். பொன்னிறத்தாளையும் அழைத்தனர். அவள் ‘ ‘ எனக்கு நிரம்ப வேலை இருக்கிறது. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் வருகிறேன் ‘ ‘ என்றாள். தோழிகள் சென்றதும் பொன்னிறத்தாள் தயிர் கடைய மத்தை எடுத்தாள். அப்போது பூனை பானையை உருட்டியது. இது என்ந தீய சகுனம் என்று நினைத்து வள் மனம் நடுங்கினாள்.

பொன்மாரி சமைமயல் செய்துகொண்டிருக்கும்போது பொன்நிறம் சமைலறைக்கு வந்தாள். ‘ ‘மகளே இன்று நீ சுனையாடப் போக வேண்டாம். உன்னைத் திருடர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டாளம்மன் கோவிலில் பலி கொடுப்பதாகக் கனவு கண்டேன். நீ போகாதே ‘ ‘ என்றாள் பொன்மாரி.

பொன்னிறத்தாளோ ‘ ‘விதிப்படி நடப்பதைத் தடுக்கமுடியாது. நடப்பது நடக்கட்டும் ‘ ‘ என்றாள்.

பொன்னிறத்தாள் சுனையாடுவதற்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு சுனையாடப் புறப்பட்டாள். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்காமல் கிளம்பிப் போனாள். வழியில் தீய சகுனங்கள் எதிர்பட்டன. குறத்தி ஒருத்தி பொன்னிறத்தாளைத் தடுத்து சுனையாடப் போகாதே என எச்சரித்தாள். பொன்னிறமோ எவற்றையும் லட்சியம் செய்யாது சுனைக்குச் சென்றாள்.

சுனைக் கரையில் தோழிகள் நின்றனர். பொன்னிறத்தைக் கண்ட தோழிகளுக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் சுனையாட இறங்கினர். அப்போது திடாரென மேகம் கவிந்தது. மழை கருக்கொண்டது. புயல் வீசியது. தோழிகள் அவசரமாகக் கரை ஏறினர். பொன்னிறத்தாளும் சுனைக்கரைக்கு வந்தாள். தோழிகள் ‘ மழை பெய்யப்போகிறது , வா நாம் வாகைநல்லூர் அம்பலத்துக்குச் செல்வோம் ‘ என்றனர். எல்லோரும் நடந்தனர். பொன்னிறம் மெல்ல நடந்தாள். முழு கர்ப்பிணியானதனால் அவளால் தோழிகளை எட்டிப் பிடிக்கமுடியவில்லை.

புயல் வேகமாக வீசியது. ஒரு புளியமரத்தின் அருகே சென்றாள். அந்த மரம் காற்றில் ஆடி சரிந்தது. அவள் எங்கே நிற்பது என்று தெரியாமல் அலைந்தாள். தோழிகளைக் காணாமல் மழையிலும் காற்றிலும் பதறினாள்

அநத நேரத்தில் 61 திருடர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர். ‘ எங்கே இன்று திருடச் செல்வது ? ‘ என்று கேட்டான் ஒருவன். இன்னொரு திருடன் ‘ ‘இந்தக் காட்டில் உள்ள காட்டாளம்மன் கோவிலில் ஒரு கருவூலம் இருக்கிறது. அதை எடுப்போம் ‘ ‘ என்றான். உடனே ஒரு திருடன் ‘ ‘நான் மந்திரம் படித்தவன். கருவூலம் இருக்கும் இடத்தை மையிட்டுப் பார்க்கிறேன் ‘ ‘ என்றான். அவன் தீ வளர்த்து மையிட்டுப் பார்த்தான். ‘ ‘இந்தக் கருவூலத்தில் கெட்ட வாதைகள் [பேய்கள்] உள்ளன. நாம் இங்கே இருக்கவேண்டாம். வட்டப்பாறைக்குப் போவோம் ‘ ‘ என்றான்.

கள்ளர்கள் எல்லோரும் வட்டப்பாறையில் கூடினர். குறிகாரக் கள்ளன் பிரசன்னம் [சோழி சோதிடம்] வைத்துப் பார்த்தான். ‘ இக்கருவுலத்தை ஒரு இசக்கி காவல் காக்கிறாள். இந்தக்கருவூலததை எடுக்க பாலாடு சூலாடு கரும்பூனை சேவல் போன்ற பலிகள் கொடுக்கவேண்டும். அதோடு சூலான பெண் ஒருத்தியையைம் இசக்கி பலி கேட்கிறாள் ‘ ‘ என்றான். மற்ற கள்ளர்கள் எல்லா பலிகளையும் கொடுக்கலாம். சூல் பெண்ணுக்கு எங்கே போவது என சிந்தித்தனர்.

ஒரு கள்ளன் ‘ ‘நாம் எல்லோரும் இங்கே வரும்போது சுனைக்கரையில் ஒரு சூலி நின்றதைப் பார்த்தேன் ‘ ‘ என்றான்.

இந்த நேரத்தில் காட்டாளம்மன் கோவிலுக்குப் பூசை செய்ய ஒரு மறையவன் வந்தான். கோவிலின் முன்னே கள்ளர்கள் கூடியிருப்பதைப் பார்த்து ‘ ‘இங்கே எல்லோரும் கூடியிருக்கிறீர்களே என்ன விசேஷம்- ‘ ‘ என்று கேட்டான்.

ஒரு கள்ளன் குறும்பாக ‘ ‘காட்டாளம்மன் கோவிலுக்குப் பலிகொடுக்க ஆளைத் தேடிக்கொண்டிருந்தோம். நீ வந்துவிட்டாய் ‘ ‘ என்றான்.

மறையவன் ‘ ‘அய்யோ அண்ணன்மார்களே உங்களுக்குப் பலிகொடுக்க ஒரு சூலியைக் காட்டித் தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள் ‘ ‘ என்றான்.

கள்ளர்கள் ‘ ‘நல்லது. அவளை எங்களுக்குக் காட்டிவிட்டு நீ செல்வாய் ‘ ‘ என்றனர்.

வேதியன் கள்ளர்களை வழிநடத்தி அழைத்துச் சென்று பொன்னிறம் நின்றுகொண்டிருந்த மரத்தைக் காட்டினான். கள்ளர்கள் பொன்னிறத்தைக் கண்டதும் வேதியனை விட்டுவிட்டனர். பொன்னிறத்தாளின் அருகிலே வந்து ‘ ‘பெண்ணே நீ யார் ‘ ‘ எனக் கேட்டனர். அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.

பொன்னிறம் கள்ளர்களிடம் ‘ ‘அண்ணன்மார்களே என்னை என் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தால் என் தந்தை நீங்கள் கேட்ட பொன்னைத் தருவார்கள் ‘ ‘ என்றாள். அவள் அஞ்சி அழுதுகொண்டே அவர்களிடம் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள்.

கள்ளர்கள் ‘ ‘பெண்ணே நாங்கள் இந்தக் காட்டின் வழி மாடு பிடிக்கப் போகிறோம். உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கிறோம் வா ‘ ‘ என்றனர்.

அவள் அவர்களுடன் மெல்ல நடந்தாள் ஒன்பது மாதச் சூலியான அவளால் நடக்கமுடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சிய கள்ளர்கள் அவளை ‘ சீக்கிரம் நட ‘ என்றனர். ஒரு மாபாவிக்கள்ளன் அவளை எருக்கலைக் கொம்பால் அடித்தான். ஒருவன் புளியம் விளாறால் அடித்தான். அவள் அடி பொறுக்கமுடியாமல் அழுதாள். கள்ளர்கள் அவளைக் காட்டாளம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்தனர்.

கோவிலின் முன்னே பெரிய பரண் கட்டி குலை வாழை நட்டனர். குருத்தோலை கட்டினர் துள்ளுகிடாவும். குட்டியும் சூலாடும் கொண்டுவந்து கோவிலின் முன்னே வைத்து அவற்றின் நெஞ்சைப் பிளந்து குருதியைத் தெளித்து வாதைகளுக்கு பலி தந்தனர். வடக்கு வாசலில் பன்றியைப் பலியிட்டனர். சூல் பன்றியின் நெஞ்சைப் பிளந்தனர். மேற்குவாசலில் பூனையை வைத்துக் கீறினர்.

பின்னர் கருவூலம் இருந்த இடத்தில் பலி கொடுக்க பொன்னிறத்தாளைக் கொண்டுவந்தனர். அச்சத்தால் அலறி களைத்து பரண்மீது மயங்கிப்போய் அவள் கிடந்தாள்.

கள்ளர்கள் அவளைப் பரண்மீது வைத்து இறுகக் கட்டினர். ஒருவன் அவள் அடிவயிற்றைக் கீற ஓடிவந்தான். அவளது அழகிய முகத்தைக் கண்டு பின்வாங்கினான். அதன் பிறகு ஒரு மொட்டையன் வந்தான். அவனும் அவளைப் பலிகொடுக்கத் தயங்கினான். கடைசியாக ஒரு மறவன் வந்தான். தயங்காமல் பொன்னிறத்தாளின் அருகே ஒரு தலைவாழை இலையை விரித்தான். அவள் வயிற்றைக் கீறினான். வயிற்றில் இருந்த ஆண் கருவை வெளியே எடுத்து வைத்து பலிதந்த பிறகு அவள் காலி வயிற்றில் எரியும் திரியை நட்டான்.

கள்ளர்கள் பலியைச் சுற்றி வந்து குரவையிட்டனர். இசக்கியை திருப்தி செய்து கருவூலத்தைத் திறந்து பொன்னை எடுத்தனர். ஒரு கள்ளன் சொன்னான். ‘ ‘நாம் பொன்னை அளக்க மரக்கால் கொண்டுவரவில்லை. அதனால் மூங்கில் குழலை வெட்டி வருவோம். வந்தபின் அளக்கலாம் ‘ ‘ என்று. பத்து திருடர்கள் மூங்கில் வெட்ட காட்டுக்குச் சென்றனர். அவர்களின் கொடூரத்தைக் கண்டு வெகுண்ட காட்டாளம்மை அவர்களின் மேல் புலி கடுவாய்களை ஏவிவிட்டாள். அவர்களை அம்மிருகங்கள் கடித்தன. மற்ற கள்ளர்களை வேதாளங்கள் அடித்தன. எல்லா கள்ளர்களும் இறந்தார்கள். இறந்தவர்கள் நரகத்துக்குச் சென்றார்கள்.

இந்த நேரத்தில் பொன்னிறத்தைக் காணவில்லையே என்று அவள் தாய் பரிதவித்துக்கொண்டிருந்தாள். தோழிகளை அழைத்துக் கேட்டாள். அவர்களுக்கும் பொன்னிறத்தைப் பற்றித் தகவல் தெரியவில்லை. தாய் தந்தையை அழைத்துக் கூறினாள். எல்லா உறவினர்களும் கூடினர். காட்டுவழி சென்று தேடினார்கள். சுனைக்கரையில் பொன்னிறத்தைக் காணவில்லை. காட்டிலும் அவளைக் காணவில்லை.

உறவினர்கள் அவளது காலடித் தடத்தை அடையாளம் கண்டனர். அதை பார்த்து நடந்தனர். அப்போது ஆகாயத்தில் கழுகுகள் கூட்டமாகப் பறப்பதைக் கண்டனர். மனம் பதைக்க அந்த இடத்தை அடையாளமாகக் கொண்டு ஓடினார்கள். அந்த இடம் காட்டாளம்மன் கோவிலாக இருந்தது. கோவிலைச் சுற்றி கோழி, ஆடு, பூனை பலிகளைக் கண்டனர். இணைசூரன் கோவிலுக்குள் சென்றான். வயிறு பிளந்தநிலையில் பொன்னிறத்தாளைப் பார்த்தான். அருகிலே ஆண் கரு. இணைசூரன் அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

மற்றவர்களும் பொன்னிறத்தாளின் உடலைப் பார்த்து பதைத்து விழுந்தனர். பொன்னிறத்தின் தாய் உடனேயே மனமுடைந்து இறந்தாள். ஏழு அண்ணன்மார்களும் மனம் பொறாமல் தங்கள் வாளை மண்ணில் நட்டு அதன்மீது பாய்ந்து உயிரை விட்டனர். எல்லோரும் இறந்தபிறகு இணைசூரனும் வாளை நட்டுப் பாய்ந்து உயிரை விட்டான்.

இறந்துபோன பொன்னிறம் ஆத்மா அடங்காமல் பேயாகி கைலைமலைக்குச் சென்று சிவனிடம் பல வரங்கள் வாங்கினாள். வாவறை, சிறுமாங்குளி, மூன்றரைக் கூடம் போன்ற இடங்களில் இசக்கியாக இருக்க வரம் கேட்டாள். தன்னைப் பலி வாங்கிய கள்ளர்களின் உறவினர்களை தேடிச்சென்று கொன்று குடல்மாலை சூடி பழி வாங்கினாள். தன்னைக் காட்டிக்கொடுத்த வேதியனை கொன்றாள். . அவன் குடும்பத்தை அலைக்கழித்தாள்.

அதன் பின் அவள் தன் தோழிகளைப் பார்க்கப் போனாள். அவர்கள்ளேற்கனவே இறந்து சுனைக்கரையில் பேய்களாக நின்றனர். அவர்களுடன் அவள் இரவில் சுனையாடினாள். காட்டாளம்மநை வழிபட்டாள் . அம்மன் பொன்னிறத்துக்குச் சில வரங்கள் கொடுத்தாள்.

பொன்னிறத்தாள் அதன் பிறகு உக்கிரமான பேயாக மதுரைக்குப் போனாள். அங்குள்ள மக்களைத் துன்புறுத்தினாள். பாண்டிநாட்டு பட்டத்து யானை மீது ஏறி மதுரையைச் சூறையாடினாள். மன்னனின் சோதிடன் மலைவேலனை அழைத்து யானையைப் பிடித்த பேயை விரட்டவேண்டும் என்றான். இளவேலன் மந்திரம் போட்டு பொன்னிறத்தை அறிந்துகொண்டான். அவன் தன் மந்திர வல்லமையால் பொன்னிறதாளை விரட்டப் பார்த்தான். பொன்னிறத்தாள் வேலனை அடித்துக் கொன்றாள் . அவளை யாருமே வெல்ல இயலவில்லை

ஆனால் வேலனின் மனைவி வேறு பலிகள் கொடுத்து பொன்னிறத்தை வணங்கினாள். மனம் அடங்கிய பொன்னிறத்தாள் பெண்ணுக்கு இரங்கி கணவனுக்கு உயிர்பிச்சை அளித்தாள். அதன் பி ஊரார் அவளுக்கு மதுரையில் அவளுக்கு கோயில் கட்டினர்

பொன்னிறத்தாள் மதுரையிலும் நெல்லையிலும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்புரிகிறாள்.

[ அ.கா.பெருமாள் எழுதிய நூல்கள்

1. தென்குமரியின் கதை 2 . தெய்வங்கள் முளைக்கும் நிலம் [தமிழினி பதிப்பகம்] கவிமணியின் படைப்புகள் முழுத்தொகுப்பு [செண்பகா ஒபதிப்பகம்]

Series Navigation

மக்கள்தெய்வங்களின் கதைகள் 1

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

முனைவர் அ.கா.பெருமாள்

குமரிமாவட்டத்திலும் தென்நெல்லைமாவட்டத்திலும் பரவலாக வளங்கப்படும் சிறுதெய்வங்கள் பல உண்டு. இவர்களில் பலர் குலதெய்வங்களாக உள்ளனர். சில தெய்வங்களின் கதைகள் விரிவாக கதைப்பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. இக்கதைப்பாடல்கள் பெரும்பாலும் வில்லுப்பாட்டாக அத்தெய்வ ஆலயங்களில் பாடப்படுகின்றன. மக்களின் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் காட்டும் இப்பாடல்கள் முக்கியமான ஆவணங்கள். இவற்றில் சிலவற்றை நான் ஏற்கனவே நூல்வடிவில் பதிப்பித்திருக்கிறேன். இக்கதைகள் பொது வாசகர்களுக்காக எளிய உரைநடையில் சுருக்கமாக எழுதப்பட்டவை.

கதைநிகழ்ச்சிகளைப் பாடல் வழியே கூறுவது கதைப்பாடல்கள் . மரபுவழிப் பாட்பட்டு வரும் கதைப்பாடல்கள் வாய்மொழி இலக்கியத்தின் கூறுகளுள் அடங்கும். கதைப்பாடல்கள் மக்கள் கூட்டத்துக்கு முன் நடனம் அல்லது இசைக்கருவிகளின் துணை கொண்டோ அல்லது இவை இன்றியோ பாடப்படுகின்றன. அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அம்மானைப் பாடலைப்போல எளிய நடையில் அமைந்தும் கதையின் கருத்தை வற்புறுத்தியும் சொல்லையோ சொற்றொடரையோ திரும்பத் திரும்பக் கூறியும் அமைவன இவை .

கோவில்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரை அனுமதிக்காமை, தெய்வீகக் காப்பியங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் உரிமைக்கு மறுப்பு , பெருநெறித் தெய்வங்களை வழிபடவும் அவை தொடர்பான விழாக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்தகொள்ளவும் அனுமதி மறுப்பு ஆகியன எக்காலத்தில் உருப்பெற்றன என மதிப்பிடமுடியவில்லை. இம்மறுப்பினால் குறிப்பிட்ட இனத்தாரிடையே எழுந்த வேகம் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் நாட்டத்தையும் வாய்மொழிக் கதைகளைப் பாடலாக்கும் முயற்சியையும் அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் நம்பிய ஆவிகளையும் அவை தொடர்பான தெய்வங்களையும் மரபு வழியே கேட்ட இதிகாசம் காவியம் புராணம் குறித்த செய்திகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு கதைப்பாடல்களை புனைந்திருக்கலாம்.

கதைப்பாடல்கள் நாட்டுப்புற இலக்கியப் பரம்பரையைச் சார்ந்தவை . இவற்றின் பாடுபொருட்களாகப் புராணம், இதிகாசம், வரலாற்று நிகழ்ச்சி, வீர சாகசச் செயல், காதல், சாதிக்காழ்ப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் இறப்புகள் அமையும். கதைப்பாடல்கள் பாடுதற்கு உரியவை. இவற்றைப் பாடும்போது பெரும்பாலும் ஒரே பண்ணில் பாடுவதுபோல் தோன்றினும் அதில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.கதைப்பாடல்களின் ஆசிரியர்களின் பெயர்கள் பெரும்பாலும் அறியமுடியாத நிலையில் உள்ளன. இவற்றில் உண்மையும் நேர்மையும் போற்றப்படுவதைக் காணமுடிகிறது. அதர்மம் அழிந்து தர்மம் மேலோங்கவேண்டுமென்ற காவியத்தன்மை கதைப்பாடல்களுக்கும் உண்டு. அதர்மத்தை அழிக்கக் கொடுஞ்செயல்கள் புரிவதைக் கதைப்பாடல்கள் நியாயப்படுத்துகின்றன.

கிராம மக்கள் தங்களுக்குள் வகுத்துக்கொண்ட சமூக நியதிகளை மீறுகின்றவர்களைக் கொல்லுவதைக் கதைப்பாடல்கள் காட்டுகின்றன. தங்களைக் கொல்லுகின்றவர்களபை¢ பழிவாங்கும் நிலை கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படுகிறது. சமூகக் கட்டுப்பாட்டை மீறாத கதைத் தலைவர்களுக்கு இரண்டாம் பிறப்பைக் கொடுத்து புராணத்தன்மை ஏற்றும் நிலையையும் கதைப்பாடல்களில் பரவலாகக் காணமுடிகிறது. கதைத்தலைவர்களின் முடிவு பெரும்பாலும் சோகமாகவே அமைந்திருக்கின்றன. இதனால் இத்தலைவர்களைச் சோகத்தலைவர்கள் என்றும் கூறலாம்.

கதை நிகழ்ச்சியை விளக்கம் கதைப்பாடல்கள் பொதுவான நிலையில் அமையினும் பிற நாட்டார் கலை வடிவங்களையும் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டதால் கதைப்பாடல்களினின்று அம்மானைப் பாடல்களும் வில்லிசைப் பாடல்களும் தெக்கன் பாட்டுகளும் தனித்தியங்குகின்றன.

ஆரம்ப காலத்தில் புராண, இதிகாசங்களைப் பாடுபொருளாகக் கொண்ட அம்மானையுடன் பிற்காலத்தில் நாட்டார் பாடல்கள், நாட்டார் கலை ஆகியவற்றின் வடிவங்கள் இணைந்தபோது அம்மானை பல்வேறுபட்ட பிற வடிவங்களையும் தனதாக்கிக்கொண்டது.

அம்மானைக்கு இதிகாசம் காவியம், காவியம், புராணம் ஆகியன மட்டுமே பாடுபொருளாக இருந்த நிலை மாறிய பின்பு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்து அரிய செயல்களைச் செய்த வீரன் ,பிறசாதியில் மணம் புரிந்து கொலையுண்டவன் ஆகியோர்களின் சோக முடிவுகளும் பாடுபொருளாயின. இந்நிலையில் அம்மானை தன் தன்மையை இழந்து குறிப்பிட்ட எல்லையில் வாழும் நாட்டார் கலை மற்றும் பாடல் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட நிலை உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வழங்கும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் ஆகிய இரண்டைக் கூறலாம்.

வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் கதைப்பாடல்கள் எல்லாமே வில்லிசைக் கலைக்காக உருவாக்கப்பட்டவை. இதற்கு வில்லிசைப் பாடல்களில் நிறையவே சான்றுகள் உள்ளன. பொதுவாக வில்லிசைப் பாடல்களை அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் புராணத்தன்மை கொண்டு புராணமாய் அமைபவை, புராணத்தன்மை கொண்டு புராண நிலையினின்று மாறியவை, வரலாறு அடிப்படையில் அமைபவை, சமூகம் தொடர்பாய் அமைபவை எனப் பகுக்கலாம்.

தென்தமிழ் மாவட்டத்துக்கே உரிய கலையான வில்லிசை கலைக்குரிய கதைப்பாடல்களின் ஏடுகளும் தென் மாவட்டங்களில் குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவு கிடைக்கின்றன. இதில் உள்ள 21 கதைகளில் சோமாண்டி கதை, கட்டிலவதானம், வன்னியன் கதை, புலமாடன் கதை, காட்டுராஜா கதை, இடைகரை புலை மாடசாமி கதை ஆகிய ஆறுகதைகளும் ஏட்டு வடிவிலும் வாய்மொழி வடிவிலும் உள்ளன. பிற கதைகள் எல்லாமே அச்சில் வந்துவிட்டன. எனினும் அவை அருமையாகவே கிடைக்கின்றன.

பூலங்கொண்டாள் அம்மன் கதை

திருநெல்வேலிப் பகுதியைச் சார்ந்த கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் வாழ்ந்த மாலைக்குட்டி நாடார் என்பவர் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்த பொடியன்விளை என்ற ஊரில் குடியேறினார். அந்த ஊரில் உள்ள காட்டை அழித்து வீடு கட்டினார். அங்கே கருங்கடாக்காரனுக்குக் கோவில் ஒன்றும் கட்டினார். செங்கிடாக்காரன் அவரது குலதெய்வம்

அந்த ஊரில் அவர் செல்வத்தோடும் புகழோடும் வாழ்ந்தபோது அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பண்டாரம் எனப் பெயரிட்டார். மேலும் மாலைக்குட்டி நாடாருக்குத் தொடர்ந்து ஆறு குழந்தைகள் பிறந்தன. கூடவே அவரது செல்வமும் நஞ்சை புஞ்சை எனப் பெருகியது.

ஆனால் அவருக்குப் பெண் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. ஒருநாள் மாலைக்குட்டி நாடாரின் மனைவியின் கனவில் உக்கிரமான வடிவம் கொண்டு செங்கிடாக்காரன் வந்தார். ‘ ‘ எனக்கு பெண்குழந்தை வரம் வேண்டும் ‘ என்று அவள் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு பெண்குழந்தைக்கு யோகம் இல்லை என்றான் செங்கிடாக்காரன். அவள் தொடர்ந்து மன்றாடினாள். மனம் கரிந்த செங்கிடாக்காரன் ‘ ‘ பெண்ணே உனக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கும். அதற்குப் பூலங்கொண்டாள் எனப் பெயரிடு. ஆனால் அந்தக் குழந்தை 12 வயதில் இறந்துவிடும் ‘ ‘ என்றார்.

கைலாசநாதர் அருள்படி மாலைக்குட்டி நாடாரின் மனைவி பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள். அவளுக்குப் பூலங்கொண்டாள் எனப் பெயரிட்டனர். எல்லா அழகுகளும் கொண்ட பெண்குழந்தையாக அது இருந்தது. மாலைக்குட்டி நாடாரும் மனைவியும் அவளை கொஞ்சி சீராட்டி வளார்த்தனர். அவளது மரணம் பற்றி செங்கிடாக்காரன் சொன்னதெல்லாம் அப்போது அவர்கள் மனதில் எழவில்லை. எல்லா மனித மனங்களையும் போலவே மகிழ்ச்சியான விஷயங்களையே உண்மை என்று நம்பினார்கள் அவர்கல். அவள் ஏழு வயதில் பள்ளிக்கூடத்துக்குப் போனாள். வளர்ந்து பெரியவளாகி பன்னிரண்டு வயதை அடைந்தாள். அப்போதுதான் செங்கிடாய்க்காரனின் வரத்தில் அடங்கியிருந்த விதி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. மிகுந்த துயரத்துக்கு அளான அவர்கள் பூலங்கொண்டாளுக்கு எந்தவித தீங்கும் வராமல் பாதுகாத்து பொத்திப் பொத்தி வளார்த்தனர்.

ஒருநாள் பூலங்கொண்டாள் தன் அண்ணன்மார்களிடம் ‘ அண்ணன்மார்களே என்னை ஒத்த பெண்கள் ராட்டு நூற்கிறார்கள். எனக்கு ராட்டை நூற்க ஆசையாய் இருக்கிறது. எனக்கு நல்ல ராட்டு வாங்கித் தாருங்கள் ‘ என்றாள். அவள் எது சொன்னாலும் தட்டாத அண்ணன்மார்களில் இருவர் ராட்டை வாங்கச் சென்றனர். ராட்டை அன்று எல்லாஇடத்திலும் கிடைக்காதாகையால் வெகுதூரம் பயணம் செய்யவேண்டியிருந்தது.

அவர்கள் பல ஊர்களைக் கடந்து பள்ளம் என்ற ஊருக்கு வரும்போது பள்ளத்தூர்காரர்கள் இருவரைச் சந்தித்தனர். பள்ளத்தூர் என்ற ஊர் கண்டியூரை அடுத்து இருந்தது. பள்ளத்தூர்காரர்கள் காளைகள் வாங்கச்சென்று கொண்டிருந்தார்கள்.காவர்களுடன் பூலங்கொண்டாளின் அண்ணன்கள் நட்பானார்கள். எங்களுடன் வாருங்கள் நாங்களும் சந்தைக்குத்தான் போகிறோம் என்று அவர்கள் அழைக்கவே இவர்கள் அவர்களுடன் சென்றார்கள்.

திங்கள்சந்தையில் சென்று அவர்கள் நல்ல ராட்டையை வாங்கினர். கொட்டைவைத்து நூற்கப் பெட்டியும் வாங்கினர். தங்கை மென்று தின்ன களிப்பாக்கும் அதை வைக்க பொன்தகடு பொதிந்த வெற்றிலைப் பெட்டியும் வாங்கினர். பள்ளத்தூராரும் தங்களுக்குத் தேவையான காளைகளை வாங்கி கயிற்றில் பூட்டினர். அவர்கள் சந்தையைவிட்டு வெளியே வந்து வேகமாக நடந்தனர்.

மாலை நேரம் அவர்கள் பள்ளத்தூருக்கு வந்தனர். பள்ளத்தூரார் பொடியன்விளைக்காரர்களைத் தங்கள் வீட்டிற்கு விருந்தினராக வருமாறு வேண்டினர். பள்ளத்தூர்க்காரர்களின் சாதிநிலையை போதுமான அளவுக்கு தெரிந்திருக்காத காரணத்தால் பொடியன்விளையார் விருந்துசெல்ல மறுத்தார்கள். விருந்துண்டு சென்றால் அது உறவுக்கு தொடக்கம் போட்டதுபோன்று ஆகிவிடும் . ஆனால் பள்ளதூரார் விடவில்லை. கட்டாயமாகத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்துண்டு தாம்பூலமும் போட வைத்தார்கள். கிளம்புகையில் பொடியன்விளைக்காரர்கள் தங்கள் குடும்ப வரலாற்றையும் வீட்டின் அடையாளத்தையும் தங்கையையும் பற்றிச் சொன்னார்கள்.

மறுநாள் காலை பொடியன்விளை அண்ணன்மார்கள் பள்ளத்தூரிலிருந்து விடை பெற்றுச் சென்றனர். தங்கள் ஊரை அடைந்தனர். தங்கையிடம் ராட்டைக் கொடுத்தனர். அவள் தோழிகளுடன் ராட்டு நூற்றாள். இப்படியே நாட்கள் கழிந்தன. பூலங்கொண்டாளுக்கு வயது 12 முடிந்தது .அவள் அழகையும் குடும்ப வளத்தையும் கேள்விப்பட்டு அவளைத் திருமணம் செய்யப் பலர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். மாலைக்குட்டி நாடார் அழகான பெண்ணைப்பெற்ற இறுமாப்புடன் எல்லோரையும் மறுத்து வந்தார்.

ஒருநாள் பள்ளத்தூரிலிருந்து 9 பேர்கள் பழம் பாக்கு வெற்றிலை பொருட்களுடன் பொடியன்விளை மாலைக்குட்டி நாடாரின் வீட்டிற்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களை இறக்கி வைத்தனர். ‘ ‘ உம் மகளை மணம் பேச வந்தோம் ‘ ‘ என்றனர். மாலைக்குட்டி நாடாருக்குக் கண்கள் சிவந்தன. ‘ ‘நீங்கள் யாரடா ? என் மகளை மணம்பேச பள்ளத்தூரானுக்கு என்ன தகுதி ? ‘ ‘ என்று கேட்டார். அவரது மகன்கள் தங்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு உறவை தொடங்கிச்சென்ற விபரத்தை பள்ளத்தூர்காரர்கள் சொன்னார்கள் .

மாலைக்குட்டி நாடார் கோபத்தால் சமநிலை இழந்தார் .அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வெளியே வாரி எறிந்தார். வந்தவர்களைப் பழித்து இகழ்ந்து பேசினார். பள்ளத்தூரார் அவமானமடைந்து வெகுண்டு ‘ ‘இந்த பள்ளத்தூரானை என்ன நினைத்தாய் ? இன்னும் எட்டு நாட்களுக்குள் உன் மகளைச் சிறை எடுப்போம் ‘ ‘ என சபதம் செய்துவிட்டு போனார்கள்.

பள்ளத்தூாரின் சபதத்தைக் கேட்ட மாலைக்குட்டி நாடார் தன் மக்களிடம் ‘ பள்ளத்தூரார் சபதம் செய்துவிட்டனர். எட்டு நாட்கள் பூலங்கொடாளை கண்மணிபோலக் காக்கவேண்டும். ஒருவர் மாறி ஒருவர் அவள் அருகே இருக்கவேண்டும் ‘ என்றார். ஏனெனில் பள்ளத்தூர்க்காரர்கள் எதற்கும் துணிந்த வீரர்கள். அவர்களும் அப்படியே காவல் காத்தனர். நாட்கள் இரண்டு கழிந்தன. பள்ளத்தூரார் பூலங்கொண்டாளை எப்படிக் கடத்தி வருவது என சிந்தித்தனர்.

பள்ளத்தூராருக்கு கருஙகடாக்காரன் வழிபாடு உண்டு. அதனால் பெரும் பூசை செய்து கருஙங்கடாக்காரனை வரச்செய்தனர். ‘ பூலங்கொண்டாளை எப்படியாகிலும் கவர்ந்து வா உனக்கு வேண்டிய பலியும் பூசையும் தருவேன் ‘ என்றனர்.

கருங்கடாக்காரன் ஒரு பள்ளத்தூர்காரனைப்போல் உருமாறி மாயம் மூலம் பூலங்கொண்டாள் படுத்திருந்த இடத்துக்கு வந்தான். பூலங்கொண்டாளை மெல்லத் தட்டி எழுப்பி வசியப்படுத்தினான். அருகிலிருந்த அண்ணன்மார்களை மயங்கச் செய்தான். சிந்தை அழிந்த பூலங்கொண்டாள் கருங்கடாக்காரனின் பின்னே சென்றாள்.

அண்ணன்மார்களில் ஒருவன் திடாரென எழுந்தான். தங்கையைக் காணவில்லை என்று அறிந்து அலறினான். எல்லோரும் எழுந்து எரிபந்தம் ஏந்தி பூலங்கொண்டாளைத் தேடி ஊரெல்லாம் சென்றார்கள்.

கருங்கடாக்காரனுடன் பூலங்கொண்டாள் நடந்தாள். பல ஊர்களைக் கடந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னி பகவதியை வணங்கிவிட்டு சங்கிலித்துறையில் நீராடினர். பின் சக்கரைக் குளத்தைக் கடந்துவரும்போது சிலர் எரியும் பந்தங்களுடன் வருவதைக் கண்டனர். பூலங்கொண்டாள் சற்று நினைவு மீண்டு ‘ ‘என் அண்ணன்மார்கள் என்னைத் தேடிவருகிறார்கள். இங்கேயே நிற்போம் ‘ ‘ என்றாள். கருங்கடாக்காரன் அவளை அவசரமாய் இழுத்துக்கொண்டு ஓடினான். பூலங்கொண்டாளின் அண்ணன்களுடன் செங்கிடாக்காரனும் இருப்பதைக்கண்ட கருங்கிடாக்காரன் அஞ்சி குறுமுனி கோவில் இருந்த ஊரில் உள்ள ஞானாம்பா கிணற்றில் பூலங்கொண்டாளை மூழ்க வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

அண்ணன்மார்கள் அந்தக் கிணற்றின் அருகே வந்ததும் தங்கையின் காலடி தடத்தை அடையாளம் கண்டனர். மூத்த அண்ணன் பண்டாரம் கிணற்றில் இறங்கினான். பூலங்கொண்டாள் கிணற்றுப்படியில் தூங்கிய பாவனையில் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டான். மனமுடைந்து அலறியபடி அவளை அள்ளினான்.

தங்கையின் உடலைக் கிணற்றின் கரையில் கொண்டு போட்டான் அண்ணன். மாலைக்குட்டி நாடார் மகளின் உடலின்மேல் விழுந்து அழுதார். பின்னால் வந்த உறவினர்களும் செய்தி அறிந்து பதறினர். அவர்களின் அழுகுரல் ப்க்கத்து ஊரில் கேட்டது. ஊர்மக்கள் கிணற்றின் அருகே திரண்டனர். அவர்களிடம் மாலைக்குட்டி நாடார் தன் சோக வரலாற்றைக் கூறினார்.

ஆனால் குறுமுனி கோவிலின் சொந்தக்காரர் சிலர் சற்றும் மனமிரங்காமல் ‘ ‘சவத்தைக் கிணற்றில் போட்டு தீட்டாக்கியது காணாதது என்று நாடார்களும் கிணற்றைத் தொட்டுவிட்டாரே. அதிகாரிக்குப் பிராது எழுதிக் கொடுப்போம். நாளை மீதியைப் பேசிக்கொள்ளுவோம் ‘ ‘ என்று தகராறு செய்தனர்.

மாலைக்குட்டி நாடார் கண்ணீர் வடித்தார். மகளை இழந்ததுமன்றி அரசு பகையும் வந்ததே என ஏங்கினார் மாலைக்குட்டி நாடாரின் மனைவி ‘ ‘கருங்கடாக்காரனுக்கு வேறுபலி கிடைக்கவில்லையோ கோழி பலி ஆடுபலி கேட்டால் தருவோமே. மகளையா நீ எடுக்கவேண்டும் ‘ என கதறி அழுதாள். கருங்கடாக்காரனும் பூலங்கொண்டாளும் காற்றாய் நின்று இதைக் கேட்டனர். உறவினர்களும் சடலத்தைப் புதைத்தனர்.

கோவிலுக்கு உரிமையுடையவர்கள் மாலைக்குட்டி நாடாரின் வீட்டிற்குத் தேடி வந்தனர். ‘ ‘பூலங்கொண்டாள் விழுந்து இறந்த கிணறு தீட்டுப்பட்டுவிட்டது. அதற்குப் புண்ணியானம் தெளிக்கவேண்டும். பணம் வேண்டும் ‘ எனக் கேட்டு மிரட்டினார்கள். மாலைக்குட்டி நாடார் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தார். அவர்கள் மேலும் ‘ கிணற்றைத் தூர் வாங்கவேண்டும் துலா நடவேண்டும் ‘ என்றனர். பூலங்கொண்டாளின் தாய் ‘ என் தோப்பில் உள்ள பனையை முறித்துத் துலா போடுங்கள் ‘ என்றாள். அவர்கள் ஏராளாமான பணத்தைப்பெற்றுக் கொண்டு சென்றார்கள்

ளப்பணத்தைக் கொண்டு கிணற்றின் கரையில் துலாவை நட்டனர். அதையெல்லாம் ஆவியாக மாறி கருங்கடக்காரன் கூட நின்ற பூலங்கொண்டாள் கண்டாள். அவர்கள் தண்ணீர் இறைக்க ஆரம்பித்தபோது கருங்கடாக்காரன் அவர்களை கிணற்றில் தள்ளி ஐந்துபேரைக் கொன்றான். மற்றவர்கள் தப்பி ஓடினர்.

பூலங்கொண்டாள் அங்குள்ள பாப்பாரப் பெண்களைப் பிடித்து ஆட்டினாள். வேளாளத் தெருவில் அட்டாசம் பண்ணினாள். அவர்கள் பூலங்கொண்டாளுக்கு நிகழ்ந்த நீதியை அறிந்து கொண்டார்கள். அதற்காக மனம் வருந்தி பிராயச்சித்தமாக பூலங்கொண்டாளுக்கு அறம் வளர்த்தஅம்மை எனப் பெயரிட்டு கோவில் எடுத்தனர். பூலங்கொண்டாள் தெய்வமாகி அவர்களுக்கு அருள் புரிய ஆரம்பித்தார்.

***

from jeyamoohannn@rediffmail.com

Series Navigation